பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

April 7, 2010

நான்கு - முத்துப்பாண்டி கவிதைகள்

1.
இடம்

இரண்டறை வீடென்றால்
நன்றாய் இருக்கும்.

மூவரும் படுத்துருண்டு
தலைமுட்டி
கால்மூடி கிடப்பது
கஷ்டமாய்த்தான் இருக்கிறது.


அதனினும்
பயமாய் இருக்கிறது
நான் தூங்கியதாய் உணர்ந்து
அம்மாவும் அப்பாவும்
களவி கொள்ளலாம்.

2
தற்காத்தலின் பொருட்டு

வாங்கி வந்த காய் கறிகள்
விலை அதிகம் என்கிறாய் நீ

சதுரங்கம் ஆட அழைத்தும்
செம்பிக்கிணற்றுத் தெரு
எங்கென்று கேட்டும்
சதா கேலி செய்கிறான் செல்வம்.

இதற்கிடையில்
நான் கவிதை பற்றி
பேசினால் மட்டும்
வேறொன்னும் தெரியாதா
என்கிறீர்கள்?

உங்களுக்குத் தெரியாதவை
சில எனக்கும்
எனக்குத் தெரியாதவை
சில உங்களுக்கும்
தெரியத்தான் செய்கின்றன.

எல்லாம் தெரிந்தவர் உலகில்
யார் தான் சொல் பார்ப்போம்.



முத்துப்பாண்டி, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை தமிழ் பயின்றவர். சொந்த ஊர் மதுரை. தற்பொழுது சென்னையில் ஒரு விளம்பர நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். இவருடைய கவிதைகள் காட்சியில் தொடர்ந்து இடம் பெறுகின்றன. இதுவரை காட்சியில்
இடம் பெற்ற அவருடைய ஏனைய கவிதைகள்:


தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com