பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

July 29, 2010

கார்த்திக் நேத்தா கவிதைகள் - 5

மஞ்சள் மரணம்





சைக்கிள் பயில கற்றுத் தந்த
தாத்தாவின் விரல் பிடித்து ,
என் ஞாபகம் நடக்கும் 
இந்த வீதி அதே என் பழைய
வீதியாகவே இருக்குமா ?


நீண்டு மௌனித்திருக்கும் மைதானம் ,
உடைந்த பம்பர ஓசையை மீட்கிறது .
சிதிலமான திண்ணையிலிருந்து 
விலாசுகிறது தேவகியின் சிரிப்போசை .


என்னைக் காவலிருக்க விட்டு 
பண்ணையாருக்கு மட்டும் பரத்தையா 
பரிமளம் கொடுத்த லஞ்ச முத்தம் 
காற்றில் உப்புக்கரிக்கிறது . 


எலுமிச்சை ஒன்று எனக்குத் தந்து
இரவோடு இரவாகத் தூக்கு
மாட்டிக் கொண்ட பார்வதி ,
ஏன் என்னிடம் மட்டும் 
எலுமிச்சை தந்தாள்  ?


இப்போதெல்லாம் 
எலுமிச்சை என்பது
பழமில்லை  எனக்கு .
அது மஞ்சள் மரணம் ,
மரணத்தின் புளிப்பு ,
சுழி உதட்டு பார்வதியின்
சுரோணிதம்.

- கார்த்திக் நேத்தா 

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com