பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

May 3, 2011

ஒரு வீடு - தி .ராஜேஷ்

 கவிஞர் அறிமுகம்: பெயர் தி .ராஜேஷ். முதுகலை புவியியல் மாணவன். பிறந்த ஊர் வளத்தூர் கிராமம், வேலூர் மாவட்டம், தற்பொழுதைய இருப்பிடம் திருச்சி.

ஒரு வீடு:

 
முன்னெப்பொழுதும் 
இல்லாத மவுனத்தை 
கொண்டிருக்கிறது 
ஒரு வீடு .

சுவர்களின் சுண்ணாம்பு 
விரிசல்கள் தனி தனி 
ஓவியமாகவே வீட்டின் 
வரலாறை சொல்கிறது .
பல நூற்றாண்டின் சுவாசம் 
படிமமாக உறைந்து 
போயிருக்கிறது .

யாதுமற்ற ஒரு வீடு 
வலியின் இருப்பை 
இன்றும் விட்டு 
வைக்கவில்லை.

காட்சிப்படுத்தும் நிகழ்வு 
ஒளியின் சேர்ப்பு மட்டுமே 
காலத்தை உணர செய்ய 
கூடுமானவரை ஊரில் ஒரு 
வீடு இது போல் அமைந்து 
விடுகிறது .

ஒவ்வொரு முறை ஊருக்கு 
செல்லும் பொழுது  
சிதிலமடைந்த ஒரு வீடு
வன்மத்தை மற்ற 
வீடுகளுக்கு 
தன் எல்லையை 
பரப்பி கொள்கிறது .

-  தி .ராஜேஷ் .

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com