பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் ஒரு அறிவிப்பு. காட்சியில் 'வீடு' பற்றிய தொடர், இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. வெறும் கல்லும் மண்ணும் கலந்து கட்டிய உறைவிடம் என்பதையும் தாண்டி ஒரு வீட்டில் படிந்திருக்கும் வலி, வரலாறு, இனிய நிகழ்வுகள், துன்பியல் நினைவுகள் போன்றவற்றை காட்சிப்படுத்தும் கதை, கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி - kaattchi@gmail.com

November 8, 2011

போலச் செய்தல் - கார்த்திக் நேத்தா





கடலில் நீந்துகிறேன் ;
கடலும் நீந்துகிறது .

அலையில் வீழ்கிறேன் ;
அலையும் வீழ்கிறது .

மழையைப் பிடிக்கிறேன் ;
மழையும் பிடிக்கிறது .

கரையில்
குழி பறிக்கிறேன் ;
கரையும் காலடியில்
'கிச்சு கிச்சு ' பறிக்கிறது .

கடலின் தலை மேல்
கரைந்து பறக்கும்
காக்கைப் போல
கரைகிறேன்
அதுவும் கரைந்து விட்டு
மறைந்து போகிறது .

அப்போதிருந்து தான்
அலைகளெல்லாம்
கரைதலாயின

-  கார்த்திக் நேத்தா.

4 கருத்துகள்:

"என் ராஜபாட்டை"- ராஜா said...

//
கடலின் தலை மேல்
கரைந்து பறக்கும்
காக்கைப் போல
கரைகிறேன்
அதுவும் கரைந்து விட்டு
மறைந்து போகிறது .
//
அருமையான வரிகள்

rasa.ganesan said...

வணக்கம் கார்த்திக் நேத்தா ,

உங்கள் சிந்தனை வித்தியாசமாக இருக்கிறது .



ராச.கணேசன்

rasa.ganesan said...

வணக்கம் கார்த்திக் நேத்தா ,

உங்கள் சிந்தனை வித்தியாசமாக இருக்கிறது .



ராச.கணேசன்

ஸ்டாலின் குரு said...

அருமை ....

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com