நகரத்தின் தென்மேற்கேயிருக்கும்
பழைய அரன்மனையை
காண போனாள் மரிய புஸ்பம்.
நிலவறையிலிருந்த
இளவரசியின் ஓவியத்தில்
அவள் சாயலிருந்தது.
மன்னன் உடைகள்
அவள் கணவனுடையதை
போலவே இருந்தது.
ஒலித்த சங்கீதம்.
நெருக்கானமானவர்களின்
குரலாகவே இருந்தது.
நம்ப மறுப்பவளாகவே
கல்லறையை திறந்து பார்த்தாள்
அவள் காதலனே
உறங்கிக் கொண்டிருந்தான்
[2].
பத்துவயதில் பூப்பெய்திய
மரிய புஸ்பம்
தன் அம்மாவிடம் கேட்டாள்.
‘அப்படின்னா
‘அப்படின்னா
இயேசு எப்பவுமே தீட்டாம்மா’.
[3]
அன்றாடம் மொட்டை மாடியில்
துணிகளை காயப்போடும்
சொற்ப அவகாசத்தில்
தூரத்தே தெரியும்
மலையின் நீல விளிம்புகளுக்கு
பறந்து செல்வாள் மரிய புஸ்பம்
அதன் உச்சியிலிறங்கி.
சறுக்கி கொண்டு போவாள்
தன் பால்யத்தின் தோட்டத்திற்கு.
அன்றொரு நாள்
நேரமாகிவிட்ட பதட்டத்தில்
படிக்கட்டுக்கு பதில்
புகைக்கூண்டு வழி
வீட்டினுள் நுழைந்தாள்.
எதுவுமறியா
எதுவுமறியா
மலைகள் காத்திருக்கின்றன
மரிய புஸ்பத்திற்கு
பல வருடங்களாய்.
