பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் ஒரு அறிவிப்பு. காட்சியில் 'வீடு' பற்றிய தொடர், இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. வெறும் கல்லும் மண்ணும் கலந்து கட்டிய உறைவிடம் என்பதையும் தாண்டி ஒரு வீட்டில் படிந்திருக்கும் வலி, வரலாறு, இனிய நிகழ்வுகள், துன்பியல் நினைவுகள் போன்றவற்றை காட்சிப்படுத்தும் கதை, கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி - kaattchi@gmail.com

June 23, 2011

ஒரு நாள் - சின்னப்பயல்

கவிஞர் அறிமுகம்: என்னைப்பற்றி ஒரு சிறு அறிமுகம்." சின்னப்பயல்" என்ற பெயரில் கவிதைகள் மற்றும் சிறுகதைகள் எழுதி வருகிறேன். கணிப்பொறி மேலாளராகப் பணி புரிகிறேன்.அவை "வல்லினம், யூத்ஃபுல் விகடன்,உயிரோசை, கீற்று மற்றும் திண்ணை" இணைய இதழ்களில் வெளியாகியுள்ளன.

ஒரு நாள்:

நிறமிழந்து காரை
பெயர்ந்த சுவர்
என்னை முறைத்தது

எப்போதும்
விழுந்து விடும் என்ற
நிலையில்
கதவின் கீல் திருகி
நின்றது

வார் அறுந்த செருப்பு
நடக்கும் போதெல்லாம்
என்னை இழுத்து சென்று
காட்டியது

எனது கண்கள்
ஒரு நகை நட்டு உண்டா
என்ற இல்லாளின்
பார்வையை
விலக்கச்சொன்னது

நேற்று மறந்து போன
பணப்பயிருக்கு இன்று
நீரூற்றிக்கொண்டிருந்த
போது மேற்சொன்ன
இவை யாவும்
நினைவுக்கு வந்தது

அட, இன்னொரு
நாள் கழிந்து விட்டதே
என்று...


- சின்னப்பயல்.

1 கருத்துகள்:

# கவிதை வீதி # சௌந்தர் said...

வருமையை இப்படி கவிதை கெர்டுத்து மனதை கனமாக்கிவிட்டீர்கள்...


நம்நாட்டில் பல்வேறு தரப்பின் நிலைமையும் இப்படித்தான்..


கவிதை பேசுகிறது..

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com