பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

April 28, 2011

புண்ணியபூமியும் துரத்தல்கள்களும் - விக்னேஷ்வரன்

கவிஞர் அறிமுகம் அவரின் எழுத்து வழியே
 சமீப காலமாக வலையில் ஆத்மா என்றும் ரெட்டைவால்ஸ் என்ற பெயரிலும் அறிமுகம்படித்தது மதுரையில் டி.வி.எஸ்ஸிலும் மதுரைக்கல்லூரியிலும்கல்லூரியின் மூன்றாம் வருடத்தில். ஆனந்தவிகடனுக்காக  மாணவப் பத்திரிக்கையாளனாய் கொஞ்சம் சுற்றினேன்பிறகு பிழைப்புக்காக ஆலப்புழையில் ஒரு வருடம். சென்னையில் ஆறாவது வருடம். எல்லா விஷயத்துக்கும் So What? என்ற கேள்வி எழுந்ததாலும் எழுதுவது மிகுந்த சந்தோஷத்தை தருகிறதுஇது வரை யாருமே சொல்லாத ஒரு விஷயத்தை என்றாவது ஒரு நாள் சொல்லிவிடுவேன் எனும் நம்பிக்கையில் எழுத ஆரம்பித்திருக்கிறேன்.
புண்ணிய பூமி:

எம் கடவுளர் விசித்திரமானவர்கள்
வரம் கொடுத்து வம்பைப் பெறுவர்
எம் கடவுளர் பலசாலிகள்
தொண்டைக்குள் விஷத்தை நிறுத்துவர்



எம் கடவுளர் அதிர்ஷ்டசாலிகள்
வகைக்கொன்றாக மணம் புரிவர்
எம் கடவுளர் ஆத்திரக்காரர்கள்
பழம் நஷ்டப்படின் மலையேறி விடுவர்
எம் கடவுளர் சரித்திர புருஷர்கள்
பல்லும் மயிரும் பத்திரமாக உள்ளது
எம்முடையது புண்ணிய பூமி
எம் நாடு ஜனநாயக நாடு
என்ன...எந்தக் கடவுளுக்கும் கோவில் விட்டு
வெளியே சுற்ற அனுமதி இல்லை

*************************************************

துரத்தல்கள்:

என் ஆதி தகப்பன்
இந்த ஊர் வந்து சேர்ந்த போது
வெறும் காடாயிருந்தது.
வேடர்களும் புலிகளும் ஆதி தகப்பனை
ஒத்துக்கொள்ளவேயில்லை
சதா துரத்தியபடியே இருந்தார்கள்.
காடு கழனி கரைவெட்டி ஊராக்கிய பின்
வேறொரு காலத்தில் வேறு சிலர் துரத்தினார்கள்
அப்பொழுதும் மீதி தலைமுறை
அசைந்து கொடுப்பதாயில்லை.
சில தலைமுறைகளுக்கு முன்
வியாபாரிகள் வந்தார்கள்.
ஊரை கூறாக்கி துரத்திவிட எத்தனித்தார்கள்
என் பாட்டன்கள் விடுவதாயில்லை
மீண்டும் சிலர்
என் தகப்பனும் போராடிப் போய்ச் சேர்ந்துவிட்டான்
என்னால் முடியவில்லை
வம்சக்கதையை தனயனிடம் சொன்னேன்
"வாப்பா நாம வேறொரு ஊருக்குப் போய்
வேற யாரையாவது துரத்தலாம்!"
காலம் தோறும் பிரபஞ்சத்தில்
துரத்தல்கள் நிற்பதே இல்லை.

- விக்னேஷ்வரன்.


தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com