பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

June 14, 2010

பிற்பகல் பற்றிய வரைபடம் - முத்துப்பாண்டி

தற்கொலைக்கு முயல்பவனின்  பிற்பகல் பற்றிய வரைபடம்

நேற்றைய பிற்பகலின் குரூரங்கள்
எதுவும் இல்லை  இன்று.
வெக்கையேறிய காற்றில் யாருடைய
மரணச்செய்தியும் இல்லை.
தட்டப்படாத  அறைக் கதவுகளுக்கு அப்பால்
கொலைவெறி  எதுவும் நிழலாடவில்லை.
மேல்வீட்டு  இரமணி 
எனக்கென தேர்வு செய்து ஒலிபரப்புகிற
காதல் பாடல்களில் கசிந்து பெருகும்
அவளின் வாசனையை
புணரும் வேட்கை எதுவுமின்றி
நுகர்ந்து கொண்டிருக்கிறேன்.
தற்கொலையின் இன்பத்தை
புகையும்  சிகரெட்டும், சுழலும் மின்விசிறியும் ஏற்படுத்தவில்லை.
வழக்கமாய் காலம் கடிகாரச்சுற்றில்
நிம்மதியாய் செத்துக் கிடக்கிறது.
உறுதியற்ற நாளைய பிற்பகலின் பயத்தில்
அறைக்கு வெளியே
எழுந்து ஓடும்  என்னை
வெறுமனே பார்த்துக்கிடக்கிறேன்.  \

முத்துப்பாண்டி

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com