என்னால் எழ முடியாது
ஏனென்றால் நான் இன்னும் விழவில்லை .
என்னால் விழ முடியாது
ஏன்னென்றால் நான் இன்னும் பிறக்கவில்லை .
என்னால் பிறக்க முடியாது
ஏனென்றால் நான் இன்னும் இறக்கவில்லை .
என்னால் இறக்க முடியாது
ஏனென்றால் நான் ஊனோ , உயிரோ இல்லை .
செத்தாரைப் போல திரிவேன் .
சகத்தைப் பழித்து சிவத்தில் தெறிப்பேன் .
சிவத்தைப் பகைத்து சவமாய் ஜனிப்பேன் .
நீங்கள் சாயம் பூச வந்தால்
நான் பனிக்கட்டி ஆகிவிடுவேன் .
நீங்கள் நெருப்பு கொண்டு வந்தால்
நான் ஒளியாகி விடுவேன் .
உங்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது .
நான் பிறக்காத குழந்தையின் விந்தாக இருக்கிறேன் .
இறந்து போனவனின் கண்ணீராகவும் இருக்கிறேன் .
கார்த்திக் நேத்தா.
November 12, 2010
தொடர்பு
படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com
