சுமதியின் கவிதைகள் காட்சியில் தொடராய் பிரசுரமாகிறது.இவரின் ஏனைய கவிதைகளுக்கு இங்கே சொடுக்கவும்.
கடவுளின் நிஜப்பெயர்
மகேஸ்வரி நகர் பாலவிநாயகர்
கோவில் பிரகாரத்து முருகனுக்கு
தைப்பூசத்திருவிழா.
பால்குடங்களில் ததும்பியது
கிழக்கு வானின் ஒரு நிலா
நூற்றி எட்டாய்.
தென்னங்கீற்றுகள் மட்டும்
அசைய வீசிய காற்றில்
அநியாயத்துக்கு ஆடின
அலங்கரிக்கப்பட்ட
காவடி மயில்கள்.
திருநீற்றுடன் பன்னீரும் மருகும்
மணந்த முன்னிரா வேளையில்
மேளத்துக்கு அதிர்ந்து
குதியாட்டம் போட்டன
எண்ணற்ற ஆண் பாதங்கள்
வாசலில் நிற்க ஆசிர்வதிக்கப்பட்ட
பெண்கள் முன்
முருகன் மயிலேறி போனான்.
ராப்படுக்கையில்
முருகனுக்கு
புதுப்பெயர் ஒன்று வைத்தேன்
”ஆண்களின் குதியாட்டம்” என.
- சுமதி
