பறவையின் பாடலாய்
வந்து கொண்டிருக்கிறது இறகு .
தான் வீழ்ந்து
நடுக்கடல் நிலவை அது
நொறுக்கி விளையாடுகிறது .
அசைவின்மையின் மூலம்
மீன்களை வரவழைத்து
மாயம் நிகழ்த்துகிறது .
அகாலத்தை நோக்கிய படகாய்
மிதந்து கொண்டிருக்கிறது .
எதனால்
கடற்சிறுமியின் அல்குலை
அது நினைவுபடுத்துகிறது ?
எல்லாப் பாடல்களைப் போல
பறவையின் பாடலும்
பறவைக்குச் சொந்தமில்லை
November 19, 2010
தொடர்பு
படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com
