பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

May 21, 2010

சிங்கள ராணுவத்தின் கோர முகம்

சிறீலங்காப்படையினர் போராளியை வெட்டி கொலை செய்யும் கோரம்!
திகதி: 21.05.2010 // தமிழீழம்
வன்னியில் கடந்த வருடம் இறுதி யுத்தத்தில் சிறீலங்கா சிங்கள படைகளால் கைது செய்யப்பட்ட போராளிகளை கோரமாக வதை செய்து கொன்றது தொடர்பாக மேலும் சில காட்சிகள் தற்போது வெளிவந்துள்ளது.

சிங்கள படைகளின் காட்டு மிரண்டிதனமான போர் குற்ற ஆதாரங்களில் சிலதை Human Rights Watch  வெளியிட்டுள்ளது.

இதில் ஒரு போராளியை தென்னை மரத்தில் கட்டி வைத்து கத்தியால் வெட்டி வெட்டி சித்திரவதை செய்து கொலை செய்யும் கோர காட்சி பதியப்பட்டுள்ளது.

இச்செய்தியானது உலக தமிழ் மக்களை உலுக்கியுள்ள இவ்வேளையில் எதிர்வரும் காலங்களில் மேலும் படங்கள் வெளிவரும் என்று இன்னும் ஒரு செய்தி உறுதிபடுத்துகிறது.

புலம்பெயர் தமிழ் மக்கள் மற்றும் தமிழக உறவுகள் அனைவரும் ஒரே வழியில் நின்று போராடவேண்டிய தேவையையும், சிறீலங்காவை போர்க்குற்றத்திற்கான விசாரணைக்கு கொண்டுவர சர்வதேச சமூகத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியத்தையும் இப்புகைப்படங்கள் கோருகின்றன.

 

காட்சி

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com