யமுனா ராகவன் அய்ரோப்பாவில் மருத்துவராய் பணிபுரிகிறார். அவர் எழுதும் ‘’அற்றவைகளால் நிரம்பியவள் தொடர்கதை காட்சியில் தொடராய் வெளிவருகிறது.
பகுதி 1 : http://kaattchi.blogspot.com/2010/04/1_7008.html
பகுதி 2 : http://kaattchi.blogspot.com/2010/04/2_9702.html
பகுதி 3 : http://kaattchi.blogspot.com/2010/04/3_09.html
பகுதி 4 –
அஞ்சனா ozone உள்ளே மிளிர்ந்த பல்வேறு வண்ண விளக்குகளின் தாக்கம், எங்கும் பரவி உடலை முழுவதும் அதிரவைத்த இசை, குறுக்கும் நெருக்கும் நடந்து கொண்டு இருந்த மக்களின் ஊடே பார்த்தாள், அருகே நிற்கும் டேமியன் ஆகோஷ் முகத்தை. ஆறடி உயரத்தில் வெள்ளை டி ஷர்ட், நீல stone wash jeans, cargo boots அணிந்து, தலைமுடி R&B singer Akon போல வைத்து, அகலமான தோளும், கறுப்பாகிலும் ஆப்ரிக்கர்களுக்கு உறித்தான கலரல்லாது சில shade குறைவாய், தடித்த இதழ்களும், இறுகி போய் உணர்வே காட்டாத ஆனால் கூர்மையான கண்களும் கொண்டு, கொஞ்சம் Denzel Washington, Usher, Will smith சேர்த்து மிக்சியில் அடித்தது போல இருந்த அவன் மூக்கு அவளுக்கு நினைவுக்கு கொண்டு வந்தது ஜூலியஸ் சீஸரை. ஒரு asterix & obelix கார்ட்டூன் புத்தகத்தில் Cleopatra வரும் இடமெல்லாம், அவளை பார்த்து பேசி செல்பவர்கள் எல்லோரும் ‘’what a nose’’ என்று வியந்து போவார்கள். இவன் மூக்கும் அவளுக்கு நினைவுக்கு கொண்டு வந்தது அதே தான். அங்கிருந்த சத்தத்தால் அவன் சொன்னது அவளுக்கு கேட்கவில்லை என்று நினைத்து, அவள் காதருகே வந்து, ``அங்கே உட்கார், இடம் இருக்கிறது அஞ்சனா`` என்றான் வெகு இயல்பாய். அத்தனை அருகில் அவன் வரவும், சட்டென கைகால் பதட்டமாக, வெறுமே தலையசைத்து தனியே சென்றமர்ந்தாள்.
அழகான அந்த ozone dance floor பார்த்தப்படி இருந்த ஒரு அழகான இருட்டு மூலையில் போடப்பட்டிருந்தன சிகப்பு சாட்டின் போர்த்திய பெரிய Bean bag sofa சில. அமர்ந்ததும் ``நான் இருக்கிறேன் பயப்படாதே`` என்பது போல அவளை புதைத்துக்கொண்டு சூடாக்கியது. அஞ்சனாவிற்கு இப்போது இருட்டும் அல்லாத வெளிச்சமும் அல்லாத அந்த இடம் தெளிவாக தெரிந்தது. இது போன்ற இடத்தை திரைப்படங்களில் தான் பார்த்து இருக்கிறாள். சுற்றி பார்த்தவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. வீட்டின் உள்ளே அமர்ந்து என்ன ஊர் இது! ஒன்றுமே இல்லை செய்வதற்கு என்று எந்நேரமும் நினைத்தவளிற்கு இது ஒரு புது உலகம் போல இருந்தது. ``Lewis Carroll`` எழுதிய ``Alice in wonderland`` புத்தகத்தில் வரும் பேசும் கடிகாரம் வைத்த கோட் போட்ட முயலும், ஹுக்கா பிடிக்கும் கம்பளிப்பூச்சும், சிரிக்கும் நீலப்பூனையும் பார்ப்பது போல இருந்தது அந்த இடம்.
ஆங்கிலத்தில் சொல்வார்கள் `` Everyone of who is who is here’’. அது போல சேய்ஷல்ஸின் அத்தனை பெரும்புள்ளிகளும், அழகான பெண்களும், பாடகர்களும், பெயர் சொல்லக்கூடியவர்களும் அங்கு குழுமியிருந்தார்கள். சுற்றிமுற்றி பார்க்க அங்கு இருந்த 300, 400 பேரில் இவள் மட்டுமே தான் இந்தியபெண். வந்தது தவறோ என்று இன்னும் வலுவாய் தோன்ற, குழந்தைகள் விளையாடும் Bratz பொம்மைகள் போலவே இருந்த பெண்களை பார்த்தாள். தடித்து பிளந்த உதடுகளும், மினுமினுக்கும் சருமமும், உயரமான pencil heels போட்டு, கிண்ணென்ற உடம்பை இறுக்கி பிடித்து இடுப்பை விட்டு கொஞ்சம் இறங்கியதும் நிற்கும் உடைகளும், பாதிக்கும் மேலே திறந்து இருந்த மார்பும் பார்த்து, அங்கு நிறைய உடையுடுத்தி தனித்து இருந்ததும் அவள் தான் என்று சொல்லியது. ஆண்கள் எல்லாவரின் கண்களும் நடக்கும் பெண்களின் மேல் மேய, அரங்கத்தில் எல்லோருக்குள்ளும் சொல்லமுடியாத ஒரு மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது போல தோன்றியது. அங்கிருந்த பார் அடுத்து இருந்த உயரிய இருக்கைகளில், அவளிடம் வந்து வழிந்து பேசும் பணக்காரப் பெருசுகள் அத்தனையும் வரிசையாக தெரிந்தனர், ஜிஜே உட்பட. 19, 20 வயதுள்ள ஒரு அழகு பெண்ணின் இடுப்பையும் பின்புறத்தையும் தடவியபடி நின்றுக்கொண்டிருந்த ஜிஜேவை பார்த்ததும் அவளுக்கு அவள் கனவில் பார்த்த சுறாபல் செயின் போட்ட சிகப்பு கொக்கு நினைவிற்கு வந்து சிரித்தாள்.
இதற்கு நடுவே இருந்த பெரிய மேடையில் Mercenary Gang வந்து இறங்க, அரங்கம் கரகோஷத்தில் இன்னும் அதிர்ந்தது. 6 பேர்களை கொண்ட அந்த ராஸ்டா குழுவிற்கு தலைவனின் ஜடா முடியை மறைத்து இருந்த அந்த பச்சை, சிகப்பு, மஞ்சள் தொப்பி அத்தனை பெரியதாய் இருந்தது, சிறிய குடத்தை தலைக்கு மேலே வைத்து தொப்பி போட்டது போல. மேலே இருந்த வண்ண டிஸ்கோ விளக்குகளின் வெளிச்சம் வெள்ளியாலும் தங்கத்தாலும் செய்திருந்த உருண்டைகளில் பட்டு தெறித்து சுழன்றுக்கொண்டிருந்தது. அத்தனை பேரும் கையை வானுக்கு தூக்கி கோஷமிட்டு வரவேற்றார்கள் இந்த குழுவை. பாடல் தொடங்க அங்கு அவர்கள் ஆடிய விதம் அவளுக்கு டிவியில் பார்த்த பழங்குடி நடனங்களை நினைவூட்டியது. ஜோடிகளோடு வந்தவர் ஜோடிகளோடும், தனியாக வந்தவர்கள் அங்கே வந்து ஜோடியாகியும் உடல் உராய ஆடினார்கள். இருட்டில் அமர்ந்து தனை மறந்து ஏதோ MTV, FTV பார்ப்பது போல வாய்பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள் அஞ்சனா.
இங்கு இருக்கும் அனைவரிடமும் இருந்து எல்லாவற்றிலும் வேறுப்பட்டு நின்ற இந்த நிமிடம் அவள் காலேஜ் படிக்க முதன்முதல் சென்றபோது இருந்ததை போல தோன்றியது. பள்ளியில் இவள் ஒரு celebrity. இவள் அணியும் உடை, செருப்பு, தலைமுடி பின்னும் விதம் என்று எல்லாவற்றை பற்றியும் பேசும் அவள் நண்பிகள் கூட்டம். வாழ்க்கையில் அங்கீரிக்கப்படுவது எத்தனை முக்கியமான விஷயம் ஆகிறது ஒவ்வொருவருக்கும். எந்த ஒரு கட்டத்திலும் விமர்சிக்கப்படாது இருந்த, அல்லது விமர்சனங்கள் காதில் விழாத சூழலிலிருந்துவிட்டு, விமர்சிக்கப்படுவதை அதுவும் எதிர்மறையான விமர்சனம் வந்து முகத்தில் தாக்க நேரும் போது அதை தாங்க காலம் பிடிக்கும். அப்படி இருந்த அஞ்சனாவின் கல்லூரியின் அந்த முதல் 6 மாதக்காலம் அவளால் மறக்கமுடியாத காலக்கட்டம். கல்லூரியில் எல்லோருமே யாரோவுடைய யாரோவாக இருந்தார்கள். மந்திரி, MLA, மற்ற துறை பிரபலங்கள், சினிமா பிரமுகர்களை அப்பாவாகவோ, அம்மாவாகவோ, அத்தை மாமாவாகவோ இல்லை ஏதோ ஒன்றாகவோ வைத்து இருந்தார்கள்.
கடம்பத்தூரின் fashion அவள் கல்லூரிக்கு மிதமிஞ்சியதாய் தோன்றி எடுபடவே இல்லை. இவளுடைய பளப்பளக்கும் சல்வார்களும், சிகப்பும் நீலமும் கலந்த bold prints இவளை ``கிராமத்து மின்னல், பஞ்சவர்ணகிளி`` என்று மிருது பிங்க், அழகு வெளிர்நீல காட்டனில் உடை உடுத்தும் பெண் சீனியர்கள் கிண்டல் செய்யவைத்தது. பாட்டியின் கருவேப்பிலை எண்ணை தினம் வைத்து வழித்து வாரமட்டுமே தெரிந்த இவள் கூந்தலை பார்த்து ``இது என்ன தேவர்மகன் ரேவதி கொடுத்த எண்ணையா`` என்று சொல்லவைத்தது. இத்தோடு பல் சீரமைக்க போட்டிருந்த கிளிப்பும், முகத்தில் இருந்த பருக்களும், இவளுடைய தலை நிமிர்ந்து தோள் விரித்து நடக்கும் நடையும், தெளிவான ஆங்கிலம் ஆயினும் தமிழ் போலவே பேசும் இவள் பேச்சும் சிக்கி சின்னாபின்னப்பட்டு நசுங்கி கசங்கி தேய்ந்து அறைப்பட்டு ஒரு மாதிரி அவர்களை போலவே மாற நேரினும், ``The transformation from being an ugly duckling to an acceptable duckling was painful``. அவளை ஒரு புதிய திசையில் மாற்ற இந்த புடம்போடலின் வலி தேவையாய் இருந்தது. அந்த காலக்கட்டம் அஞ்சனாவிற்கு அவள் யார், அவளுக்கு என்ன பிடிக்கும், அவளுக்கு என்ன தேவை என்று அவளைப் பற்றி தெரிந்துக்கொள்ள உதவிய காலம்.
யோசனைகளில் திளைத்து இருந்த அவளை, ‘’ Wake up sleeping beauty. Shall we dance’’ என்ற குரல் எழுப்ப, கண் நிமிர்ந்து பார்த்தாள்... லூயிஸ். ``So this is where you have been hiding``, என்றவனை பார்த்து செல்லமாய் கோபித்தாள் அஞ்சனா. ‘’ஏன் என்னை இங்கே அழைத்து வந்தாய், I feel like a right fool!’’ என்று சிறிது கலக்கமாய் சொல்லியவளை பார்த்து அவள் அருகில் மண்டியிட்டு அமர்ந்தான். என்னவாயிற்று என்று பரிவாய் கேட்டவனிடம், அவள் எப்படி ஒட்டாமல் இருக்கிறாள் இந்த கூட்டத்தில் என்று விளக்கினாள். ``அட பைத்தியமே! All the more reason, why you are standing out in this crowd. இங்கு இருக்கும் எல்லோரும் எப்படி பார்க்க போகிறார்கள் பார், வா என்னோடு!`` என்று பதிலுக்கு காத்திராமல் கைப்பற்றி அரங்கின் நடுவே அழைத்துப்போனான்.
பாட்டின் ஓசையும், அரங்கில் இருந்த அந்த பரவலான உற்சாகம் இவளுக்கும் தொத்திக்கொள்ள அவனோடு சேர்ந்து ஆடினாள். லூயிஸ் கண்ணியமான ஆண்மகன். இதுவரை அவளை எந்த ஒரு இடத்திலும் மரியாதை இன்றி நடத்தியதே இல்லை. இப்போதும் அப்படி தான், தொட்டு ஆடும் அந்த விரல்களிலும், சிரிக்கும் முகத்திலும் ஆடுவதை தவிர வேறு ஒரு எண்ணமும் தட்டுப்படவே இல்லை. கண் சிரிக்க ஆடும் இவளைப் பார்த்து சொன்னான், ``மெல்ல உன் கண்களை சுழலவிடு! எல்லோரும் எப்படி பார்க்கிறார்கள் பார்!’’ என்றான். ஆடிக்கொண்டே பார்க்கையில் பெண்களின் கண்களில் ஒரு பொறாமை, அப்படி என்ன இருக்கிறது இவளிடம் என்ற பார்வையும் தெரிய, ஆண்களின் கண்களில் லூயிஸை இந்த பெண் ஏன் நம்மோடு ஆடாமல் இவனோடு ஆடுகிறாள் என்ற ஆதங்கத்தோடும், அவளை ஆச்சரியத்தோடும் பார்த்தது தட்டுப்பட, ஏன் என்று வினவினாள். லூயிஸ் சிரித்துக்கொண்டு ’’பெண்களுக்கு உன் முடி மீது கண். ஆண்கள் இங்கு இதற்கு முன் இப்படி ஒரு மல்பா பெண்ணை பார்த்ததில்லை. இங்கு இருக்கும் மல்பா பெண்களை பார்த்து இருக்கிறாயா. மல்பாக்கள் எல்லாரும் மளிகை, ஓட்டல் கடை நடத்தி வருவதால், அங்கேயே வீட்டு பெண்களும் வேலை செய்வார்கள். எல்லாவரும் புடவை கட்டி, வியர்த்து, ஒரு சுத்தமே இல்லாது முகத்தில் ஒரு தொலைந்த expression வைத்துக்கொண்டு, கடனுக்கு வாழ்வது போல தான் தெரிவார்கள். நீ வித்தியாசமாக இருக்கிறாய். அழகாக இருக்கிறாய். அது தான் என்றவன், ‘’ to add on! You have a wonderful figure with a lovely----! என்று முடித்தான். அவன் சொல்லாது விட்டது என்ன என்று புரிந்தது. பதில் சொல்லாத போதிலும், மனம் ஒரு சமூகத்தில் ஏதோ ஒரு விதத்தில் அங்கீகரிக்கப்படுவதை எண்ணி சற்று இறுமாந்தது. ``எத்தனை தடவை கேட்டாலும் தீராத போதை தான், அழகு என்று பேசப்படுவது எண்ணிக்கொண்டாள். பஸ் நிற்கும் அந்த சில நிமிடத்தில் பார்த்து ரசிக்கப்படும் சமயம், ரசித்து பார்க்கும் முகங்கள் 10 நிமிடத்தில் மறந்தாலும் அது தரும் ஒரு சின்ன சுகம், எத்தனை நேரம் நிற்கும் மனதில்`` என்று சிரித்துக்கொண்டாள்
ஒரு பாட்டுக்கு ஆடிமுடித்து வியர்த்தது அஞ்சனாவிற்கு. சுற்றி இருக்கும் அத்தனை உடல்களின் சூடும், ஆடியதில் சிறிது மூச்சும் வாங்க, லூயிஸிடம் `` I need a bit of fresh air’’ என்று சொல்லிவிட்டு, மேல்மாடியில் இருந்த அரங்கின் நான்கு பக்கம் அமைந்திருந்த கதவுகளையும் பார்த்தாள். ஒரு கதவு கீழே செல்லும் வழி, spiral படிக்கட்டுகள் தெரிந்தது. மற்ற மூன்றும் அந்த கடலை பார்த்தபடி சற்றே வெளியே நீட்டியபடி இருந்த விஸ்தாரித்த அரை முட்டை போன்ற extensions. அங்கு இருந்தவர்களின் பலரின் பார்வையும் இவள் மேலே படிய, தாண்டி நடக்க தொடங்கினாள். அந்த arch போன்ற பெரிய கதவுகள் தாண்டி நடக்கையில் கோயில்களின் முன்புறக்கதவு போல இருந்தது அவளுக்கு. மெல்லிய இருட்டுடன் கடலில் ஜொலிக்கும் அந்த தங்க நிலவை பார்த்து மெய்மறந்தாள். சட்டென உடல் தழுவிய குளிர்காற்று வியர்வையில் நனைந்திருந்த அவளுக்கு அத்தனை பிடித்தது. இடுப்பு அளவிற்கு இருந்த அந்த உருட்டையான இரும்பு கைப்பிடியிடம் வந்து நின்று கடலை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு ஒரு கணம் நின்றது.
Breath taking moment. இரவில் கறுப்பாய் mercury உலோகம் போல் தளும்பும் அந்த அழகான கடலும், நட்ட நடுவே கடலை தொடவா வேண்டாமா என்பது போல் இருந்த அந்த மஞ்சள் நிலவும், அதன் பிம்பம் தண்ணீரில் பிரதிபலிப்பது, வானில் இருந்து மெல்ல நிலா உறுகி கறுப்பு கடலுக்குள் கலப்பது போல இருந்தது. ``ஏன் நம்ம கடம்பத்தூரில் நிலா தூரமா தெரிஞ்சது? இங்க இத்தனை கிட்ட தெரிய என்ன காரணமோ`` என்று எண்ணியவள் மெதுவாய் மெல்ல மூச்சை முழுக்க உள்வாங்கினாள். ``kiss me love’’ என்ற குரல் கேட்டு, அங்கு அவளை போல நின்றிருந்த மக்களின் பக்கம் பார்வை சுழற்றினாள். அவளை போல நிலாவை ரசித்தபடி பல்வேறு ஜோடிகள். காதல் உணர்வை மேலும் அதிகமாக உணரச்செய்யும் ஆற்றல் எப்படி இந்த நிலாவிற்கு உள்ளதோ, சிரித்தாள். அந்த இடத்தில் ஆண் துணை இல்லாது தனித்து நின்ற ஒரே பெண் இவள் தான். இன்னும் கண் இருட்டுக்கு பழக, வெவ்வேறு நிலையில் கட்டிப்பிடித்தபடியும், முத்தமிட்டபடியும், மெய்மறந்து இருந்த அந்த ஜோடிகளை பார்த்தாள். தனியே நிற்பதோ, கண்முன் நடப்பவைகளோ அவளை சலனப்படுத்தவில்லை. ஆனால் யோசிக்கவைத்தது.
பல சமயங்களில் கேள்விகளுக்கு பதில் கேள்விகள் தான். உடல்தேவைகளை பற்றிய அவள் கூற்று, எந்த கண்ணோட்டத்தில் நிற்கிறது என்று யோசிக்கையில். அது கடந்த பரிணாம வளர்ச்சி பாதையை பற்றி யோசிக்காது இருக்கமுடியவில்லை அவளுக்கு. அதன் பிண்ணனியில் விரியும் நிகழ்வுகளும் கனமானவைதான். ஆனால் சமூக கட்டமைப்பு எத்தனை விசித்திரமான விஷயம். ஒரு ஊரில் சரியான தீர்வு இன்னொரு ஊரில் சிரிக்கும்படியான விஷயம். எது சரி எது தவறு என்றவளுக்கு, ஒரு கேள்விக்கு எப்போதுமே ஒரு பதில் இல்லை. பல பதில்கள் உண்டு என்று எங்கேயோ கேட்டது நினைவிற்கு வந்தது.
ஆனால் அஞ்சனா வளர்ந்த விதமோ கொஞ்சம் இறுக கட்டிப்பிடித்து பாட்டு வந்தாலே channel மாற்றும் பாட்டியின் கைகளின் நடுவே தான். ஆத்மார்த்தமான ஜோடிகளான அவளுடைய தாய் தந்தையை ஒரு நாளும் அருகில் அமர்ந்தோ, கைப்பற்றி பேசியோ, கன்னதில் முத்தமிட்டோ, ஆசையோடு காதலோடும் பார்த்துக்கொண்டதையோ பார்த்ததே இல்லை. ராஜ ராஜ சோழன் நான் என்று அவளுக்கு மிக பிடித்த பாடல் வந்த படத்தை இவள் பள்ளியில் படிக்கும் சமயம் வீடியோ கேஸட் வாங்கி வர பட பைத்தியமான அவளை ``பார்க்கக்கூடாதுமா, இது பெரியவங்க பார்க்கிற படம்`` என்று அதட்டிய தாய் நினைவிற்கு வந்து போனாள். இது வரையும் அவள் அந்த படம் பார்க்கவேயில்லை. கொஞ்சம் வளர ஆண் பெண் ஈர்ப்பு தெரிய தொடங்கிய சமயம், எப்போதும் படத்தில் கட்டிப்பிடித்து இருட்டாகும் திரையும், முத்தமிடும் ரோஜாக்களில் வந்து முடியும் காட்சிகளும் பதில் சொன்னதே இல்லை என்னதான் செய்வார்கள் என்று. முதன்முதல் உடலுறவு என்றால் என்ன செய்வார்கள் என்று தெரிந்தக்கொண்டது, மாடியில் அவள் அண்ணாவின் அறையை பெருக்கி படுக்கைவிரிப்பை மாற்ற சென்ற போது அவன் படுக்கையின் அடியில் ஒளித்து வைத்திருந்த ஒரு புத்தகத்தை பார்த்து தான். கல்லூரிக்கு செல்ல ஒரு சில மாதங்களே இருந்த அந்த சமயத்தில் நிகழ்ந்த அது, அவளுக்கு அண்ணாவின் மேலே இன்னமும் கோபமும் எரிச்சலும் வரச்செய்தப்போதும், எப்போதாவது அவன் அறைக்கு செல்ல நேர்ந்தால் அவன் படுக்கையின் அடியில் புத்தகம் ஏதும் இருக்குமா என்று தேடிய அவள் செய்கை அப்போது அவளுக்கு குற்றவுணர்வை தான் தந்தது. இன்னும் இது போல எத்தனை இருட்டு நிகழ்வுகள் இருக்கிறது எல்லோருக்குள்ளேயும். ஒரு இருட்டும், யாருக்கும் தெரியாது என்ற சூழலும் தான் ஒரு மனிதனின் உண்மையான பக்கத்தை காட்டும் என்று சொல்வார்கள். அது நிஜம் தானோ என்று இன்னும் இது போலவே யோசிக்க தொடங்கினாள்.
மீண்டும் பாடலில் அரங்கம் அதிர, அவளுடைய chain of thoughts நின்றது. பின்னிருந்து ஒரு பலத்த சிரிப்பு கேட்க, அவள் திரும்பும் முன்னமே அது ஜிஜே என்று அவளுக்கு புரிந்தது. திரும்பி பார்க்க ஜிஜே, அஞ்சனாவை பார்த்து கேட்டார், ``இத்தனை நாளாய் நான் கூப்பிட்டேனே, என்னோடு வரவே இல்லையே`` என்று சோகமுகம் வைத்துக்கொண்டு. இத்தனை நேரம் பார்க்கும் பெண்களை எல்லாம் மாற்றி மாற்றி தடவிவிட்டு என்னமோ, இவள் இல்லாது போனால் வாழ்க்கையே இருண்டு விடும் போல வைத்திருந்த முகம் அவளுக்கு வெகுவாய் சிரிப்பு வர வழைத்தது. ‘’ Come on Didier! Im not your type. Be serious’’ என்றவளை பார்த்து vodka வாசத்துடன் போதையில் ஜிஜே சொன்னது ‘’ Im a flirt, அஞ்சனா. ஆனால் இங்கு இருக்கும் பெண்களுக்கு எல்லாம் என் பணத்தின் மீதுமட்டுமே தான் குறி. என்மீது ஒரு அன்போ, அக்கரையோ இல்லை. கொஞ்சம் ரூபாய் ( செய்ஷல்ஸின் பணத்தின் பெயரும் ரூபாய் தான்) இருந்தால் இங்கு நடக்கும் அழகான பெண்களில் யாரை வேண்டுமானாலும் படுக்கைக்கு கூப்பிட்டு போகமுடியும். தானே வரேன் என்பார்கள். அது வெறும் உடல் தேவை தான் அது தீர்ந்து திரும்பிப்படுக்கும் சமயம் ஏற்படும் தனிமை தீர்க்க இங்கு இருக்கும் பெண்களால் முடியாது. அது ஆத்மார்த்தமான அன்பு இருந்தால் மட்டுமே தான் முடியும். படுக்கையில் ஒன்றும் செய்யாது தனியே கட்டிப்பிடித்து படுத்தாலும் மனம் நிறைந்து தூங்கியெழ ஒரு பெண் வேண்டும். உன்னிடம் அந்த பரிவு இருக்கிறது. அது உன் கண்களில் தெரிகிறது. நான் இது வரை உலகில் போகாத இடம் இல்லை. Im a billionaire. இது வரை நான் போன நாடுகளிலிருந்த அழகான பெண்களை படுக்கைக்கு அழைத்து போயிருக்கிறேன். ஆனால் ஒரு தடவைக்கு மேல் என்னால் அவர்களோடு இருந்திருக்க முடியுமா என்று கேட்டால், முடியாது என்று தான் சொல்லுவேன். உன்னை மணந்தால் நான் சுகமாய் இருப்பேன் என்று தோணுகிறது. நீ அதற்கு பிறகு வாழ்நாளுக்கும் வேலையே செய்யவேண்டாம். உனக்கு என்ன தேவையோ அது எல்லாம் தீர்க்கிறேன். நீ கேட்பதெல்லாம் செய்கிறேன். என்னோடு வா. எனக்கு diabetes, BP எல்லாம் இருக்கு. சமயத்தில் பயமாக இருக்கிறது`` என்று நடுங்கும் குரலோடு. அஞ்சனாவிற்கு பாவமாக இருந்தது குடிபோதையில் கலங்கி போய் நிற்கும் ஜிஜேயை பார்த்து முதன்முறை. இது வரை இருந்த ஆடம்பர மனிதர் மறைந்து தனிமையில் நிற்கும் ஒரு குறுகிக்கொண்டிருக்கும் வயதான மனிதர் முதன்முறை தென்பட்டார். தனித்து இருப்பதும், தனித்து இருக்கையில் தோன்றும் பயங்களும் அவர் கண்ணில் தெரிய, அஞ்சனாவிற்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. ‘’I need to ponder on this, Didier. Gimme some time’’ என்று கூறி முடித்தாள்.
சட்டென இதுவரை இருந்த கிழவர் காணாமல் போய், அவளுக்கு எப்போதும் தெரியும் ஜிஜே நின்றார். ‘’ come, let me buy you a drink’’ என்று அழைத்துப்போனார். செய்ஷல்ஸில் குடிக்கும் பழக்கம் பார்த்து வந்த புதிதில் அவளுக்கு வினோதமாக இருந்தது. அவளும் மரியா மிராண்டா குடும்பத்தினர் 15 பேரும், பக்கம் இருந்த ஒரு கடற்கரைக்கு சென்றனர். அநாயசமாக பெண்கள் beer can திறந்து மடமட என்று குடித்தனர். ஒரு 10 crate 3 மணிநேரத்தில் முடிந்தது. மிராண்டாவே 12 கேன் குடித்தாள். அங்கு இது மிக சகஜமான விஷயம். அஜ்சனாவிற்கு இனிப்பு பிடிக்கும். கொடுக்கப்பட்ட எந்த பானமும், இனிப்பு இல்லாது தொண்டை எறிய, வாயில் இருக்கும் சுரப்பிகள் கூசும்படிக்கும் இருந்ததால், அவளுக்கு எதுவுமே பிடிக்கவில்லை. ‘’ Please Didier! Just get me a mocktail (பல்வேறு பழக்கலவைகளை அழகான ஒரு stainless steel flask உள்ளே ஊற்றி, அழகாய் குலுக்கி, நீண்ட stem வைத்த கண்ணாடி குவளையில் ஊற்றி, ஓரத்தில் அன்னாசியோ எலுமிச்சை பாதியையோ செறுகி, ஒரு சிறிய காகிதகுடை வைத்து, மடிந்தோ சுருண்டோ இருக்கும் ஸ்டிராவை வைத்து தரும் ஒரு பானம்) என்று சொல்லி திரும்பியவள் ஸ்தம்பித்து நின்றாள், இன்னும் அவளை அலட்சியமாய் பார்த்துக்கொண்டே, ஒரு அழகான ஒரு பெண்ணை ஆரத்தழுவியப்படி ஆடிக்கொண்டிருந்த டேமியன் பார்வையை பார்த்து.
தொடரும்
- யமுனா ராகவன்