ஆசிரியர் அறிமுகம்: பெயர் சீதா பாரதி. திருச்சி சூரியன் பண்பலையில் தொகுப்பாளராக பணிபுரிகிறார்.
அவள் ஒரு மகராசி:
அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் குறைந்து , சில்லென்ற மழைச்சாரலும், இதமான தென்றலும் தலைநகர் டெல்லியை வருடத்தொடங்கின.. . வெயிலுக்குப் பெயர் போன நெல்லை மாவட்டத்தில், வெயிலோடு விளையாடி, வெயிலோடு மல்லுக்கட்டி பழக்கப்பட்டுப்போன ரகுவுக்கு டெல்லியின் வெயிலைச் சமாளிப்பதில் கடினம் இல்லை என்ற போதிலும், அதிசயமாய் பெய்த மழையைத் தன்னை மறந்து ரசித்தான் .. .. தனிமையும், அந்த இனிமையும், அவன் நினைவலைகளைப் பின்னோக்கித் திருப்பின..
கைநிறைய சம்பளத்துடன், செல்வாக்கான வேலையைக் கொடுத்தது இந்த டெல்லி தான்.. இப்ப கூட, ஊரு முழுக்க் எங்க அம்மா, "என் புள்ள டெல்லி ல இருக்கான்" ன்னு பெருமிதத்துடன் சொல்லுவாங்க.. இந்திய தீபகற்பத்தின் தலைநகரில் வேலை செய்கிறோம் என்கின்ற இறுமாப்பு எனக்கும் இருக்கத்தான் செய்கிறது.. குச் குச் ஹோத்தா ஹை... ஹம ஆப்கே ஹை கௌன் போன்ற ஹிந்தி படங்களின் பெயர்களை மட்டுமே தெரிந்து கொண்டு டெல்லி வந்த எனக்கு, ஹிந்தியில் கவிதை எழுதும் அளவுக்கு கற்றுத்தந்தது இந்த ஊர் தான்.. சொந்த பந்தங்களை விட்டு தனியே வாழவும், சமைக்கவும், மனிதர்களை புரிந்து கொள்ளவும் , இங்கு வந்த பின் தான் பழகினேன்.. ஆரம்பத்தில் அரிசி உணவை எங்கு பார்த்தாலும் அலைபாய்ந்த நாக்கு, இன்று கோதுமைக்குத் தன்னை மாற்றிகொண்டது.. ஆனால் தாய்மொழியில் பேச வேண்டும் என்கின்ற தாகத்தை மட்டும் அதனால் அடக்க இயலவில்லை.. செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் காதில் வந்து பாய்ந்தது மகாகவிக்கு மட்டும் அல்ல.. எனக்கும் தான்.. நல்ல தமிழ் கேட்க ஆவலாய் இருப்பேன்.. வாரம் இரு முறை குடும்பத்தாருடன் பேசும் போது மட்டும் தான் அதை கேட்க முடிந்தது.. "எலேய் , நல்லாருக்கியா? அங்க வெயில் அடிக்கா ? மழை பெய்யா? வேளா வேளைக்கு சாப்பிடுகியா ? அங்கண இங்கண சாப்பிட்டு உடம்ப கெடுத்துக்காதையா... " நெல்லைத்தமிழில் அம்மாவின் அக்கறை பொதிந்த வார்த்தைகள் இவை..
என் இளவயதில் நானும் இப்படித்தான் நெல்லைத்தமிழ் பேசி வளர்ந்தேன்.. அனால் கல்லூரி படிப்பிற்காக சென்னை வந்த பொழுது, சக மாணவர்கள், என் தமிழைக் கிண்டல் செய்ததால், "வந்துட்டு.. போயிட்டு .." என இயல்பாக நான் பேசிக்கொண்டிருந்த வார்த்தைகளை மறைத்து "வந்துருச்சு போயிருச்சு" என பேசி பழகினேன்.. ஆனா ஊருக்கு போனால் , நான் நெல்லை வாசியாகவே மாறிடுவேன்...
நெல்லை மாவட்டத்தில் உள்ள மாறாந்தை என்னும் சிறிய கிராமம் தான் நான் பிறந்த ஊர்.. ஊர் மக்கள் எல்லாருமே உறவினர்கள் மாதிரி தான் பழகுவாங்க.. பாட்டி தாத்தாவைக் கூட பார்த்திராத இந்தத் தலைமுறை குழந்தைகளுடன் ஒப்பிடும் போது, நான் ரொம்பக்கொடுத்துவைத்தவன்ன்னு தோணும்.. என் ஊர் முழுக்க நிறைய பாட்டி தாத்தாவ பார்த்திருக்கேன்... பாட்டியோட அம்மா பூட்டி.. அவங்க அம்மா ஓட்டி வயசில இருப்பவங்க கூடவும் பழகிருக்கேன்.. 80 வயதுக்கு மேல் உள்ளவங்க வாழ்க்கை அனுபவத்த கேட்டாலே போதும்.. அது 100 புத்தகங்கள் படிப்பதற்கு சமம்.. இந்த மாதிரி பாட்டிகள் கிட்ட கதை கேட்பது தான் இளம் வயதில் என் பொழுதுபோக்கு..
நீச்சல் அடிக்க பயந்து கொண்டிருந்த என் இளம் வயதில், .. நல்ல கட்டுமாஸ்தான உடம்புடன், பார்ப்பதற்கு கிட்டத்தட்ட சாலமன் பாப்பையா மாதிரி இருக்கும் முத்தையா தாத்தா வந்தாரு.. "என்ன தம்பி நீ .. .. நான் அந்த காலத்துல கிணத்துலையே சர்வ சாதாரணமா குதிச்சு குளிப்பேன்... இதுக்கு போயி இப்படி பயப்படுறன்னு சொல்லிட்டு போனார்" .. நான் கடினம் ன்னு நெனச்சிருந்தத, அவர் வார்த்தைகள் எளிமை ஆக்கிடுச்சு ..
முதுகில் கூன் விழுந்தாலும் மனதில் கூன் விழாத பாட்டிகள்... காது அறுந்து விழும் அளவுக்கு பாம்படம் போட்ட பாட்டிகள் என பலவிதமான பாட்டி தாத்தாக்களை பார்த்திருக்கிறேன்.. எல்லாரும் சகஜமா பழகினாலும், மகராசி பாட்டி மட்டும் ஒண்ணுமே பேச மாட்டங்க.. எப்பவும் தனியாவே இருப்பாங்க..
திடீரென தொலைபேசி சிணுங்க நிகழ் காலத்திற்கு வந்தான் ரகு.. மறுமுனை யில் கம்பெனி யின் உயர் அதிகாரி.. "ரகு.. நீங்க லீவ் வேணும்ன்னு கேட்டேங்க ல.. அதுக்கு ஒப்புதல் கெடச்சிருச்சு.. நீங்க 10 நாள் லீவ் எடுத்துகோங்க.. " என்றார் ஆங்கிலத்தில்..
மகிழ்ச்சியில் நன்றி கூட சொல்ல மறந்து சிலை போல நின்றான் ரகு.. ஒன்றரை வருடங்களுக்கு பின் ஊர் திரும்பும் மகிழ்ச்சிக்கு அளவு தான் எது?
பெட்டி படுக்கையுடன் ரயில் ஏறினான்.. . எக்ஸ்பிரஸ் ரயிலின் ஜன்னலோர இருக்கையில், இயற்கையை ரசித்திருக்கையில் நினைவலைகளை மீண்டும் பின் நோக்கி சுழற்றினான்..
ஊர்ல இருக்ற எல்லா பாட்டிகளும் சகசமா பழகினாலும், இந்த மகராசி பாட்டி மட்டும் ஏன் எப்பவும் உம்முன்னு இருக்காங்க? நான் சின்ன பிள்ளையா இருக்கும் போது, அவங்க ஊமை போலன்னு நெனைப்பேன்.. ஆனா ஒரு நாள் நண்பர்களுடன் விளையாடிட்டு இருக்கும் போது அவங்க வீட்டில போய் ஒளிய போனோம்.. அதை பார்த்து ரொம்ப கோவத்தோட கத்தினாங்க.. அப்போ அதான் அவங்க பேசுவாங்கன்னு எனக்கு தெரியும்..
நாங்க பாட்டி ன்னு கூப்டுறது கூட அவங்களுக்கு பிடிக்காது.. " என்னை பாட்டின்னு கூப்பிடாதேங்கடா ன்னு கோவத்துல சொல்லுவாங்க".. . , "பாட்டிய, பாட்டி ன்னு கூப்பிடாம , பேபின்னா கூப்ட முடியும்" ன்னு நான் நினைப்பேன்..
மகராசி பாட்டி எத்தன வருஷமா இங்க இருக்காங்க.. அவங்களுக்கு எவ்ளோ வயசு ஆகுது..கல்யாணம் ஆகிடுச்சா? பிள்ளைகள் இருக்கா ? இது போன்ற எந்த விவரமும் தெரியாது.. சுருங்கி போன தோல்கள்.. குழி விழுந்த கண்கள் .. அதை மறைக்கும் கண்ணாடி , மொட்டை தலை .. யாருடனும் பேசாத தனிமை.. எதையோ பறி கொடுத்த சோகம்.. இது தான் மகராசி பாட்டியின் தோற்றம்.. ஆனால் இந்த வயசிலையும், ஏதோ சாதிக்க வேண்டும் என்கின்ற வெறி மட்டும் அவங்க கிட்ட இருக்கும்..
ஒரு சின்ன ஒட்டு வீடு.. அங்க எப்பவும் ஒரு மஞ்சள் பல்பு எரிஞ்சுகிட்டே இருக்கும்... எனக்கு விவரம் தெரிஞ்ச நாளில் இருந்து, மகராசி பாட்டி அந்த வீட்டை விட்டு எங்கயுமே போனது இல்ல.. . அவங்களுக்குன்னு இருக்கிற ஒரே சொத்து அவங்க ரேடியோ மட்டும் தான்.. காலைல 6 .45 , மதியம் 1 .45 , மாலை 6 .30 க்கு ரேடியோவில் ஒலி பரப்பாகும் மாநிலச்செய்திகளை மட்டும் தவறாம கேப்பாங்க ....எல்லாம் இழந்து தன்னந்தனியா இருக்கும் இவங்களுக்கு மாநிலச்செய்திகள் கேட்டு நாட்டு நடப்ப தெரிஞ்சுக்க அப்படி என்ன ஆர்வம் ன்னு நெனச்சு ஆச்சர்யபட்டிருக்கேன்.. இப்படி ஒரு புரியாத புதிராக இருக்கும் மகராசி பாட்டி யை பற்றி முழுசா தெரிஞ்சுக்கணும்.. அந்த புதிரை விடுவிக்கணும் ன்னு முடிவு செஞ்சேன்..
இரண்டு நாட்கள் ரயில் பயணம்.. பின்னர் பேருந்து பயணம் என மாறி இறுதியில் ஊரை வந்து அடைந்தேன்.. மகராசி பாட்டியை யை பார்க்க வேண்டும் என்கின்ற ஆவல் தான் அதிகம் இருந்துது.. அவங்க இங்கயே இருப்பாங்களா? உயிரோடு இருப்பாங்களா போன்ற எதிர்மறை எண்ணங்களும் வந்தன.
ஆனால் எந்த மாற்றமும் இல்லை.. அதே ஒட்டு வீடு, மஞ்சள் பல்பு .. அதே மகராசி பாட்டி.. அதே ரேடியோ.. அதே மாநிலச் செய்திகள்..
முதல் நாள்... அவங்கள பார்த்து புன்னகைத்தேன்.. formality க்கு கூட சிரிக்காம போய்ட்டாங்க.. நான் சைட் அடிச்ச பொண்ணுங்க கூட என்ன இவ்ளோ insult பண்ணினது இல்ல.. இருந்தாலும் விடாமல் முயற்சித்தேன்.. அவங்களுக்கு ஏதாவது உதவி செய்யலாம்னாலும், தேவை ன்னு ஒன்னு இருந்த தானே உதவி செய்ய முடியும் ... முற்றும் துறந்த முனிவர் மாதிரி இருக்கும் இவங்களுக்கு என்ன உதவி செய்ய முடியும்... ? ரெண்டு மூணு நாளா நானும் முயற்சித்து பார்த்தேன் அவங்கள பத்தி ஏதாது தெரிஞ்சுக்கலாம்ன்னு.. ஆனா முடியல. . எப்படியும் போகட்டும்.. நமக்கென்ன அவசியம்ன்னு என் வேலையை பார்க்க தொடங்கினேன்..
நான்கு நாட்களுக்கு பிறகு... திடீரென, தம்பி என என்னை யாரோ அழைக்கும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தேன் ..
அட, நம்ம மகராசி பாட்டி..
"என்ன பாட்டி.."? மிகுந்த அன்போடும் அக்கறையோடும் கேட்டேன்..
என் ரேடியோ கொஞ்சம் ரிப்பேர் ஆகிடுச்சு.. சரி பண்ணி தருவியாப்பா ?
"ம்ம்" என்று மட்டும் கூறி விட்டு ரேடியோவை சரி செய்யும் கடையில் கொண்டு கொடுத்தேன் ...
"பாட்டி, கடைல குடுத்துட்டேன்.. கொஞ்சம் பிரச்சனை இருக்கு.. சரி செய்ய ஒரு வாரம் ஆகுமாம்" என்றேன்..
அப்படியாப்பா.. என கேட்ட பாட்டியின் முகம் சுருங்கி போனது..
சரி பாட்டி நான் கெளம்புறேன்.. என்றேன்..
தயவு செஞ்சு என்ன பாட்டி ன்னு கூப்பிடாதப்பா.. ன்னு சொன்னாங்க...
புரியாமல் விழித்தேன்
எனக்கு என்ன வயசு இருக்கும் ன்னு நினைக்கிற? 47 முடிஞ்சு 48 நடக்குது.. அதுக்குள்ள நான் பாட்டியா? அதிர்ச்சியில் இமை ஆடாமல் நின்றேன்.. இந்த மொட்டை தலையும், சுருங்கிய தோலும், வயதான தோற்றமும் இயற்கையாக வந்ததில்லைப்பா .. செயற்கையாக வந்தது..
என் நெஞ்சம் விம்மியது.. நான் எதிர்பார்த்ததை போல, தன் புதிரை அவிழ்க்க தொடங்கினாள் மகராசி பாட்டி..
என் பேரு கூட மகராசி கிடையாது.. என் ஊரும் இது கிடையாது.. காதலிச்சு, வீட்டை விட்டு ஓடி போய் திருமணம் செய்தேன்.. என் கணவர் ரயில்வேல ஸ்டேஷன் மாஸ்டர் ஆ இருந்தாரு.. அவருக்கு போபால்க்கு மாற்றுதல் கெடச்சுது.. சந்தோஷமா அங்க போய் வாழ்க்கைய தொடங்கினேன்..
எல்லா நாளையும் போல தான் அந்த நாளும் விடிஞ்சுது.. டிசெம்பர் 3 ம் தேதி.. 1984 ம் வருஷம்..
காலைலேயே அவரு வேலைக்கு போயிட்டாரு.. நான் மட்டும் வீட்ல தனியா இருந்தேன்.. திடீர்ன்னு ஒரு கருப்பு புகை சூழ்ந்த மாதி இருந்துது.. மூச்சுமுட்டி மயக்கம் போட்டு விழுந்துட்டேன் ..... என் கெட்ட காலம் என் உசிரு போகல.. மயக்கம் தெளிஞ்சு எந்திச்சேன்.. உடம்பு எல்லாம் தாங்க முடியாத வலி.. கண் பார்வை மங்க ஆரம்பிச்சுடுச்சு.. வலியோட, என் கணவரை பார்க்க பக்கத்தில் இருந்த ரயில்வே ஸ்டேஷன் க்கு போனேன்.. போற வழி எல்லாம் ஈசல் மாதி மனுசங்க செத்து செத்து விழுந்தாங்க .... தம்பி.. யாருக்கும் என்ன மாதிரி நிலைமை ஏற்படக்கூடாது.. நூத்துகணக்கான மக்கள் செத்து கிடக்கறத என் கண்ணால பார்த்தேன்.. என்ன மாதி ஒரு சிலர் மட்டும் தான் உயிர் பிழைத்தாங்க.. மீட்புக்கு கூட ரொம்ப நேரமா யாரும் வரல்ல ,,, என்ன நடந்துது ன்னு யாருக்குமே புரியல..
மக்கள் எல்லாரும் என்ன வேலை செஞ்சுகிட்டு இருந்தாங்களோ அந்த நிலைலேயே இறந்து கிடந்தாங்க.. என் கணவரும் கூட தான்.. கொடி காத்த குமரன் மாதிரி, பச்சை கொடியை கையில் பிடித்தபடியே கீழ விழுந்து கிடந்தாரு உயிரில்லாம ...
கடைசியில தான் தெரிஞ்சுது, போபால் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் விஷ வாயு கசிஞ்சதால ஏற்பட்ட விபத்து தான் அதுன்னு..
.. கொஞ்ச நேரத்துல என்னோட ஒரு கண்ணு சுததமா தெரியாம போச்சு.. பாட்டில் பாட்டிலா மருந்து கொண்டு வந்து ஊத்தினாங்க.. ஆனா ஒரு பயனும் இல்லை... அப்போ நான் 6 மாசம் கற்பமா இருந்தேன்.. என் புள்ள , வெளி உலகத்த பார்க்காமலே கருகி போச்சு.. அந்த விபத்தில இறந்திருந்தா கூட பரவால்ல.. உயிர் பிழச்சவங்க நிலைமை தான் ரொம்ப கஷ்டம்பா.. எங்களுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் கூட பயப்பட்டாங்க.. அந்த விஷ வாயுவால, என் தலை முடியெல்லாம் உதிர்ந்து, தோல் சுருங்கி, வயசான மூதாட்டி மாதிரி தோற்றம் வந்துருச்சு..
பெற்றோரை எதிர்த்து கல்யாணம் பண்ணினேன்.. இப்போ இந்த கோலத்துல அவங்க கிட்ட திரும்ப போகவும் மனம் வரல்ல.. அதான் போற வழியில இருந்த இந்த ஊர்ல வந்து இருந்துட்டேன்.. அந்த விபத்துல இறந்தவங்க குடும்பத்துக்கு அரசாங்கம் கொடுத்த பணத்துல இப்போ காலத்த கழிச்சுகிட்டு இருக்கேன்.. நான் இந்த ஊருக்கு வந்த பொழுது, என்னை பத்தி தெரிஞ்சுக்க கூட யாரும் முன் வரல்ல.. அப்போ எனக்கு 25 வயசு தான் இருக்கும்.. என் தோற்றத்த பார்த்து, எல்லாரும் என்ன பாட்டி பாட்டி ன்னு கூப்ட ஆரம்பிச்சுட்டாங்க.. அந்த வயசில பாட்டி ன்னு கூப்பிட்டா தாங்க முடியுமா பா.. யோசிச்சு பாரு...
விடு.. அதை பத்தி எல்லாம் இப்போ எனக்கு கவலை கிடையாது.. ஒரு விஷயத்துக்காக தான் காத்துகிட்டு இருக்கேன்.. என சொல்லி முடிச்சாங்க..
குளமான கண்களுடன் அதிர்ச்சியில் சிலை போல் நின்றேன்.. .. இரண்டு நிமிட மௌனத்திற்கு பின் மீண்டும் தொடர்ந்தாங்க மகராசி அம்மா ...
"எனக்கு மூளை நரம்பு ல பாதிப்பு.. அதனால எல்லாமே சீக்கிரமா மறந்துடும்.. ஆனா, இந்த யூனியன் கார்பைடு.. ஐசோ சயனைடு.. இந்த ரெண்டு பேரும் ஆயுசுக்கும் மறக்காது பா..
இந்த விபத்துக்கு காரணமானவங்களுக்கு, நிச்சயமா தண்டனை கிடைக்கும்ன்னு எல்லாரும் சொன்னாங்க.. .. அப்பாவியான 25000 பேரை கொன்றதுக்காக நிச்சயம் நீதி கிடைக்கும் ன்னு நம்பினேன்.. ஆனா 26 வருஷமாச்சு.. அந்த வழக்கை விசாரிக்கவும் இல்ல.. தீர்ப்பும் சொல்லல..
நானும் விடாம செய்திகள் கேட்பேன் எப்படா தீர்ப்பு சொல்லுவாங்கன்னு.. கடைசியா ஜூன் 7 அதான் தம்பி.. . நாளைக்கு தீர்ப்புன்னு சொன்னாங்க.. நம்ம பொறுமை வீணாகல.. கண்டிப்பா தப்பு செஞ்சவங்களுக்கு தண்டனை கிடைக்கும்.. அதை தெரிஞ்சுக்கணும்.. அப்புறம் தான் உயிரை விடணும்ன்னு இருந்தேன்.. ஆனா இப்போ பார்த்து இந்த ரேடியோ ரிப்பேர் ஆகிடுச்சு பா.. என்று முடித்தாள் மகராசி..
கவலைபடாதீங்கம்மா.. ரேடியோ ரிப்பேர் ஆனா என்ன?? .. நாளைக்கு என்ன தீர்ப்பு சொல்றாங்கன்னு நான் கேட்டுட்டு வந்து உங்க கிட்ட சொல்றேன்ன்னு சொல்லி கிளம்பினேன்..
இளமையை அனுபவிக்காமலே முதுமைக்கு சென்ற இவங்கள அவ்வையார் ன்னு சொல்லவா.. இல்ல, கணவனை கொன்றவர்களுக்கு தண்டனை கிடைக்கணும் ன்னு காத்துகிட்டு இருக்கும் இவங்கள கண்ணகி ன்னு சொல்லவா... எல்லாருக்கும் எல்லா நாளும் ஒரே மாதிரி தான் விடியுது.. ஆனா ஒரே மாதி முடியுறது இல்ல.. விதியின் கோர தாண்டவங்கள் சிலரை அளவுக்கு அதிகமா காயப்படுத்தும் .. சில விஷயங்கள் ஏன் இப்படி நடக்குது ன்னு காரணம் கேட்க முடியாது.. மகராசி பாட்டியின் நிலைமையும் அது தான்..
மறுநாள்.. போபால் விஷ வாயு வழக்கின் தீர்ப்பு... அதை தெரிந்து கொள்ள மகராசி அம்மாவை விட நான் ஆவலாக இருந்தேன்..
தீர்ப்பும் வந்தது.. விபத்துக்கு காரணம் ஆனவங்களுக்கு 2 வருடம் சிறை தண்டனையும் சொற்ப அபராதமும்..
"திட்டமிட்ட கொலை இல்லை எனினும் இது எதிர்பாராத விபத்து " என்ற பிரிவின் கீழ் நீதிமன்றம் இந்த வழக்கை வகைபடுத்தியது.. தெரிஞ்சு செஞ்சாலும் தெரியாம செஞ்சாலும் தப்பு தப்பு தானே.. இந்தியா , ஆப்பிரிக்க நாடுகள் போன்ற மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் எப்போதுமே பரிசோதனை எலிகளாக தான் பயன்படுத்தபடுறாங்க .. இந்த யூனியன் கார்பைடு நிறுவனம் கூட முதலில் கனடாவில் தான் இருந்தது.. அங்கு மக்கள் எதிர்ப்பு கிளம்பி துரத்தி அடிக்க பட்ட அப்புறம் தான் இந்தியாவுக்கு வந்துச்சு..
..
நஷ்ட ஈடு கோடி கணக்கில குடுக்கலாம்.. ஆனா, இழந்த ஒரு உயிரை மீட்டு தர முடியுமா?? இத்தனை வருஷமா தீர்ப்புக்காக காத்துகிட்டு இருக்கும் மகராசி அம்மா கிட்ட போயி ரெண்டு வருஷம் தான் தண்டனை ன்னு எப்படி சொல்ல... ? நீதி கேட்டு கண்ணகி மாதிரி அவங்களும் பொங்கி எழுந்தா உலகம் தாங்குமா?? என பல எண்ணங்கள் மனதில் ஓடின..
நல்ல விஷயங்களுக்காக சொல்லப்படும் பொய்களில் தவறு இல்லை என எங்கோ படித்த ஞாபகம்.. மகராசி அம்மா வீட்டுக்கு போனேன்.. ஆவலோடு என் முகத்தை பார்த்தாங்க.. அந்த விபத்துக்கு காரணமான 8 பேருக்கும் ஆயுள் தண்டனைம்மா.. அதோட, அதன் தலைவருக்கு மரண தண்டனை ன்னு சொன்னேன்..
"நிஜமா தான் சொல்றயா தம்பி... " ன்னு கேட்டாங்க கண்ணீர் மல்க..
ஆமா .. இப்போ தான் நியுஸ் கேட்டுட்டு வந்து சொல்றேன்னு சொன்னேன்..
நல்லதுப்பா.. இப்படி கடுமையான தண்டனை குடுத்தாதான் இனி மேல் இது மாதிரி தப்பு நடக்காது.. மனுசங்க உயிருன்னா சும்மாவா?? 25 000 பேரை கொன்னதுக்கு சரியாய் தண்டனை கிடைச்சிருச்சு.. இனி இப்படி நடக்காது.. எல்லாருக்கும் இது ஒரு எச்சரிக்கை.. என் மாதிரி நிலைமை இனி யாருக்கும் வராது என்றார் சிரித்து கொண்டே..
மகராசி அம்மாவின் சிரித்த முகத்தை அன்று தான் பார்த்தேன்..
அத்துடன் என் விடுமுறை முடிந்ததால், அடுத்த நாள் டெல்லி திரும்பினேன்.. .. மீண்டும் பரபரப்பான வாழ்க்கைக்குள் மூழ்கி, போனேன்..
ஒரு வருடத்திற்கு பின்.. மீண்டும் விடுமுறைக்கு சொந்த ஊர் வந்தேன்.. மகராசி அம்மா இப்போ எப்படி இருப்பாங்க என தெரிந்து கொள்ளும் ஆவலுடன் அவங்க வீடு நோக்கி சென்றேன்..
அதே ஓட்டு வீடு.. அதே மஞ்சள் பல்பு ... அதே ரேடியோ ... ஆனா மகராசி அம்மா மட்டும் இல்ல..
அப்பாவிடம் கேட்ட போது.. "போன வருஷம் நீ ஊருக்கு கெளம்பி போன அடுத்த நாளே அந்த பாட்டி செத்துருச்சு பா .. " என்றார்...
.கடைசி நாளிலாவது மகராசி அம்மாவின் முகத்தில் சிரிப்பை கொண்டுவந்ததில் நிம்மதி எனக்குள்.. ஆனால் அந்த விபத்தில், உறவினர்களையும் உடமைகளையும் சந்தோஷங்களையும் தொலைத்த பல மகராசிகள் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.. ..
- சீதா பாரதி.