பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

May 22, 2010

மலையாளிகளின் துரோகங்கள் - சினிமா - சாம்ராஜ்


இயல்பான தேடுதலில் மலையாள சினிமாவை அடைந்தவன் நான். தமிழ் சினிமாவின் போதாமையும், இலக்கிய வாசிப்பும் என்னை அதை நோக்கி ஈர்த்தன. 80 களின் இறுதியில் 90 களின் தொடக்கத்தில் மலையாள சினிமா பார்க்கத் தொடங்கினேன். யதார்த்தமான  கதையமைப்பும், நம்பகமான காட்சியமைப்பும், மிகையில்லாத  நடிப்பும்,நகைச்சுவையும் என்னை சந்தோசப்படுத்தின. வெறிகொண்டு மலையாள சினிமா பார்க்கத் தொடங்கினேன். (நண்பர்கள் மதுரை மோகன்லால் ரசிகர் மன்றத்தின் தலைவன் நான் என்று என்னை கேலி செய்ததுண்டு.) பெரும் ஆறுதலையும், ஆசுவாசத்தையும் தந்தது மலையாள சினிமா.
 

கண்ணீர் மல்க வைக்கும் மலையாள சினிமாக்கள் உண்டு. தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் ஒருமுறை சொன்னார். “சாம் மோகன்லால்தான் இந்தியாவின் தலைசிறந்த நடிகர். இதை நான் வெளியே சொல்ல முடியாது. சொன்னால் கமல்ஹாசன் கோபித்துக் கொள்வார்” என்று. பிரமாதமான நடிகர் பட்டாளம் அவர்களிடம் உண்டு. மோகன்லால், நெடுமுடி வேணு, கொடியேற்றம் கோபி, (இப்பொழுது இல்லை) ஜெகதி ஸ்ரீ குமார், திலகன், இன்னசெண்ட், மம்முட்டி, ஒடுவில் உன்னிகிருஷ்ணன்,(இப்பொழுது இல்லை) அடூர் பங்கஜம், பிலோமினா (இப்பொழுது இல்லை) கவியூர் பொன்னம்மா, முரளி,(இப்பொழுது இல்லை) சுகுமாரி, மாலா அரவிந்தன், கொச்சின் ஹனிபா,  சலீம் குமார், கே.பி.யே.சி லலிதா, கொட்டாரக்கரா ஸ்ரீதரன் நாயர் , ஊர்வசி, வேணு நாகவள்ளி, ஜலஜா, சங்கராடி,(இப்பொழுது இல்லை) சீனிவாசன், ஜெயராம், கார்த்திகா, திக்குருச்சி, ஜனார்த்தனன், முகேஷ், சி.ஏ.பால் என சிறந்த நடிகர்கள் அவர்களிடம் உண்டு.
 
கரைந்து அழுக, சிரிக்க, உன்மத்த நிலையில் நம்மை உட்கார்த்தி வைக்க எத்தனையோ அருமையான படங்கள் அவர்களிடம் உண்டு. சிபிமலயில் இயக்கத்தில் லோகிதாஸின் திரைக்கதையில் மோகன்லாலின் ’கிரிடம்’ படத்தை கணக்கு வழக்கில்லாமல் பார்த்திருக்கிறேன். தேசாடனம் இன்றைக்கும் என்னை கண்ணீர் சிந்த வைக்கும் படம். ஒருபாடு படங்கள். 80 களின் நடுப்பகுதி மலையாள சினிமாவின் பொற்காலம்.துல்லியமான middile cinema  உருவாகியிருந்தது. ஹரிஹரன், பத்மராஜன் சேதுமாதவன். பரதன், வேணு நாகவள்ளி, சத்யன் அந்திக்காடு,தொடக்க கால பிரியதர்ஷன், , பிளஸ்ஸி போன்ற நல்ல இயக்குனர்களும்,எம்.டி.வாசுதேவன் நாயர், சீனிவாசன் போன்ற திரைக்கதை ஆசிரியர்களும் உண்டு.
 
மரித்துப் போன மலையாள நடிகர் முரளி எனக்கு பரிச்சயமே. திலகனுடன் தொலைபேசியில் உரையாடுவதுண்டு. கோபியோடு ஒரு முறை உரையாடியிருக்கிறேன். லோகிதாசை ஒருமுறை சந்தித்திருக்கிறேன். அவர் இறந்த பொழுது அவருடைய லக்கடி அமராவதி வீட்டுக்குச் சென்ற விரல் விட்டு எண்ணக்கூடிய தமிழ் ரசிகர்களில் நானும் ஒருவனாய் இருப்பேன். பழைய நகைச்சுவை நடிகர் மாலா அரவிந்தன் எனக்கு  நெருக்கமே.

 20 வருட கால மலையாள சினிமாவை பார்ப்பவன் என்ற தகுதியில் சொல்கிறேன்.அதற்கு முன்பு வந்த படங்களையும் பார்த்ததையும் சேர்த்துக் கொண்டால் 25 வருடம். (கறுப்பு வெள்ளை மலையாள சினிமாவை நான் இதில் சேர்க்கவில்லை.) கால் நூற்றாண்டு கால மலையாள சினிமாவை அவதானித்தவன் என்ற இறுமாப்பில் சொல்கிறேன். முன் சொன்ன பத்தியில் இருக்கும் அத்தனை பேரும் கறைபட்டவர்கள் அல்லது கயமையானவர்களே.

இத்தனை வருட காலம் நான் பார்த்த மலையாள சினிமாவில் ஒரு திரைப்படம் கூட தமிழர்களை நல்லவர்களாய்ச் சித்தரிக்கவில்லை. மாறாக தமிழர்கள் என்றால் திருடர்கள், ஏமாற்றுக்காரர்கள், வேசிகள், கூட்டிக் கொடுப்பவர்கள், கோழைகள், பிச்சைகாரர்கள், காசுக்காக என்ன வேண்டுமானலும் செய்யும் எத்தர்கள் என்றே எப்பொழுதும் சித்தரிப்புகள். மலையாள சினிமாவின் எந்தவொரு நடிகர், நடிகை, இயக்குனர் என எவரும் எனது குற்றச்சாட்டிலிருந்து தப்பமுடியாது. தமிழனை நல்லவனாக காட்டும் ஒரு படத்தை சொல்லுங்கள் நான் சங்கறுத்து செத்துப் போகிறேன்.

வலிந்து வலிந்து தமிழ் பாத்திரங்களை உருவாக்குவார்கள். அவர்களுக்கு தமிழ்நாட்டு வில்லன்கள் எனில் பொள்ளாச்சி கவுண்டர்களும், தென்காசி, உசிலம்பட்டி தேவர்களும்தான். பொள்ளாச்சி கவுண்டராக உசிலம்பட்டி தேவராக பெரும்பாலும் ஒரு மலையாள நடிகரே நடிப்பார். பெரும் நிலக்கிழாராக திண்ணையில் அமர்ந்து வெற்றிலை போட்டு துப்பி “வேண்டாம் தம்பி” என மோகன்லாலிடமோ மம்மூட்டியிடமோ ஜெயராமிடமோ சாவல் விட்டு, மோகன்லால்  அந்த பொள்ளாச்சி கவுண்டரின் பூர்வ கோத்திரத்தை, வரலாற்றை மூச்சு விடாமல் பேசி “வேண்டாம் மோனே தினேஷா” என மாரில் ஏறி மிதிப்பார்.
 
பொள்ளாச்சியில் கவுண்டர்கள் இப்படித்தான் இருக்கின்றார்களா? (கொங்கு வேளாள கவுண்டர் சங்கம் இதையெல்லாம் கவனிக்கலாம்) தென்காசி பக்கம் திரும்பினால் தேவராக வினுச்சக்கரவர்த்திதான் நீண்ட காலமாக set property போல திகழ்ந்தார். அவர் ஆக்ரோஷமாக சண்டையி்ட்டு இறுதியில் மலையாள கதாநாயகர்களிடம் மண்டியிடுபவராகத்தான் பல வருடம் இருந்தார்.இப்போது வயதாகி விட்டதால் ஓய்வு பெற்றுவிட்டார்.மற்றொரு ’தேவரை’ மலையாளிகள் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.   
 
உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, வருஷ நாட்டுக் கள்ளர்களை காலகாலமாக அவர்கள் சித்தரிக்கும் விதம் பற்றி நம்மவர்கள் ஒன்றும் அறியார். மலையாளிகள் கால் நூற்றாண்டாக சினிமாவில் அவர்களை கேலி செய்து சிரித்தபடி kl வண்டிகளில் உசிலம்பட்டியையும், ஆண்டிப்பட்டியையும் கடந்து செல்கிறார்கள். நம்மவர்களுக்கு சிங்கம் கால்மாட்டில் உட்கார்ந்திருக்க முத்துராமலிங்கத் தேவரோடு பிளக்ஸ் போர்டில் நிற்கவே நேரம்  போதவில்லை.

கேரளத்தில் தொழில் துவங்கும், நடத்தும் தமிழர்களை மலையாள சினிமா சித்தரிக்கும் விதம் குரூரமானது. அங்கே தொழில் துவங்கும் தமிழர்கள் திருடர்கள். அவர்களின் ரிஷிமூலம் வெறும் பஞ்சை பராரியென்றும் ஏமாற்றி ஏமாற்றி பணம் சம்பாதித்து கேரளத்தில் தொழில் தொடங்க வந்துள்ளதாகவும் ”அது நடக்காது” என்று விடாது மம்மூட்டிகளும், மோகன்லால்களும் கர்ஜிக்கிறார்கள். (இப்பொழுது உங்களுக்கு முத்தூட் பின்கார்ப், மணப்புரம் கோல்டு லோன் எல்லாம் ஞாபகம் வரக்கூடாது.) கேரளத்தில் சிறிய சிறிய வியாபார நிறுவனங்கள் வைத்திருக்கும் தமிழர்கள் கொள்ளைக்காரர்களா …..? சிறிய நிறுவனங்கள் நடத்தும் தமிழர்கள் மீது அப்படி எந்த குற்ற வரலாறு கிடையாது.
 
கால் நூற்றாண்டு கால மலையாள சினிமாவின் சித்தரிப்பு இதுவே. (பட்டியல் கடைசியில் இருக்கிறது.) இதில் உள் ஒதுக்கீடுகளும் உண்டு. தமிழ் பார்ப்பனர்கள் இங்கிருந்து 15,16 நூற்றாண்டுகளில் புறப்பட்டவர்கள். கேரளத்தின் புறவாசல் இரண்டிலும் வாழ்கிறார்கள். திருவனந்தபுரம், பாலக்காடு, திருச்சூரில் கொஞ்சமுண்டு. இன்றைக்கு வரை மலையாள சமூகம் அவர்களை உள் வாங்கவில்லை. கேரளத்தில் இவர்களை விளிக்கப் பயன்படுத்தும் சொல் ”தமிழ் பட்டர்கள்”. வீட்டில் தமிழும், வெளியில் மலையாளமும் பேசுவார்கள். (ஜெயராமைக் கூட தமிழ் பட்டர் என்றே சொல்கிறார்கள்.) இவர்களை மலையாள சினிமா சித்தரிக்கும் விதம் வழக்கமான தமிழர்களிடமிருந்து சற்று வேறுபட்டது. தமிழ் பட்டர்கள் அறிவாளிகள் நிரம்ப கல்வியறிவு பெற்றவர்கள் ஆடிட்டர்கள், அதிகாரிகள் என்று சித்தரிக்கும் மலையாள சினிமா அவர்களை பெரும் கோழைகள் பணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்றே தமிழ் பட்டர்களின் பாத்திரங்களை வடிவமைக்கும்.
 
தமிழ் சினிமாவின் சகல தளங்களிலும் மலையாளிகள் கோலோச்சுகிறார்கள். அவர்கள் கதாநாயகர்களாகநடிக்கும் பட்டியல் அறுபதுவருட நீளமுடையது. எம்.ஜி.ஆர்,நம்பியார்,பாலாஜி, பிரேம்நசீர், சங்கர் (ஒரு தலைராகம்), ராஜிவ், விஜயன், ரகுவரன், பிரதாப் போத்தன், தீபன்(முதல் மரியாதை),  ரகுமான், கரண், வினித், ஜெயராம், அஜித்,பரத்,நரேன்,அஜ்மல் (அஞ்சாதே), பிரித்வ்ராஜ், ஆரியா மேலும் மம்மூட்டி, மோகன்லாலை நாடே அறியும். நடிகைகளின் பட்டியல் நான் சொல்ல வேண்டியதே இல்லை. தமிழ் சினிமா உருவாகுவதற்கு முன்பே அவர்கள் வந்து விட்டனர். தொழில் நுட்பக்கலைஞர்கள், பாடகர், பாடகிகள் என பெரும் திரள் இங்குண்டு. எம்.எஸ்.விஸ்வநாதன் (மனையமங்கல சுப்பிரமணிய விஸ்வநாதன்) மலையாளி என்று நிறைய சினிமா துறையினருக்கே தெரியாது.அவரது சந்தன குங்குமப் பொட்டை பார்த்து காரைக்குடி பக்கம் என்றே கருதிக் கொண்டிருக்கிறார்கள்.

மலையாள சினிமாவில் ஒரு தமிழரைக் கூட காட்ட முடியாது. இதுவரை மலையாள சினிமாவில் தோன்றிய தமிழ் முகங்கள் அத்தனையும் தமிழ் தெலுங்கு பார்ப்பன முகங்களே. கமல்ஹாசன், லக்ஷ்மி, ஸ்ரீ வித்யா, மேனகா, சுஹாசினி, பூர்ணிமா ஜெயராம், ஒய்.ஜி.மகேந்திரன் என அத்தனையும் அவாளே. மீனா, தேவயானி,கனிகா போன்றவர்கள் சமீப மலையாள சினிமாவில் அதிகம் தென்படுகிறார்கள். இவர்களில் மீனா,தேவயானி பகுதி மலையாளிகள் என்றும், கனிகா தமிழ் பார்ப்பனர் என்றும் செய்தி உண்டு. தமிழ் பார்ப்பனர் அல்லாத ஒருவருக்குக் கூட அவர்கள் வாய்ப்பளித்ததில்லை. பழசிராஜாவில் குதிரை மேல் கண்ணை உருட்டிக் கொண்டு வரும் சரத்குமார் எல்லாம்  படம் தமிழ்நாட்டில் விற்பதற்கான சேட்டன்களின் வியாபார உத்தி.
 
எனக்குத் தெரிந்து மலையாளப் படம் இயக்கச் சென்ற இயக்குநர் பாலு மகேந்திராதான். 81 ல் ஓளங்கள், 83 ல் யாத்திரா (ஒருவேளை அவர் பேசும் ஈழத் தமிழை மலையாளம் என்று கருதி விட்டார்களோ என்னவோ)அதன்பின் மணிரத்னம் “உனரு” 1982 ல் ஒரு படத்தை இயக்கினார். அதன் பின் இந்த இருபத்தேழு வருடத்தில் எந்தவொரு தமிழ் இயக்குநரும் மலையாளப் படத்தை இயக்கவில்லை. கமலஹாசன் 90 ல் சாணக்கியன் திரைப்படத்தோடு கதாநாயகனாக விடைபெற்றார். அதன் பின் இந்த இருபது வருடத்தில் எந்த தமிழ் கதாநாயகனும் நடித்ததில்லை. ஒளிப்பதிவாளர்கள் ஜீவா, கே.வி.ஆனந்த்,படத்தொகுப்பாளர் பூமிநாதன் போன்றோர் அவ்வப்போது மலையாளத் திரையில் தென்படுவதுண்டு. பெரும்பாலும் ஸ்டண்ட் மாஸ்டர்கள் தமிழர்கள்தான். பாத்திரங்களாக மட்டுமல்ல சண்டைக் காட்சிகளிலும் தமிழர்களே அடிவாங்குகிறார்கள்.
 
இளையராஜா மாத்திரம் இப்போது அங்கே வலம் வருகிறார். இளையராஜாவின் புகழ்மிக்க காலத்தில் அவர்கள் அழைக்கவில்லை. அவர் தமிழில் ’சோர்ந்திருக்கும்’ காலத்தில் பயன்படுத்திக் கொள்கிறார்கள். பழசிராஜா படத்தில் அவரது இசை கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது. அந்த மண்ணின் மணம் இளையராஜாவுக்குத் தெரியாது என்றார்கள். பழசிராஜா படத்திற்கான மாநில அரசு விருதுப் பட்டியலில் இளையராஜாவின் பெயர் கிடையாது.
 
அப்படியே தோசையை திருப்பிப் போட்டோமென்றால் தமிழ் சினிமாவில் இதுவரை எவ்வளவு மலையாள இயக்குநர்கள். ராமூ கரியாட் தொடங்கி சேது மாதவன், ஐ.வி.சசி, பிரதாப் போத்தன், பரதன், பாசில், வினயன், கமல், ரஃபி மெக்கார்டின், சித்திக், பிரியதர்ஷன்,லோகிதாஸ், ஷாஜி கைலாஷ், ராஜிவ் மேனன் என.
 
இந்த மலையாள இயக்குநர்களின் தமிழ் படங்கள் மிகவும் ஆய்வுக்குரியவை. பிரதான பாத்திரங்களைத் தவிர மற்ற பாத்திரங்களை முடிந்தவரை மலையாள நடிகர்களைக் கொண்டே நிரப்புவார்கள். உதாரணம் பாசில், பிரியதர்ஷன் படங்கள். பாசிலின் பூவிழி வாசலிலே படத்தில் சத்ய ராஜைத் தவிர ஏறக் குறைய எல்லோரும் மலையாள நடிகர்களே. ரகுவரன், கார்த்திகா, பாபு ஆண்டனி (உங்களுக்கு ஞாபகம் வரவில்லை எனில் விண்ணைத் தாண்டி வருவாயா ஜெஸியின் தந்தை), மணியம் பிள்ளை ராஜு, குழந்தை பாத்திரம் சுஜிதா (அது வாவா…. வாவா…. என்று மழலை மொழியில் அல்ல மலையாள மொழியிலேயே பேசும்). அந்த படத்தின் flash back ல் தோன்றி மறையும் கதாபாத்திரங்களில் வருவது கூட மலையாளிகளே. இதற்கு மேல் சொல்வதற்கு துணை நடிகர்கள் மாத்திரமே.

பூவே பூச்சூடவா வில் ’மதிப்பிற்குரிய மைலாப்பூர் எம்.எல்.ஏ எஸ்.வி.சேகர்’ தவிர எல்லோரும் மலையாளிகளே. பாசிலின் பெரும்பான்மையான படங்களில் நாயகனோ நாயகியோ மலையாளிகளாக இருப்பர்.

பிரியதர்ஷனின் லேசா லேசாவில் ஷாம், விவேக், ராதாரவி, மயில்சாமி தவிர எல்லோரும் மலையாளிகளே. அவரும் முடிந்தவரை மலையாள நடிகர்களையே பயன்படுத்துவார். முடியவில்லை எனில் தமிழில் இருக்கும் பிறமொழிக்காரர்களைப் பயன்படுத்துவது. சமீபத்திய பிரியதர்ஷனின் ’தமிழ் படமான’ காஞ்சிவரத்தில் பிரதான பாத்திரங்கள் பிரகாஷ் ராஜும், ஸ்ரேயா ரெட்டியும் தான்.

ராஜீவ் மேனனின் படங்கள் ஆபத்தானவை. மின்சாரக் கனவில் அரவிந்தசாமி, நாசரைத் தவிர  பிறமொழிக் காரர்களும், மலையாளிகளுமே. கஜோல், கிரீஷ் கர்னாட், பிரபுதேவா, எஸ்.பி.பாலசுப்பிரமணியன், பிரகாஷ் ராஜ்…..இது ஏ.வி.எம். பொன்விழா தயாரிப்பு என்பது மற்றுமொரு அபத்தம்.
அடுத்த படத்தில் ராஜீவ் மேனனுக்கு இன்னும் கூடிப் போய் முழுக்க முழுக்க தமிழர் அல்லாதவர்களை வைத்து எடுக்கப்பட்ட   திரைப்படம் ”கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்”. இதை மிஞ்சி இன்னும் ஒரு திரைப்படம் வரவில்லை. ஐஸ்வர்யா ராய், தபு, மம்மூட்டி (இவர் இந்திய ராணுவத்தின் ”அமைதிப் படை”யில் இலங்கை சென்று காலை இழந்தவர்.) அஜித், அப்பாஸ், ரகுவரன், அனிதாரத்னம், ஸ்ரீவித்யா என. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ம.தி.மு.க வின் கலைப்புலி எஸ்.தாணு. ராஜீவ் மேனனால் இந்திய அமைதிப்படையில் காலை இழந்தவரை நாயகனாக்கித் தமிழ் படம் எடுக்க முடிகிறது. சரி…. ’ராஜீவ்’ – ’மேனன்’ என்று பெயர் கொண்டவர் வேறு எப்படி படம் எடுப்பார்…?

ஏறக்குறைய மற்ற மலையாள இயக்குநர்களும் இதே முறையை பின்பற்றுகின்றனர். முடிந்தவரை மலையாள நடிகர்கள், நடிகைகள் அல்லது தமிழில் இருக்கும் பிற மொழிக் காரர்கள், வேறு வழியே இல்லையெனில் தமிழ் நடிகர்கள்.

சமீபத்தில் நாராயணகுருவின் வாழ்க்கை வரலாறு யுவபுருஷன் என்ற பெயரில் மலையாளத்தில் திரைப்படமாக்கப்பட்டது. மம்முட்டி ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க தலைவாசல் விஜய் நராயணகுருவாக நடித்தார். முக ஒற்றுமைக்காக அவருக்கு அந்த வாய்ப்பு கிட்டியது என்று சொல்லப்பட்டது. சொல்லாதது இனப்பற்று காரணமாக கிட்டியது என்பதே. எத்தனை தூரத்தில் இருந்தாலும் தம்மவர்களை அடையாளம் கண்டு அழைத்துப் போவார்கள் மலையாளிகள்.

அஜீத்தின் படங்களை கவனித்துப் பாருங்கள். திரைப்படத்தில் அவர் ஏதேனும் ஒரு அறையைத் திறந்தால் அங்கே ஒரு மலையாள நடிகர் இருப்பார். இன்றைக்கு நடித்துக் கொண்டிருக்கும் மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்ட நாயகர்களில் அஜீத் ஆதிக்கம் செலுத்தக் கூடிய நிலையில் இருப்பவர். எனவே சகட்டுமேனிக்கு அவர் படத்தில் மலையாள நடிகர் நடிகைகள். தீரமிக்க அண்ணன் அவருக்கு தீனாவில் தேவைப்பட்ட பொழுது சோதரர் சுரேஷ் கோபியே அவருக்கு உதவினார்.
 
இதற்கு நடுவேதான் கெளதம்மேனனும் மலையாளிகளுக்காக தன் பங்கிற்கு கிடார் இசைத்துக் கொண்டிருக்கிறார். என்ன இருந்தாலும் அவர் ஸ்கூல் ஆப் ராஜீவ்மேனன் அல்லவா. இவரின் முக்கிய பங்களிப்பு மலையாள கதாபாத்திரங்களை உருவாக்கி, அவர்களை சென்னையில் உலவ விட்டு தமிழ் படம் எடுப்பது. வாரணம் ஆயிரத்தில் சகல பாத்திரங்களும் மலையாளிகளே. விண்ணைத் தாண்டி வருவாயாவில் மலையாள ஜெசியை துரத்தித் துரத்திக் காதலித்து தோற்றுப் போகிறார் தமிழ் கார்த்திக். அவர் கெளதமாக இருந்த பொழுது மின்னலேயும், காக்க காக்கவும் தந்தவர் கெளதம் வாசுதேவ மேனனாகிய பின் ”தான் முன் வைக்கும் மலையாள அடையாளங்கள்” என்கிறார் தன் பாத்திரங்களைப் போலவே ஆங்கிலத்தில்.
 
சரி கேரளத்துக்குத் திரும்புவோம். சேரனின் ஆட்டோகிராப் கோட்டயத்தில் வெளியான போது அதில் சேரன் மலையாளிகளை அடிக்கும் காட்சி நீக்கப்பட்டது. பாலாவின நான் கடவுள் படத்தில் மலையாளிகளை அடிக்கும் காட்சியில் பெரும் கூச்சல் கோட்டயம் திரையரங்கத்தில்.
 
”பாண்டி…” என்றே மலையாள சமூகமும், சினிமாவும் தமிழர்களை எப்போதும் விளிக்கிறது. ஏறக்குறைய 16,17 ம் நூற்றாண்டு வரை பாண்டியர்களுக்கும் சேரர்களுக்கும் யுத்தம் நடந்திருக்கிறது. சேர மன்னர்களோடு சமீப நூற்றாண்டு வரை போரிட்ட தமிழ் மன்னர்கள் பாண்டியர்கள் மட்டுமே. அந்த வரலாற்றுக் காழ்ப்புணர்வின் அடிப்படையில் பாண்டியன் என்ற சொல்லின் ’அன்’  நீக்கி பாண்டி என்று இகழ்ச்சியோடு விளிக்கிறார்கள்.
 
இந்தப் பாண்டிகளின் தலைநகரில் தான் மலையாள் நடிக. நடிகைகள், இயக்குநர்கள் பெரும்பான்மையினர் வசிக்கின்றனர். மோகன்லால் நடிகர் பாலாஜியின் வீட்டு மருமகன். மம்முட்டி இங்கு வந்து பல வருடம் ஆகிறது. ஜெயராமின் தாக்கப்பட்ட வீடு பல வருடமாக இங்கேதான் இருக்கிறது. ஏ.வி.எம்,லும், பிரசாத்திலும் அவர்களின் சூட்டிங் நடக்கிறது. தமிழ்நாடு மலையாள சமாஜம் லட்சக்கணக்கான உறுப்பினர்களோடு கோலகலமாய் ஓணம் கொண்டாடுகிறது. தமிழர்களோடுதான் ’வாழ்கின்றனர்’. ஒரு தமிழர்தான் அவர் வீட்டுக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்கிறார். ஒரு தமிழ் பெண்தான் வேலைக்காரியாக இருப்பார். அன்றாடம் தமிழர்களோடு புழங்குபவர்கள் தான் விடாது சொல்கிறார்கள் தமிழர்கள் திருடர்கள், கோழைகள், ஏமாற்றுக் காரர்கள் என்று.

தமிழர்களை இழிவுபடுத்தும் இந்தப் படங்கள் சென்னையிலும், கோவையிலும் வெளியாகின்றன. காம்ப்ளக்ஸ் திரையரங்குகளில் நம் தமிழ் சமூகம் வேறு படம் பார்த்துவிட்டு வெளியில் வர “ பாவம் இந்தப் பாண்டிகள் என்று ஏளனப் புன்னகையோடு கடந்து போகிறார்கள் பக்கத்துத் திரையரங்கத்திலிருந்து வெளிவரும் மலையாளிகள். கேரளத்தில் இது போன்ற ஒன்றை கற்பனை கூட  செய்ய முடியாது. திரையரங்கம் சூறையாடப்படும். ஒரு காட்சி அல்ல ஒரு ரீல் கூட ஓடாது.

தமிழ் படங்களில் மலையாளிகளை கேவலப்படுத்தவில்லையா என்று கேட்கலாம். தமிழ் சினிமாவில் நாயர் டீக்கடை என்பது கற்பனை நகைச்சுவை கடைதானே. உங்கள் மனதைத் தொட்டு சொல்லுங்கள். எந்த டீக்கடை நாயர் நம்மை பார்த்து சிரித்திருக்கிறார். மூன்றாம் தாரத்து பிள்ளைகளைப் போலத்தானே நம்மை நடத்துகிறார்கள். வெறுப்பை முகப் பரப்பெங்கும் தேக்கி வைத்திருக்கும் மாந்தர்களே கல்லாப் பெட்டியில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களின் விருந்தோம்பல் மனித நாகரீகத்துக்கு உட்பட்டதல்ல.
 
நல்ல மலையாளப் பாத்திரங்கள் தமிழில் உண்டு. கே.பாக்யராஜின் அந்த ஏழு நாட்கள் படத்தின் கதாநாயகன் மாதவன் பாலக்காட்டு மாதவன்தானே. இன்றைக்கும் பேசப்படும் பாத்திரம்தானே அது. மணிவண்ணன் பல படங்களில் நல்ல மலையாளியாக வலம் வருகிறார். ”அலைபாயுதே”யில் அழகம்பெருமாள் பாத்திரம், ”தினந்தோறும்” ல் கொச்சின் ஹனிபா பாத்திரம் இவையெல்லாம் தமிழ் சினிமா உருவாக்கிய, மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பாத்திரங்கள் தானே. இது போல் ஒன்றை காட்ட முடியுமா மலையாள சினிமா.

தமிழ் சினிமா நாணப்பட வேண்டிய இடமொன்று உண்டு. அது மலையாளப் பெண் பாத்திரம் உருவாகும் இடம். ஏறக்குறைய முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னால் அவர்கள் கைவிட்ட ஜாக்கெட் பாவாடையோடுதான் இன்றைக்கும் அவர்கள் ’சின்னக் கலைவாணர்’ விவேக்கு டீக் கொண்டு வருகிறார்கள். தமிழ் சினிமா உருவாக்கும் சித்திரத்திலிருந்து நம்மவர்கள் கேரளத்தில் ”அஞ்சரைக்குள்ள வண்டி”யும், ’சொப்பன சுந்தரிகளும்’ ’அடிமாடு’களூம் நிகழ்ந்து கொண்டிருப்பதாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள். மலையாள சினிமா என்றாலே பிட் படம் என்று கருதும் பெரும்பான்மை இங்குண்டு. அந்தப் பாவத்தில் பாதிதான் நமக்கு பங்கு. (மலையாளிகளே அதுபோன்ற படங்களை தயாரிக்கவும் செய்தார்கள். நடிகர் கொச்சின் ஹனிபாவே சில்க் ஸ்மிதாவை வைத்து பல படங்களைத் தயாரித்தவர்). கேரளப் பெண்கள் தமிழ் பெண்களை விட தைரியமாக பேசக் கூடியவர்கள். வாதிடக்கூடியவர்கள். அதனடிப்படையிலும் தமிழ் சினிமாவின் செல்வாக்கிலும் தமிழர்கள் மலையாளப் பெண்களைப் பற்றி உருவாக்கிக் கொண்ட கேவலமான மனச்சித்திரம் அது.

கெளரவமான மலையாள பெண் பாத்திரங்கள் தமிழ் சினிமாவில் நிச்சயம் உண்டு. ”கற்றது தமிழ்” பாத்திரமான பிரபாகரனின் அத்தனை பிரச்சினைகளும் டீக்கடை சேச்சியின் நியாயமான கோபத்திலிருந்தே துவங்குகிறது.

1985 முதல் 2010 வரை வெளிவந்துள்ள மலையாளப் படங்களில் தமிழர்களை இழிவுபடுத்தும் படங்களின் குறுகிய தொகுப்பு இது. (முழுமையான பட்டியல் வெகு நீளமானது)

1.   நாடோடிக் காற்று- மோகன்லால், சீனிவாசன் – பிரியதர்ஷன் 1985 ல்

2.   நியூடெல்லி – மம்முட்டி – ஜோஷி – 1986

3.   யுவ ஜனோற்ஷவம் – மோகன்லால் – 1987

4.  இது எங்க கத – முகேஷ் – விஸ்வாம்பரன் – 1983

5.   சித்ரம் - மோகன்லால் – பிரியதர்ஷன் – 1989

6.  நம்பர் 20 மெட்ராஸ் மெயில்- மோகன்லால், மம்முட்டி – ஜோஷி -1990

7.   முகுந்தேட்ட சுமித்ரா விளிக்குன்னு -  மோகன்லால் – பிரியதர்ஷன் – 1987

8.   வந்தனம் - மோகன்லால் – பிரியதர்ஷன் – 1991

9.  மிதுனம் - மோகன்லால் – பிரியதர்ஷன் – 1992

10. விஷ்ணு – மம்முட்டி -       - 1993

11.  கிலுக்கம் - மோகன்லால் – பிரியதர்ஷன் – 1992

12. பிங்காமி - மோகன்லால் – சிபிமலயில் – 1997

13. மழவில் காவடி – ஜெயராம் – 1990

14. காவடியாட்டம் – ஜெயராம் – 1990

15. ஐட்டம் –மோகன்லால் - 1985

16. மணிசித்ரதாழ் - மோகன்லால் – பிரியதர்ஷன் – 1994

17. வெறுதே ஒரு பாரியா – ஜெயராம் – 2008

18. நாலு பெண்கள் – அடூர் கோபால கிருஷ்ணன் – 2006

19. தாழ்வாரம் – பரதன் – 1987

20. அச்சுவிண்ட அம்மா – ஊர்வசி,நரேன் – சத்யன் அந்திக்காடு – 2005

21. மிஸ்டர் பிரமச்சாரி – மோகன்லால் – 2000

22. காருண்யம் – முரளி, ஜெயராம் – சிபிமலயில், லோகிதாஸ் – 1998

23. சேக்ஸ்பியர் M.A  இன் மலையாளம் – ஜெயசூர்யா – 2008

24. பிளாக் – மம்முட்டி – 2004

25. கருத்தபட்சிகள் – மம்முட்டி – கமல் – 2006

26. காழ்ச்சா – மம்முட்டி – பிளஸ்ஸி – 2004

27. தன்மாத்ர – மோகன்லால் – பிளஸ்ஸி – 2005

28. பளிங்கு - மம்முட்டி – பிளஸ்ஸி – 2006

29. கல்கத்தா டைம்ஸ் – திலீப் – பிளஸ்ஸி – 2007

30. பிரம்மரம் - மோகன்லால் – பிளஸ்ஸி – 2009

31. பாண்டிப்படா – திலீப், பிரகாஷ்ராஜ் – 2003

32. ஒரு மருவத்தூர் கனவு – சீனிவாசன் – 1999

33. நரன் – மோகன்லால் – 2005

34. தென்காசி பட்டணம் – சுரேஷ் கோபி – லால் – 2002

35. நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா – குஞ்சாக்க கோபன், பார்த்திபன் – சத்யன் அந்திக்காடு – 2001

36. ரச தந்திரம் – மோகன்லால், கோபி - சத்யன் அந்திக்காடு – 2005

37. ஹலோ – மோகன்லால் – ரஃபி மெக்காடின் – 2005

38. புலி வால் கல்யாணம் – ஜெயசூர்யா – 20002

39. மலையாளி மாமனுக்கு வணக்கம் – ஜெயராம், பிரபு – 2003

40.மழைத்துளி கிலுக்கம் – திலீப் – 2000

41. டிரீம்ஸ் – சுரேஷ் கோபி - 1998

42. மேலப் பரம்பில் ஆண் வீடு – ஜெயராம், முகேஷ் 2000

43. இன்னலே – சுரேஷ் கோபி – 1999

44.கேரள ஹவுஸ் உடன் விற்பனைக்கு – ஜெயசூர்யா – 2006

45. பெடக்கோழி கூவுன்ன நூற்றாண்டு – ஊர்வசி, ஜெகதி – 2001

46.ஏகேஜி – 2007

47. மேகம் – மம்முட்டி – பிரியதர்ஷன் – 1998

48. பகல் பூரம் – முகேஷ் – 2000

49.ஜனவரி ஒரு ஓர்மா – மோகன்லால் – 1992

50. யாத்ரக்காரர் ஸ்ரதிக்கு – சத்யன் அந்திக்காடு - 2003

இந்த ஆய்வை தொடர்ந்தால் நமக்கு துரோகம் இன்னும் தொகுப்பு தொகுப்பாக கிடைக்கும். மலையாள சினிமாவுக்கும் சிங்கள சினிமாவுக்கும் உள்ள தொடர்புகள் கவனிக்கப்பட வேண்டியது.எம் ஜி யார் குறித்த மலையாளிகளின் பெருமிதம் தனியே ஆராய்பட வேண்டியது. மோகன்லால் எம் ஜி யாரின் திவிர ரசிகராக வாமனபுர  பஸ் ரூட் என்ற படத்தில் நடித்தார் .தமிழுக்கு ஒருபொழுதும் வரமாட்டேன் என்றவர் மருதூர் கோபால ராமச்சந்தர் பாத்திரம் என்றவுடன் :இருவர்” ல் நடிக்க தமிழுக்கு வந்து விட்டார். M.G.R ன் விரிவாக்கம் அதுவே.. அவர் ராமசந்திரன் அல்ல ராமச்ந்தர் தன்னை தமிழ்படுத்திக் கொள்ளும் விதமாக சந்திரன். அப்பொழுது அவர் பூசிய தமிழ் அரிதாரம் 1987ல் மரிக்கும் வரை கலையவே இல்லை இன்னும்.1972ல் பெரியார் மலையாள  எதிர்ப்பு இயக்கம் அறிவித்த போது M.G.R அவரைச் சந்திக்கிறார். சந்திப்பின் விளைவு பெரியார் போராட்டத்தைக் கைவிடுகிறார் …….M.N.நம்பியாரின் முழுப்பெயர் நமக்கு யாருக்காவது தெரியுமா(மஞ்சேரி நாரயண நம்பியார்) ரகுவரன் இறந்தபொழுது தினத்தந்தி அவரை தமிழர் என்றே குறிப்பிட்டது. சூர்யா டீவி ரகுவரனின் பாரம்பரிய வீடு இருக்கும் பாலக்காடு காஞ்சரக்காட்டில் கேமிராவோடு காத்திருந்தது.

 நல்லவேளை நாம் மலையாளிகள் இல்லை. நம் வரலாற்றில் நாம் நிச்சயமாய் அடுத்த தேசிய இனத்திற்கு துரோகம் இழைத்தது இல்லை .மற்றவர்களே நுற்றாண்டுகளாய் நம்மை வஞ்சிக்கின்றனர். எல்லோர் கையிலும் நம் ரத்தம் படிந்திருக்கிறது.சேகுவாரா தேசமே நம்மை வஞ்சிக்கும் பொழுது சேட்டன்களின் தேசத்திடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.  நாம்?. நாம்தான் திராவிடர்கள் ஆச்சே தமிழர்கள் அல்லவே.
- சாம்ராஜ்
மலையாளிகளின் மற்றத் துரோகங்களைக் காண் இப்பிரிவிற்குச் செல்லவும்.
மலையாளிகளின் துரோகங்கள்
தோழர்கள் மலையாளத் தேசமான கேராளவில், அல்லது மலையாளிகளுடன் ஆன உறவில் ஏற்பட்ட வருத்தங்களை அவமானங்களை கசப்பான அனுபங்களைக் காட்சிக்கு அனுப்பலாம்.அளவில் எத்தகையதாகவும் அவை இருக்கலாம். மலையாளத்தில் மொழிபெயர்ப்பு செய்ய வல்லவர்கள் இருப்பின் எங்களோடு தொடர்பு கொள்ளவும்.இக்கட்டுரையை மற்ற தளங்களில் பிரசுரிக்கிற தோழர்கள் இத்தகவலையும் பிரசுரிக்க வேண்டுகிறோம். kaattchi@gmail.com http://www.kaattchi.blogspot.com/
75 comments:

ராம்ஜி_யாஹூ said...

hi

From your profile I remember that you plan to be a cinema director. my feel is that a film director should have extra ordinary broad mind, broad view, border less view.

to write blogs and to get hits, this kind of post may help but this kind of narrow mindedness would damage your cinema director ambition.

vettri said...

Very informative article. well written and reasonable questions and concerns raised. I have always wondered why the hell they need malayala singers for tamil movie songs... when there are so much singing talent in tamilnadu...

அ சொ said...

Malayaligalin throgangal...This is a very broad topic, can publish books like encylopedia with each letter in tamil as subject... Arun

கும்க்கி said...

விரிவான அலசல்..

கொஞ்ச நஞ்சமிருந்த சந்தேகங்களும் ஊர்ஜிதமாகிவிட்டது.

அவர்கள் அப்படித்தான்.

நாம் நமது கலாச்சாரத்தையும், ஒற்றுமை உணர்வையும் இழந்து வாழ்வென்றாலே பணம் சம்பாதிப்பது மட்டும்தான் என்ற வேகத்தில் சுயம் இழந்து பயணிக்கையில் இன ரீதியில் மிக கேவலமாக பார்க்கப்படுவதை தவிர்க்க இயலாது.

இதில் நமது அரசியலும் அன்றாட செய்திகளும் அவர்களுக்கு சொல்லிச்செல்லும் பார்வைகள் நம்மீது படிகையில் மிக கேவலமாகவேயிருக்கும்..

வாழ்கைத்தரமாகட்டும், சுற்றுச்சூழலாகட்டும், இயற்கையை அப்படியே வைத்திருக்கும் இயல்பாகட்டும் ராணுவம் உட்பட மத்திய அரசின் முக்கிய பதவிகளாகட்டும் அவர்களின் புத்தி சாதுர்யம் மெச்சதகுந்ததுதான்.

j c lan said...

உங்களுடைய பதிவிற்கு என் எதிர்ப்பும், ஆதரவும் சரி விகிதத்தில்..

என்னுடைய எதிர்ப்பு.... நீங்கள் மலையாள திரைப்படங்கள் பொள்ளாச்சி கவுண்டர்களையும்,உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, வருஷ நாட்டுக் கள்ளர்களையும் குறித்து அவதூறு செய்வதாக சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை...அந்த பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தும் அந்த ஜாதியை சார்ந்தவர்கள் குறித்து தமிழில் விமர்சன நோக்கில் திரை படம் எடுக்க இதுவரை ஆறாம் அறிவை முழுமையாய் பயன்படுத்த துணிந்த இயக்குனர் வரவில்லை அல்லது வர அனுமதிக்கப்படவில்லை..(பொள்ளாச்சி கவுண்டர் எச்சில் துப்ப வசதியாக கையில் குவளையோடு ஒருவர் எப்போதும் அருகில் நிற்கும் கேனதனத்தை பதிவு செய்ய கே.எஸ்.ரவி வகையறாக்களும், பெரிய தேவர் எழுந்தால் அமெரிக்க ஜனாதிபதி எழுந்தவுடன் எழும் பத்திரிக்கையாளர் கணக்காக சாப்பிட்டு கொண்டு இருப்பவர்கள் எல்லாம் எழும் காட்சிகளை பதிவு செய்ய எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் ஆஸ்கார் வாங்க போவாதாக சொல்லி கொண்டிருக்கும் கமல் போன்றவர்களும் இருகிறார்கள்..)இன்னிலையில் அந்த ஜாதியினரின் கோமாளித்தனங்கள் பற்றி மலையாளத்தில் படங்கள் வருவது எனக்கு மகிழ்ச்சியே...அவர்கள் மலையாளிகள் என்பதற்காக அவர்கள் எதிர்க்கும் எல்லோரையும் நாம் ஆதரிக்க வேண்டும் என்று இல்லை...உதாரனத்திற்க்கு உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் மீது ஒரு சீக்கியர் செருப்பெடுத்து அடித்த போது ஒரு தமிழரை சீக்கியர் தாக்கி விட்டார் என்று சிலர் கூச்சல் போட்டது போல..

என்னுடைய ஆதரவு கௌதம் வாசுதேவ் மேனன் குறித்த உங்கள் விமர்சனத்துக்கு...சமீப காலத்தில் என்னை பொறுத்தவரை மிக கூர்மையாகவும்,தீவிரமாகவும் கவனிக்க பட வேண்டியவராக எனக்கு "மேனன்" தோன்றுகிறார்.."காக்க காக்க" திரை படத்தில் "நாம எங்க போனாலும் அந்த இடத்துக்கு நாம யாருன்னு காட்டனும்..அந்த இடத்த ஒரு கலக்கு கலக்கணும்" என்று முரசு கொட்டி உள் நுழைந்த கௌதம்,தமிழ் சூழலில் முனை மழுங்கி,சாக்கடையாகி நிற்கும் சமுக அரசியல் சார்ந்த குளத்தில் ஒரு கலக்கு கலக்கி கொண்டு இருக்கிறார்....தமிழில் தன்னை பாதித்த இயக்குனர் யாரும் இல்லை என்றும்,தன்னால் மேல் தட்டு மக்களுக்கான திரை படங்களை மட்டுமே உருவாக்க முடியும் என்றும் பேட்டியளித்து கொண்டு இருக்கும் கௌதம் உன்மையில் "over rated " இயக்குனர் என்பது தான் என் கருத்து...

ஜோதிகா உட்காருவதற்கு dating அழைத்து சென்ற கமல் நாற்காலியை இழுத்து அமர செய்யும் காட்சியை எடுத்த,மேல் தட்டு மக்களுக்கான திரை படம் எடுப்பதாய் சொல்லி கொள்ளும் கௌதம் எதனால் "விண்ணை தாண்டி வருவாயா" திரை படத்தில் கார்த்திக் வீர குடி வெள்ளாளர் என்றும்,ஜெஸ்சி மலையாள கிறிஸ்டியன் என்றும் ஜாதி மத அடையாளத்தோடு அறிமுக படுத்துகிறார்? அஞ்சு அடி இருக்கும் மலையாளியான கௌதம் ஆழப்பியில் கார்த்தியின் நண்பராக வருபவர் "டே தம்பி எல்லோரும் ஆறு அடி இருக்காங்கடா" என்று மலையாளிகளின் உடல் வாகு குறித்து வியந்து பாராட்டுவதாக ஏன் வசனம் வைக்கிறார்? சென்னையில் கே.எப்.சி யில் கார்த்தியும்,ஜெஸியும் நிற்கும் போது பின்னல் நிற்பவர்களில் சீன,ஐரோப்பா பெண்கள் நிற்பதை காட்டி சென்னையை ஒரு "multicultural hot spot" என பொய்யாக காட்ட ஏன் அவருக்கு தோன்றியது?"பொம்பளைங்கள அடிக்க கூடாதுன்னு சொல்லி தரலயாட உங்க ஒம்மா" என்று வசனத்தில் ஆவேசம் காட்டிய கௌதமிற்கு, மேனன் என்பது ஒரு ஜாதியின் பெயர் என்று அவர் பெயரின் பின் அதை சேர்த்த பொழுது யாரும் சொல்லி தரவில்லையா? தமிழ் செம்மொழி மாநாட்டிற்கான பாடலை படமாக்க எந்த வகையில் தான் தகுதியானவன் என்று கௌதம் நினைத்து கொண்டு அந்த வாய்ப்பை ஏற்று கொண்டார்? கௌதமிற்கு ஏன் நிஜமான மனிதர்களையும்,அவர்களின் வாழ்விடங்களையும்,அவர்கள் உலவும் இடங்களையும் கான்பிக்க சங்கடமாக இருக்கிறது?

இவை எல்லாவற்றையும் விட கொடுமையானது தமிழ் மாந்தரின் வாழ்வியலே இல்லாத கௌதமின் திரை படங்கள் எப்படி தமிழ்நாட்டில் வெற்றியடைகிறது?

Mark K Maity said...

keep on writing...

Vijithan said...

தமிழ் பார்ப்பனர் என்று நீங்கள் குறிப்பிடுவது யாரை? கலப்பு திருமணத்தின் மூலம் வந்தவர்களா?

மன்னன் மகள் said...

நல்ல ஆராய்ச்சி செய்து எழுதப்பட்ட இடுகை. என்ன சொல்வது இந்த மலையாளிகளை பற்றி? எங்கு போனாலும் இந்த சலிகளின் தொல்லை தான். நாம் ஏன் இந்த கேடு கேட்டவர்களின் படங்களை பார்க்கணும். அது நம் தப்பு தானே?

விடுங்கள் பாஸ்...

இந்த "கெளதம் வாசு தேவ மேனனை" பற்றி சொன்னீர்களே அது சரியான லூசு தேவ மேனன். முதலில் தன்னை "கெளதம்" என்று, தமிழ் பெயர் போல் காட்டி அறிமுக படுத்தி கொண்டு, பின்னர் கெளதம் மேனன் என்று மெல்ல நுழைத்து, அதன் பின்னரே கெளதம் வாசு தேவ மேனன் என்று தன பெயரை மாற்றிக் கொண்டான். இவன் படங்களில் பெரும் பாழும் fuck you என்ற சொல் சர்வ சாதரணமாக இருக்கும். கேட்டால் அமெரிக்க கலசாரமம். என்னாங்கடா இது? அப்ப நமக்கு சொல்லறிவு, சுய அறிவு ஏதும் கிடையாதா? இதை எடுத்துக் கட்டிய உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட்!!!

KVR said...

என்னுடைய பலநாள் ஆதங்கத்தை அப்படியே வேறொருவர் கொட்டி இருப்பதைப் பார்க்கிறேன். மோகன்லாலில் ஒரே ஒரு படத்தில் சிவாஜிக்கு மரியாதையான தமிழர் வேடம் தந்திருப்பார். அதுவும் சிவாஜி என்ற பிரம்மாண்டமும் வியாபார உத்தியும் மட்டுமே காரணம். தமிழ்நாட்டிற்கு வரும்போது மட்டும் “நான் தமிழன்” என்று சொல்லிக்கொள்ளும் ஜெயராமில் இருந்து, நான் ரஜினியின் இன்ஸ்ட்டியூட் மேட் என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் சீனிவாசன் வரை எல்லோருமே தமிழர்களை அளவிட முடியாத அளவிற்குக் கேலி செய்தவர்களே. எனக்குச் சீனிவாசனை மிகவும் பிடிக்கும், ஆனால் அவர் என்றோ ஒரு காலத்தில் தமிழ்த் திரையுலகால் உதாசீனப்பட்டதற்குப் பழிவாங்கும் விதமாக இன்றும் தமிழர்களை மிக மட்டமாகச் சித்தரிப்பது எனக்குக் கொஞ்சமும் பிடிக்காத ஒன்று. நல்ல கட்டுரை சாம்ராஜ்

ரெட்டைவால் ' ஸ் said...

சாம்ராஜ்!

கலாசாரம் , மொழியிலிருந்து காய்கறி வரை அவர்கள் நம்மையே சார்ந்திருக்கிறார்கள். கேரளாவில் எந்த ஊரில் தமிழ்படம் ரிலீஸாகாமல் இருக்கிறது? அவர்கள் பெருவாரியாக கேட்பதும் பார்ப்பதும் தமிழ்ப் பாடல்களும் தமிழ்படங்களுமே...

சென்ற வாரம் கூட பிரைம் டைமில் சூர்யா டி.வியில் அன்னியன் படம் ஒளிபரப்பினார்கள். தமிழ்நாட்டில் எங்காவது மலையாளப்படம் திரையிடப்படுகிறதா சென்னையை தவிர!
அவர்கள் அரிப்புக்கு சொறிந்துகொள்வதை நாம் ஏன் இவ்வளவு விஸ்தாரமாக புரிந்து கொள்ள வேண்டும்?
நாமும் ஒன்றும் யோக்கியமில்லை...எத்தனை காலமாக மார்வாடிகளை பணத்தாசை பிடித்தவர்களாக காட்டியிருக்கிறோம்!ஒன்று கவனித்தீர்களா? கேரளாவில் தமிழ்ப்படங்களை டப் செய்து ஓட்ட வேண்டிய அவசியம் இல்லை.எல்லோரும் குறைந்தபட்சம் தமிழ் புரிந்துகொள்வார்கள்.தொடர்ந்து சினிமா பார்க்கும் எந்த மலையாளியும் உடைந்த தமிழாவது பேசுவான்.தமிழ்நாட்டில் எத்தனை பேருக்கு இன்னொரு பாஷை தெரியும்? நிஜவாழ்க்கையில் அவர்கள் காட்டும் காழ்ப்புணர்ச்சியை விட சினிமாவில் அப்படி ஒன்றும் காட்டுவதாக எனக்குத் தோன்றவில்லை!

கிரி said...

ஒரு வகையில் ராம்ஜி யாகூவின் கருத்தை நானும் வழி மொழிகிறேன்.

உங்கள் சினிமாப் பயணத்திற்கு வாழ்த்துக்கள். அதில் சிறக்க, நீங்கள் இது போல stuff களை குறைக்க வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்தும் கூட.

அவர்கள் உயர்ந்தவர்கள் நாம் குறைந்தவர்கள் என்னும் காலகாலமாக நமக்குப் புகட்டப் பட்ட ஏதோ ஒன்றே, நம்மை இது போல எழுதத் தூண்டுகிறதோ என்னவோ.

முண்டுகட்டிய பெண்கள், அவர்கள் குறித்த மூன்றாம் தர வசனங்கள், (உ.ம: பார்த்திபனின் சரிகமபதநீ "சேச்சி, ஒரு சிங்கிள்" என இரட்டை வசனம்), என அவர்ட்களிடமும் இருபத்தைந்து உதாரணங்கள் இருக்கக்கூடும். நாம் அவற்றைப் பார்க்கையில் மெய் மறந்து கைதட்டிக் கொண்டல்லவா இருக்கிறோம்.

மேலும் பார்ப்பனீயம் என்னும் வார்த்தையை இன்னமும் கட்டித்தொங்கும் கீழ் சூழலில நாம் இன்னமுமா இருக்கிறோம்?

ரெட்டைவால் ' ஸ் said...

ராம்ஜி_யாஹூ said...
hi

From your profile I remember that you plan to be a cinema director. my feel is that a film director should have extra ordinary broad mind, broad view, border less view.

to write blogs and to get hits, this kind of post may help but this kind of narrow mindedness would damage your cinema director ambition.

***********************************

Absolute Rubbish...Discuss something about the Post gentleman!

mraja1961 said...

அருமையான பதிவு எனது உள்ளக்குமுறலை அப்படியே பதிவு செய்துள்ளிர்கள். ஒன்றை குறிப்பிட மறந்துவிட்டிர்கள் அவர்களுக்கு ஆதாயம் என்றால் எதுவும் எதுவும் (எதுவும் என்பதற்கு அர்த்தம் நிரப்பிக்கொள்ளவும்) செய்வார்கள்.

மகாராஜா

சதீஷ் said...

நான் நினைத்தது அனைத்தையும் கொட்டி விட்டீர்கள். நன்றி

வளைகுடா நாடுகளில் அரபிகளைவிட அவர்களே அதிகம். எங்கு சென்று யாரை சந்தித்தாலும் “நிங்கள் மலையாளியா” என்றுதான் முதலில் கேட்பர். இந்தியாவின் மற்ற எந்த மாநிலத்தவரும் அவர்களுடன் நட்புறவு பேணுவது கிடையாது, தமிழனைத்தவிர (சகோதர மொழி பாசம்!!!).

இப்போதும் ஒரு ப்ளஸி (Direction) படம் மோகன்லால் கதாநாயகனாக நடித்ததில் சாராயக் கடையில் தமிழர் குரூப்புடன் சண்டை இடும் காட்சி உண்டு (தமிழன் அடிவாங்குவான்). இப்போதும் திலீப் படத்தின் வில்லன் (போலீஸ்) தமிழன். இங்கண ஒருபாடுண்டு.

இவர்களுக்கு பதிலடி கொடுக்க ஒரே ஒரு தமிழன் மட்டுமே இருந்தான் அவன் தான் விவேக். அவனையும் சேட்டனுங்க இந்த ஃபெப்ரவரி மாதம் சிறந்த காமெடியன்(Asianet) அவார்டு கொடுத்து ஆஃப் பண்ணிட்டனுங்க.

இப்பவும் தமிழ்நாட்டின் பல நகரங்களில் நகர மேம்பாட்டின் உதவி மலையாள சமாஜத்திற்கு உரியதாக உள்ளது (தெரு விளக்குகள் அவர்கள் உதவியதாக கல்வெட்டுகள் பதிந்துள்ளது).

தூத்துக்குடியில் கிறிஸ்தவ கோவில் திருவிழாக்களில் அவர்களுக்கென்று விசேச பூஜை மலையாளத்தில் நடைபெறுவதுண்டு.

இன ஒற்றுமை என்பது நாம் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று. அதில் அவர்கள் தமிழ்ப் பிராமணர்களை விட மேலானவர்கள்.

அவர்கள் என்ன செய்தாலும் சேட்டத்திகளுக்காக மன்னிக்கலாம் பாஸ்.....

சதீஷ் said...

கிரி //உங்கள் சினிமாப் பயணத்திற்கு வாழ்த்துக்கள். அதில் சிறக்க, நீங்கள் இது போல stuff களை குறைக்க வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்தும் கூட.//

இந்த மாதிரி பின்னூட்டம் இடுவதை நீங்கள் குறைக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து.

மலையாள சினிமாவில் இருப்பவர் தனது சினிமாவில் தமிழனை கேவலமாக சித்தரிக்கலாம். ஆனால் அதை தமிழ் சினிமாவில் இருப்பவர் வெளிக்கொணரக் கூடாதா?????
இவர் என்ன மலையாள சினிமாவிலா வாய்ப்பு தேடுகிறார்???

நாம் தமிழர் (www.naamtamilar.org) Please take a note...

தங்களது அடுத்த மலையாளிகளின் துரோகங்கள் படைப்பை எதிர்நோக்கியிருக்கும் மறத்தமிழன்.

Thameez said...

மிக அருமையான பதிவு .எம்.ஜி.ஆர். படம் எடுத்தவுடன் போட்டது உங்கள் தைரியத்தை காட்டியது. . நீங்கள் சொன்னது போல 80 களில் மலையாள சினமாவை போல வேறு எதுவும் இல்லவே இல்லை.! இன்னும் சில படங்களை சேர்த்து இருக்கலாம். குறிப்பாக பரதனின், ஆடூரின். எத்தனையோ முறை நான் மற்ற பத்திரிக்கைகளில் பதிவு செய்து இருக்கிறேன். ஏன் மலையாள நடிகர்களை நாடுகிறீர்கள்? இங்கே யாரும் இல்லையா? நடிகைகள் நீங்கள் சொல்லும் "அட்ஜஸ்ட்" தமிழ் பொண்ணுகள் பண்ணறது இல்லையா? சமீப காலமாக கொச்சி ஹனீபா எல்லா படத்திலும் கண்டிப்பாக இருந்தார்? ஏன்? ஆளு இல்லையென்றால் கண்டுபிடியுங்கள். இல்லையென்றால் நடிப்பு கல்லூரியில் கொண்டு வாருங்கள். அது அந்த காலம். இப்பொழுது அவர்கள் பேசும் தமிழை பார்க்கும் பொது அவர்கள் பூர்விகம் இங்கே தான் போல் இருக்கு என்று கருத வேண்டிய சூழல். ஆனால் யாரவது அவர் ஆளு வந்து விட்டால் தாங்க முடியாத நெகிழ்ச்சியில் தாய்மொழி வந்துவிடும். யாரு கண்டா, இன்னும் சில வருடங்களளில் சென்னை அவர்களுக்கு தான் என்று சொன்னாலும் சொல்வார்கள். இல்லை என்றல் ஷஷி தரூர் தான் இருக்கிறாரே ஒரு புதிய நம்பிக்கை நட்சத்திரம் அவர்கள்ளுக்கு.

அ சொ said...

@ரெட்டைவால் ' ஸ் , think you didnt read the post fully, samraj has clearly said...
//வெறிகொண்டு மலையாள சினிமா பார்க்கத் தொடங்கினேன். (நண்பர்கள் மதுரை மோகன்லால் ரசிகர் மன்றத்தின் தலைவன் நான் என்று என்னை கேலி செய்ததுண்டு.) // malayalam movies are screened theatres in madurai theatre....i have watched malayalam movies in madurai theatres).... check with ur frnds or relatives who wud study in engg colleges with malayalees, u wud get a loads of stories abt malayalees..

வடகரை வேலன் said...

Absolute nonsense. I have been hearing this kind of rubbish all my life. But no one including the cine stars oppose the invasion from them, particularly the heroines. Why the hell all tamils supporting nayan, bhavana, meera jasmine kinds?

do you people have the heart to say no to cinema that sports heroine from kerala? no you wont. because u see it as a movie and forget.

but sometimes someone like you spend a hell a lot of time to carryout a research and digout things like that.

have you ever had a self sustaining talent pool to make your own stuff? no. at one point or other you are dependent on them.

in fact it is a small state like a strip from north to south. but they are united and fight for their cause. they forget their partisans when it come to general interest. not only in cinema, in literature also tamil has no unity. there are lot of groupism and every one is for their individual interest.

take the case of state administration, there are cheif secretarty and IGs all of them or most of them are from kerala? how come? where have gone all your talents? working for a us firm or a uk firm? why? govt anounances leave for onam in tamilnadu at cbe and kanyakumari districts? why?

U accepted a malayali as your chief minister. why, was there no one intelligent than he? or was there no one charming than him? there was sivaji parallel in existence. but why tamils ignored him and made him the chief minister. When a malayali is a chief minister for a tamil state that it abiviouly means that and also is evident that we are inferior to them. is not it? MK has more experience and talent than MGR then why he was not able to oppose him and replace him? he was made to wait till his death?

no one opposed MGR to be chief ministed in fact he had a vote bank more than 30%.

this kind of article may help you to express your helplessness. nothing else.

Not only that all malayali girls learns tamil faster than malayali gents. but tell me how many of tamils posted in kerala learns tamil as quick as them?

this kind of killing istinct is not there with us and we always find happiness in our old history and ride on them.

it is the survival of the fittest. you may have been better than them. no doubt. but your days are over. and they have overtaken us

வடகரை வேலன் said...

Absolute nonsense. I have been hearing this kind of rubbish all my life. But no one including the cine stars oppose the invasion from them, particularly the heroines. Why the hell all tamils supporting nayan, bhavana, meera jasmine kinds?

do you people have the heart to say no to cinema that sports heroine from kerala? no you wont. because u see it as a movie and forget.

but sometimes someone like you spend a hell a lot of time to carryout a research and digout things like that.

have you ever had a self sustaining talent pool to make your own stuff? no. at one point or other you are dependent on them.

in fact it is a small state like a strip from north to south. but they are united and fight for their cause. they forget their partisans when it come to general interest. not only in cinema, in literature also tamil has no unity. there are lot of groupism and every one is for their individual interest.

take the case of state administration, there are cheif secretarty and IGs all of them or most of them are from kerala? how come? where have gone all your talents? working for a us firm or a uk firm? why? govt anounances leave for onam in tamilnadu at cbe and kanyakumari districts? why?

U accepted a malayali as your chief minister. why, was there no one intelligent than he? or was there no one charming than him? there was sivaji parallel in existence. but why tamils ignored him and made him the chief minister. When a malayali is a chief minister for a tamil state that it abiviouly means that and also is evident that we are inferior to them. is not it? MK has more experience and talent than MGR then why he was not able to oppose him and replace him? he was made to wait till his death?

no one opposed MGR to be chief minister in fact he had a vote bank more than 30%.

this kind of article may help you to express your helplessness. nothing else.

Not only that all malayali girls learns tamil faster than malayali gents. but tell me how many of tamils posted in kerala learns tamil as quick as them?

this kind of killing istinct is not there with us and we always find happiness in our old history and ride on them.

it is the survival of the fittest. you may have been better than them. no doubt. but your days are over. and they have overtaken us

ரெட்டைவால் ' ஸ் said...

அ சொ said...
@ரெட்டைவால் ' ஸ் , think you didnt read the post fully, samraj has clearly said...
//வெறிகொண்டு மலையாள சினிமா பார்க்கத் தொடங்கினேன். (நண்பர்கள் மதுரை மோகன்லால் ரசிகர் மன்றத்தின் தலைவன் நான் என்று என்னை கேலி செய்ததுண்டு.) // malayalam movies are screened theatres in madurai theatre....i have watched malayalam movies in madurai theatres).... check with ur frnds or relatives who wud study in engg colleges with malayalees, u wud get a loads of stories abt malayalees..
***********************************

நண்பரே..நானும் கேரளாவில் வசித்திருக்கிறேன்...அவர்களுடைய பிரச்சினை அவர்களுடைய மொழியின் , கலாசாரத்தின் பலம் சொற்ப நூற்றாண்டுகளே. அதில் அவர்களுக்கு சற்று தாழ்வு மனப்பான்மையும் உண்டு.மேலும் அவர்கள் நம்முடைய நீட்சியே. இதை எந்த மலையாளியும் ஒத்துக் கொள்வான்.'ழ'கர உச்சரிப்பின் மீதான விவாதத்தில் அவர்களுடன் சண்டையிட்டு சில நண்வ்பர்களை இழந்திருக்கிறேன். அவர்கள் என்னை பாண்டி என்று சீண்டிய போதெல்லாம் அவர்களை 'கஞ்சி' என்று கேவலப்படுத்தியிருக்கிறேன்.அதை நினைத்து நான் இப்போது வெட்கப் படவும் இல்லை சந்தோஷப் படவும் இல்லை.

அவர்கள் நம் அரசியலை அவதானிப்பதில் ஐந்து சதவீதம் கூட நாம் அவர்கள் அரசியலை கவனிப்பது இல்லை.இன்றைக்கு தமிழக குழந்தைகளிடம் கேரள முதல்வர் யாரெனக் கேளுங்கள்..ஒரு சதவீதம் கூட சரியான பதில் வராது.சேட்டன்களுக்கு கூட இன்னும் பட்டணம் என்றால் மெட்ராஸ் தான்! நாம் அவர்களை விட பல மடங்கு வியாபாரத்திலும் மற்ற துறைகளிலும் முன்னேறியிருக்கிறோம். அவர்கள் பொறாமைப் படும் தூரத்தில் இருக்கும் நாம் அவர்களின் வயித்தெரிச்சலைப் பொருட்படுத்த வேண்டுமா என்பதே என் கேள்வி!

செந்தழல் ரவி said...

நாராயண மேனன் கும்பல் பற்றி விரிவாக பகிர்ந்தமைக்கு நன்றி..

செந்தழல் ரவி said...

ராம்ஜி_யாஹூ said...
hi

From your profile I remember that you plan to be a cinema director. ////

நீங்கள் ராமையா சொல்கிறீர்கள் ? அல்லது சாம்ராஜையா ?

Dr.P.Kandaswamy said...

நல்ல பதிவு. ஆனால் அரசியலில் அவர்களுடைய அணுகு முறை வித்தியாசமானது. ஒரு மந்திரி ஒரு கூட்டத்துக்கு போனால் நூறு பேர் பின்னால் போவது அங்கு இல்லை. எங்கு போனாலும் பிழைத்துக்கொள்கிறார்கள்.

சிலோனில் கணிசமான அளவு மலயாளிகள் இருக்கிறார்கள். தமிழர்கள் மாதிரி வம்பில் மாட்டிக்கொள்கிறார்களா?

Ziya said...
This comment has been removed by the author.
Renga said...

You guys are not interested in "cinema". You guys are more interested in Politics / supporting political party leaders.

You guys are not really serious in making of cinema.

Particularly You & Seemaan are more interested in other issues than cinema.

You guys are more inclined to publishing you and interested to see your name in Daily News Paper.

All the above reasons you guys are not successful in cinema.

Those who are only concentrating in cinema (in any language) are very successful.

Go and concentrate and make some good cinema, 1 successful cinema is not enough to withstand in cinema.

Else, blame others and keep writing like this...

Note: If you are really serious in making of good cinema, you will treat this comment in positive manner...

Nisha said...

Good reasearch done,Honest article&100% truth!
Iam a malayalee who lives both in kerala and Tamilnadu.
This article had given me more broader view of Film world,I used to wonder why Goutham Menon always says stories of Malayalees in Tamil cinema,Now i got the answer...Thanx
I used to get suprised when all malayalam directors portraits tamilians as worst.
In my personal view point tamilians are much honest than malayalees
Iam really suprised to read some comments published for this article,blaming the columnist.I thought that all Tamilians will heartly welcome such a film critic,but suprisingly....negative comments are really rubbish,if it was in kerala then Samraj would have been 2days talk of the town.That actually shows that Tamilinas are still the same foolish people ready to accept things without any proper research and analysis ,Thats why even know malayalees are taking advantage.
Samraj I feel sorry for U,U had made a honest attempt to open eyes of Tamil Society,
BUT
THIS IS TAMILNADU!

maruthu said...

கண்ராவி காட்சி,

90 % தமிழர்கள் உன்னை மாதிரி வெறி பிடித்த பன்றிகளாக இருப்பதால் தான் தமிழன் என்றாலே கேவலமானவர்கள் என்று இளக்காரமாக ஏசுகிறார்கள்.

Vijithan said...

அருமையான பதிவு.சில தமிழ் பார்பன்னர்கள் இந்த பதிவை எதிர்கலாம்.
மின்சார கனவு படத்தில் பிரபுதேவாவும் ஒரு தமிழர் என்பது குறிப்பிட பட வில்லை.

பனங்காட்டான் said...

ரொம்ப நிதானமாக ஆழ்ந்து எழுதப் பட்டு இருக்கும் பதிவு. இந்தக் கொலையாளிகளப் பத்தி ஒரு தனிப் புத்தகமே போடலாங்கோ!

////Vijithan said... மின்சார கனவு படத்தில் பிரபுதேவாவும் ஒரு தமிழர் என்பது குறிப்பிட பட வில்லை.////

பாஸ் பிரபுதேவா தெலுங்குங்கோவ்!, டைரக்சன் பண்ண முடிவு பண்ணியதும் தெலுங்கில்தான் படம் எடுத்துக் கொண்டிருந்தார், அப்புறம் விஜய்தான் போக்கிரி ரீமேக்கிற்காக தமிழுக்கு அழைத்து வந்தார்.

கிருமி said...

தெளிவான, உண்மையான பதிவு. இந்த மல்லுக்கட்டு தீரவே தீராது. இவர்களைத் திருத்தவே முடியாது. தமிழ் நாட்டில் இவர்களுக்கு தக்க பாடம் புகட்டினால் தான் ஒழுங்குபடுவார்கள்.

http://kirumi.wordpress.com/2010/01/26/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

நியோ said...

அன்பு சாம்ராஜ் அவர்களுக்கு !

தொடர்ந்து காத்திரமான படைப்புகளை மட்டுமே படைத்து வருவதற்கு நன்றிகள் !

யாத்திரை அற்றவனின் கவிதையும் , எழுத்தாளர் ஜோ டி குருஸ் பற்றிய கட்டுரையும் காட்சியில் நீங்கள் பகிர்ந்தனவற்றுள் எனது விருப்ப பதிவுகள்...

மலையாளிகளின் திரைத்துறை துரோகங்களை யாரும் மறுத்து விட முடியாத அளவுக்கு அனைத்தையும் தோலுரித்துக் காட்டுகிறது தங்களின் பதிவு ....

நேற்று படித்தது முதல் என்னுள் ஆடிய விடை தெரியாத கேள்வி பதிவின் கடைசி வரி...
" ...நாம்தான் திராவிடர்கள் ஆச்சே தமிழர்கள் அல்லவே... "

இன்று மாலை தமிழ் ஓவியா அவர்கள் " திராவிடர்-தமிழர் (2) " என்ற தலைப்பில் பதிவொன்றை இட்டிருக்கிறார் ; தங்களின் பார்வைக்கும் நண்பர்களின் பார்வைக்கும் அன்புடன் முன் வைக்கிறேன் ...
http://thamizhoviya.blogspot.com/2010/05/blog-post_23.html

நன்றிகள் சாம் !

சந்தோஷ் = Santhosh said...

செம மொக்கைத்தனமான தேவையில்லாத ஒரு ஆராய்ச்சி.. இன்னும் எத்துனை நாட்கள் தான் கூத்தாடிப்பயலுங்களை பத்தி பேசியே வாழ்க்கையை வீணாக்கிக்கொள்ள போறீங்க? போயி உருப்படுற வழிய பாருங்க.. நாம் இன்ன்றைக்கும் என்றைகும் அவர்களை விஞ்சியே இருக்கின்றோம்....

parava said...

அன்பு நண்பர் சாம்ராஜ் ,

தங்களின் மலையாள சினிமா ஆராய்ச்சி ஒரு இனவாத ஆராய்ச்சி போல் உள்ளது. அண்டை மாநில மக்களை பகடி செய்வது ஒரு உலக இயல்பு :. ஒவ்வொரு சாதியும் மற்ற சாதிகளை பற்றி இழிவு படுத்தும் பழமொழி வைத்து இருப்பது போல தான் . தமிழ் சினிமா துறை தென்னிந்தியாவின் பெரியதுறை என்பது தாங்கள் அறியாதது அல்ல. இதில் பிழைப்பு தேடி அண்டை மாநிலத்தார் வருவது இயல்பு தானே. தமிழனுக்கு என்ன தேவை இருக்கிறது .
இன்று இந்திக்கு சென்று இசை அமைக்கும் ரஹ்மான், படம் எடுக்கும் முருகதாஸ் வளர்ச்சி எல்லாம் தமிழ் சினிமா வரலாற்றில் தற்சயலாக நடந்துவிட்ட ஒன்றா என்ன.?
தென்னிந்தியாவில் பல்வேறு துறைகளில் தமிழகமே முன்னிலை வகுக்கிறது. பால் சக்காரியா தமிழர்களை பற்றி பொறாமைப்பட மலையாளிகளுக்கு என்னவெல்லாம் இருக்கிறது என்பதை பக்கம் பக்கமாக எழுதுகிறார்.

சென்னை தென்னிந்திய தலை நகராக இருக்கிறது. மலையாளிகள் படிப்பை மட்டும் மூலதனமாக கொண்டு வேலை வாய்ப்பு தேடி உலகை வளம் வரும் தேசிய இனம். அவர்களின் பொருளாதாரத்தை money order economy என்றே அழைக்கின்றனர். தங்களின் ஆராய்ச்சி வரலாறு அரசியல்-பொருளாதரத்தை இணைத்து இருந்தால் ஒப்பற்றதாக இருக்கும். நாயர் சிரித்து டீ போடவில்லை என்றெல்லாம் எழுதுவது டூ மச்.

தமிழகத்தில் சில அரசியல் வாதிகள் மலையாளிகள் கன்னடர்கள் தெலுங்கர்களை விரட்ட வேண்டும் , அவர்களே தங்கள் வளங்களை கொள்ளயிடுவதாக பரப்புகின்றனர். தேசிய இன ஒடுக்குமுறையே சிறுபான்மை மீதான சகிப்பு தன்மை இழந்து அவர்களே எதிரிகள் என்று காட்டுவது தான். ஆளும் கும்பலின் கொள்ளையை மறைக்கும் சேவை தான். ஈழத்தில், கேரளத்தில் கருநாடகத்தில் , ஆந்த்ராவில் தமிழன் தேசிய சிறுபான்மையாக மதிக்க பட வேண்டும் என்று நாம் விரும்பினால் நாம் தமிழகத்தில் அவர்களின் தேசிய உரிமையை மதிக்க வேண்டும்.
இந்த மாதிரி அரசியலுக்கு தங்களின் எழுத்து துணை பொய் விடுமோ என்ற கவலை படுகிறேன் . ஈழத்து துயரத்தின் வரலாற்று படிப்பினையாக நாம் தான் உலகில் எந்த சிறுபான்மை இனத்தின் மீதான உரிமைக்கு முதலில் போராடும் இனமாக இருக்க வேண்டும்.

தலைப்பில் தொடர்ந்து எழுதும் நிர்பந்தமில்லாமல் தலையாய பிரச்சனைகளை எழுதுங்கள் உங்கள் வசீகர மொழியில்.
அன்புடன்
பறவ.

ஆர்.அபிலாஷ் said...

நல்ல கட்டுரை சாம். ரொம்பவும் பிடித்திருந்தது. இயக்குனர் என்பதால் அரசியல் பேசக் கூடாது என்பதெல்லாம் பேத்தல்.மலையாளியை நம்பக் கூடாது என்று தமிழகத்தில் வசிக்கும் மலையாளிகளே என்னிடம் அறிவுரை பகிர்ந்துள்ளார்கள். மலையாளிகள் அவர்களது கலாச்சார நுண்ணுணர்வு குறித்து சிறிது பெருமைப்பட்டுக் கொள்ளலாம். கம்யூனிஸ மறுமலர்ச்சியால் தான் ஒரு காலத்தில் அதுவும் நடந்தது. மற்றபடி கேரளர்கள் ஒரு சமூகமாக ரொம்பவும் தேங்கி விட்டார்கள். கௌதம் மேனனின் அரசியல் பற்றி நான் உயிர்மையில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதன் இணைப்பு: http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=565

ஆர்.அபிலாஷ் said...

கடைசியாக
ஈழத்தமிழரை கைவிட்டது தமிழனின் துரோகமில்லையா?

ரெட்டைவால் ' ஸ் said...

parava said...
கேரளத்தில் கருநாடகத்தில் , ஆந்த்ராவில் தமிழன் தேசிய சிறுபான்மையாக மதிக்க பட வேண்டும் என்று நாம் விரும்பினால் நாம் தமிழகத்தில் அவர்களின் தேசிய உரிமையை மதிக்க வேண்டும்
***********************************
இதையே தான் நானும் சொல்ல வந்தேன்! மலையாள சினிமாவின் தமிழர் குறித்த பகடிகள் அவர்களுடைய தேக்கத்தைத் தாங்கிக்கொள்ள முடியாத வயிற்றெரிச்சலின் வெளிப்பாடாகவே தோன்றுகிறது.அவர்கள் என்ன முட்டி மோதினாலும் நம்முடைய உயரத்தைத் தொடவே முடியாது. அவர்கள் தங்கள் அடையாளத்தையும் தொலைத்துவிட்டு தமிழ் சினிமா போலவும் எடுக்க முடியாமல் நடுவில் நின்று திணறுவது உங்களுக்கும் தெரிந்திருக்கும்!
நம்மவர்கள் மலையாள சினிமாவில் நடிக்காமலே தமிழ்ப்படங்களை வைத்தே அவர்களை விஞ்சி விடுகிறார்களே,,இதை விட அவர்களுக்கு வேறென்ன செருப்படி வேண்டும்!நம் மேல் வெறுப்பு வைத்திருந்தாலும் தமிழக உதவி இல்லாமல் அவர்களால் மாட்டுக்கறி கூட சாப்பிட முடியாதென்பதே உண்மை.
சூரியனைப் பார்த்து நாய் குலைத்தால் நாய்க்குத்தான் நஷ்டம்...நமக்கில்லையே!

அழிவு வேலைக்காரன் said...

//நாம்தான் திராவிடர்கள் ஆச்சே தமிழர்கள் அல்லவே.- //

நாம் திராவிடர்கள் தான். ஆனால் அவர்கள் சேரநாட்டுத் தமிழர்கள் ஆச்சே? இது தமிழர்களுக்கு இடையே நடக்கும் பங்காளிச்சண்டை. தமிழ் பேசுபவன் எல்லாம் தமிழன் என்றால் நீங்கள் போட்ட பட்டியலில் உள்ளவர்களில் பார்ப்பன நம்பூதிரிகளையும் அவர்களுக்குப் பிறந்த நாயர்கள் சிலரையும் தவிர மற்றவர்கள் வீட்டிலும் வெளியிலும் தமிழ் மட்டுமே பேசுபவர்கள்தான். தமிழ் பேசுவதால் மட்டுமே ஒருவன் தமிழனாகிவிட முடியாது. கேரளாவில் பிறந்ததாலேயே அவர்கள் திராவிடர்கள் ஆக முடியாது. திராவிடர் என்பது ஒரு பார்ப்பன எதிர்ப்புச் சொல். தேவையில்லாமல் குழப்ப வேண்டாம்.

மலையாளியாவது ஒரு படம் எடுத்தோ ஒரு டீக்கடை வைத்தோ அரசு சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட நிதிநிறுவனங்களை வைத்தோ பொருள் ஈட்டுகிறான். ஆனால் தமிழன் கேரளாவில் கிராமம் கிராமமாக சந்து பொந்து மலை முகடுகள் எல்லாம் சென்று கந்துவட்டி, மீட்டர் வட்டி, கரண்ட் வட்டி என சட்ட விரோதமாகத் தொழில் செய்து ஒட்டுமொத்தக் கேரளாவையும் சுரண்டிக் கொளுத்துக் கொண்டிருக்கிறான். இந்தக் கந்துவட்டிக் கும்பலை சினிமாவில் எப்படி மரியாதையாகக் காட்டுவான் மலையாளி?

அவன் நாட்டில் ஆற்றுமணலும், காட்டுமரங்களும் பாதுகாப்பாக பத்திரமாக இருக்கின்றன. அங்க வீடுகட்ட தமிழ்நாட்டு ஆற்று மணலையும், தமிழ் நாட்டு பலா மரங்களையும், தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் போடப்படும் 1 ருபாய் அரிசியையும் திருட்டுத்தனமாக மலையாளிக்கு கடத்தி விற்று துரோகத்தில் வாழ்க்கை நடத்துகிறானே தமிழ்ன். இந்தத் தமிழனை எப்படி மரியாதையாகக் காட்டுவான் மலையாளி?

அழிவு வேலைக்காரன் said...

தமிழ்நாட்டில் தமிழன் தமிழ்நாட்டுக்காரன் என்ற பெயரில் தமிழர்களை ஏய்த்துப் பிழைக்கும் பார்ப்பனர்கள் பட்டியலைப் போடத்தயாரா?

ஈழச்சிக்கல் கனன்று கொண்டிருந்த காலத்தில் தனது புன்னகை மன்னன் படத்தில் சிங்களப் பெண் பாத்திரத்தில் கதாநாயகியை நடிக்க வைத்த திமிர் பிடித்த பாலச்சந்தர் தமிழனா? அதில் அந்த நேரததில் நடித்த கமலகாசன் தமிழனா?

இன்றுவரை தமிழர்களை கொச்சையான பாத்திரங்களிலும் மலையாளிகள் ஆந்திரர்கள் வடநாட்டுக்காரர்களை கௌரவமான பாத்திரங்களிலும் நடிக்கவைத்துக்கொண்டிருக்கும் மணிரத்னம் தமிழனா?

மாதவன், அரவிந்தசாமி , எஸ்.வி.சேகர், ஒய்.ஜி.மகேந்திரன்,சித்தார்த், சுஜாதா, வாலி, பி.சி.சிறீராம், ரவி.கே.சந்திரன், டெல்லி கணேஷ், லட்சுமி, அனு, சந்திரகாசன், சுகாசினி, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இப்படி ஒரு பெரும் கொள்ளைக் கூட்டப் பட்டியலே இருக்கிறதே. இந்தப் பார்ப்பனர் பட்டிலை கவனமாக மறைத்துவிட்டு சக தேசியஇனத்தை பட்டியலிடுவது ஏன்?

இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய இனங்களுக்கும் ஒட்டுமொத்த எதிரியான பார்ப்பானை கவனமாக ஒதுக்கிவிட்டு அவனுக்கு எதிர்ப்பான திராவிடர் என்ற சொல்லையும் கொச்சைப்படுத்தும் உங்கள் அணுகுமுறை மிகத் தவறானது. ஒரு வேளை நீங்கள் பார்ப்பனாக இருந்தால் அல்லது பார்ர்ப்பனதாசனாக இருந்தால் இது சரியான அணுகுமுறைதான். உங்கள் இனம் வாழ நீங்கள் உழைக்கிறீர்கள். சரியானதுதான்.

manam said...

நான் இதுவரை பார்த்த ப்ளாக் எல்லாம் இந்தியா என்ற நாட்டில் இல்லாமல் தனி தமிழ் உலகத்தில் இருப்பது போலவே இருக்கிறது. வாழ்க ஜனநாயகம்.

ரௌத்திரம் said...

வணக்கம் அய்யா.


வெளுத்ததெல்லாம் பாலுன்னு நெனச்சிக்கிட்டுருந்தேன் சார்.
இவிங்க நம்மள இவ்வளவு கேவலமா காட்டிருக்காங்களே சார்.
இதல்லாம் நம்ம ஆளுங்களுக்கு தெரியாதா சார்?


DR.p.kanthasami அவர்களுக்கு சிலோன் மலையாளிகளுக்குதான் புளைக்கபோன போன இடம். தமிழர்களுக்கு அது பூர்வீக இடம்.
இது தெரியாதோ உங்களுக்கு .

- ஆமையடி அ.மகேஷ்

ம.பொன்ராஜ் said...

'அழிவு வேலைக்காரனின்' கருத்தினை(யும்) ஆமோதிக்கிறேன்.

Laxman said...

இனமான சகோதரர் திரு ராம் மற்றும் திரு சாம்ராஜ் அவர்களுக்கு,

தங்களின் சமீபத்திய இந்த பதிவு அனைத்து உணர்வாளர்களின் உள்ளக்குமுறல்களாகவே வெளிப்பட்டது.... இங்கு உங்கள் கருத்துக்கு எதிராக தங்கள் கருத்துக்களை பதிவு செய்த நண்பர்களை கோவை, ஊட்டி, ஈரோடு, பொள்ளாச்சி, போன்ற தமிழக நகரங்களை ஒருமுறை சென்று பார்த்துவிட்டு வரச்சொல்லுங்கள்... அப்படியே கேரளா பக்கமும் சென்று வரச்சொல்லுங்கள்... அப்பொழுது அவர்களுக்கு புலப்படும் மலையாளிகளின் ஆதிக்கம்... அவர்கள் நாட்டு பள்ளிகளில் மலையாளம் பத்தாம் வகுப்பு வரை கட்டாய மொழி ஆனால் தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு வரை நம் தமிழை கட்டாய பாடமாக்க இடையூறாக இருப்பவர்களே இவர்கள்தாம்...

தமிழ்த்திரையுலகில் மலையாள நடிகர், நடிகை, தொழில் நுட்பக்கலைஞர்கள், பாடகர், பாடகிகள் நுழைந்து பிரபலமாக ஏதோ தந்திரங்களையோ நுட்பங்களையோ கையாளுகின்றனர்... நம் இசைஞானியால் அறிமுகம் செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட அநேக குரலுக்கு சொந்தக்காரர்கள் மலையாளிகளே...

தொழில் தொடங்க முதலீடு செய்வது போல இவர்களும் அறிமுகப்படுத்துபவர்களுக்கு அன்பளிப்போ, பரிசோ, பரிசு சார்ந்த அபரீத ஒத்துழைப்போ அளிக்கின்றனர்... உதாரணம் சொல்கிறேன்... "ஒருதலைராகம்" படம் தயாரித்த தயாரிப்பாளர் இ.எம்.இப்ராஹிம் சாதாரண படத்தயாரிப்பாளர்.. நடிகர் சங்கர் அவர் படத்தயாரிப்புக்கு பண உதவி செய்து நடிகராயிருக்கிறார், பின்பு அவரை "கோயில்புறா" படம் மூலம் நிலைநிறுத்த பாடுபட்ட இயக்குனர் கே.விஜயனும் ஒரு மலையாளியே.... மயிலை குஞ்சிரபாதம் தயாரித்த "இரயில் பயணங்களில்" நடித்த ஸ்ரீநாத்தின் நிலையும் இதேதான்... தே.விஜயராஜேந்தர், பாரதிராஜா போன்றோர் அறிமுகப்படுத்திய புதுமுகங்களை நினைவுகூர்ந்தால் இந்த உண்மை நமக்கு புலப்படும்...

நீங்கள் பட்டியலிட்டதில் விடுபட்டவர்கள்; எம்.கிருஷ்ணன் (இவர் இயக்கிய தமிழ்படங்கள் : அன்னமிட்ட கை, நான் ஏன் பிறந்தேன், ரிக்ஷாக்காரன்), பாலசந்திர மேனன் (படம்- தாய்க்கு ஒரு தாலாட்டு), எம்.எஸ்.கோபிநாத் (படம் - ராமன் பரசுராமன்), ஜோஷி (படம் - ஏர்போர்ட்), பவித்ரன் (வசந்தகால பறவைகள், சூரியன், இந்து), ராஜ்கபூர் (தாலாட்டு கேட்குதம்மா, சின்னஜமீன், சின்னபசங்க நாங்க, உத்தமராசா, ராமச்சந்திரா, சமஸ்தானம்,) இயக்குனர் பி.வாசு, சுரேஷ்கிருஷ்ணா, கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் ரவீந்தர் (சென்னை எல்டாம்ஸ் சாலையில் இவருக்கு அடுக்குமாடி குடியிருப்பே உள்ளது), நடிகர் சுரேஷ் (பன்னீர் புஷ்பங்கள்), சரிதாவின் கணவர் முகேஷ்...

திருவாளர் சித்தூர் முத்துவேல் தக்ஷிணாமூர்த்தி மட்டும் இடையூறுகள் செய்யாமல் அவர்தம் சித்து சித்துவிளையட்டுகளை அரங்கேற்றாமல் இருப்பின் இனமான சீமானின் நாம் தமிழர் இயக்கம் மூலம் தமிழக அரசியலிலும் தமிழுணர்விலும் பெரிய தாக்கம் ஏற்பட்டு நாற்பதாண்டு கால திராவிட ஆதிக்கம் முற்றுப்பெறும்.... அவர்தம்வசம் உள்ள ஊடகங்களின்மூலம் நயவஞ்சகர்கள் இப்போதே நாம் தமிழர் இயக்கம் மீது சாதிச்சாயம் பூசும் முயற்சிகளில் இறங்கிவிட்டனர்... இனமான உணவாலர்களே...! திராவிடர்களின் சதிகளையும் சூழ்ச்சிகளையும் முடியடித்து திராவிட மாயையை, அடிமைத்தனத்தை காந்திய அகிம்சை வழியில் விரட்டியடிப்போம்...

kumaar125 said...

It is very goods article. My congratulation to you.99.99% malayalis are having very bad image about Tamils. This article should be translated in English and Malayalam and circulated all over Kerala and among malayalis. In the Srilankan issue also Malaylli officials played key role in cursing Tamil. Malyali officials misleaded Soniya Ganidhi and Responsible for the ruthless massacre.

siva said...

எத்தனை காலம்தாங்க இப்படியே compare பண்ணி பண்ணி நம்ம உருப்படாம போறது, எதுக்கெடுத்தாலும் தமிழ், தமிழ்ன்னு சொல்லி சொல்லி, உயிரோடு இருந்த பல உயிர்கள கொன்னு குவிசுடானுங்க, எப்ப சாம்ராஜ் நீங்க உங்கள மனிதனா பார்பிங்க, அவன் அவன மலையாளியா பாக்கடுங்க, நீங்க நல்லவர்தான அறிவாளிதான, கொஞ்சம் ஞானம் உள்ளவர் தானே, துரோகம் செய்பவர்களை கீழே பார்க்கும் குணத்தை உங்களை போன்ற என்தாயின் பிள்ளைகள் எப்போது கற்றுகொல்வீர்? அவனுங்க நம் தாயின் தங்கியான நம் சித்தியின் பிள்ளைகள் தானே, நம் தாய் உண்ட மிச்சத்தை உண்டுதான அவர்கள் தாய் வளர்ந்தாள்...
சின்ன பிள்ளைங்க எப்போதும் தப்பு செய்வாங்க, நம்பதான் பெரியவங்களா நடந்துகோல்லனும் ?
நாய் குலைச்சா திரும்பவா குலைப்பிங்க ?
இல்ல தம்பி அடிச்சா திரும்ப அடிபிங்களா ?
விட்டுகொடுத்து வாழுவோமே, சரி விட்டுகொடுக்க வேண்டாம், கற்றுக்கொடுத்து வாழுவோமே ????
கற்றுக்கொடுக்க பொறுமை இல்லைனா, மன்னிச்சு விடுவோம்,
சில்லரைதனத்த எல்லாம் தமிழ் உணர்வுன்னு சொல்லி எங்களையும் சேர்த்து அசிங்கபடுதாதிங்க தோழர் / சகோதரர், நம்ப அம்மா கோவிச்சிக்க போரா உங்க கிட்ட சொல்லமாட்டா என்காதுல சொல்லுவா :)
காட்சில புலம்பல்களை கொஞ்சம் தவிர்க்கலாமா ????
புலம்பி புலம்பி தான் தமிழன் வீனாப்போறான், நான் உட்பட...
எதையாவத ஆரோக்கியாம செய்வோமா ???
தமிழ் தமிழ்னு கத்தி கூச்சல் போட்டு இளைய சமுதாயத்துக்கு தமிழ் மொழி மேல வெறுப்பு வர செய்துவிடாதீர்கள் !!!!
தமிழ இன்றைய சமுதாயத்திடம் கொண்டு சேர்ப்பது எப்படின்னு ஆராய்ச்சி செய்யுங்கள், எங்களுடன் பகிருங்கள்,
நல்ல தமிழ் படங்கள் எடுங்க, எனக்கு நல்ல தமிழ் படத்துல நடிக்கனும்னு ஆசையாத்தான் இருக்கு,வாடா தம்பி நல்ல படம் எடுக்கொறோம், நடிங்க, பங்கேற்றுக்கொல்லுங்கள், கற்றுக்கொள்ளுங்கள் என்று நீங்க எல்லாம் சொல்லுவீங்கன்னு காத்திட்டு இருக்கோம்....
நீங்க என்னடான்னா இப்படியே, தம்மும், தண்ணியும் அடிச்சுகிட்டு, புலம்பிகிட்டே இருந்தா
வெறும் வேட்டைகாரனும், சுராவும் தான் வரும், தமிழ் ஆர்வம் வளராது, குத்துப்பாட்டுதான் தமிழ் கலாச்சாரமாகிவிடும்....

சதீஷ் said...

ஒதுக்கப்பட்ட கெளதம் மேனன்!

http://www.sivajitv.com/news/gowtham-menon-neglected.htm

Vijithan said...

///பனங்காட்டான் said...///

http://www.nilacharal.com/enter/celeb/prabhudeva.asp

இந்த Link இற்கு போய் பாருங்களோ.பிரபு தேவா ஆர் எண்டு தெரியும்.

prabha said...

very true. Malayalee dominance is not prevalent in Tamil cinema industry alone. It's there, more particularly in the IT and English media industry in Tamil Nadu. Mallus dictate terms according to their whims and fancies and we receive orders. Poor Tamils.

prabha said...

The trend of Tamil men falling for Malayalee women and choosing them as life partners is on the rise.
If such marriages are aimed at promoting harmony and respect for each other's language and race, they are welcome. But in most cases, the Tamil men shed not only their individuality but also their love for their mother tongue. Their issues are taught only malayalam and are specifically taught to identify themselves as malayalees. (This helps them to push themselves up in their career at a later stage). So, a whole new malayalee generation is born.
If this is a ploy used by some cunning Malayalee women, especially those living in Tamil Nadu, why the hell should Tamil men succumb to such tactics in the name of love. Beware, malayalee lobby is there in everything. Love is not an exception.

soma said...

மலையாளிகள் தம் திரைப்படங்களில் தமிழர்களை கிண்டல் செய்கிறார்கள் என்பது உண்மையே. நாமும் சில படங்களில் அவ்வாறே மலையாளிகளை கிண்டல் செய்கிறோம். அதற்காக எம்.ஜி.ஆர். அவர்களை அவர்களோடு இணைத்து பேசுவது தவறே. அவர் பிறப்பால் மட்டுமே மலையாளி. அவர் வளர்ந்தது, அவர் உணர்வு எல்லாம் தமிழ்நாட்டையே சுற்றி இருந்தது. மற்றபடி இந்த பதிவு மற்றவர்களின் விமர்சங்களை, வாக்குகளை அதிகம் எதிபார்க்கும் பதிவு.அவ்வளவே. தமிழ் சினிமாவில் ரஜினி, ஜெயலலிதா எம்ஜியார் போன்ற முக்கிய பிரபலங்கள் அண்டை மாநிலங்களை சேர்ந்தவ்வர்களே. ஷங்கரின் காதலன் படத்தை எடுத்துகொள்ளுங்கள். வடிவேல் தவிர முக்கிய நடிகர் யார் தமிழன் என்று சொல்லுங்கள். எதற்க்காக தம் கட்டி இப்படி ஒரு பதிவு. இப்படி ஒருவிமர்சனம். waste of time.

soma said...

மலையாளிகள் தம் திரைப்படங்களில் தமிழர்களை கிண்டல் செய்கிறார்கள் என்பது உண்மையே. நாமும் சில படங்களில் அவ்வாறே மலையாளிகளை கிண்டல் செய்கிறோம். அதற்காக எம்.ஜி.ஆர். அவர்களை அவர்களோடு இணைத்து பேசுவது தவறே. அவர் பிறப்பால் மட்டுமே மலையாளி. அவர் வளர்ந்தது, அவர் உணர்வு எல்லாம் தமிழ்நாட்டையே சுற்றி இருந்தது. மற்றபடி இந்த பதிவு மற்றவர்களின் விமர்சங்களை, வாக்குகளை அதிகம் எதிபார்க்கும் பதிவு.அவ்வளவே. தமிழ் சினிமாவில் ரஜினி, ஜெயலலிதா எம்ஜியார் போன்ற முக்கிய பிரபலங்கள் அண்டை மாநிலங்களை சேர்ந்தவ்வர்களே. ஷங்கரின் காதலன் படத்தை எடுத்துகொள்ளுங்கள். வடிவேல் தவிர முக்கிய நடிகர் யார் தமிழன் என்று சொல்லுங்கள். எதற்க்காக தம் கட்டி இப்படி ஒரு பதிவு. இப்படி ஒருவிமர்சனம். waste of time.

soma said...

மலையாளிகள் தம் திரைப்படங்களில் தமிழர்களை கிண்டல் செய்கிறார்கள் என்பது உண்மையே. நாமும் சில படங்களில் அவ்வாறே மலையாளிகளை கிண்டல் செய்கிறோம். அதற்காக எம்.ஜி.ஆர். அவர்களை அவர்களோடு இணைத்து பேசுவது தவறே. அவர் பிறப்பால் மட்டுமே மலையாளி. அவர் வளர்ந்தது, அவர் உணர்வு எல்லாம் தமிழ்நாட்டையே சுற்றி இருந்தது. மற்றபடி இந்த பதிவு மற்றவர்களின் விமர்சங்களை, வாக்குகளை அதிகம் எதிபார்க்கும் பதிவு.அவ்வளவே. தமிழ் சினிமாவில் ரஜினி, ஜெயலலிதா எம்ஜியார் போன்ற முக்கிய பிரபலங்கள் அண்டை மாநிலங்களை சேர்ந்தவ்வர்களே. ஷங்கரின் காதலன் படத்தை எடுத்துகொள்ளுங்கள். வடிவேல் தவிர முக்கிய நடிகர் யார் தமிழன் என்று சொல்லுங்கள். எதற்க்காக தம் கட்டி இப்படி ஒரு பதிவு. இப்படி ஒருவிமர்சனம். waste of time.

prabha said...

I strongly refute Soma's statement. Who said MGR, revered as the kollywood icon by Tamils, was a malayalee only by birth but all Tamil in mind and soul. You know something, it was this malayalee chief minister of Tamil Nadu who along with the whole lot of malayalee secretaries in the TN government agreed to Kerala's demand of bringing down the level of the Mullaiperiyar dam, an engineering marvel built by a British engineer to address the water needs of people in the rain-shadow districts of south TN, from 152 feet to 136 feet. Is he a Tamil in soul? A betrayer in true sense. (By this, I dont mean to say the by-birth Tamil CM has done good for his people.)
There are umpteen examples. This issue is just a tip of the iceberg. Please do not make sweeping statements.
Is there any state in our country except TN which has allowed a non-native to adorn the highest office and wield so much power. Tamils' generosity is taken for granted. Samraj's article, certainly, is not a waste of time but an expose and an attempt at sensitising the foolish Tamils.
Unlike malayalees, we give enough room for them to co-exist. But let them not exercise authority and try to distort Tamil history, twist facts and degrade us without conscience even while eking out a living here.

soma said...

நான் தங்களின் கற்றது தமிழ் படத்தை முதல் நாள் இரவு உதயம் தியேட்டரில் பார்த்தேன். சிறப்பாக சென்று கொண்டிருந்த படம் IT industry மீது திரும்பியது. சாப்ட்வேர் engineer பெரும்பான்மையோர் அதிகம் சம்பாதிக்கின்றனர் என்பது உண்மையே. இந்த தொழிலில் மற்ற மாநிலங்களில் உள்ளோரும் ஈடுபடுகின்றனர். உல்லாசமாக செலவும் செய்கின்றனர். ஆனால் அனைவரும் அதுபோல் அல்ல. அதிகம் சம்பாதிப்பது எந்த தொழில் ஆகட்டும். பணம் சம்பாதிப்பவர்கள் உல்லாசமாக செலவு செய்வது இயல்பே. அது சினிமா தொழில் ஆகட்டும். வங்கி ஊழியர்கள் ஆகட்டும். அனைத்து துறைகளிலும் சற்று அதிகம் பணம் சம்பாதிப்பவர்கள் உள்ளனர் ஆர்பாட்டம் செய்பவர்கள் உள்ளனர். before IT industry flourish in India, அதிகம் பணம் புரளும் மற்றும், பணம் சம்பாதிக்கும் மக்கள் இல்லை. இப்போது அதிகம் பணம் சம்பாதிக்கும் மக்கள் அளவு IT மூலம் உயர்ந்து உள்ளது. இதனால் அதிகம் செலவு செய்வோரும் உயர்ந்து உள்ளனர். சற்றேன வளர்ந்த இந்த முன்னேற்றத்தை , முன்பு சாதாரண மக்களாக இருந்த மக்கள் இப்போது பை நிறைய செலவு செலவு செய்வதை, வசதியான வீடுகளில் வாழ்வதை தீடீரென பார்க்கும் மற்ற மக்கள் பொறாமை படுவது போல் இறுதியில் கற்றது தமிழ் படம் இருந்தது. இதனை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை. I am also an IT professional. But i liked this movie for a different attempt. I recommended and commented this movie to some of my friends. They also watched and appreciated this movie. But everyone had a same feeling what i had about this movie. ஒவ்வொருவரும் மற்ற இனங்களை பற்றி தாழ்வாகவும் தம் இனத்தை பற்றி உயர்வாகவும் எண்ணுவதும் பேசுவதும் இயற்கையே. ஆண்கள் பெண்களை இழிவு படுத்துவதும், ஒரு ஊரார் , ஒரு சாதியினர், ஒரு நாட்டை சேர்ந்தவர் தம்மை உயர்வாகவும் மற்றோரை, தாழ்வாகவும் கிண்டல் செய்வதும் நடந்துகொண்டேதான் இருக்கிறது. மலையாளிகள் தமிழர் விசயத்தில் அதை அதிகம் செய்கின்றனர். நாம் அதைவிட சற்று குறைவாகவும் அதை பொருட்படுத்தாமலும் இருக்கின்றோம்.அவ்வளவுதான்.

soma said...

Hi praba, u have said the by-birth Tamil CM has not done good for his people. Now tell me which is worse? Tamilan betraying his own people or malayali betraying tamils.

prabha said...

I mean to say that malayalee betraying tamils is all the more natural. So y risk a chance and Y not emulate other states.
But u mean to say it's ok for a malayalee to betray the ignorant and innocent who trusted him and gave him bread, life and power. We need not draw a comparison as to who is better or worse. I expressed reservations on ur statement - MGR is all Tamil. It would be better if could throw light on this.
As samraj had put it had periyar taken up his cudgel against mallus, betrayals in crucial life-or-death issues of TN could have been contained. It would not have been a "waste of time" either for u or me to gauge the betrayals.

போகன் said...

சமீபத்தில் வந்த தன்மாத்திரா படத்தில் [மோகன்லால் படம்] பாரதியின் காற்று வெளியிடைக் கண்ணம்மா பாடலை மலையாளச் சிறுவன் அப்படியே தமிழில் பாடுவதுபோல் வருகிறது.லாலும் பாடுவார்.திருக்குறள் சொல்லுவார்.நம் சினிமாவில் வள்ளத்தோள் வரிகள் வருமா என்ன ? கருத்த பட்சிகள் பார்க்கவில்லையா ?மணிச் சித்திரத் தாழ் நானும் பார்த்தேன் .அதில் ஷோபனா தமிழ் பேசுகிறார் என்பதைத் தவிர அதில் நம்மை என்ன கேவலப் படுத்தி இருக்கிறார்கள் எனப் புரியவில்லை. சில வருடங்களுக்கு முன்பு வந்த படத்தில் [குஞ்சாக்கோ கோபன் படம் .பெயர் நினைவில்லை]தமிழர்களை தவறாகப் பேசியதற்காக பார்த்திபன் இன்னசன்ட்டை [அங்கு பெரிய காமடி நடிகர்]அடி பின்னி விடுவார். நம் சினிமாவில் விவேக்கை ஒரு மலையாள நடிகர் வந்து அவ்வாறு செய்ய முடியுமா?இந்தியன் எக்ஸ்ப்ரஸில் சர்க்காரியாவின் பத்திகள் படிக்கிறீர்களா ?குறைகள் இல்லா மனிதனும் இனமும் இல்லை.நாம் நம்முடைய வீழ்ச்சிக்கும் காரணமென ஆரியன். மலையாளி,கன்னடன்,ஹிந்திக் காரன்,சிங்களவன் என்று புறக் காரணங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறோம். இல்லாவிடில் பார்ப்பனர்கள் ,வெள்ளாளர்கள்,புதிதாக IT காரர்கள்!அவர்களிடமும் இதேபோல் ஒரு எதிர் பட்டியல் இருக்கக் கூடும்.நாம் பழம்பெருமை பேசி பேசி சரித்திரத்தில் உறைந்து நின்றுவிட்டோம்.இன மேட்டிமை அல்லது மத மேட்டிமை பேசும் குழுக்கள் எல்லாமே காலத்தால் அழிக்கப் பட்டிருக்கிறார்கள்.நாம் வெற்றி பெறுவதன் மூலமே மதிக்கப் படுவோம். என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.நம்முடைய இந்த xenophobia அளவு கடந்து போவது போல் தெரிகிறது .மலையாளப் பெண்கள் எல்லாம் 'சதி' செய்து தமிழர்களை காதலித்து கல்யாணம் செய்து மலையாளியாக மாற்றிவிடுவதாக ஒரு நண்பர் எழுதி இருந்தார்.[என்ன கொடுமை சார் இது!லவ் ஜிஹாத் போலவா ]நாம் தமிழ்நாட்டின் சிவசேனா ஆகவா முயல்கிறோம்?ஏற்கனவே தனிமைப் பட்டுக் கிடக்கும் நமக்கு இது போன்ற சிந்தனை நோக்கு மேலும் மேலும் பிரச்சினைகளையே கொண்டுவரும்.

ம.பொன்ராஜ் said...

திரு. சாம்ராஜுக்கு ஒரு வேண்டுகோள். தமிழனுக்கு 'மலையாளிகள்' இதுவரை செய்துவந்துள்ள துரோகங்கள் பற்றி எழுதுகிறீர்கள். அதோட நில்லாமல், 'தமிழனுக்கு' தெலுங்கர்கள், கன்னடர்கள் போன்ற சக திராவிட மக்கள் நிகழ்த்தி வரும் துரோகங்களையும் பட்டியலிட வேண்டுகிறேன். அது மட்டும் இன்றி, இதே போல மேற்கண்ட மக்களுக்கு 'தமிழன்' நிகழ்த்தி வரும் (அல்லது நிகழ்த்தி வருவதாக அவர்களால் நம்பப் படும் விஷயங்களை) அவர்கள் கண்ணோட்டத்திலேயே பதிவு செய்யுமாறும் வேண்டுகிறேன். இறுதியாக, இவை எல்லாவற்றுக்கும் மூலக் காரணங்களை நோக்கி நகரும் ஆய்வினையும், அதன் மூலம் எதிர்காலத்திலாவது அதனை தீர்ப்பதர்ர்கான சாத்தியக் கூறுகளையும் உங்கள் பாணியிலேயே வெளிப்படுத்துமாறும் வேண்டுகிறேன்.

manam said...

எந்த ஒரு தமிழ் படத்திலும் கேரளா மாநிலத்தவரை பற்றி கேவலமாக சித்தரிக்கவில்லையா எனது மகன்களுக்கு நல்ல பழைய தமிழ் படங்களை பார்க்கசெய்வதுண்டு. அதுபோல் இன்றும் திரு. சிவாஜிகணேசன் அவர்கள் நடித்த காத்தவராயன் படத்தினை பார்த்துகொண்டிருந்தபோழுது திரு. பாலையாவை மலையாளியாக சித்தரித்து அவர் எல்லோரையும் ஏமாற்றி பிழைபதாக காண்பித்து. சிவாஜி அவரை வெற்றி பெற்று அடிமையாக வைத்திருப்பதாக கதை செல்கின்றது. இதற்க்கு என்ன சொல்கின்றீர்கள் பொன்ராஜ் அவர்களே . வேண்டாம் இந்த துவேஷம். நாம் எல்லோரும் இந்தியர்கள் என்று நினைத்து திரைப்படத்தினை பொழுதுபோக்காக பாப்போம் நண்பரே. உடனே பெரியாறு பிரச்சினையை இதோடு சேர்த்துவிடாதீர்கள்.

manam said...

எந்த ஒரு தமிழ் படத்திலும் கேரளா மாநிலத்தவரை பற்றி கேவலமாக சித்தரிக்கவில்லையா எனது மகன்களுக்கு நல்ல பழைய தமிழ் படங்களை பார்க்கசெய்வதுண்டு. அதுபோல் இன்றும் திரு. சிவாஜிகணேசன் அவர்கள் நடித்த காத்தவராயன் படத்தினை பார்த்துகொண்டிருந்தபோழுது திரு. பாலையாவை மலையாளியாக சித்தரித்து அவர் எல்லோரையும் ஏமாற்றி பிழைபதாக காண்பித்து. சிவாஜி அவரை வெற்றி பெற்று அடிமையாக வைத்திருப்பதாக கதை செல்கின்றது. இதற்க்கு என்ன சொல்கின்றீர்கள்சாம்ராஜ் அவர்களே . வேண்டாம் இந்த துவேஷம். நாம் எல்லோரும் இந்தியர்கள் என்று நினைத்து திரைப்படத்தினை பொழுதுபோக்காக பாப்போம் நண்பரே. உடனே பெரியாறு பிரச்சினையை இதோடு சேர்த்துவிடாதீர்கள்.

Karthi said...

சிந்திக்க வைக்கக்கூடிய நல்ல பதிவு..

//நாலு பெண்கள் – அடூர் கோபால கிருஷ்ணன் – 2006//
இந்த படத்தில் தமிழர்களுக்கு எதிரான என்ன விஷயத்தை கண்டீர்கள்..??

amal said...

சாம்ராஜ், உங்கள் உழைப்பு நன்றாகத் தெரிகிறது.

ஆனால் தமிழ் சினிமா மட்டும் யோக்கியம் என்பது போன்ற தொணி் (விவேக்குக்கு டீ கொண்டு வரும் சேச்சி தவிர..) மட்டும் ஏற்றுக்கொள்ள முடியாதது. எல்லா வித கீழ்த்தரமான உத்திகளையும் இங்கும் தான் பண்ணுகிறார்கள்.

எல்லாம் பணம் பண்ணுகிற தொழில் மட்டும்தான்..(இதெல்லாம் அந்த அந்த ரசிகர்களை திருப்தி படுத்த செய்கிற உத்திகள் என்றே நினைக்கிறேன்)மாநில வித்தியாசம் இல்லாமல்...

தவிர.. தமிழ் சினிமா தமிழர்களுக்கானது, மலையாள சினிமா மலையாளிக்கானது என கற்பனை செய்வது நல்ல நகைச்சுவை. நாம் உலகமயமாக்கல், தாரளமயமாக்கல் தாண்டி.. IPL 20-20 வரை வந்து விட்டோம் என்பதை மறந்து விடாதீர்கள்.

நமது அணி சென்னை சூப்பர் கிங்ஸ் என்பது மாதிரிதான்.. நம் தமிழ்சினிமா என்பதும்..

மெய் said...

உங்களுடைய வலையில் வரும் செய்திகள் யாவும் உச்ச கட்ட கற்பனையான உங்களின் ஏதோ ஒரு கசப்பான அனுபவத்தின் வெளிப்பாடே என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை...
கருத்துக்கு மன்னிக்கவும்.....
கொஞ்சம் வெளியே வந்து உலகத்தை பார்க்க எனது அழைப்பு.....

Bharathi Pixie said...

True..true..true...

Anbu said...

யாரோ ஒரு உலகம் தெரியாத குழந்தை இந்த கட்டுரையை எழுதியதாக தெரிகிறது.. இந்த குழந்தை உளறியிருக்கிறது "தமிழர்களை நல்லவர்களாக சித்தரித்து ஒரு படம் கூட மலையாளத்தில் இல்லையாம், அப்படி இருந்தால் அந்த இந்த குழந்தை சங்கறுத்து சாகுமாம், என்னடிம் ஒரு பட்டியலே உள்ளது, வேண்டாம் குழந்தாய் உன்னை தற்கொலை செய்ய தூன்டிய பாவம் எனக்கு வேண்டாம்.. எல்லாவற்றிற்க்கும் மேலாக வியாபார உத்தி தெரியாத இந்த குழந்தையின் இன்னொரு பிதற்றல் " மலையாளத்தில் தமிழ் இயக்குனர்கள் அதிகம் இல்லை, கமல்ஹாசன் நடிக்கவில்லை, இளையராஜாவை அவர் உச்சத்தில் இருந்தபோது இசையமைக்க அனுமதிக்கவில்லை", இப்படி போகிறது அந்த பிதற்றல்..

குழந்தாய் தென்னிந்தியாவில் அனைத்து மாநிலத்தவருமே நிலை நாட்ட ஆசைப்படும் திரைத்துறை தமிழ்த்திரைத்துறை மட்டுமே, அதற்க்கு முக்கியமான இரண்டு காரணங்கள் " 1. இங்குதான் திரைத்துறையினருக்கு சம்பளம் அதிகம், 2. இங்குதான் தென்னிந்தியாவின் திரை உலக பயணம் தொடங்கிற்று, அதனால் இங்கு மட்டும்தான் வசதி வாய்ப்புகள் அதிகம்," இந்த இரண்டு காரனங்களுக்காகவே மலையாளிகள் மட்டுமல்லாது மற்ற மாநிலத்தவரும் தமிழ் திரைத்துறையை நோக்கி படைய்டுக்கின்றனர் (இப்போது தெலுங்கு திரையுலகையும் அதிக சம்பளம் காரணத்திற்க்காகவே மொய்க்கிறார்கள்).

குழந்தாய் கமல்ஹாசனை வைத்து படமெடுக்கும் நிலையில் மலையாள தயாரிப்பாளர்களின் நிலை இல்லை, அவர்களின் ஒரு ப‌டத்தின் சிலவு நமது சின்டுகள் சிம்பு, தனுஷ் வாங்கும் சம்பளத்தை விட குறைவு. இதுதான் காரணம் சம்பளம் குறைவாக நடிக்க தயாரென்றால் யார் வேன்டுமானலூம் யாரை வைத்து வேண்டுமானலும் படம் எடுப்பார்கள்.. இது கூட தெரியாத குழந்தாய் நல்ல அறிவுரை கூறுகின்றேன் கேள் " போ பள்ளிக்கு போ.. பள்ளிக்கு சென்று படி.. இப்படி சகோதரர்கள் மத்தியில் கலகம் மூட்ட எண்ணாதே" வேற்றுமையில் ஒற்றுமை காட்டிய இனம் என் திராவிட இனம்.. அதன் ஒற்றுமையை குலைக்க உண்ணால் அல்ல உன் சந்ததியாலும் முடியாது...

Anonymous said...

BESTTTTTTTTT.. keep on writing

vinoth said...

திரும்பி அடிக்கணும் .. ஒரு காலத்தில் நம்மை பார்த்து கால்சட்டையை நனைத்தவர்கள் இன்று நம்மை அடிக்கின்றனர் .. திரும்பி அடிக்க தமிழனமே ஒன்று சேருங்கள் ..

lalu said...

This is wrong information. someone trying to make issue between malayalis & tamilans....

Anonymous said...

The second intention of this article seems to be dividing tamils.

You are terribly confused and narrow minded.

Ilayaraja has been composing music for malayalam movies since early 80s (Non Balu Mahendra films like Pinnilavu, munaam pakkam); By writing your blog, you have insulted Ilayaraja.

Prashanth Thiagarajan was given a significant role in Perunthachan (he is a not a tamil parppan).

You have also insulted Sarath Kumar by writing that he got the chance not due to any of his abilities. Can you build your muscle like him? Can you perform any of the acts he had performed in pazhasi raja?

தயவு செய்து தமிழர்களைப்பிரிக்கார்தீர்கள்; அரசியல் வாதிகள் அதை ஏற்கனவே செய்து குளிர் காய்கிறார்கள்.

sree said...

நன்றாக இருக்கிறது. நானும் கேரளத்தில் வாழ்ந்தேன். பாண்டி என்றே என்னை அவமதிபார்கள். இது டாட்டா தொழிநுட்ப போன்ற அலுவகத்தில் நீங்கள் காணலாம்

Anonymous said...

தங்களின் 'மளையாளிகளின் துரோகம்' கட்டுரையும் அதன் பின்னூட்டங்களும் ஒரு பட்டிமன்ற விவாதம் போல சுவாரஸ்யமாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. பாராட்டுக்கள்.தன்னை அடுத்தவன் அவமானப்படுத்துகிறான் என்பதைக்கூட புரிந்துகொள்ளமுடியாமல் பெருந்தன்மை என்ற போர்வையில் புகுந்துகொள்ளும் தமிழர்களின் விமர்சனத்தைக்கண்டு கொள்ளவேண்டாம்.

ச்.தண்டபாணி said...

அருமையான பதிவு. நன்றி.

ச.தண்டபாணி said...

'மலையாளிகளின் துரோகங்கள்' பதிவும் அதன் பின்னூட்டங்களும் ஒரு பட்டிமன்ற விவாததைபோல் சுவாரஸ்யமாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. எப்போதும் போல் சில தமிழ் மேதாவிகள் தங்களைத்திட்டமிட்டு கேவலமாக அவமானபாடுத்துவதைக்கூட புரிந்து கொள்ளமுடியாத வெள்ளந்திகளாக பெருனந்தன்மை என்ற போர்வையில் புகுந்துகொள்வதை நீங்கள் பொருட்படுத்த வேண்டாம்.

KARIKALAN said...

MK Narayanan,
sivasankar menon,
Nirubama menon rao,
UN's Sathish nambiar,
his brother Nambiar ,
indias rep.in UN Gopalan,
sonias pet dog george mathews
defence min.ak antony

and many other unknown malayali officials are actively participated
in EELAM TAMILS MASSACRE.,
Dear' dravidians' and 'indians'
kindly know the truth.,
most of the malayalis are cunning creatures,
State enemies of Tamil nation.
like sinhalese these creatures will
one day destroy us,...

a malayali cross said...

Malayalis are the most cunning people on earth,

viscus quasso said...

வணக்கம்,
பதிவையும் பின்னூடங்களையும் படித்தேன் . நான் கேரளாவில் பிறந்து வளர்ந்த தமிழன் . கேரள சினிமாவில் பல காலமாக தமிழரகளை கேலி பொருளாகவும் , கெட்டவர்களாகவும் தான் காட்டுகிறார்கள் . நாமும் மலையாளிகளை கேலி செய்கிறோம் என்றாலும் இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது . மலையாளிகள் தமிழனை பகடி செய்ததில் நூறில் ஓன்று கூட நாம் அவர்களை செய்தது கிடையாது. அது போல் தமிழர் மலையாளிகளை மரியாதை செய்ததில் பத்தில் ஓன்று கூட அவர்கள் நம்மை செய்ததில்லை . மேலும் மலையாள சினிமா தமிழர்களை பற்றி தவறாக பிரச்சாரம் செய்யவில்லை நாம் கண்டது மலையாள மக்களின் தமிழரை பற்றிய கருத்துக்களின் பிரதிபலிப்பே .
தமிழர்கள் இதை கண்டிக்க தான் வேண்டுமே தவிர பதில் பகடி செய்வதை நியாயபடுத்த கூடாது. அது வீண் சண்டைகளை ஏற்படுத்தும் . மட்டுமல்ல கேரளாவில் தமிழர்களையும் தமிழையும் நேசிக்கும் நண்பர்களை அவமதிக்கும் செயலாகும் . தமிழ் படத்திற்கு தமிழ் பெயர் வைக்க போராடுபவர்கள் தமிழனை கொச்சை படுத்தும் இது போன்ற படங்களை எதிர்த்தால் நல்லது .
திரைப்படங்களை தாண்டி இந்த பதிவிலும் பின்னூடங்களிலும் சொன்ன பல கருத்துக்களை நான் கண்டிக்கிறேன். குறிப்பாக மலையாளிகளை கொலையாளி என்றும் "ஒன்று சேர்ந்து திருப்பி அடிக்க வேண்டும் என்றும் சொன்ன கருத்துக்கள் கேலிக்குரியவை .
மலையாளிகள் பல நேரங்களில் தமிழகத்தை பற்றின அரைகுறை அறிவுடன் கேலி செய்தாலும் அவற்றில் சில உண்மைகள் கூட. குறிப்பாக "ழகரம்" இடறுவது . தமிழை "தமிள்" என்று கூறுபவர்கள் மலையாளிகள் அதை கேலி செய்தால் எப்படி கோபிக்கலாம் . என் வயதை ஒத்த மலையாள நண்பர்களுக்கு உள்ள மலையாள மொழியறிவில் பத்தில் ஒன்று கூட தமிழ் இளைஞர்களுக்கு தமிழில் இல்லை(சும்மா அடிச்சு எல்லாம் விடல, என் அனுபவத்தில் தான் சொல்றேன் ).
மலையாளிகள் தமிழ் சினிமாவில் ஜொலிப்பது அவர்கள் திறமை. நீங்கள் கூறும் மம்முட்டி, மோகன்லால் , அஜித் எல்லாம் ஒரு நாளில் முளைத்து வரவில்லை. தங்கள் திறமையை கொண்டு தான் வென்றனர். ராஜீவ் மேனன் , சந்தோஷ்சிவன் போன்றோர்கள் இந்தியாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய கலைஞர்கள் தாம் . தமிழில் கோலோச்சிய மலையாள கலைஞர்கள் அனைவரும் பெரும் திறமை படைத்தவர்கள் தாம்.
பிறகு தமிழர்கள் மலையாள சினிமாவில் கோலோச்ச முடியாமல் போனதிற்கு பல காரணங்கள் உண்டு . பொதுவாக மலையாளிகள் வேற்று இனத்தவரை அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் பெரும்பாலும் (கவனிக்க "பெரும்பாலும்" ) உண்மையானாலும் முழுதாக ஏற்றுக்கொள்ள முடியாது . முதலில் பட்ஜட் ஒரு காரணம் . மேலும் கமல் , சத்யராஜ், சரத்குமார், போன்ற ஏராளமான நடிகர்கள் மலையாளத்தில் நடித்துள்ளனர் . மலையாள சினிமாவில் இளையராஜாவை பற்றி மட்டும் தான் பலருக்கும் தெரியும் , ஆனால் தட்சினாமூர்த்தி , எம் பீ சீனிவாஸ் , ஆர் கே சேகர் , ஷியாம் , வித்யாசாகர் போன்ற ஏராளமான தமிழ் இசைஞ்சர்கள் அங்கு உள்ளனர். கே வீ ஆனந்த் , ரவி கே சந்திரன் , ஜீவா , ஸ்ரீகர் பிரசாத் , லெனின், வி டி விஜயன் , ஆர் டி ராஜசேகர், ஆண்டனி மற்றும் பல ஸ்டன்ட் மாஸ்டர்கள் அங்கு கோலோச்சி உள்ளனர் (பி சி ஸ்ரீராம் கேரளா அரசு விருது பெற்றுள்ளார் ) . இதிலிருந்து சம்பளம் குறைவான தொழில் நுட்ப கலைஞர்களாக தமிழர்களை மலையாள சினிமா கொண்டாடுகிறது .
எல்லாவற்றிற்கும் மேல் ஒருவனுடைய வெற்றி அவனுடைய உழைப்பையே சார்ந்தது என தீவிரமாக நம்புகிறேன். எந்த விஷயத்தையும் நேர்மையாகவும் நியாயமாகவும் அணுகினால் நம் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது . நாம் நினைத்தால் மலையாள சினிமா மட்டுமல்ல , ஹாலிவுட்டிலும் கலக்கலாம்
(
பின்குறிப்பு : -
1. கௌதம் மேனன் படத்தில் கதாபாத்திரங்கள் மலையாளிகளாக இருப்பது ஒரு இயக்குனரின் சுதந்திரம். இயக்குனர் ராம்மிட சென்று உங்கள் கதாநாயகன் மதுரை காரனாக மட்டும் இருக்கவே கூடாது என்று சொன்னால் ஏற்றுக்கொள்வாரா ?
2. கேரளாவில் தமிழையும் தமிழர்களையும் மதிக்கும், நேசிக்கும் பல இளைஞ்சர்கள் உள்ளனர்
3. மலையாளிகள் சினிமாவை சினிமாவாக பார்க்கிறார்கள் . மோகன் லாலோ , மம்முட்டியோ தேர்தலில் நின்றால் எம் எல் ஏ ஆவதே கடினம் .

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com