பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

March 27, 2013

ப்ராக்கு



            இருபெரும் கண்மாய்களுக்கு ஊடே ஊரின் ஓரக்காலில் பனைமரங்களைச் சூழ்ந்து நிற்கும் முத்தரசன் அரசு நடுநிலைப்பள்ளி, மதியத்திற்கு பிறகு கரைச்சலெடுத்துக்கொண்டிருந்தது. எட்டாம் வகுப்பின் கடைசி பாடவேளைப்பிரிவு கணக்கு வாத்தியார் உள்ளே வர மாணவர்கள் அவரவருக்கு உரிய இடத்தில் வந்து அமர்ந்து கொண்டனர்.
                                 ‘வார வியாழக்கிழமை நம்ம ஸ்கூல்ல இருந்து  ராமேஸ்வரம் ரெண்டு நாள்  டூர் போறோம், ஏற்கனவே தெரிஞ்சுருக்குமுன்னு  நெனக்கிறேன் .வர்றவுங்க புதன்  கிழமைக்குள்ள எரநூற்வா  குடுத்து பேர்  குடுத்துருங்க .நா ஹெட் மாஸ்டர்  ரூம் வரைக்கும் போயிட்டு வறேன். அதுவரைக்கும் சத்தம்போடாம அமைதியா  இருங்க‘.
             அவர் புறப்பட்ட அடுத்த நொடி வகுப்பறையே  தலைகீழானது போல் ஒரே ஆட்டம் பாட்டமாக இருந்தது.  கட்டிப்போட்டு வைத்திருந்த ஆட்டுக்குட்டியை அவிழ்த்து விட்டாற்போல்    

March 5, 2013

இரும்பு


நல்ல இரவு. எங்கள் வீட்டிற்கு வெளியே இருந்த சாக்கடைக்குச் செல்லும் பொந்திலிருந்து , நடுங்கியபடி எட்டிப் பார்க்கிறேன் நான். எனது அப்பாவும், அம்மாவும், நண்பர்களும் கூப்பிடும் தூரத்தில் தான் நின்று கொண்டிருக்கிறார்கள். ஆனால் குரல் எழவில்லை. திடீரென ஒரு கரு வெள்ளம். கருத்த, கொழுத்த பெரிய பெரிய பூனைகளின் படை என் மீது பாய்ந்தது. கத்துவதற்குக் கூட அவகாசம் கொடுக்காமல் என்னை பற்களால் இழுத்து வெளியே போட்டன. அவை அனைத்தும்

February 18, 2013

வண்ணங்களை நிர்ணயிக்கும் சில்லறைகள்



அய்யப்பன்தாங்கல் பணிமனை தகரக்கூரையின் வழிவந்தடையும் சூரிய வெப்பத்தின் சூடும், வியர்வையின் எரிச்சலும் காலை மணி ஏழு முப்பதென்று தெளிவாய் சொன்னது.
நான், எனக்கு அடுத்து எண்.166, அதற்கு அடுத்து எண்.17m, அதற்கும் அடுத்து எண்.37g. எனக்கான பேருந்து எண்.11h. இன்னும் வரவில்லை. இதில் 166 தவிர மற்ற இரண்டும் பச்சை போர்டுகள். 166 டீலக்ஸ் பேருந்து. நீங்கள் தினசரி பேருந்தில் பயணம் செய்பவராக இருந்தால் இந்த டீலக்ஸ், பச்சை, வெள்ளை போர்டுகளின் வேறுபாடுகளை அறிந்திருக்கலாம். இவை பயணச் சுமையையோ, வேகத்தையோ எந்தக் காலத்திலும் வேறுபடுத்திக் காட்டியது கிடையாது. இவை கட்டணங்களை வெவ்வேறு வழிகளில் உயர்த்துவதற்காக உருவாக்கப்பட்டவை. இது தவிர ஏசி பேருந்தும் உண்டு. அதில் நான் ஏறியதே கிடையாது என்பதால் அதைப் பற்றி  சொல்லத் தேவையில்லை. நான் பணிபுரியும் ஏரியாவின் அம்மன் கோவில் நிறுத்தத்தை

January 21, 2013

காட்சியின் கொடை - மாரி செல்வராஜ்

அன்பின் நண்பர்களுக்கு, 

“தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்” சிறுகதை தொகுப்பிற்கு நம் இயக்குநர் ராம் அவர்கள் எழுதிய முன்னுரையிலிருந்து..............

”நகரங்களில் வாழ்ந்த எனக்கு கிராமத்தின் விதிகள் அகப்படுவதாய் இல்லை. நான் வாழ்ந்த நகரங்களில் நீ என்ன சாதி என்று யாரும் கேட்டது இல்லை. யோசித்து பார்க்கையில் நகரம் கிராமத்தை காட்டிலும் பத்திரமானது என்று தோன்றியது. சென்னையில் யாரும் எங்கும் செல்லலாம், யாரும் யாருக்காகவும் பயப்பட வேண்டியதில்லை. கூவம் அழுக்காய் மலமாய் நாற்றத்தோடு ஓடினாலும் தாமிரபரணியை காட்டிலும் புனிதமானது என்று ஏனோ தோன்றுகிறது”







ஆழ் மனதறிந்த எண்ணங்களுக்கு மென்ரகசிய வண்ணங்கள் தீட்டி மாயம் செய்யும் நம் பிரியமிகு எழுத்தாளர் வண்ணதாசன் அவர்கள் எழுதிய முன்னுரையில் இருந்து...

"எனக்கு இப்போது செல்வத்தை தெரியாது. மாரிசெல்வராஜை மட்டுமே தெரியும். கொல்லப்படாதவர்களை தெரிந்துகொள்வது, கொல்லப்பட்டவர்களை தெரிந்துகொள்வதற்குத்தான். நான் தெரிந்துகொண்டேன் நீங்களும் தெரிந்துகொள்வீர்கள்.........."
தெரிந்து கொள்ள செல்லுங்கள் நடந்து கொண்டிருக்கும் புத்தக கண்காட்சியில் வம்சி பதிப்பகத்தின் அங்காடி எண்: 465 மற்றும் 466க்கு. நம் காட்சி இணைய இலக்கிய தளத்தின் வீச்சுக்கு ஒரு மாரி செல்வராஜ் சாட்சி. இந்த வருட புத்தக திருவிழாவில் இவரது முதல் சிறுகதை தொகுப்பான “தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்” வம்சி பதிப்பாக வெளிவருகிறது. விலை ரூ.150/- 

April 28, 2012

காற்றில் கரைந்த எங்கள் கிருஷ்ணா

          15. 4.2012 அன்று லயலோ கல்லூரியில் நடைபெற்ற எழுத்தாளர் கிருஷ்ணா டாவின்ஸியின் நினைவேந்தலில் அவரது அக்கா எழுத்தாளர் வி. உஷா அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து....

  


             மாசற்ற அன்பைச் சுரக்கும் இதயத்தை சுமந்துகொண்டு, நம்முடைய கிருஷ்ணாவிற்காக இங்கே வந்திருக்கும் அனைத்து இளகிய உள்ளங்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றியை தெரிவிக்கிறேன்.

கிருஷ்ணா ! அருமைத் தம்பி, கிருஷ்ணா ! 

             மலர்ந்தும் மலராத பாதி மலராக அவனும், விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக நானும் வாழ்ந்து தீர்த்த நாற்பத்தைந்து ஆண்டு கால சகோதர வாழ்க்கையை நான்கைந்து நிமிடங்களில் சொல்லிவிட முடியுமா?

             அறிவு வசப்பட்டு வாழும் வாழ்க்கைக்கும், உணர்வு மயமாகிற வாழ்க்கைக்கும் இடையே நிகழ்கிற ரசாயனத்தில் தான் இன்பத்தின் ஊற்று இருக்கிறது என்று நம்பி வாழ்ந்தவன் கிருஷ்ணா.

             அது புதிய பள்ளி. தமிழ் மீடியம். அவன் அரை வகுப்பு நான் மூன்றாம் வகுப்பு. முதல் நாள் பள்ளிக்கு போகிறோம். அரை வகுப்பிற்கெல்லாம் அரை நாள் தான் பள்ளிக்கூடம் மிக நீண்ட கல்யாண மண்டபம் போன்ற இடத்தில் வரிசையாக வகுப்புகள் படுதாவோ ஓலை மறைப்போ சுவரோ கிடையாது எவரும் எவரையும் பார்க்கலாம். நானும் சிறுமிதான் என் பார்வை முழுக்க அரை கிளாஸில் இருக்கும் தம்பியின் மீது தான். அவனும் திரும்பி திரும்பி என்னையே பார்த்துக்கொண்டிருந்தான் பன்னிரெண்டரை மணிக்கு பள்ளிக்கூட மணி அடித்ததும் முதல் ஆளாக நான் பாய்ந்தோடி என் தம்பியின் கரம் பிடித்து அழைத்து வந்து என்னருகில் அமர்த்திக்கொண்டேன். ஒரே பெரிய டப்பாவில் எங்கள் இருவருக்குமான உணவை அனுப்பியிருந்தாள் அம்மா. அவனுக்காக பிரத்தேயகமாக தயாரிக்கப்பட்டிருந்த கேரட் பொரியலும் அதில் இருந்தது. பொறுமையாக ஊட்டி முடித்து அவன் சாப்பிட்டதும் என் மனம் நிறைந்ததே , இதோ நேற்றுதான் நிகழ்ந்ததை போல இருக்கிறது. மாலை என் பள்ளி முடிந்தது அவன் கையை விடாமல் பற்றிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். முதல் நாள் அனுபவம் பற்றி வாயே திறக்கவில்லை அவன். அப்பா ஏழு மணிக்கு வந்தார் அலுவலகம் விட்டு நால்வரும் வட்டமிட்டு அமர்ந்தோம் பள்ளியைப்பற்றி அவன் சொன்னான். எப்படி தெரியுமா? கிட்டத்தட்ட பதினெட்டு இருபது நர்சரி ரைம்கள், பாடல்கள் ! அசந்து போனோம் ! எப்படி சாத்தியம் இவ்வளவு நினைவாற்றல், எங்கிருந்து பெற்றான் இப்பேர்ப்பட்ட ஞாபகசக்தியை என்று திகைத்தோம் ! பரவசத்தில் திக்கு முக்காடினோம் ! 

             அதே போல அப்பாவின் மிகப்பெரிய சைக்கிளை, தனியாக எடுத்துக்கொண்டு போய் முதல் நாளே குரங்கு பெடல் போட்டான். அதற்கு அடுத்த நாளே பேலன்ஸ் தவறாமல் சீராக ஓட்டிய சுயம்பு  அவன். ஆறாம் வகுப்பிலேயே கிரிக்கெட் டீம் அமைத்தான். அதன் சீரிய கேப்டனாக ஆடித்தீர்த்தவன், சேமித்த காசை வைத்து கிடார் வாங்கினான். ’பனி விழும் மலர்வனத்’திலிருந்து ’தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்’ என்று வாசித்து லயித்தான். மின்சாரம் நிற்கிற மாலை இரவு பொழுதுகளில் வாசித்தப்படியே அவன் பாடிய ’தீர்த்த கரையினிலே’,’ கண் போன போக்கிலே கால் போகலாமா’, ’அதோ அந்த பறவை போல’வையோ எங்கள் நெஞ்சங்களால் மறக்க இயலுமா? திடீரென்று ஒருநாள் டீன் ஏஜ்களின் இறுதிபடி என்று நினைக்கிறேன் கத்தை காகிதங்களை நீட்டினான் வைரப்பாம்புகள் என்று பெயரிட்டிருந்தது. ’என்னப்பா இது’ என்றேன். ’முதல் நாவல் மூன்றே நாட்களில் முடித்துவிட்டேன் படித்துவிட்டு சொல்’ என்றான். முப்பது நிமிடங்களில் வாசித்து முடித்தேன் திகைத்தேன். அவ்வளவு அருமையான மர்ம நாவல்! சுஜாதா, அகதா, என்று திரில்லர்களுக்காக கொண்டாடப்பட்ட காலம் அது. என் வீட்டிலும் ஒரு பரப்பரப்பான படைப்பாளி உருவாகிக்கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்தேன் ! உவகை கொண்டேன் ! அதற்கு பின் அவன் உருவாக்கிய திரைக்கதைகள் அனைத்தையும்  என்னை தேடி வந்து காட்சி காட்சியாக விவரிப்பானே! கிருஷ்ணா! என்னருமை கிருஷ்ணா!
           
              நம்மிடையே வாக்குவாதங்கள் இருக்கும் சின்ன சிறு கோபங்கள் வந்து போகும் மவுனங்கள் வந்து மறையும் ஆனால் உலகத்தின் பெரும் சந்தடிகளுக்கு இடையிலும் வாழ்வின் வசீகர இலையாக இந்த பாசமும் நேசமும் என்றென்ன்றும் மின்னிக்கொண்டிருக்கும் என்ற நம்பிக்கையை நாம் இழக்கவே இல்லை கிருஷ்ணா! மகன் தான் உலகம் என்று நம்பிய அம்மா உலகம் தான் மகன் என்று வாழ்ந்த அப்பா என்று உன்னை சுற்றி அன்பு வட்டம்தானே போடப்பட்டிருந்தது?
          
              இறுதி நாட்களில் மருத்துவமனையில் அவன் கையை பற்றிக்கொண்டு ’எல்லாம் சரியாகிவிடும் எல்லாம் சரியாகிவிடும்’ என்று சொல்லும்போது நம்பிக்கையுடன் தலையாட்டி புன்னகைப்பானே, அந்த முகத்தை எப்படி மறப்பேன்? காலன் அவன் காலருகே வந்து சிரித்த அந்த கொடுமையான நாளின் காலையில் மருத்துவமனையில் சுவாசத்திணறல் இருந்த போதும் நம்பிக்கையை விடவில்லையே என் தம்பி! புன்னைகையைத்தானே நம்பி பற்றியிருந்தான்?

              சிறுவயதில் பாலநாகம்மா படம் பார்த்துவிட்டு நான் பயந்து போய் தூக்கத்தில் பேய் பேய் என்று அலறிய போது தம்பியுடையான் படைக்கஞ்சான் என்பது போல என் கைபற்றி ’பயப்படாதே உஷா அதெல்லாம் வெறும் நடிப்பு உண்மையில்லை’ என்றானே, அதே போல யாராவது இப்போது பயப்படாதே உஷா ’கிருஷ்ணா போய்விடவில்லை எல்லாம் வெறும் கனவு’ என்று சொல்லமாட்டார்களா? ஆயிரம் சமாதானங்கள், ஆயிரம் ஆறுதல்கள் என்று தேடி வந்தாலும் சகோதரா, உன் சாவை மன்னிக்கவே முடியாது.


தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com