கவிஞர் அறிமுகம்: M.ராஜா என்றெனக்கு பெயர். சொந்த ஊர் ஈரோடு மாவட்டத்திலுள்ள காங்கயம். தொழில் நிமித்தம் சென்னையில் மருத்துவராக பணிபுரிகிறேன். பிரத்தியேக வலைப்பதிவிலும் எழுதிவருகிறேன். எழுதியவற்றுள் சில உயிரோசை, திண்ணை போன்ற இணைய இதழ்களில் வெளியாகியிருக்கின்றன.
இவரது கவிதைகள் காட்சியில் தொடராக வருகிறது.
இறை தேடி:
உயிரின் மூலாதாரங்களை
அகழ்ந்தாய்ந்திருந்தபோது தென்பட்டன
கடவுளின் காலடித் தடயங்கள்.
அடியொற்றியே தொடர்ந்தேன்.
கால வெளி எல்லைகள் தூர்ந்து
ஆதியும் அந்தமுமான பிராந்தியம்
வெளியெங்கும் விரவிக்கிடந்தேன் நான்
என்னெங்கிலும் பரவிக்கிடந்தது வெளி
விழித்தெழுந்த உடலணுக்கள் யாவிலும்
வெடித்துக் கிளம்பியது பேரானந்தக் கிளர்ச்சி
கருமக் கயிறுகள் அறுந்து
ஞான ஒளியூட்டம் நிகழ்ந்தது
சூன்ய பெருஞ்சூட்சமங்கள் தெரிந்து தெளிந்தும்
கண்ணெட்டியவரையில் காணக்கிடைக்கவில்லை
கடவுள் மட்டும்.
வந்த வழி வியந்தேன்.
இரண்டு சுவடுகளன்றி
இன்னொன்று ஏதுமில்லை.
இருந்த சுவடுகள் மீது
நின்றுகொண்டிருக்கின்றேன்
நான்.
- எம்.ராஜா
இவரது கவிதைகள் காட்சியில் தொடராக வருகிறது.
இறை தேடி:
உயிரின் மூலாதாரங்களை
அகழ்ந்தாய்ந்திருந்தபோது தென்பட்டன
கடவுளின் காலடித் தடயங்கள்.
அடியொற்றியே தொடர்ந்தேன்.
கால வெளி எல்லைகள் தூர்ந்து
ஆதியும் அந்தமுமான பிராந்தியம்
வெளியெங்கும் விரவிக்கிடந்தேன் நான்
என்னெங்கிலும் பரவிக்கிடந்தது வெளி
விழித்தெழுந்த உடலணுக்கள் யாவிலும்
வெடித்துக் கிளம்பியது பேரானந்தக் கிளர்ச்சி
கருமக் கயிறுகள் அறுந்து
ஞான ஒளியூட்டம் நிகழ்ந்தது
சூன்ய பெருஞ்சூட்சமங்கள் தெரிந்து தெளிந்தும்
கண்ணெட்டியவரையில் காணக்கிடைக்கவில்லை
கடவுள் மட்டும்.
வந்த வழி வியந்தேன்.
இரண்டு சுவடுகளன்றி
இன்னொன்று ஏதுமில்லை.
இருந்த சுவடுகள் மீது
நின்றுகொண்டிருக்கின்றேன்
நான்.
- எம்.ராஜா

