பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

May 16, 2011

என் வீடு - கிருத்திகன்

கவிஞர் அறிமுகம்: நான் - கிருத்திகன் என்கின்ற பெயரில் “ நீயும் நான் ”  ”மீளவும்”  ஆகிய வலைகளில் எழுதி வருகிறேன்.  ஈழத்தை சார்ந்தவன். தற்போது மலேசியாவில் பல்லூடகத்துறை பயின்று கொண்டு இருக்கின்றேன்.

என் வீடு:

மரணம் வழியும் சுவர்களை
சன்னம் துளைத்திருக்கிறது.


சதை தெறித்த பிண்டங்களை 
உரமாக்கிய பற்றை
முற்றத்தில் நிறைத்திருக்கிறது .

குருதி படிந்த மண்ணை
மரணச்சருகுகள் 
போர்த்திருக்கின்றன.
சரீரத்தில் விலகிய ஆத்மாவை போல்

கூரையினை வானம் பறித்துக்கொண்டது .
பேய்கள் அலையும் வெளியின் 
கல்லறையாய்
பயமூட்டுகின்றது
காலத்தை விழுங்கி சிதைந்த 
என் வீடு

கனவுகள் நொதிந்த நிலத்தில்
வளர்ந்திருக்கும் சிலந்தியின் கூடுகளை
கலைக்க மறுக்கின்றன
வலி கனத்த எம் சிறகுகள்...

- கிருத்திகன்.

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com