பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

June 28, 2010

அஞ்சல் தலை - 3 - mydear தக்காளி - ராஜ்குமார்

மஞ்சள் நிறத்திலான மழையே(my dear தக்காளி),      
                          
பொன்னி எப்டி இருக்க நீ?  உன்னை பார்க்க மாட்டேன்,போன் பண்ண மாட்டேன் மெஸேஜ் அணுப்ப மாட்டேனு நான் சொல்லி ஒரு வாரம் ஆச்சு. போதும் என்று நீ சொல்லும் வரை உன்னை விட்டு விலகி இருக்க முடிவெடுத்த நொடி முதலாய் இன்னும் அதிகமாய் படர்கிறாய் வேரூன்றி வளர்கிறாய் என்னுள் ஒரு செடியாக, மரமாக விவரிக்க முடியாத உறுதியான ஏதோ ஒன்றாக. உனக்கு ஞாபகம் இருக்கா பொன்னி, அடிவானம் சிவந்திருந்த அந்த மாலை பொழுதில் லேசான தூறலில் நனைந்தபடியே உன்னுடன் முதன்முதலாக ஏதோ பேச முயற்சித்து எதையொ பேசி வந்த பின் "Better Luck Next Time!" என்று அன்றிரவே எனக்கு மின்னஞ்சல் அனுப்பினாயே!

கல்லூரி விடுதியில் நான் தங்கிருந்த நாட்களில் நான் வழக்கமாக தூங்கும் அந்த அதிகாலை வரை உன்னுடய தூக்கத்தை தள்ளிவைத்து "countless besitos to you my dear, besitos என்றாள் ஏதோ ஒரு மொழியில் குட்டி குட்டி முத்தங்கள்" என்ற விளக்கத்தையும் சொல்லிவிட்டு தூங்கச் செல்வாயே!

ஏதாவது உனக்கு ஞாபகம் இருக்கிறதா? நான் இன்னும் நனைந்து கொண்டே இருக்கிறேன் அந்த மஞ்சள் நிற மழையிலும் உன்னுடய countless besitos-களிலும்.

ஒரு தத்துவஞானி சொல்கிறார் "If u truly love something, let it go. If it comes back, its yours. If not its never meant for you." எனக்கு இதில் உடன்பாடில்லை. என்னுடைய கேள்வி இதுதான் "If i truly love someone/something, why the fuck i should let it go?" நியாயமான கேள்வி தானே. 

உன் அடர்ந்த புருவங்களும், உன் கையின் ரோமங்களும், உன் இடது கையால் சுவற்றை பற்றி நீ குழந்தையாக நடந்துகொண்டிருக்கும் அந்த புகைப்படத்தை ஒரு புகைப்படம் எடுத்து எனது கைப்பேசியில் வைத்து ரசிக்கிறேன்.

பேசவேண்டியதெல்லாம் பேசி முடித்த பின்னும் "அப்றோம், சரி ஏதாவது பேசிக்கிட்டே இறேன்" என்று நீ கேட்ட நாட்களெல்லாம் எங்கம்மாச்சி வீட்டுச் சுவற்றில் தூசி படர்ந்து தொங்கிக்கொண்டிருக்கும் எங்க சியானின் கருப்பு வெள்ளை புகைப்படங்களாக தொங்கிக்கொண்டிருக்கின்றன 

மிக அரிதாக நீயாகவே போன் செய்கின்ற நேரங்களில் கூட நீ உன்னுடய கார்ப்ரேட் நண்பர்களுடன் உட்கொண்ட Choco Truffle-ம் , Espresso coffee- யைப் பற்றியுமே நீ பேசுவதன் subtext  என்னவென்றே புரியவில்லை. ஏதாவது நான் பேசினாள் "பெரிய ________(dash)மாதிரி பேசாதே" என்கிறாய். 

"You give me a hell of pain and you say, you love me!" என்றாய் "Thats love"என்றேன் "Oh! please say me thats crap" என்று வெறுப்பை பேசிய நீயே தான் அன்று
"Why do you label yourself as a loser? Give it a shot, run fast, go getta life" என்று அக்கறையாய் பேசினாய்.

நான் 
ஒரு நாரை
ஒரு கொக்கு
ஒரு ஒன்றுமில்லை

என்ற நகுலனின் கவிதையை உன்னுடன் நான் பகிர்ந்து கொண்டபோது "Thats the dumpest thing i've ever heard" என்ற திமிரான உன் பதிலுக்கு "பார்ப்பன நாயே" என்று செல்லமாக திட்டினேன். அதைவிட செல்லமாக "You animal(s)" என்ற உன் அழகான திமிரை ரசித்தேன். பிராட்வே-ன் நீண்ட நெடிய வீதிகளில் என் விரல் பிடித்து ஒரு குழந்தை போல நடாப்பாயே! இன்னும் என் விரல்கள் தேடிக்கொண்டே இருக்கின்றன உன் கரம் பிடிக்க.

பொய்க் கோபம் கொள்ளும் நாட்களில் நீ எனக்கும் நான் உனக்கும் போன் செய்துவிட்டு "Oh! sorry உன் நம்பெருக்கு போட்டேனா!" என்று ஆரம்பித்து "அப்றோம் sir/madam என்ன பண்றீங்க" என்று தொடங்குவொமே....

இப்படியான நேற்றைய நினவுகளெல்லாம் cut-to-cut  transition போல சட்-சட்-சட்டென வந்தெனது இன்றை ஆக்கிரமித்துக் கொள்கின்றன.

எனக்கு நீ விட்டுச் சென்ற வழியை நான் என்னுள் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் அழகான நினைவுகளால் மொழுகி எழுதுகிறேன். என்னுடைய வலி உனக்கு மட்டுமே புரியும் வகையில்.

I miss the pain, i miss the fun, i miss you so much. I've loved you so long and ill forever. I LOVE YOU. Countless besitos to you my dear தக்காளி.
                                                
இப்படிக்கு
நான்.

குறிப்பு: இதை உன் விலாசத்துக்கு கடிதமாய் அனுப்பினால் அதற்கும் நீ என்னுடன் சண்டை போடுவாய். பதில் மின்னஞ்சலுக்காக காத்திருக்கிறேன்.

ராஜ்குமார்



தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com