பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

November 18, 2010

சுமதி கவிதைகள் -18

சுமதியின் கவிதைகள் காட்சியில் தொடராய் பிரசுரமாகிறது.இவரின் ஏனைய கவிதைகளுக்கு இங்கே சொடுக்கவும்.
பாடை

முதுகு சுளுக்கி
மூச்சுமுட்ட நடக்கும்
இந்த கணங்களை
எங்கு போய் தள்ளுவது?

மரணபயம் வெள்ளையாய் கசிகிறது
கண்கள் வழியாக.

எனக்கு பாடை கட்டுபவர்கள்
யாரென்று தெரிந்து வைத்திருக்கிறேன்


பக்கத்து அறையில்
முகச்சாயம் பூசிக்கொண்டு
எனது இறுதி ஊர்வலத்தில்
நடனமாடக் காத்திருக்கிறார்கள்.

இன்னும் சிறிது நேரத்தில்
பாம்பு பிடாரனின் மகுடிக்கு
ஜீவாலை விடும் நாக்காய்
என் உயிர் தெறித்து விழப்போகிறது.

அடுப்படியில் பலலிட்டர் பால்
ஆவிபறக்க பொங்க போகிறது
அசதியற்ற அழுகைக்காய்..

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com