பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

August 18, 2010

இப்படியாகுமெனில் - சாம்ராஜ்

ஸேம் ஸேம் பப்பி ஸேம்
என்று சின்ன வயதில்
ஒடியவள்.
  
எட்டு வயதில் முழங்காலுக்கு 
மேலான காயத்தை 
அப்பாவுக்கு காட்ட
மறுத்தவள்.


உடை மாற்றும் 
அறைக்குள் அம்மாவைக்கூட
அனுமதியாதவள்.

எக்ஸ்ரே
அறையிலிருந்து 
ஒடிவந்தவள்

அருவிகளில்
ஒரு பொழுதும் 
குளிக்காதவள்.

வெளிச்சத்தில் 
கணவனுடன் கூடச் 
சம்மதியாதவள்.

மரித்தலுக்கு பின்
அம்மனமாய் கிடக்கிறாள் 
மார்சுவரியில்.

ஈக்களும் கண்களும்
அங்கேயேமொய்க்க,
இப்படியெல்லாம் ஆகுமெனில் 
அன்புலட்சுமி தற்கொலையே 
செய்திருக்கமாட்டாள்.

- சாம்ராஜ்

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com