யமுனா ராகவன் அய்ரோப்பாவில் மருத்துவராய் பணிபுரிகிறார். அவர் எழுதும் ‘’அற்றவைகளால் நிரம்பியவள்" தொடர்கதை காட்சியில் தொடராய் வெளிவருகிறது. அனைத்துப் பகுதிகளுக்கும் இங்கே சொடுக்கவும். http://kaattchi.blogspot.com/search/label/அற்றவைகளால்%20நிரம்பியவள்
பகுதி 16
அஞ்சனாவிற்கு அந்த காலைக்கு பிறகு டேமியனுடன் இருந்த நட்பு மேலும் இறுகி போனது தான் நிஜம். ஆனால் அதை பற்றி அவளும் பேசவில்லை, அவனும் பேசவில்லை, இருவரும் உணர்ந்தார்கள். அந்த நொடியில் அவர்கள் வசித்த நட்பு தளத்தில் மிக சிலரே அஞ்சனாவோடு இருந்தார்கள். விரல்விட்டு எண்ணும்படியான அவர்களோடு அவளுக்கு பேச்சு வார்த்தை இருந்தாலும் இல்லாது போனாலும், மறுபடி சந்திக்க நேர்ந்தால் இத்தனை நாட்கள் கடந்த மௌனங்கள் சில நொடிகளில் தாண்டி மீண்டும் அதே அன்பையும், நெருக்கத்தையும் உணரமுடியும் என்று மிக நிச்சயமாக அவளுக்கு தெரியும்.
அன்று முழுவதும் க்யூரியஸ் தீவை சுற்றி படகை செலுத்தினார்கள். அஞ்சனா முதன்முதல் scuba diving பற்றி தெரிந்துக்கொண்டது அன்று தான். ``வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் தெரிந்துக் கொள்ள, ஒன்று நிறைய புத்தகம் படிக்கவேண்டும் அல்லது நிறைய ஊர் சுற்றவேண்டும்`` என்று சொன்ன 9ம் வகுப்பு மோஹன்தாஸ் மாஸ்டர் நினைவுக்கு வந்தார். நல்ல உயரம், களையான முகம், மாநிற முகத்தில் மேலுதட்டை மறைக்கும் brush போன்ற மீசை, கணீர் குரல், Tuck in செய்த வெள்ளை சட்டையிலிருந்து எட்டிப்பார்க்கும் லேசான தொப்பை, மினுமினு வழுக்கை ஆனாலும் காதின் ஓரத்தில் இருக்கும் கருப்பு முடி அஞ்சனாவிற்கு பார்க்கும்போது எல்லாம் தோன்ற வைக்கும் வார்த்தை proud tufts of hair. கம்பீரமாக நிமிர்ந்து எப்போதும் நடப்பார், நல்லவர், well read, articulate and well mannered. ஆனால் குடி பழக்கத்திற்கு அடிமையானவர் என்று சக ஆசிரியர்கள் பின்னால் பேசி சிரித்தார்கள். ‘’மனுசன் full அடிச்சுட்டு வந்து, நின்னு Indus valley civilization பற்றி பேசதொடங்கினா கேட்டுட்டே இருக்கலாம்`` என்று சொல்லும் அளவு அவருடைய பேச்சும், அவருடைய old monkம் அவள் பள்ளி மாணவர்கள் எல்லோரின் மத்தியிலும் அத்தனை பிரசித்தம்.
வரலாறும் புவியியலும் அஞ்சனாவிற்கு தெரிந்துக்கொள்ள லேசான ஆர்வம் இருப்பினும், அவளுடைய இரண்டாம் வகுப்பு தொட்டு, அவளால் அதை உணர்ந்து படிக்கவோ, ரசிக்கவோ முடியாது போனதற்கு அவளுடைய வகுப்பு ஆசிரியர்கள் கூட காரணமாக இருக்கலாம். எப்போதும் ஒரே monotonous அழுது வழியும் தொணியில், இவர் வந்தார் படையெடுத்தார். அவர் வந்தார் மரம் நட்டார், அந்த ஆண்டு இந்த ஆண்டு என்று வந்த வரலாறும், நிலங்களின் வகைகள், வெவ்வேறு பிரதேசம் சீதோஷணம் என்று சொன்ன புவியியலும் அவளுக்கு மிக அலுப்பான விஷயமாக தான் தோன்றியது, அவளுடைய 9ம் வகுப்பு வரை. மோஹன் தாஸ் சார் படிப்பில் கராறான மனிதர் என்று 10வது போயிருந்த சங்கரி அக்கா சொன்னார்கள். அவளோடு சாந்தி அக்காவின் நடனவகுப்பில் பரதம் படிப்பவள். எப்போதும் வகுப்பில் alert ஆக இருக்க சொன்னார், அன்றைக்கான பாடங்களை கட்டாயம் படிக்க சொன்னார்கள் அக்கா. வகுப்பின் மத்தியில் எழுப்பி கேள்வி கேட்பார் என்று சொன்னாள் சங்கரி அக்கா.
முதல் நாள் வகுப்பு அக்பரின் காலம் பற்றிய வகுப்பு, மோஹன் தாஸ் மாஸ்டர் மிடுக்காய் வகுப்பில் நுழைந்தார். வரும்போதே அவர் மீது சாராய வாடை வந்தது. அஞ்சனாவின் பள்ளியில் ஆங்கில தமிழ் வகுப்புகள் எல்லாமே co education வகுப்புகள் தான். அறையின் ஒரு பகுதியில் ஆண்களும் இன்னொரு பகுதியில் பெண்களும் இருக்க, நடக்க சுற்றி இடம் இருந்தது. பொதுவாக உயரவாரியாக தான் அமரவைப்பதால், அஞ்சனா பெரும்பாலும் கடைசி பெஞ்ச் அல்லது அதற்கு முதல் பெஞ்சில் தான் அமர்வாள். அஞ்சனாவிற்கு படிப்பில் ஒன்றும் பெரிய பிரச்சனை இருந்ததில்லை. ஆனாலும் படிப்பதை ரசிக்க முடிந்ததில்லை. பயத்தினால், முன்கூட்டியே அக்பரை பற்றிய பகுதியை ஒரு முறைக்கு இரண்டு முறை படித்து வைத்தாள். மோஹன் சார் பேசத்தொடங்கினார், வரலாறை பற்றி பொதுவாக. His mannerism was captivating & his voice was mesmerizing, which held the whole class in total silence. அவருடைய சிவந்த கண்கள் துடிக்க வரலாறு ஏன் படிக்க வேண்டும், என்ன தெரிந்துக்கொள்ளலாம் என்று பேச பேச, அஞ்சனாவிற்கு ஏதோ ஒரு புதிய உலகு கண்முன் விரிவது போல இருந்தது. சாரும் நடு நடுவே எல்லோரையும் கேள்வி கேட்டார், ஆனால் அக்பரை பற்றி அல்ல. அதற்கு முதல் நாள் நடந்த இந்தியா பாகிஸ்தான் ஒரு நாள் கிரிக்கெட் பற்றியும், டிவி விளம்பரம் பற்றியும், புத்தகங்கள் பற்றியும் இப்படி சம்பந்தமில்லாததை பற்றி கேட்டுக்கொண்டே வந்து பாடத்தோடு தொடர்பு படுத்தினார்.
சிலருக்கு தான் தெரிந்ததை விவரிக்க முடியும், அதிலும் சிலருக்கு தான் விவரிப்பதை உணரவைக்க முடியும். அது அவரால் முடிந்தது. He had this ability to leave a lasting impact or imprint of the story on the people who were listening to him. அதன் பின் மோஹன் மாஸ்டர் சொல்ல சொல்ல, அவளுக்கு உலகில் மக்களின் தொடக்கம், வாழ்க்கை, ஆட்சி, போர் எல்லாம் எப்படி வந்திருக்கும் என்று உணரமுடிந்தது. சேர சோழ பாண்டியர்கள், முகலாய, ஆங்கிலேய படையெடுப்பு, முற்றுகைகள் பற்றி புரிந்தது. Rich in culture and heritage என்ற வார்த்தையின் முழு அர்த்தம் தெரிந்தது. உலக நாகரீகம், உலக அரசியல் பற்றி பேச பேச, உலகம் ஒரு சிலந்தி கூடு போல என்று தோன்றியது. If strings do get pulled at one corner, the reverberations will go all throughout the web என்பது போன்ற அமைப்பு தான் நமக்கு என்று தெரிந்தது.
அஞ்சனாவின் தந்தைக்கு cowboy படங்கள் என்றால் கொள்ளை பிரியம் ,அதை தொடர்ந்து பார்த்து பார்த்து அவளுக்கும் பிடிக்க தொடங்கியது. அந்த படங்களில் இருந்த style, வேகம், வறண்ட பாலைவனம், Rattle snake, குதிரைகள், ஆளுயர cactus, சுருட்டு, தொப்பி, துப்பாக்கி, சிகப்பு மலைகள், தங்க புதையல், police sheriff, பார்கள், சிவப்பிந்தியர்கள், கழுகு இப்படி எல்லாமே மிக பிடித்து போனது. வெகு நாட்களுக்கு அஞ்சனாவின் தந்தையின் அம்பாஸுடர் காரின் reverse horn, `` Good, Bad and Ugly `` படத்தில் வரும் தீம் ம்யூஸிக் ஆக இருந்தது. அந்த படங்கள் ஏற்படுத்தும் தாக்கம் போலவே தான் இருந்தது மோஹன் மாஸ்டரின் வகுப்புகள். His classes really felt like a theatrical bonanza of information.
பள்ளியில் நூலகத்தை எல்லோருக்கும் அறிமுகம் செய்துவைத்தது மட்டுமின்றி, எல்லோருக்கும் வாரம் ஒரு புத்தகம் பற்றி பேச 10 நிமிடம் தந்தார். அப்படி முதன்முதல் அஞ்சனா படித்த ஒரு சிறு புத்தகம், ‘’Story of the pebble’’ என்பது. ஒரு பெரிய பாறையில் இருந்து உடைப்பட்டு விழுந்த ஒரு பாறாங்கல் எப்படி மழையால் நீரில் மெல்ல அடித்து செல்லப்பட்டு, அதன் ஓரங்கள் மழுங்கி பல நூறு ஆண்டுகளில் அழகான கூழாங்கல்லாக மாறுவதும், மெல்ல ஒரிடத்தை விட்டு இன்னொரு இடம் சென்றபடியே தேய்ந்து கடைசியில் சிறு மணல்துகள் ஆக மாற்றுகிறது காலம் என்பது தான் கதையின் சாராம்சம். ஏனோ அந்த கதை அஞ்சனாவிற்கு ஒரு பெரிய சோக கதை போல தோன்றியது அதே சமயம் பெரிய தத்துவம் அடங்கியது போலவும் இருந்தது.
தமிழும், வரலாறும் ஆங்கிலமும், கணிதமும், அறிவியலும் கலந்து கேட்கும் கேள்விகள் வெவ்வேறு ஆனாலும் பதில்கள் ஒன்று தான் என்று புரியவைத்தது மோஹன் சார் தான். அதன்பின் அஞ்சனா பிடித்து ரசித்து, உணர்ந்து படித்தாள். வாழ்வில் என்றாவது சாவதற்குள் செய்யவேண்டும் என்று ஒரு பெரிய பட்டியல் தயாராக வைத்து இருப்பதாக அவர் சொன்னார். செய்ய விரும்பிய விஷயங்கள், போக எண்ணிய ஊர்கள், தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்று எல்லாம் கலந்து அவர் செய்த பட்டியலின் பெயர், ‘’50 things to do before I die’’. எல்லோரும் இப்படி ஒரு பட்டியல் தயார் செய்யவேண்டும் என்றும், அந்த பட்டியல் நம்மை வாழ்வின் பாதையில் நமக்கு பிடித்ததை செய்யவைக்கும் என்று சொன்னார். அன்று இரவே அஞ்சனா அமர்ந்து ஒரு பட்டியல் தயாரித்தாள். அவளுடைய புத்திக்கு எட்டி, பிடித்தது என்று, அன்று எழுத முடிந்தது வெறும் 13 விஷயங்கள் தான். அதன்பின் அந்த பட்டியலில் இப்போது நூற்றுக்கும் மேலே தாண்டி போய்க்கொண்டிருக்கிறது.
சில வருடங்களுக்கு முன், சென்னையில் தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து கொண்டு இருக்கும்போது, ரயிலில் மகளிர் வகுப்பில் அமர்ந்து செல்லும்போது பேசிக்கொண்டார்கள் சில பெண்கள். பொதுவாக கிருத்துவ சமூகத்தில் நடக்கும் விஷயங்கள் வாரந்தோறும் சர்ச்சில் சபையிலோ, அல்லது ear to ear இப்படியோ பரிமாறிக்கொள்ளப்படும். அப்படி கேள்விப்பட்டதாக சொல்லி ஒரு பெண், (வேறு ஒரு ஊரில் டீச்சராக பணிபுரிபவர்) மோஹன் சாரை பற்றி சொன்னார். வெகுவாய் குடித்து உடல் கெட்டுப் போனது மட்டும் இன்றி, மனைவியோடு தகராறு, கடன் தொல்லை, மன உளைச்சல் இப்படி நிறைய பிரச்சனைகளோடு வருடக்கணக்கில் போராடியவர், இரண்டு மாதம் முன்பு தூக்கு மாட்டி இறந்ததும், அவர்கள் மனைவி திருமணம் ஆனதில் இருந்து கஷ்டப்பட்டு இப்போது தான் சிறிது நிம்மதியாக இருக்கிறார்கள் என்று சொன்ன போது அஞ்சனாவால் நம்ப முடியாது போனது. அந்த பெரிய மனிதரின் 50 ஆசைகளில் எத்தனை தான் நிறைவேற்றினாரோ என்று எண்ணினாள். வாழ்க்கையில் இப்படி ஒரு மேடையில் கரகோஷமும், அதே சமயம் இன்னொரு மேடையில் காறி உமிழ்வதும் வாங்க தான் வேண்டும்போல. பாரதியார் நல்ல சிந்தனையாளர், மகாகவியானாலும், செல்லம்மாவிற்கு நல்ல கணவரா என்று அவர்களை கேட்டால் ஒருவேலை இல்லை என்று தான் சொல்லியிருப்பார் அது போல தான் இவர் வாழ்க்கையும்.
சேய்ஷல்ஸில் டேமியன் வற்புறுத்தி கூப்பிட்டு போன படம், Jack Nicholson & Morgan Freeman நடித்த ‘’The Bucket List’’. இருவரும் புற்றுநோயால் இறக்கும் தருவாயில் இருக்க, நண்பர்களாகி மோர்கன் இறப்பதற்குள் செய்யவேண்டும் என்று இருந்த பட்டியலை ஒன்று ஒன்றாக செய்து முடிப்பார்கள் இருவரும். அந்த படம் பார்த்து முடித்து வெளியே வந்து இரண்டு நாட்களுக்கு மோஹன் தாஸ் சார் நினைவில் இருந்தார். ஒருவேளை அப்படி ஒரு நட்பு அவருக்கும் கிடைத்திருப்பின், இந்த வேலை வெகு சந்தோஷமாக எகிப்தின் பிரமிட்களையோ, ஈஸ்டர் தீவுகளின் ``மோய்`` பாறை முகங்களையோ பார்த்துக்கொண்டு இருந்திருப்பாரோ என்னவோ! ஒருவருடைய வாழ்க்கை எப்படி தான் மாறுகிறது என்று கணிக்க முடிவதில்லை தான். End of the day, He was dead and gone, so was his grandiosity of teaching. அவருடைய வாழ்க்கையும் பாறையில் இருந்து தொடங்கிய கல்லை போல தான். ஆனால் மணலாகவோ அழகான கூழாங்கல்லாகவோ நீரின் ஓட்டத்தில் மாறாது, தேங்கிய குட்டையில் மூழ்கிப்போன கல்லாகவே வாழ்க்கை முடிந்து போனது, பாசி படிந்து.
அவள் பள்ளியின் வரலாறு வகுப்புகள் மீண்டும் எண்களாலும், தூக்கம் வரவைக்கும் போரான விஷயங்களாலும் நிரம்பிதான் போயிருக்கும். Anjana was just thankful for his presence in her life. படிப்பை, பாடபுத்தகங்களை ரசிக்க, அனுபவிக்க சொல்லிக்கொடுத்த குருவாக, அந்த படிப்பை மதிப்பெண் தேடல்களுக்காக அல்லாது வாழ்க்கையில் ஐக்கியமாக்க சொல்லித்தந்த ஒருவருடைய வாழ்க்கை, மற்றவர்களை பொறுத்தவரை பணம், வீடு, கார் இப்படிப்பட்ட பொருட்களால் நிர்ணயிக்க பட்டாலும், அஞ்சனா போன்ற பல்லாயிரம் மாணவ மாணவிகளுக்கு அவருடன் கழித்த மணி நேரங்கள் விலைமதிப்பில்லாதது தான். அஞ்சனாவை பொறுத்தவரை இன்றும் என்றும் மோஹன் தாஸ் சார் was high up in the pedestal. பல விஷயங்களில் மற்றவர்களுக்கு அவர் வாழ்வு பொருள் இல்லாதிருந்திருந்தாலும், ஒரு ஆசிரியராக அவரின் வாழ்க்கை அர்த்தமுடையதாக தான் இருந்தது. He literally came alive when he taught and he will stay that way in her mind.
அஞ்சனா அவளுடைய பட்டியலில் ஏதேனும் செய்யும்போதெல்லாம், மோஹன் சார் ‘’ Well done’’ என்று சொல்வது போலவே இருக்கும். இன்றும் அப்படி தான். Scuba diving பற்றி லூயிஸ் சொல்லிக்கொடுத்தான். Scuba (Self contained underwater breathing apparatus) ஆழ்கடலில் நீந்தும்போது மூச்சுவிட உபயோகிக்கும் ஆக்சிஜன் சிலிண்டர், மாஸ்க், ரப்பர் உடுப்பு, காலில் அணியும் ஃபிளிப்பர் (Flippers ), கண்ணாடி (goggles) இப்படி இவை மட்டுமே 15 - 20 கிலோ எடை இருக்கும். நீரில் மிதக்கையில் கனம் தெரியாது மற்றும் ஆழ்கடலில் நீந்துவது மிகவும் ஜாக்கிரதையாக செய்யவேண்டும் என்றான் லூயிஸ். மார்வின் சொன்னான், ``அஞ்சனா! நீ டாக்டர் தானே, உனக்கு தெரியாதா என்ன ஆழ்கடலில் நீந்தும்போது ஏற்படும் மாற்றங்கள் பற்றி`` என்று கேட்டான். ஆழ்கடலில் நீருடைய அழுத்தம் மிக அதிகமாக இருக்கும், அதுவும் இறங்கும் ஒவ்வொரு 10 அடி ஆழத்திற்கும் கிட்டத்தட்ட 7 கிலோ எடைக்கு சமமான அழுத்தம் ஒவ்வொரு சதுர இஞ்ச் உடல் பரப்பின், முக்கியமாக நுரையீரல் மற்றும் இதயம் மேலும் ஏற்படும் என்று படித்திருக்கிறாள். இந்த அழுத்தத்தால் வேகமாக நீரில் அமிழ்ந்தாலோ, மேல் நோக்கி வந்தோலோ ஏற்படும் மாற்றங்கள் சில பல வேலையில் உயிருக்கு உலை வைக்கலாம் என்று நன்கு தெரியும்.
இப்படி எல்லாம் சொல்லி, கடைசியில் எல்லாவற்றையும் மாட்டி நிற்கையில் அஞ்சனாவிற்கு சிரிப்பு வந்தது, எல்லோரும் ஏதோ வெளிக்கிரகவாசிகள் போல் இருந்ததை பார்த்து. மார்வினும், ஆஞ்சலினாவும் வரவில்லை. மற்ற எல்லோரும் தயாராகி, படகின் ஓரத்திற்கு சென்று அமர்ந்தார்கள். Dive செய்ய ஒன்று தண்ணீருக்குள் தலை குப்புற விழலாம் அல்லது நின்று அப்படியே உள்ளே குதிக்கலாம். ஆனால் தற்காப்புக்காக அமர்ந்து குப்புற தண்ணீரில் அமிழலாம் என்று சொல்லி அதையே செய்தார்கள் அனைவரும். முதன்முதல் செல்வதால், அத்தனை ஆழமில்லாத இடத்திற்கு தான் கொண்டு சென்றார்கள். தண்ணீரில் விழுந்தவுடன் வேறு ஒரு தேசத்திற்குள் நுழைந்தது போல இருந்தது. சட்டென பரவிய நிசப்தமும், பிம்பங்கள் சூரிய ஒளியின் ஊடுருவலால் வேறு ஏதோ போல பிரதிப்பலிப்பதும், இது வரை பார்த்திராத வண்ணங்களின் cornucopia, எத்தனை வித்தியாசமான உருவங்கள் உண்டோ அத்தனை வித்தியாசமான மீன்களும், பவழப்பாறைகளும் சொல்லமுடியாத சொர்க்கம் போல இருந்தது அஞ்சனாவிற்கு.
Underwater Documentaries பார்த்து எப்போதும் ரசிப்பவளுக்கு நிஜத்தில் அதை பார்க்க நேர்ந்தது மிக பரவசமாக இருந்தது. மூச்சு விடுவது சிறிது வித்தியாசமாக இருந்தது. பெரிய ஒரு திருக்கை மீன் (Ray fish) படுத்து இருந்தது மணலில். இவர்கள் அருகில் சென்றதை பார்த்து அத்தனைக்கு சலனம் காட்டவில்லை. ஏனோ ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் இர்வின் ( Steve Irwin ) இறந்ததற்கு இப்படி ஒரு மீன் தான் காரணம் என்று தெரிந்ததாலோ என்னவோ அவளுக்கு அதன் அருகே செல்ல அச்சமாக இருந்தது. லூயிஸ் அதன் அருகே சென்று அதன் வெள்ளையான அடிப்பாகத்தை தொட்டான். அது மெல்ல எழும்பி நீரில் வட்டமிடுவதை பார்க்க, அஞ்சனாவிற்கு அம்பத்தூரில் அவள் வீட்டு மொட்டை மாடியில் மாஞ்சா தடவி பறக்கவிட்ட காற்றாடி போலவே இருந்தது. அதன் வாயில் பல் ஒன்றும் இல்லை. வெறுமே ஒரு பெரிய ஓட்டை போல இருந்தது. அங்கிருந்து செல்ல, ‘’Finding Nemo’’ படத்தில் வருவது போன்ற clown fish, sea anemone ஒன்றை பார்த்தாள் அஞ்சனா. It’s a perfect example for symbiotic relationship என்று ஏதோ ஒரு படத்தில் பார்த்து இருக்கிறாள். க்ளவுன் மீனால் அனிமோனுக்கு உணவும், அனிமோனின் விஷ தாக்குதலால் மற்ற மீன்களிடம் இருந்து க்ளவுன் மீனிற்கு பாதுகாப்பும் கிடைக்குமாம்.
இன்னும் இப்படி ஒரு சிறு பாறை இடுக்கில் வெள்ளை நிற விலாங்கு மீன், கிளி போன்று மூக்கு உடைய மீனின் கூட்டம், தட்டையான மீன்கள், கோடு போட்ட மீன், புள்ளி வைத்த மீன், தரையில் ஊரும் இரால் மீன் கூட்டம் என்று நிறைய வகை மீன்களை பார்த்தாள். கையும் காலும் இப்போது பழகிவிட்டது நீரின் உள்ளே. சுற்றி உள்ளவர்களை பார்த்தப்படி மேலும் நகர்ந்தாள். இப்படியே சிறிது தூரம் சென்றப்பின் மெல்ல எல்லோரும் மேல்நோக்கி எழும்பினார்கள். அத்தனை நேரம் கழித்து கேட்ட ஓசைகள் இரைச்சலாக தோன்றியது அஞ்சனாவிற்கு. அணிந்திருந்த எல்லாவற்றையும் கழட்டியபின் உடம்பு லேசானது போல தோன்றியது, அதே சமயம் அடித்து போட்டது போல இருந்தது அசதியாய்.
இத்தனைக்கும் வெறும் அரைமணி நேரம் தான் இருந்திருப்பார்கள் தண்ணீரின் அடியே. வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு அனுபவம்தான். எல்லோரும் படகின் டெக்கிலேயே படுக்க, அஞ்சனாவிற்கு வெட்கமாக இருந்தது. இருந்த மூன்று பெண்களும் நீச்சலுடையில் இருந்தாலும், மற்ற இருவரும் அணிந்திருந்தது வெறும் ஒரு கயிரில் முக்கோண துண்டு துணி மட்டுமே தான். அஞ்சனா இவர்களை காட்டிலும் பெரிய நீச்சலுடை ஆயினும் மேலே ஒரு டீசர்டும், கீழே ஒரு சரோங்க் போன்ற துணியும் அணிந்து கடலை பார்த்தப்படி அமர்ந்தாள். பசித்தது எல்லோரும் சேர்ந்து மீன் சுட்டு சாப்பிட்டார்கள்.
இரவு லா டிக் சென்று தங்கிவிட்டு, அடுத்த நாள் காலை கிளம்பலாம் என்று சொல்லி, படகை திருப்பினார்கள். அந்த படகில் இருந்த குளியலறையில் குளித்து உடை மாற்றி எல்லோரும் லா டிக் உள்ளே நடந்தார்கள். அங்கு இருந்த ஒரு டான்ஸ் கிளப்பில் நுழைந்தார்கள், அவளையும் இழுத்து கொண்டு. இசை அதிர, பல வகை விளக்குகள் பளிச்சிட, ஆண்களும் பெண்களும் கட்டியணைத்து ஆடியபடி இருந்தார்கள். வழக்கம் போல எல்லோரும் ஆட கிளம்ப, அங்கு இருந்த ஒரு உயர நாற்காலியில் அஞ்சனா வந்து தனியே அமர்ந்தாள். கொஞ்சம் சோர்வாக, தூக்கக்கலக்கமாக தான் இருந்தது அவளுக்கு. வெள்ளை sleeveless டி சர்டும், நீல ஜீன்ஸும் அணிந்து அமர்ந்து, ஒரு பழ ஜூஸை சுவைத்து கொண்டு இருந்தவளை தூக்கிப்போட வைத்தது, `` Fancy running into you here! அஞ்சனா’’ அவனின் குரல். போதை மருந்து விற்பவனான ஜெஃப் இங்கு அவளுக்கு வெகு அருகில் நின்றபடி சிரித்துக்கொண்டிருந்தான்.
ஃபெமினாவும், கிறிஸ்டியானாவும் போதை பழக்கத்திற்கு அடிமையாக்கியது போல பல பெண்களை போதை விஷயத்தில் மாட்டிவிட்டவன் என்று தெரிந்ததில் இருந்து, எத்தனையோ முறை அவன் பேச முயற்சித்தாலும், அஞ்சனா பிடிக்கொடுத்து பேசியதே இல்லை. ஆனால் இத்தனை அருகில் அவளை தொடும் தூரத்தில் ஜெஃப் நிற்கவே அஞ்ஜனாவிற்கு பயமாக தான் இருந்தது. அழகாகவும் விகாரமாகவும் ஒரே நேரத்தில் இருப்பது போன்ற ஒரு முக அமைப்பும் குரலும் அவனுக்கு. மேலும் `` இது என்னுடைய க்ளப் தான். மேலே என்னுடைய தனி அறை இருக்கிறது. It would be very comfortable to chill there. வருகிறாயா! என்று மேலும் கீழுமாக பார்த்து கேட்டவனை சட்டை செய்யாது திரும்பி அமர்ந்தாள் அஞ்சனா.
இவனுக்கு பதில் சொல்லி react செய்வதே தவறு என்று எண்ணி, நெஞ்சு படப்படப்பை அடக்கியபடி, ஒன்றுமே தோன்றாதது போல ஜூஸை குடித்தவள், கண்ணை மெல்ல சுழற்றினாள். அவளோடு வந்தவர்கள் யாரும் தென்படவில்லை. இந்த சமயத்தில் ஜெஃபோடு இன்னொருவனும் வந்து சேர்ந்தான். வந்தவன் இடது கண் புருவத்தில் வளையம் அணிந்து, வலது கண் புருவத்தின் வளைவை ஷேவ் செய்து கோடுகள் போல அமைத்து, உதட்டின் ஓரத்தில் ஒரு stud அணிந்தபடி, தோள்பட்டையில் ஒரு கஞ்சா இலை டாட்டூ வரைந்து, அவன் மேலெல்லாம் கஞ்சா வாசம் அடிக்க, `` whassup man, new chick, is it... Lucky you...Be a sport and pass her on once you are done with her’’ என்று ஏதோ பெரிய ஜோக் அடித்தது போல சொல்லி சிரித்தான்.
இதற்கு முன் இதே போன்ற ஒரு நிலையில் நின்றது ஏனோ அந்த நேரத்தில் நினைவிற்கு வந்தது அஞ்சனாவிற்கு. அங்கு இருந்து எழுந்து டேமியன், லூயிஸ் தேடி போவதே மேல் என்று நினைத்து எழுந்து நடக்க இயல, புதியவன் அவள் வழியை சட்டென தடுக்க, இவள் பின்னுக்கு நகர்ந்து ஜெஃப்பின் மீது மோத, ஜெஃப் பின்னிருந்து கட்டிப்பிடித்தான். அஞ்சனா உதறி விடுபட முயல, ‘’ She is feisty. Me likey!’’ என்றான் மேலும் இளித்தான் அந்த வளையம் போட்டவன். ஜெஃப் ஒன்றுமே பேசாது அவள் இடுப்பை ஒரு கையால் இறுக பற்றியபடி, இன்னொரு கையால் அவள் முதுகில் இருந்து லேசாக தடவியபடி அவள் பின்புறத்தில் கையை கொண்டு போக, அவள் தலைமுடியை முகர்ந்தான். அஞ்சனா கை கால் உதற தொடங்க, ``விடு என்னை`` என்று கூச்சலிட்டாள். அவள் கண் மூடி திறப்பதற்குள் ஜெஃப்பின் கைகள் அவளை விட்டது. அதற்கு பதில் இன்னொரு கை அவளை பலமாக பின்னிருந்து பலமாக இழுத்து அணைக்க அதையும் எதிர்த்து திமிறினாள், ‘’shh! It’s me, அஞ்சனா`` என்ற டேமியனின் குரல் கேட்டதும், அது வரை இருந்த பயம் வெறி, தப்பித்துக்கொள்ளும் ஆர்வம் எல்லாம் சட்டென லேசாக மறைய, கைகால் குழைய நின்றாள் அவள். சட்டென நிற்க திராணி இல்லாது கால்கள் மடங்குவது போல இருந்தது அவளுக்கு.
அதன்பின் லூயிஸும் மற்றவர்களும் வந்து சேர, அங்கு பெரிய கூட்டமே சேர தொடங்கிவிட்டது. க்ரியோல் பாஷை வெறுமே நலம் விசாரிக்கும் அளவுக்கு மட்டும் தான் அவளுக்கு தெரியும். ஆனால் அங்கு ஒரு பெரிய கை கலப்பு ஆக தொடங்கியது. பின்னர் கூட்டத்தில் இருந்த பொதுவான சிலர் இவர்களையும், ஜெஃப்பின் கும்பலையும் பிரித்துவைத்தனர். அங்கிருந்து வெளியே வரும்போது அஞ்சனா திரும்பி பார்க்க, ஜெப் மீண்டும் கையில் இருந்த மது கோப்பையை cheers என்று சொல்வது போல, மேல் நோக்கி உயர்த்தி, காற்றில் முத்தமிட்டான். அஞ்சனா திரும்பி எல்லாரோடும் சேர்ந்து நடக்கத்தொடங்கினாள் படகு நோக்கி. அஞ்சனாவால் இந்த இடத்தில், இதே போன்ற ஒரு சூழலில் நின்றது நினைவுக்கு வந்து கண்கள் லேசாக கலங்கி, கன்னம் எரிய தொடங்கியது.
தொடரும்
யமுனா ராகவன்

