பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

August 31, 2010

அற்றவைகளால் நிரம்பியவள் -20 - யமுனா ராகவன்

யமுனா ராகவன் அய்ரோப்பாவில் மருத்துவராய் பணிபுரிகிறார். அவர் எழுதும் "அற்றவைகளால் நிரம்பியவள்" தொடர் கதை காட்சியில் தொடராய் வெளிவருகிறது. அனைத்துப் பகுதிகளுக்கும் இங்கே சொடுக்கவும். http://kaattchi.blogspot.com/search/label/அற்றவைகளால்%20நிரம்பியவள்

பகுதி 20

அஞ்சனாவின் அப்பாவிற்கு வானத்தை பார்த்தபடி அமர்ந்திருப்பது அத்தனை பிடித்தமான விஷயம். ஊரில் மின்சாரம் துண்டிப்பு ஆகும் சமயம் எல்லாம், மொட்டை மாடியில் படுத்தப்படி, இருவரும் நட்சத்திரத்தை பார்ப்பார்கள். அவர் முதலும் கடைசியுமாக வாங்க ஆசைப்பட்டது Orion Spaceprobe EQ telescope. 



அப்பாவின் சட்டைப்பையிலோ பேண்ட் பாக்கெட்டிலோ ஒரு ரூபாய் நாணயம் கூட வைத்து பார்த்ததே இல்லை. கையில் மோதிரமோ, கழுத்தில் தங்க சங்கிலியோ அணிந்ததில்லை. கை கடிகாரம் சிறிது நாள் அணிந்திருந்து, அதையும் கழட்டிவிட்டார். எதற்குமே விருப்பம் காட்டாத அப்பா, மிகவும் விரும்பி வாங்க எண்ணியது, தொலைநோக்கியை தான். அஞ்சனா எப்போதும் படிக்கையில் யோசிப்பாள், படித்து முடித்து, பணம் சேர்த்து அப்பாவிற்கு இதை பரிசாக அளிக்கவேண்டும் என்றும். அதற்கான சமயம் வரவேயில்லை. இரவில் நட்சத்திரம் அள்ளித்தெளித்த வானத்தை பார்க்கும் போதெல்லாம், அப்பாவின் ஓர சிரிப்பும் வலது கன்னக்குழியும் நினைவிற்கு வரும். இந்த இரவும் அவரை நினைக்க வைத்தது.


இருட்டில், சில்லென காற்று வீச, பரந்த கடல்பரப்பு முழுக்க நிலவொளியில் மின்னிக் கொண்டிருக்க, அமைதி வார்த்தைகளை பணயகைதியை போல வைத்திருந்தது. ஜெப்பின் பாடல் முடிந்து, சிறிது நேரம் ஆகியிருக்க, அஞ்சனா அவனை நோக்கி திரும்பினாள். கண்களில் இருந்து லேசாக கண்ணீர் கசிய, முகம் இருண்டு, முகத்திரை அணிந்தாற்ப்போல இருந்தான். பாறையில் சாய்ந்து அவனை பார்த்துக்கொண்டே இருக்கையில், 5 வயது குழந்தையாய் அவளுக்கு தென்பட்டான் ஜெப்.

அஞ்சனா ஜெப்பில் இருந்து திரும்பி கடலை பார்த்தப்படி சொன்னாள், ‘’ Good touch and bad touch’’ என்று. இப்போது இருக்கும் குழந்தைகளுக்கு கட்டாயம் இதை சொல்லிக்கொடுக்க வேண்டும் என்கிறார்கள். எங்கு எப்படி தொட்டால் தவறு என்பது புரியாத வயதில், அவர்களை பாதுகாக்க இதை சொல்லி தரவேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். ஆனால் இதை பற்றியெல்லாம் பேச நேரம் இல்லாத பொழுதுகளோடும், சங்கோஜங்களோடும் காலங்கள் ஓடுகிறது பல பெற்றோர்களுக்கு. ஜெப் அவளை பார்த்து வெறுப்போடு சொன்னான், ``நீ எல்லாம் என்போல கஷ்டம் பார்த்ததில்லை. அதனால், உன்னால் என்னையோ என் வாழ்க்கை முறையையோ சரியென சொல்லமுடியாது போகலாம். ஆனால் don’t judge me with my present life. I’m merely a victim here’’ என்றான்.

அஞ்சனாவின் முகம் கறுத்தது இப்போது. வாழ்க்கையில் சில கணங்களின் தாக்கம் மனதில் இருந்து மறைந்து போயிருப்பினும், இந்த இரவு அதை நினைவுக்கு கொண்டுவந்தது. யாரிடமும் பகிராத விஷயங்கள், கருப்பு ரகசியங்கள் எல்லோரோடும் உள்ளது தானே. அஞ்சனாவின் உள்ளே இதுவரை இருந்த ஏதோ ஒரு கனமான திரை உடைந்தாற் போல இருந்தது. மெல்ல ஜெப்பை நோக்கி திரும்பி, ``அவரவர் வாழ்க்கையை இன்னொருவர் வாழ முடியாது, ஜெப். உனக்கு நேர்ந்தவை மிகவும் கொடுமையானவை தான். எல்லோருக்கும் இது போன்ற நெருடலான விஷயங்கள் நடக்கிறது. ஆனால் அதை தொடர்ந்து எடுக்கும் முடிவுகள் தான் நம்மை தீர்மானிக்கிறது.`` என்றாள்

ஜெப்பின் முகம் வெறுப்புடன் மாறியது. அவன் கேட்டான், So Do you think, that I’m screwed up, because i chose to be this way.’’ என்று. கண்கள் மெல்ல மூடி திறந்து அஞ்சனா சொன்னாள், `` ஆமாம்! You are in a way responsible for how you are’’ என்றாள். அவன் கையை லேசாக பற்றினாள் அஞ்சனா. ஜெப் இப்போது வியப்போடு அவளை பார்த்தப்படி இருந்தான். அவன் கைகளை பிடித்தப்படி, கடலை பார்த்துக்கொண்டிருந்தவள், அவனை பார்த்து கேட்டாள், `` கார்ட்டூன் பார்க்க பிடிக்குமா? ’’ என்று. ஜெப் முகம் லேசாக சுளித்தப்படி இல்லை என்று கூற, அஞ்சனா மேலும் தொடர்ந்தாள், `` I love cartoons. நாள் முழுக்க உட்கார்ந்து பார்த்துக்கொண்டே இருக்க சொன்னாலும், பார்த்து கொண்டே இருப்பேன்`` என்று.

அஞ்சனா சொன்னாள் வாழ்க்கையின் பல உண்மைகளை எனக்கு கார்ட்டூன்கள் தான் கற்று கொடுத்திருக்கிறது. I know it sounds silly. எனக்கு இந்த நேரத்தை யோசித்தால், ‘’Meet the Robinsons’’ படம் தான் நினைவிற்கு வருகிறது, ஜெப்`` என்று சொல்லி லேசாக புன்னகைத்தாள். அந்த கார்ட்டூனில், அனாதை ஆசிரமத்தில் இரண்டு குழந்தைகள் வசித்து வருவார்கள், ‘’Louis and Goob’’. லூயிஸ் ஒரு ஜீனியஸ். He loves science and loves inventing. லூயிஸ் கண்டுப்பிடிக்கும் Time machine கொண்டு பயணிக்கையில் வாழ்க்கையின் ஒரு காலக்கட்டத்தில், 7 வயது லூயிஸும், வளர்ந்து 30களில் இருக்கும் கூபும் சந்திப்பார்கள், எதிரிகளாக. லூயிஸ் சொல்வான், Goob! I’m sorry your life turned out so bad. But don’t blame anyone. You messed it up yourself. You just kept focusing on the bad stuff. When all you had to do was, LET GO OFF THE PAST AND KEEP MOVING FORWARD’’ என்று. எனக்கு இந்த நேரம் அது தான் நினைவிற்கு வருகிறது`` என்று சிரித்தாள்.

ஜெப்பின் முகம் கோபத்தில் மின்னி, ‘’உனக்கென்ன தெரியும் ? உன்னுடைய வாழ்க்கை சுலபமாக தானே போய்க்கொண்டிருக்கிறது. உன்னால் என் வலி வேதனை எப்படி புரிந்துக்கொள்ள முடியும்`` என்று பொருமினான். அஞ்சனா ஒன்றுமே பேசாது, கடலை வெறிக்க பார்த்து அமர்ந்திருந்தாள். பின்னர் குரல் கம்ம, கண்ணில் நீர் தளும்ப ``வலியும் வேதனையும் எல்லோருக்கும் உரித்தானது தான், ஜெப். தமிழில் ஒரு பழமொழி இருக்கிறது, ``நம்மிலும் கேடு நாட்டிலே கோடி`` என்று. இது எனக்கு பிடிக்காத, புரியாத பழமொழி. ஏன் தெரியுமா? நம்மை விட பலர் வலியோடு இருக்கார்கள், என்பதில் என்னுடைய வலி எப்படி குறையும். I find the whole argument of comparing emotions futile. உணர்வுகளும், சம்பவங்களின் தாக்கமும், அதனால் ஏற்படும் விளைவுகளும் ஒருவருக்கொருவர் மாறுப்பட்டது. So the whole point of what you underwent and what I underwent and comparing it is immaterial, coz we had to face difficulties on our own and we have emerged out of it alone.`` என்றாள்.

ஜெப் பேசாது இருந்துவிட்டு, ``உனக்கு என்ன நேர்ந்தது அஞ்சனா? என்றான். அவள் சொன்னாள், ``UNICEF, WHO இது பற்றியெல்லாம் தெரியுமா, உனக்கு? அவை சொல்கிறது உலகில் நான்கில் ஒரு பெண் குழந்தையும், ஏழில் ஒரு ஆண்குழந்தை வீதம் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகிறார்களாம். இந்தியா உலகில் கலாச்சாரத்தின் பிரதிநிதியாக இருப்பதாக பேசிக்கொள்கிறார்கள். ஆனால் உலகில் அதிகமான Human trafficking happens in India. குழந்தைகளின் மேல் பாலியல் வன்முறைய அதிகம் நடக்கும் நாடுகளில் இந்தியாவும் முக்கியமான ஒன்று.தெரியுமா, ஜெப்? பெரும்பாலும் இதை நடத்துவது நெருங்கிய சொந்தங்கள், அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் தானாம். இந்தியாவில் உள்ள 70% குழந்தைகள் ஏதாவது ஒரு சமயத்தில், ஏதோ ஒருவித பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள் என்கிறது"data’’ என்றாள்.

அஞ்சனா மேலும் தொடர்ந்தாள்,``எனக்கு 10வயது இருக்கும்போது, எங்களுக்கு இரண்டு தெரு தள்ளி இருந்த குடும்பத்தில் இருந்த 3 வயது குழந்தை காணாமல் போய்விட்டது.எங்கள் வீட்டு தெருமுனையில் இருக்கும் அரவை மில்லிற்கு அவர்கள் அம்மா சாயங்காலங்களில் தூக்கி வருவார்கள். மாநிறமாக, குண்டு குண்டு கன்னம் வைத்து, சிரித்தப்படியே இருக்கும்.யாராவது குழந்தையை தூக்கி வைத்து கொண்டு சுத்திக்கொண்டே இருப்பார்கள். தெரிந்தவர்களை பார்த்தாலே, ``டாடா போலாமா!``என்று சிரித்துக்கொண்டே தோளில் தொத்திக்கொள்வாள். எங்கே குழந்தை என்று தேட, மாமா கடைக்கு கூட்டிக்கொண்டு போய், அங்கிருந்து பக்கத்து வீட்டு அண்ணன் வீட்டிற்கு கூட்டிக்கொண்டு போவதாக சொல்லி வாங்கிப்போனதாக சொன்னார்கள். கடைசியில், நான் இல்லை நீ இல்லை என்று சொல்ல, ஊரெல்லாம் தேடி கடைசியில் ரயில்வே LOCO Shed அருகே அடுத்த நாள் கண்டுப்பிடித்தார்கள். எத்தனை பேர் அந்த குழந்தையை கெடுத்திருப்பார்கள் என்றே தெரியாத அளவு, சின்னாபின்னமாகி இருந்தது அந்த குழந்தை. ஓடிப்போய் பார்த்தேன் நானும். அப்போது புரியவில்லை என்ன பார்த்தேன் என்று. ஆனால், இப்போது யோசிக்கையில் பிறப்புறுப்பும், மலதுவாரமும் கிழிந்து குடல் வெளியே தொங்கியபடி இருந்தது நினைவில் இருக்கிறது. எங்கள் ஊரில் இது போன்றவைகளை அங்கங்கே கேள்விப்படுவோம். செய்தித்தாளில் படிப்போம். அடுத்த நாள் மறந்து போவோம், ஜெப்`` என்று பேசி கொண்டே இருந்தாள்.

ஜெப் இறுகி போய் அமர்ந்திருந்தான். அதுவரை பாறையில் தலையை சாய்த்து இருந்தவள், மெல்ல ஜெப்பை நெருங்கி, அவன் தோளின் தலைசாய்த்து அமர்ந்தாள். விடியற்காலை நான்கு மணியாகி இருந்தது. தோளில் தலை வைத்தவள், மெல்ல சொன்னாள், `` பொதுவாக எனக்கு நேரும் வலிகளையும் நான் வாழ்க்கையை கையாளும் முறை கேட்டால் சிரிப்பாய்... I just skip phase... இந்த நொடி வலிக்கும் போது, என்னுள்ளே நான் வேறு ஒரு அழகான நீரோடையில் கால் வைத்து அமர்ந்து இருப்பேன் என் மனதில். This is my defence mechanism... so I don’t deal with present.... I don’t dwell in past... I don’t really give a damn about future..... இது தான் நான். ஆனால் கண் பார்த்த விஷயங்கள்,நடந்தேறும் கசப்புகள் மனதில் ஒரு பெரிய கனமான பெட்டியில் போய் பதுங்கிவிடும்... அதன் சாவியை நான் வேண்டும் என்றே தொலைத்தேன்... அந்த பெட்டி ஒரு mixed bag. என் சந்தோஷம், துக்கம், ஆசை, ஆச்சரியம், வலி, அகம்பாவம் இத்தோடு என் பெண்மையும் வைத்து பூட்டித்தான் இருந்தேன்.... நீ திறக்கிறாய்... வெளிவரும் விஷயங்களை அசைபோடுகிறேன்.... என்னால் ஜீரணிக்க முடியாமல் போனவைகள் இப்போது கிண்டி கிளறி பார்க்கிறேன். இப்போதும் வலிக்கிறது. So I do know about Pain’’ என்றாள்.

அஞ்சனா கண்களை இறுக்க மூடியப்படி யோசித்துக்கொண்டிருந்தாள். சிறு வயதாக இருக்கும் போது,எல்லோரும் என்னை விட குள்ளமாக இருப்பார்கள். வகுப்பில் கடைசியில் உட்கார வைப்பார்கள் உயரம் பார்த்து. வளர்த்தியாக இருப்பேன். 3 வயதில் 5 வயது தோற்றம்... 6 வயதில் 10 வயது தோற்றம்... 10 வயதில் 15 வயதுதோற்றம்... என் 15 வயதில் என் இன்றைய உயரம் கொண்டேன்...

உடல் வளர்ந்து இருப்பதன் உறுத்தல் உனக்கு தெரியுமா, ஜெப்? இரவுகளில் தூங்க போகும் முன், கடவுளே, எனக்கு குழந்தை பிறந்தால்,பெண்பிள்ளை பிறக்கவே கூடாது என்று வேண்டியிருக்கிறேன்`` என்று கூறி நிறுத்தினாள்.
அப்படியே எனக்கு பெண்பிள்ளை பிறந்தாலும்,யாரோடும் குழந்தையை தராது,நானே வளர்க்கவேண்டும் என்று கற்பனையெல்லாம் செய்திருக்கிறேன். Not that my parents weren’t doing it right. இப்போதும் எனக்கு திரும்ப குழந்தையாக நேர்ந்தால், என்னுடைய அம்மாவும் அப்பாவும் தான் வேண்டும். நல்ல பெற்றோர்கள் அமைவது, வெகு கடினமான ஒன்று தான். எனக்கு அமைந்தது.ஆனாலும் எத்தனை பார்த்து பார்த்து வாழ்க்கையை நடத்தினாலும், சில நிகழ்வுகளை தடுக்க முடியாது போய்விடுகிறது தான். It’s like driving a car. There can always be an accident. கை கால் உடையலாம், உயிரே போகலாம், சில சிறாய்ப்புகளோடு தப்பிக்கலாம். எதுவாகிலும் விபத்து விபத்து தான். இந்த நிழல் சம்பவங்களும் அது போல தான் என்று நான் நம்புகிறேன், ஜெப்`` என்றாள் அஞ்சனா.

சிறு வயது நிகழ்வுகள் எப்போதும் மனதில் தங்கி தான் போகிறது. எங்கள் குடும்பத்தில் முதன்முதல் சம்பாதிக்க தொடங்கியது என்னுடைய தந்தை தான். வேலை பளுவால் என்னுடைய பெற்றோர்களை பல நேரங்களில் நாங்கள் பார்த்ததே இல்லை. தாத்தாவிற்கு பக்கவாதம் வந்தப்பிறகு பாட்டியும் தாத்தாவும் சென்னையில் தங்கியிருந்தார்கள். நாங்கள் வேலையாட்கள் பார்வையில் வளர்ந்தோம், ஜெப். என்ன ஏதேன்று புரியாத போதும், குளிப்பாட்டும் போதும், கால் கழுவும் போதும் தடவும் விரல்கள் எனக்கு பிடிக்கவே இல்லை. தடவிய விரல்களின் தாக்கம் சில சமயங்களில் வலித்ததும், சில சமயங்களில் காரமாக எரிந்ததும் காரணமாக இருக்கலாம். யாரின் விரல்கள் என்பது தெரிய தொடங்கிய பின், குளிக்க கூப்பிட்டால், அடம்பிடித்து அழத்தொடங்கினேன், லட்சுமியம்மா தான் குளிப்பாட்டவேண்டும். வேறு யார் குளிக்க கூப்பிட்டாலும் போகமாட்டேன் என்று`` இப்படி பேசிக்கொண்டே இருந்தாள் அஞ்சனா. அவள் பேச பேச, ஜெப்பின் இறுக்கம் தளர தொடங்கியிருந்தது.

இப்படியே வளர்ந்தேன், ஜெப். எனக்கு எட்டு வயது இருக்கும் போது, என் வீட்டில் எடுபிடியாக இருந்த ஒருவன் என்னை தொட்டான், தொட வைத்தான். நானும் செய்தேன். ஏன் அப்படி செய்தேன். பிடித்து செய்தேனா, இல்லை என்னோட விளையாடமாட்டேன் என்று சொன்னதால் அவனை சமாதானம் செய்ய அப்படி செய்தேனா, தெரியவில்லை. அது போன்ற சம்பவத்திற்கு பிறகு அவனோடு தனியே இருப்பதை தவிர்த்தேன்...  யாரிடமும் சொன்னதில்லை.. இவற்றில் இருந்து வெளியே வர நானே வகுத்துக்கொண்ட வரைமுறைகள் நிறைய. பேசிக்கொண்டே இருந்தேன். சிரித்துக்கொண்டே இருந்தேன்..தனியே இருக்கவேமாட்டேன். அப்போது மாறியது தான், என் அண்ணாவுடன் விளையாட தொடங்கியதும், அவன் கூட்டாளிகள் எனக்கும் நட்பானதும். பெண்ணாய் இருக்க பிடிக்காது, ஆணாய் மாறினேன், ஜெப்! ஆண்பிள்ளைகளின் வாழ்க்கைப்பிடித்திருந்தது... என் பாட்டி திட்டியதும் புலம்பியதும், காதில் கேட்கவே இல்லை. பொம்பள புள்ளயா லட்சணமா இல்லாம எப்ப பாரு தடிமாடு மாதிரி ஊர் சுத்துது பார், மொட்டபையனாட்டம்... her favourite dialogue! `` என்று சொல்லி சிரித்தாள்.

இன்னும் தொடர்ந்து கொண்டே இருந்தாள் அஞ்சனா.வெகு நாளாக அடைபட்டது சட்டென திறந்தது போல, உள்ளுக்குள் இருந்த சம்பவங்கள் கொட்டிக்கொண்டே இருந்தாள். இப்படி நடந்த சம்பவங்கள் வெளியே சொல்ல சொல்ல, ஏனோ அழுகை வர தொடங்கியது. பலத்த மூச்சு உள்வாங்கி மேலும் பேசினாள், அஞ்சனா. `` ஜெப்! வாழ்க்கை முழுக்க இப்படி அத்துமீறல்களோடே வளர்ந்தேன். நிழல் சம்பவங்கள் எல்லா இடங்களிலும் தொடர்ந்தது. ஒருபுறம் i loved men and on the other hand i absolutely, totally, point blankly despised them.... நாணயத்தின் இரு பக்கமாய் வளர்ந்தேன். ஒரு பக்கம் என்னை தாங்கும் என் குடும்பம். என் எல்லா தேவையும் பூர்த்தி செய்ய காத்திருக்கும் என் உறவுகள்.இன்னொரு பக்கம் இது போன்ற நிழல் சம்பவங்கள்.`` என்றாள்.

ஜெப் வெகு நேரம் கழித்து வாய் திறந்து, I’m sorry அஞ்சனா! என்றான். அஞ்சனா வெற்று பார்வை பார்த்து, இப்படி எத்தனை நினைவுகள். வெகு இறுக்கமாக இருக்கிறது என் மனது. சொல்லவே முடியலை. ஆனால் இது எல்லாம் எனக்கா நடந்தது என்று யோசிக்கையில் I feel absolutely numb inside. எல்லாம் யோசிக்கும் இந்த நொடி விளங்கும் ஒன்றே ஒன்று...இந்த விஷயங்களும் நான் கடந்து வந்த பாதைகள்... என் வலிகள் அத்துமீறல்கள் கோபங்கள் குமுறல்கள் ஆதங்கங்கள் சந்தோஷங்கள் இப்படி ஒன்றாய் சேர்ந்து தான் என்னை நானாய் மாற்றியிருக்கிறது, ஜெஃப்`` என்றபடியே மெதுவாக எழுந்தாள். கடலை பார்த்து எழுந்து நின்றவள், அவனை பார்த்து கையை நீட்டினாள். அவள் கையை பிடித்து, எழுந்து, இருவரும் கடலை நோக்கி நின்றார்கள். மலை முகட்டில் நிற்க்கையில், சூரியன் எட்டி பார்த்தது. அதுவரை சூழ்ந்திருந்த யானை நிற வானம் சட்டென தங்கமாக மாறியது.

மெதுவாக மூச்சை உள்ளிழுத்து, அஞ்சனா சொன்னாள், ‘’ I feel lucky to be alive, this moment, Jeff ‘’. இது வரை நான் கடந்து வந்த எதற்காகவும் நான் மிதமிஞ்சிய வருத்தமோ வேதனையோ படவில்லை.என் மனதில் எங்கேயோ ஒட்டியிருந்த Guilty conscience போக வைத்தவள் மானஸ்வி. What doesn’t break us will make us, Jeff. இதை நான் நம்புறேன். என்னோட மருத்துவ கல்லூரி படிப்பு முடிச்ச பிறகு தனியார் மருத்துவமனையில் வேலை செய்தேன். அங்கே என் கூட இன்னுமொரு பெண் வேலை செய்தாள், மலையாளி பெண் டாக்டர். அவள் தான் மானஸ்வி, பார்க்க அத்தனை அழகாக இருப்பாள். அவள் உடை உடுத்துவதில் இருந்து, பேசுவதும் நடப்பதும் எல்லாமே அத்தனை நேர்த்தியாக இருக்கும். அவளை திருமணம் செய்துக்கொள்ள ஒரு பெரிய கூட்டமே அலைந்தது. அதே பெண்ணை casualty dutyயின் போது நான் பார்த்தேன். Multi drug overdose எடுத்திருந்தாள். அவளுக்கு IV fluids, antidote கொடுக்க அவள் சட்டையை கழட்டிய போது தான் தெரிந்தது, உடல் முழுக்க வரி வரியாக கிழித்திருந்தாள், Intentional self harm. அது எல்லாம் தழும்பாக மாறி இருந்தது. சிவந்த உடல் முழுக்க தடிப்பாக புழு போல கை, வயிறு, தொடை என்று ஒரு இடம் விடாது தழும்பு இருந்தது. இதை மறைக்க தான் முழுக்கை உடைகள் அணிந்திருக்கிறாள். சிறிது காலம் ஆனாலும் நல்ல தோழியானவள். உயிருக்கு போராடியபடி இருந்ததை பார்க்க எனக்கு முடியவில்லை`` என்றாள்.

அஞ்சனா உணர்வே இல்லாத குரலில், எழும்பி தகதகத்த சூரியனை பார்த்து கொண்டே தொடர்ந்தாள், `25வயது பெண் ஏன் இப்படி தன்னை வருத்திக்கொள்ளவேண்டும் என்று எனக்கு புரியவில்லை. என்ன தான் முயற்சி செய்யினும், எடுத்து இருந்த மருந்துகளின் அளவால், she went into Multi organ failure. அவளை தனி்யாக விட பிடிக்காது, என் duty முழுக்க ICUவிலேயே கழித்தேன், Jeff. இரண்டாவது நாள், கொஞ்சம் விழிப்பு இருந்தது. அப்போது என்னிடம் சொன்னாள், ‘’ I feel stupid, Anjana. இத்தனை நாள் நான் உதவியே கேட்காது இருந்துவிட்டேன். சிறுவயதில் என்னுடைய அண்ணன் என்னை பலமுறை பயமுறுத்தி, abuse செய்தான் sexually. வீட்டில் என்னால் எதுவும் சொல்லமுடியவில்லை.படிக்க தொடங்கிய பின், தனியாகவே வந்துவிட்டேன். ஆனால் அந்த சம்பவங்கள் நினைவிற்கு வருகையில், கத்தி எடுத்து என்னையே கீறிக்கொண்டு, என்னுள் இருந்து பீறிட்டு வரும் ரத்தத்தோடு, அழுக்குகள் அடித்து போவது போல உணர்வேன். சென்னை வந்த பின், வேலையும் புதிய இடமும் மாற்றம் தந்தது. ஆனால் I couldn’t take the images of the past from my brain. தாங்க இயலாது தற்கொலைக்கு முயற்சி செய்துவிட்டேன். ஆனால், இப்போது யோசிக்கிறேன். நடந்தது எதுவும் என்னுடைய தவறில்லையே. I was merely a victim. All I did was, fixated my past, on all that I saw. காமாலையோடு பார்த்து பார்த்து, கழிவிரக்கத்திலேயே நாட்கள் நகர்த்தியிருக்கிறேன். I want to live my life now, Anjana’’ என்றாள். ஆனால் அவளுடைய Liver and kidney were totally damaged and she slipped into coma the next day. அதில் இருந்து எழவே இல்லை. மானஸ்வி என்னுடைய எண்ணவோட்டத்தை முழுவதுமாக மாற்றிவிட்டாள், இறந்து. So I don’t feel guilty for somebody’s perversion, nowadays. ஆமாம், கடினமான வலி தான்.நடந்திருக்க கூடாது தான். ஆனால் நடந்து விட்டதை மாற்றமுடியாது. So Jeff, LET GO OFF THE PAST AND KEEP MOVING FORWARD’’ என்று முடித்து, லேசாக புன்னகைத்தாள் அஞ்சனா.

ஜெப் கண்கள் இப்போது மாறியிருந்தது. உணர்வே காட்டாத கண்களுக்கு பதில் என்னவோ இப்போது ஓடியது. அவள் தோளில் கையை போட்டு இறுக தழுவியவன், Thank you Anjana என்று சொல்லி பதில் புன்னகைத்தான். மலை முகட்டில் இருந்து இறங்கியதும், வீடு வந்து சேர்ந்ததும், அன்று முழுக்க மனது லேசாக தூங்கியதும் அஞ்சனாவிற்கு நினைவில் இருந்தது.

- யமுனா ராகவன் 







தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com