பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

October 6, 2010

கார்த்திக் நேத்தா கவிதைகள் - 12

   பெருமழை


மழைக்குத் தப்பி
உதிர்ந்து கொண்டிருக்கிறது
இலை .
அப்படியும் பொத்தென
இலை மேல் வந்து விழுந்தது
சற்று பெரிய மழை .

மழை ,
இலையை கொன்று விட்டதென
சொல்கிறாள் ஆலாபனா .

இல்லை ,
இலை தான் மழையை கொன்றுவிட்டதென
அழுகிறாள் ஆராதனா .
கன்னி மழைக்கு ,
வயதான இலை மீது சொல்லொணா
மோகம் என்றான் அனந்தன் .

யாரும் பிறப்பதும் இல்லை
இறப்பதும் இல்லை என்றான் அதிதி .
பார்த்துக் கொண்டிருந்த திகம்பரன் ,
மழைக்குகடவுளின் விந்தென்றும்;
இலைக்கு ஜீவவாசல் என்றும்
பெயர் வைத்தான் .
பிரம்மாபடைக்கும் வேலையில்
ஈடுபடலானான் .

- கார்த்திக் நேத்தா

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com