1.
வீடு
நிகழ்ச்சி முடிந்து வீடு
திரும்புகிறேன்
அந்தி சாய்ந்து.
நிற்பவை நடப்பவை
எல்லாம் இருளாய் இருந்தது.
கோடைக்காற்றின் புழுதியில்
மணம் சேர்த்து
ஆச்சரியமாய் மழை தொடங்கியது.
அதிக காற்று
கொஞ்சம் புழுக்கம்
நாசிமீது விழுந்த முதல் துளி
சட்டென மின்னிய விளக்குகள்
மழைக்காய் படபடத்து
ஒதுங்கும் ஜனத்திரள்
கவசம் தலையில்லாது
விரித்துவிட்ட கூந்தல் அலைய
என் வாகனம்
எனயாவும் தந்த என்மழை
வீடு இன்னமும் வெகுதொலைவில்
இல்லாமல் போனதே
என்று நினைக்கத் தொடங்கையிலேயே
நின்று போனது.
.
மற்றவரின் மழையில் நனைந்தவாறே
வீட்டின் முன் என் வாகனம் நின்று
கொண்டே இருந்தது இரவு முழுதும்.
2.
பேச்சில் சமார்த்தியசாலி
நானென்று
மெச்சி நிற்பவர்களுக்கு
சொல்லியாக வேண்டும்
உடைந்த உன் குரல் கேட்டு
வாலாய்ச் சுருண்டு கொள்ளும்
என் வார்த்தைகள் குறித்து.
காட்சியில் பிரசுரமான சுமதியின் ஏனைய கவிதைகள்
http://kaattchi.blogspot.com/2010/03/1.html
http://kaattchi.blogspot.com/2010/03/2_30.html
http://kaattchi.blogspot.com/2010/03/3.html
http://kaattchi.blogspot.com/2010/04/4.html
http://kaattchi.blogspot.com/2010/04/5.html
http://kaattchi.blogspot.com/2010/04/6.html
http://kaattchi.blogspot.com/2010/04/7_06.html
http://kaattchi.blogspot.com/2010/04/8.html
http://kaattchi.blogspot.com/2010/04/9.html
April 10, 2010
தொடர்பு
படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com
