பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

April 4, 2010

சுமதி ராமசுப்ரமணியம் கவிதைகள் - 5

1.

வீட்டு நபர் யாரேனும் ஒருவர்
அழைத்துக் கொள்ள
பள்ளிப் பேருந்தில் வீடு
திரும்புகிறாள் சிறுமி,
பெரிய பொம்மையின்
இயக்கம் போன்று.



அசந்தர்ப்பமாய்
ஏதாவது நாள் ஒன்றின் பாதியில்
விடுமுறை எடுத்துக் காத்திருக்கும் அம்மாவிற்கு
முத்தமிட்டவாறே இறங்கும் சிறுமி
சற்றே பொறாமை கொள்ள வைக்கிறாள்
ஆயாம்மாவை.

2.

மெத்தை விரிப்புக்கேற்ற துணீயிலான
உறையிடப்பட்ட இரு தலையணைகள்.
லேண்ட் மார்க்கில் வாங்கி
அப்பா பரிசளித்த
ஆப்பிள் ஆமைத்தலையணைகள் சூழ
துயில்  கொண்ட சிறுமியின் தலை
அம்மாவின் இடதுகை முஷ்டியில்
சரிந்து உறங்குகிறது
எல்லா விடியற் காலையிலும்.

3.

தன்னுடைய பிறந்தநாள்
ஏன் வருடத்திற்கு
இரண்டு முறை வருவதில்லை?
என்ற சிறுமியின் கேள்விக்கு
பதில் சொல்லத் தெரியாத
அம்மா கல்லூரியில்
ஆசிரியராக இருக்கிறார்.

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com