பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் ஒரு அறிவிப்பு. காட்சியில் 'வீடு' பற்றிய தொடர், இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. வெறும் கல்லும் மண்ணும் கலந்து கட்டிய உறைவிடம் என்பதையும் தாண்டி ஒரு வீட்டில் படிந்திருக்கும் வலி, வரலாறு, இனிய நிகழ்வுகள், துன்பியல் நினைவுகள் போன்றவற்றை காட்சிப்படுத்தும் கதை, கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி - kaattchi@gmail.com

June 14, 2011

கணப்பொழுதின் மௌனம் - விக்னேஷ்வரன்

கவிஞர் அறிமுகம் அவரின் எழுத்து வழியே
 சமீப காலமாக வலையில் ஆத்மா என்றும் ரெட்டைவால்ஸ் என்ற பெயரிலும் அறிமுகம்படித்தது மதுரையில் டி.வி.எஸ்ஸிலும் மதுரைக்கல்லூரியிலும்கல்லூரியின் மூன்றாம் வருடத்தில். ஆனந்தவிகடனுக்காக  மாணவப் பத்திரிக்கையாளனாய் கொஞ்சம் சுற்றினேன்பிறகு பிழைப்புக்காக ஆலப்புழையில் ஒரு வருடம். சென்னையில் ஆறாவது வருடம். எல்லா விஷயத்துக்கும் So What? என்ற கேள்வி எழுந்ததாலும் எழுதுவது மிகுந்த சந்தோஷத்தை தருகிறதுஇது வரை யாருமே சொல்லாத ஒரு விஷயத்தை என்றாவது ஒரு நாள் சொல்லிவிடுவேன் எனும் நம்பிக்கையில் எழுத ஆரம்பித்திருக்கிறேன்.
 
கணப்பொழுதின் மௌனம்
 
மிகவும் இரைச்சலாக இருக்கிறது
நொடிப் பொழுதின் மௌனம்
ஒரு சிகெரெட்டை முடிக்கும் பொழுதும்
குழாயை மூடும் பொழுதும்
அழுகையை நிறுத்தும் பொழுதும்
ஒரு காதலை நிராகரிக்கும் பொழுதும்
சட்டென நிகழும் மின்வெட்டின் பொழுதும்
ஒரு கதவை சாத்தும் பொழுதும்
ஒரு நாவலை முடிக்கும் பொழுதும்
எதிரியுடனான ஒரு புன்முறுவலின் பொழுதும்


ப்ரிய நாய்க்குட்டி மடியை விட்டு இறங்கும் பொழுதும்
வேண்டுமென்றே அலை அழைப்பை துண்டிக்கும் பொழுதும்
கண நேர  மௌனம் எனினும் - விதி
பல நூறு டெசிபல்களின் ஆரவாரத்துடன் 
மரணத்தை முத்தமிட்டுத் திரும்புகிறது!

- விக்னேஷ்வரன்.

1 கருத்துகள்:

senthilkumar said...

indha kavithai yai padikkum pothu
some anonymous sounds...........

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com