1.
மனிதர்கள் அறிவதில்லை
வேடர்களின் பயணம் குறித்தும்
நக இடுக்கில் அப்பியிருக்கும்
வனவழி பயங்களையும்.
காடு நீங்கி வரும் வேடர்களும்
சொல்வதில்லை யாரிடமும்.
வனப்பூச்சிகள் மற்றும்
மர இடுக்குகளின் வழி
மிளிரும் நட்சத்திரங்களுடன்
காட்டியாக வேண்டும்
ஓரிரு சவத்தையாவது
தன் திறன் சாட்சியமாய்.
வேடன் சுமை தீர்க்கும் தருணம்
எப்போதும் ஒர்
உயிர் பிரிவதிலேயே இருக்கிறது.
கொன்றோ மரித்தோ..
2.
கத்தரி வெய்யில்
தாகமெடுத்த மரங்கள்
வேலிகளை அலங்கரிக்கும்
போஹான் வில்லா
இலைகள் அசையமளவு காற்று
வெப்பத்தின் பாடலைக் கரைந்து
திரியும் காகங்கள்
என்ற இதே காட்சிதான்
நான் ஆசிரியராய் ஆனபின்னும்
கொட்டிக் கிடக்கிறது
கோடைத்தேர்வு அறைச் சன்னலில்.
தேர்வு எண்ணை மாற்றி எழுதியதாக
தாமதமாய் வந்து கைபிசைந்து நிற்பதாக
வந்து மிரட்டும் கனவுகளும்
குறைந்த பாடில்லை
திருத்த வேண்டியத் தேர்வுத்தாள்காள்
தலையணையடியில் தூங்கும் போதும்.
காட்சியில் பிரசுரமான இவரின் ஏனைய கவிதைகள்
http://kaattchi.blogspot.com/2010/03/1.html
http://kaattchi.blogspot.com/2010/03/2_30.html
http://kaattchi.blogspot.com/2010/03/3.html
http://kaattchi.blogspot.com/2010/04/4.html
http://kaattchi.blogspot.com/2010/04/5.html
http://kaattchi.blogspot.com/2010/04/6.html
April 6, 2010
தொடர்பு
படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com
