December 6, 2010
துர்தருணம் -கார்த்திக்நேத்தா
தயவு செய்து
விளக்கை ஏற்றாதே .
இருள் ஓர் இசை .
ஏற்றும் ஒளி
அதன் ஒழுங்கை சிதைக்கிறது .
பகலின் ப்யானோவிலிருந்து
கசியும் வெக்கை
இருளின் வாத்தியங்களில்
எப்போதும் இருப்பதில்லை .
இருளிலிருந்து இருளுக்கு நீ
பயணப்படும் போது
நான் உனக்குச் சொல்கிறேன்
பிரியமான காதலியின்
மரணத்தைக் காட்டிலும்
ஆழமான வலிகளை அது
உண்டுபண்ணுகிறது .
தயவு செய்து
ஒளி ஏற்றாதே
உன்னைக் கண்டு நீயே அஞ்சும்
துர்தருணம் அப்போது
சம்பவிக்கிறது .
Labels:
கார்த்திக் நேத்தா கவிதைகள்
தொடர்பு
படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com
