செத்துப்போன அப்பாக்களைப்
பற்றிச் சொல்வதற்கு நம்மிடம்
நிறைய இருக்கிறது.
ஆபத்பாந்தவன்.
அனாதரட்சகன்.
நல்ல நண்பன்.
நாறத் தா...ளி.
தந்தையே! எம்மை ஏன் கைவிட்டீர்?
கற்புக்கரசன்.
கஞ்சா குடிக்கி.
செத்தும் கொடுத்தான் சீதக்காதி.
அந்தாள எதுக்கு ஞாபகப்படுத்துற இப்ப?
அப்பழுக்கற்ற தோழர்.
அகிலம் போற்றும் போராளி.
அறிவுஜீவி. சிறுக்கி மவன்
சீரழிய விட்டுட்டு போய்ட்டான்யா.
பொறுமைசாலி.
பொம்பளப் பொறுக்கி.
புண்ணியவான். த்தூ..
நெனச்சாலே நெஞ்சு வேகுது சார்.
போற்றலும், தூற்றலும்
புகைப்படத்தில் சிரிக்கிற அப்பாக்களை
என் செய்யும்?
- முத்துப்பாண்டி
September 1, 2010
தொடர்பு
படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com
