[1 ]
ஸ்ரீயென்றால்
செல்லமாய் சினுங்குவாள்.
ஸ்ரீக்குட்டிபாப்பாவென்றால்
திரும்பி பார்த்து சிரிப்பாள்
தன்னைவிட பெரிய பாரத்தை
இழுத்துச்செல்லும் எறும்பைபோல
ஸ்ரீக்குட்டிபாப்பாவிற்கு
எல்லா பறவைகளூம்
காக்கைகள்.
யாவரும்
மாமா அத்தைகள்.
எல்லாம் ஒன்றல்ல என
அறியும்பொழுது
அவள் தரையிறங்கிருப்பாள்.
சாம்ராஜ்.
