பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் ஒரு அறிவிப்பு. காட்சியில் 'வீடு' பற்றிய தொடர், இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. வெறும் கல்லும் மண்ணும் கலந்து கட்டிய உறைவிடம் என்பதையும் தாண்டி ஒரு வீட்டில் படிந்திருக்கும் வலி, வரலாறு, இனிய நிகழ்வுகள், துன்பியல் நினைவுகள் போன்றவற்றை காட்சிப்படுத்தும் கதை, கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி - kaattchi@gmail.com

May 26, 2011

கருமையின் படிமானம் - ஷம்மி முத்துவேல்

கவிஞர் அறிமுகம்:
என்னை பற்றிய ஒரு சிறு அறிமுகம் ,பரந்த வெற்றுவெளியில் எனக்கென ஓர்  இடம்  தேடும் ஓர் சக மனுஷி , ஷம்மி முத்துவேல் என்ற பெயரில் எழுதி வருகிறேன் , எனது வலை பூவிலும் மற்றும் திண்ணை , உயிரோசை , யூத்புல் விகடன் , கீற்று போன்ற இணைய இதழ்களில் எனது கவிதைகள் வெளிவந்துள்ளன.

கருமையின் படிமானம்:

இலைகளின் நுனியோர பனித்துளி 
உணர்ந்தே ஒளி வீச
ஒரு கீற்று எழுப்பும் ஒளிகளினுடே
இருளின் கருமை படிந்தே  இருக்கும் 

மேகக் கூடத்தில் வெள்ளையாய் 
முயல், கரடி என உருவகங்கள் செய்து
தன்னிச்சையாய் செயற்படும் 
ஒன்றுமற்ற வெற்று வெளியில் 
கருமை சூழ 
வெறித்து இருக்கும் பார்வை 


காகிதக் கூழ் பதுமையாய் 
ஒட்டலின்றி விலகி 
தனித்து நின்றாடுதோர் 
தலையாட்டி பொம்மை 
அச்சுக் கருமை விலகாமல்...
 
-  ஷம்மி முத்துவேல்

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com