August 19, 2010
கார்த்திக் நேத்தா கவிதைகள் - 8
சுயஞ்ஜோதி
ஆபத்தான
அக வீதியில் நுழைந்துவிட்ட
ஒருவனால்
ஆகச் சிறந்த கவிதையை
எழுதி விட முடியும் .
விரிந்தபடி இருக்கும்
ஆன்மாவை நிரப்பிவிடும்
இசையைத் தந்து விட முடியும் .
ஸ்திரமான பிரக்ஞையோடு
மது அருந்த முடியும் .
காரணமின்றி
அடிக்க முடியும் .
நேர்த்தியான
கொலை புரிய முடியும் .
வெயிலுக்கு பயந்து
தற்கொலை செய்து கொள்ள
முடியும் .
எளிதில்
கடவுளாகி விட முடியும் .
ஆபத்தான
அகவீதியில் நுழைந்து விட்ட
ஒருவனைக் கண்டால்
தயவுசெய்து கொன்று விடுங்கள்
கொல்லப்படும் முன்னே .
Labels:
கார்த்திக் நேத்தா கவிதைகள்
தொடர்பு
படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com
