"காட்சி"க்கு ரயில் அனுபவங்களை எழுத்தாளர்களிடமும் உறுப்பினர்களிடமும் கேட்டிருந்தோம்.எழுத்தாளர் பாரதிதேவி அவர்களின் அனுபவம் பதியப்பெற்றது. (http://kaattchi.blogspot.com/2010/03/blog-post_25.html).அவ்வரிசையில்
காட்சியின் உறுப்பினர் திரு.ஸ்டாலின்பெலிக்ஸ்அவர்களின்அனுபவமும்
இங்கேஇடம்பெற்றது.http://kaattchi.blogspot.com/2010/03/blog-post_28.html). அவ்வரிசையில் காட்சியின் உறுப்பினர் திரு.விக்னேஷ்வரன் அவர்களின் அனுபவம் இங்கே
இடம் பெறுகிறது. சிறந்த படைப்புகளை புத்தகம்மாய் ரயில் என்ற தலைப்பில் பிரசுரிக்கலாம்
என இருக்கிறோம். உங்கள் படைப்புகளையும் எங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். நன்றி.
அறிமுகம்
சமீப காலமாக வலையில் ஆத்மா என்றும் ரெட்டைவால்ஸ் என்ற பெயரிலும் அறிமுகம். படித்தது மதுரையில் டி.வி.எஸ்ஸிலும் மதுரைக்கல்லூரியிலும். கல்லூரியின் மூன்றாம் வருடத்தில்.
ஆனந்தவிகடனுக்காக மாணவப் பத்திரிக்கையாளனாய் கொஞ்சம் சுற்றினேன், பிறகு பிழைப்புக்காக ஆலப்புழையில் ஒரு வருடம். சென்னையில் ஆறாவது வருடம். எல்லா விஷயத்துக்கும் So What? என்ற கேள்வி எழுந்ததாலும் எழுதுவது மிகுந்த சந்தோஷத்தை தருகிறது. இது வரை யாருமே சொல்லாத ஒரு விஷயத்தை என்றாவது ஒரு நாள் சொல்லிவிடுவேன் எனும் நம்பிக்கையில் எழுத ஆரம்பித்திருக்கிறேன்.
ஆனந்தவிகடனுக்காக மாணவப் பத்திரிக்கையாளனாய் கொஞ்சம் சுற்றினேன், பிறகு பிழைப்புக்காக ஆலப்புழையில் ஒரு வருடம். சென்னையில் ஆறாவது வருடம். எல்லா விஷயத்துக்கும் So What? என்ற கேள்வி எழுந்ததாலும் எழுதுவது மிகுந்த சந்தோஷத்தை தருகிறது. இது வரை யாருமே சொல்லாத ஒரு விஷயத்தை என்றாவது ஒரு நாள் சொல்லிவிடுவேன் எனும் நம்பிக்கையில் எழுத ஆரம்பித்திருக்கிறேன்.
ரயில்(களுடனான) ஸ்நேகம்.
எனக்கும் ரயில்களுக்குமான ஸ்நேகம் ரயில் ஸ்நேகம் போன்றது தான். எங்கோ வானத்திலிருந்து பூமியை பாருங்கள். அங்கங்கே மலைகளை கிழித்துக்கொண்டும் , நகரங்களை விழுங்கியபடியும் நதிகளூடாகவும் பிரம்மாண்டமாக செல்வது நிச்சயம் ரயில்களாக மட்டுமே இருக்கும். பேருந்து, கார்,புல்லட் ஏன் விண்கலத்துக்கு கூட இல்லாத ஒரு தாள லயம் ரயிலுக்கு மட்டுமே உண்டு!
ரயில்கள் மகோன்னதமானவை. சாமானியர்களுக்குப் புரியாத சிக்னல்கள் ,சங்கேதக் குறியீடுகள், ஏன் என அதிகம் பேர் கேள்வி கேட்காத தொழில்நுட்பங்கள் என தன்னகத்தே பல மர்ம முடிச்சுககளை ஒவ்வொரு ரயிலும் சுமந்த படியே செல்கின்றன.
சில பல வருடங்களுக்கு முன் ரயில் பயணம் என்பது பல ஆயத்தங்களை உள்ளடக்கியது. ஏறக்குறைய எல்லாப்பெட்டிகளிலும் ரயில் வாசத்தோடு இட்லிப் பொடி மணமும் புளியோதரை மணமும் கலந்தே இருக்கும். வட இந்தியர்களின் சப்பாத்தி தாவாக்கள் , அம்மாக்களின் கை பக்குவம் என கலந்துகட்டி ஒரு ரம்யத்தை உருவாக்கியிருந்தன.சகஜமாக பகிர்ந்துண்டு கொண்டிருந்தார்கள். காலம் மாறிவிட்டது. நம் கண் முன்னாடி வாங்கிய பிஸ்கெட் பாக்கெட்டிலிருந்து சாப்பிடக் கொடுத்தாலே பயமாக இருக்கிறது. அபார்ட்மென்ட், தனிக் குடித்தனக் கலாச்சாரங்கள் ரயிலையும்கெடுத்துவிட்டனபோலும்.
என்னை அவ்வப்பொழுது நிரடுவது அகல்யாவுடனான ரயில் பொழுதுகள். அவள் மதுரைக்கு ரயிலில் வருகிறாள் என்று தெரிந்தவுடன், அவளுடன் சேர்ந்து பிரயாணிப்பதற்காகவே முந்தைய நாள் சென்னை சென்று மறு நாள் அவளுடன் வைகை எக்ஸ்பிரஸ்ஸில் பயணித்தேன். உங்கள் காதலியுடன் உட்கார்ந்த படியே பயணிக்கும் நெடுஞ்சாலை பேருந்து பயணங்களை விட உன்னதமானது ரயில் பயனங்கள். வழக்கம் போலவே சுற்றியிருப்பவர்களை மறந்து உங்கள் அபத்தங்களை பரிமாறிக்கொள்ளலாம்.
நண்பர்களே..என் அகல்யாவைப் போலவே அப்பாவித்தனமான அழகுடன் இருக்கும் உங்கள் காதலியுடன் ரயில் படிக்கட்டுகளில் அமர்ந்து ஜானி பட பாடல்களை வாக்மேனில் ஒரு காதில் நீங்களும் மறு காதில் அவளுமாக கேட்டுக் கொண்டே பயணித்திருக்கிறீர்களா?. எந்த ஸ்டேஷனும் அருகில் வந்து விடக் கூடாது என்று பிரார்த்தித்தபடியே பயணித்த ரயில் பொழுதுகள்.அந்தப்படிகளில் அமர்ந்தபடியே பயணிக்கும் போது தான் சொர்க்கம் சென்னை மதுரை இடையே ஓடும்தண்டவாளங்களிலும்இருக்கும்எனதெரிந்தது.
ரயில் படிகளில் நெருக்கியடித்து அமர்ந்திருக்கையில் தான் அகல்யா கேட்டாள்.
"உனக்குக் கொஞ்சம் ஜோசியம் தெரியுமாமே ..எங்க என் கையை பார்த்து சொல்லு! ". கையை இழுத்துப் பிடித்தபடியே அவள் கண்களை பார்த்தேன்.
”உன் இருதய ரேகை பலவீனமாக இருக்கிறது” என்றேன். முறைத்தாள்.
"உலகத்தில் இதுவரைக்கும் யாரிடமும் சொல்லாத ரகசியம் ஒன்று உன்னிடம் உள்ளது என்றேன். கண்கள் விரிய ஆமாம் என்றாள். உலகத்தில எல்லாரையும் விட உன் அப்பாதான் உனக்கு முக்கியம் என்றேன். ஆச்சரியத்துடன் கரெக்ட் என்றாள்.
”உன் இருதய ரேகை பலவீனமாக இருக்கிறது” என்றேன். முறைத்தாள்.
"உலகத்தில் இதுவரைக்கும் யாரிடமும் சொல்லாத ரகசியம் ஒன்று உன்னிடம் உள்ளது என்றேன். கண்கள் விரிய ஆமாம் என்றாள். உலகத்தில எல்லாரையும் விட உன் அப்பாதான் உனக்கு முக்கியம் என்றேன். ஆச்சரியத்துடன் கரெக்ட் என்றாள்.
என்ன செய்வது... ஒரு ரகசியத்தையாவது மறைத்து வைக்காத ..தன் அப்பாவை அதிகமாய் நேசிக்காத பெண்கள் உண்டா இந்த உலகத்தில். பின்பு அந்த ரயில் பயணம் முடிவுக்கு வந்த போது எரிச்சலாக இருந்தது. நாம் ஏன் குழந்தைகளாகவே இருப்பதில்லை என்ற கேள்விக்கு அன்றைக்கு பதில் கிடைத்திருந்தது!
பின்பொருமுறை வேறொரு ரயில் பயணத்தில் ஒரு ஏ.ஸி. பெட்டியில் அகல்யாவை அவள் கணவனுடன் பார்த்தேன். பள்ளி நண்பன் என கணவரிடம் அறிமுகப்படுத்தி , என்னிடம் பேச வைத்துவிட்டு வாசல் அருகே போய் கொஞ்ச நேரம் நின்று கொண்டாள்.காதலிகளின் கணவர்களிடம் என்ன பேசுவது நண்பர்களே? கொஞ்சம் தொழில், கொஞ்சம் கிரிக்கெட் , கொஞ்சம் அரசியல் , கொஞ்சம் குடும்பம்... அவர்களிடம் நாம் என்ன ஜோசியமா பார்க்க முடியும். விடை பெறுகையில் கூட மிக அலுவலகத்தனமான பிரிதல்கள். வீட்டுக்கு ஒரு நாள் வாங்க என்கிற அன்பில்லாத அழைப்புகள். தொலைந்து போன காதல்களை மட்டும் ரயிலில் கண்டெடுக்கவே கூடாது நண்பர்களே. ரயிலின் வில்லத்தனம் அப்போது தான் தெரிகிறது.பிறகு எப்பொழுதெல்லாம் இரவு ரயிலில் செல்கிறேனோ அப்பொழுதெல்லாம் ரயில் வேகத்தோடு நிலா பார்த்து என்னை தேற்றிக் கொள்வேன்.
ரயிலில் எனக்குப் பிடிக்காத மனிதர்கள் ஏ.ஸி.வகுப்பில் பயணம் செய்பவர்கள் தான். யாருடனும் உரையாட மாட்டார்கள். படிக்கிறார்களோ இல்லையோ ஹிண்டு பேப்பர் வாங்கும் ,பிடிக்கிறதோ இல்லையோ சரவண பவனில் சாப்பிடும், ஓட்டுக்குக் காசு வாங்கும் ஜனங்களை திட்டும் மேட்டுக்குடி அரசியல் விமர்சகர்கள். ஏதாவது ஒரு ஆங்கில நாவலோ அல்லது ஐ.பாடோ அவர்களது பிரயாணத்தை தின்று கொண்டிருக்கும். ஒன்பதரை மணிக்கெல்லாம் விளக்கை அணைத்துவிட்டு தூங்க எத்தனிக்கும் ஜடங்கள். உன்னிடம் கொலை செய்யும் அதிகாரம் தரப்பட்டிருக்கிறது என்று சொன்னால் அவர்களை மீண்டும் மீண்டும் கொல்வேன்.
கல்லூரி நண்பர்களுடனான கொங்கன் ரயில் பயணம், அலுவலக நண்பர்களுடன் நாள் முழுவதும் குடித்துக் கொண்டே சென்ற டெல்லி ராஜதானி பயனம், குடும்பத்துடன் குதூகலித்த மேட்டுப்பாளையம் ஊட்டி நீராவி ரயில் பயணம் என நினைவு கொள்வதற்கு நிறைய இருந்தாலும் அகல்யாவுடனான அந்த வைகை எக்ஸ்பிரஸ் பயணம் மட்டுமே என் மரணப் படுக்கையில் நினைவுக்கு வரும் எனத் தோன்றுகிறது.
ரயில்களைப் போலவே ரயில்நிலையங்களும் எனக்கு மிகவும் பிடிக்கும். போர்ட்டர்கள், போலீஸ்காரர்கள், பிரிவை தன் கூடவே அழைத்து செல்லும் ராணுவஜவான்கள், இளம்பெண்கள், ஊரிலிருந்து வரும் மனைவிக்காக காத்திருக்கும் கணவர்கள் என எல்லாவற்றையும் மீறிஎல்லா ரயில் நிலையங்களிலும் ஒரு அமைதி இருக்கவே செய்கிறது. பல நூறு கோடி செலவழித்தாலும் பேருந்து நிலையங்களிலும் விமான நிலையங்களிலும் அந்த அமைதியைக் கொண்டு வரவே முடியாது.
கனவு ரயில் பிரயாணம் என்று ஒன்று உண்டு. ஜன்னலோரத்தில் நான்.என்னெதிரே சுஜாதா என அறியப்பட்ட ரங்கராஜன். அவர் அருகே புதுமைபித்தன். அவருக்கு எதிரே என்னருகில் சார்லி சாப்ளின். அந்தப் பக்கம் மார்ட்டின் ஸ்கார்சிஸி மற்றும் ரவீந்திரநாத் தாகூர். கொஞ்சம்
தள்ளிலியானர்டோ டாவின்சியும் மணீஷாகொய்ராலாவும். யோசிக்கும்போதே சந்தோஷமாக இருக்கிறது.
நண்பர்களே...அவ்வப்பொழுது உரையாடல்களிலிருந்து விடுபட்டு தனக்குத்தானே நகைத்துக் கொள்கிறேன் என அங்கலாய்ப்பீர்களே... இப்பொழுது புரிகிறதா!
அதன் காரணம் ரயில்!.
- விக்னேஷ்வரன்
- விக்னேஷ்வரன்
