கவிஞர் அறிமுகம்: பெயர் மணிவண்ணன். மென்பொருள் துறையில் பணி. என் மொழியின் விளையாட்டுப் பரிசோதனையாக எனது கவிதைகள்.
நமதான இறுதிச்சொல்:
ஒவ்வொரு முறையும்
கடைசிச் சொல்லின் போது
இருவருமே அழுகிறோம்
நம் வாழ்க்கை
நம் தேடல்
நம் துரோகம்
என அனைத்தின் பிம்பமாகவும்
இருக்கிறது
அது
இருள் களைந்து எழுகிற
பகலைப்போல
காமம் களைந்து எழுகிற போது
இன்னொரு சொல்லை
எறிந்து விட்டுப் போகிறாய்
அது
முதற்சொல்லாயினும்
கடைச்சொல்லாகவே
தொனிக்கிறது
ஒவ்வொரு நாளும்
நான்
வேண்டிக்கொள்வது
ஒன்றே
இன்றேனும்
ஒரு இறுதிச்சொல்லை
நீயோ
நானோ
உதிர்க்காமல் இருப்போம்
அதுவே
இறுதியென்று நாம் அறிந்திருந்தாலும் கூட!
- மணிவண்ணன்.
January 19, 2011
தொடர்பு
படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com

