பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

May 12, 2010

அற்றவைகளால் நிரம்பியவள் - 10 - யமுனாராகவன்

யமுனா ராகவன் அய்ரோப்பாவில் மருத்துவராய் பணிபுரிகிறார். அவர் எழுதும் ‘’அற்றவைகளால் நிரம்பியவள்" தொடர்கதை காட்சியில் தொடராய் வெளிவருகிறது. அனைத்துப் பகுதிகளுக்கும் இங்கே சொடுக்கவும். http://kaattchi.blogspot.com/search/label/அற்றவைகளால்%20நிரம்பியவள்  

பகுதி - 10

அஞ்சனா சிறிய வயதில் பார்த்த Whoopi Goldberg நடித்த Bogus படம் அவளை மிகவும் பாதித்தது. எல்லா குழந்தைகளுக்கும், அதுவும் மிகவும் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு, பொதுவாய் ஒரு கற்பனை தோழனோ தோழியோ இருப்பார்கள், சில வயது வரை என்று சொல்கிறார்கள் மனநல மருத்துவர்கள். இவளுக்கு அப்படி எதுவும் இருந்ததாய் நினைவில்லை. ஆனால் இவளுடைய நேரங்களையும் வளர்ச்சியையும் பகிர்ந்துக்கொண்டது புத்தகங்களும், கார்ட்டூன்களும் தான். கார்ட்டூன்கள் பார்த்து பாதித்து, அவள் படிக்கும் விஷயங்களும் கண்முன் picturize ஆவதை ரசித்து பார்க்கத்தொடங்கினாள், அஞ்சனா. வெகுவும் busy ஆன தாய் தந்தையரின் தினப்படி ஓட்டங்கள் குழந்தைகளின் நலம் கருதி தான் என்றாலும், அது குழந்தைகளோடு கழிக்க கூடிய நேரங்களை பலிக்கொடுத்து தான் என்பதை மறுக்கமுடியாது. Compromising on the reason for the sake of the reason is the sad truth behind success, most of the times....

இப்படிப்பட்ட சூழலில் தனித்து வளர்ந்த அஞ்சனா, பள்ளி நாட்களில் ஒரு கிரேக்க கதை படித்தாள். கதை படிக்கும்போது அவளுக்கு வயது ஒரு 12 இருக்கும். கதையின் பெயர் ’ Zeus’, கிரேக்க கடவுள்களின் தலைவரான ஸூயுஸ் பற்றியது. அதில் வந்த ‘’ Rape of Persephone’’ படித்து வெகு நேரம் அழுதிருக்கிறாள் அஞ்சனா. Rape என்பதன் முழு அர்த்தம் கூட தெரியாத அந்த வயதிலும், அது ஒரு கொடிய விஷயம் என்று தோன்றி நெஞ்சை அழுத்தக்கூடியதாய் இருந்தது ’’ பெர்ஸெஃபோனியின் கதை ‘’. ஸ்யூஸ் ( Zeus ), டிமெடர் (Demeter) இவர்களின் மிக அழகான மகள் தான் பெர்ஸெஃபோனி. வெந்நிற தேவதையான அவள் வெகு சந்தோஷமாக வளர்ந்ததாகவும், பாட்டு அழகாய் பாடுவாள் என்றும் சொல்லியது கதை. அழகான வண்ணப்படங்கள் கொண்ட அந்த புத்தகத்தில் இருந்த அந்த பெண்ணின் முகம் அத்தனை அழகாய் இருந்தது. ஒரு முறை அவள் தோழிகளான அதெனா (Athena) மற்றும் ஆர்டிமிஸோடு ( Artemis ) `` ஏனா தோட்டத்தில் ( Garden of Enna ) `` பூக்கள் பறித்துக்கொண்டு இருந்த பெர்ஸெஃபோனியை கடத்தி பூமிக்கு அடியில் இருந்த நரகத்திற்கு கூட்டிச்சென்றானாம், பாதாள உலகின் சக்ரவர்த்தி ஹேடிஸ் (Hades). தாய் தந்தையை பிரிந்து துயரத்தில் துடித்த மகளும், மகள் காணாது போனதால் மனதொடிந்து போய் எங்கெங்கோ தேடி அலைந்த தாய் தந்தையும் இருந்த இந்த சோகமான சூழலில், பூமியில் விளைச்சல் தன்மை முழுக்க போய் உலகே பனியால் மூடி பட்டுப்போனதாம்.

அஞ்சனாவிற்கு இதை படித்த போது ஏனோ அப்படி ஒரு பயம் பிடித்தது. இவளையும் யாராவது கடத்திக்கொண்டு போனால் அப்பா, அம்மா இப்படி தானே கதறுவார்கள் என்று யோசித்து அழுதாள். கடைசியில் தந்தை ஸ்யூஸ் ஹேடிஸ் தான் இதற்கு காரணம் என்று கண்டுப்பிடித்து சண்டையிடுவேன் என்று சொன்னதால், ஹேடிஸ் அவளை விடுதலை செய்ய ஒத்துக் கொண்டதாக வந்தது கதையில். ஆனாலும், தந்திரமாக பெர்ஸெஃபோனியை 4, 5 மாதுளை விதைகளை சாப்பிடவைத்தானாம். கடவுளரின் விதிப்படி, பாதாள லோகத்தில் யார் எது தின்றாலும் குடித்தாலும், அங்கேயே தான் வாழ்நாள் முழுக்க இருக்க வேண்டுமாம். ஆனால் ஸ்யூஸால் பாதாள உலகத்தில் 4 அல்லது 5 மாதங்கள் மட்டும் இருந்துவிட்டு, மற்ற சமயம் பெர்ஸெஃபோனி கடவுள்களின் இடமான ஓலிம்பஸ் ( Olympus ) திரும்பும்படி மாற்றி எழுதப்பட்டதாம் விதி. அதனால் இவள் பாதாளத்தில் இருக்கும் இந்த சில மாதங்கள் தாய் தந்தை மிக மனதொடிந்து, படைப்பு தொழில் செய்யாது போனதாகவும், அந்த காலங்கள் தான் பருவக் காலத்தில் பனிக்காலமானதாகவும், அவள் அங்கு இருந்து திரும்பும் காலம் வசந்தகாலமாகவும் ஆனதாக கதை சொன்னது. So Rape of Persephone became the reason for the birth of seasons.

இந்த கதையில் அந்த வயதில் அஞ்சனாவிற்கு பலது புலப்படாது போயினும், ஒரு குழந்தை போன்று சிரிப்போடு இருந்த அவள் முகம் அதன்பின் சோகமாய் தெரிந்ததை தாங்கமுடியாது போனாள் அஞ்சனா. கொஞ்சம் வளர வளர, இதன் தாக்கம் அவளுக்கு வேறு சில தமிழ் படங்களில் பெண்கள் கதற கதற வன்புணர்ச்சிக்கு ஆளாவது போல் நடிக்க, அவர்கள் முகத்தில் தெரிந்த வலியை கண்டு நடிப்பு என்பதை மறந்து இன்னும் பயந்தே போனாள். அதன்பின் சரித்திரம், இலக்கியம், அரசியல் பற்றி படிக்க படிக்க, பெண்கள் எப்போதும் ஒரு பொருள் போல தான் பாவித்திருக்கிறது உலகம் என்றும், தொன்றுதொட்டு நிகழும் போர்கள் அனைத்திலும் பெண்களை Spoils of war என்று நடத்தி வந்ததும் வந்துக்கொண்டிருப்பதும் புரிந்தது. ஒரு முறை கல்லூரியில் படிக்கும் சமயம் ஒரு படம் பார்க்க கோமதியோடு மாரியப்பா தியேட்டர் போன போது ஒரு 40, 45 வயது மதிப்புள்ள ஒரு ஆள், அந்த இருட்டில் இடம் தேடிக்கொண்டிருந்த அஞ்சனாவின் பின்புறத்தை தடவ, திடுக்கிட்டு திரும்ப மார்பை பிடித்து கசக்கிவிட்டான். அந்த கூட்டத்தில் இருட்டில் யார் என்று முகம் பார்க்கும் முன் மறைந்தான் அவன். வெளியே சொல்லமுடியாது உள்ளே கொதித்த கோபத்திற்கு அளவே இல்லாது தூங்கமுடியாது தவித்தது நினைவிற்கு வந்தது. Being physically violated comes with so of much rage, immaterial of what the degree of viotation is.

கண்முன் பிதற்றி கொண்டு இருக்கும் ஃபெமினாவையும், கைகள் நடுங்க தொடங்கியிருந்த கிரிஸ்டியானாவையும் பார்த்தாள் அஞ்சனா. என்ன சொல்லி சமாதானம் செய்வதென்றே தெரியவில்லை. இந்த போதை பொருட்கள் எடுத்து பழக்கப்பட்டதால், அதை எடுக்காது இருந்த இந்த நிமிடங்கள் அவர்கள் இருவரும் withdrawal symptoms காட்டத்தொடங்கியிருந்தார்கள். மரண அவஸ்தையான விஷயம். நெஞ்சு அடைக்கும். உடல் நடுங்கும். வியர்வை புரளும், எந்த அளவு என்றால் படுக்கைவிரிப்பு தொப்பலாக நனைந்து போகும் அளவு. மூச்சு விடமுடியாது போல தோன்றும். நிற்காது மூக்கிலும் கண்ணிலும் நீர்வழியும். வாந்தி வருவதற்கு முன் எப்படி வயிறு பிரட்டும் அது போல இருக்கும். சிலருக்கு பயங்கர வயிற்று வலி வரும். செத்தே போய்விடலாம் இந்த அவஸ்தைக்கு என்று சொல்வார்கள். இந்த விஷயம், அனுபவிப்பவர்களை பார்க்கும்போது தான் தெரியும் எதனால் அவர்களால் இந்த பழக்கத்தை விடமுடியாது போகிறது என்று.

அஞ்சனா இருவருக்கும் injection போட்டுவிட்டு, வயிற்று வலிக்கும் வாந்திக்கும் மருந்து தந்தாள். கிரிஸ்டியானா கொஞ்சம் தேறியதும், அவளுக்கு குடிக்க சிறிது தண்ணீர் கொடுத்தாள். இதற்குள் சாயந்திரம் ஆகி இருந்தது. இன்னமும் மயக்கத்தில் இருந்த ஃபெமினா படுத்திருந்த படுக்கை வியர்வையால் நனைந்திருப்பினும், அவள் அணிந்திருந்த skirtல் ரத்தகறை இருப்பதை பார்த்து, கிரிஸ்டியானா ஃபெமினாவை நன்கு பரிசோதனை செய்ய சொல்லிக்கேட்டாள்.

ஜன்னல் திரைகள் மூடிவிட்டு, அஞ்சனா tube light வெளிச்சத்தில் gloves அணிந்து, ஃபெமினாவின் உடை கழற்றி பார்த்தாள். உடல் முழுக்க அழுந்த பிடித்தாலோ, அடித்ததாலோ கைவிரல் பதிந்த தடம் தாங்கியிருந்தாள் அவள். அங்கங்கே இருந்த பல்தடங்களும், அவள் உடலில் இருந்த வந்த வாடையும் அஞ்சனாவின் மென்னியை பிடித்தது போல இருந்தது. பிறப்புறுப்பை examine செய்ய கால்களை விரிக்க முயற்சிக்க, திராணி இல்லாது ஃபெமினா முனகினாள். பார்த்தவளுக்கு மனம் அதிர்ந்தது. என்னதான் செய்திருப்பார்கள் இந்த 19 வயது பெண்ணை. எத்தனை பேர் தான் உபயோகித்திருப்பார்கள் என்றே தெரியவில்லை. டாக்டர் என்பதை தாண்டி, பெண் என்பது தான் இது போன்ற நிமிடங்களில் நினைவில் இருக்கிறது. கண்களில் பொங்கிய நீரை control செய்துக்கொண்டு, இருந்த cotton swabs வைத்து அந்த இடத்தை சுத்தம் செய்து, அங்கங்கே கடித்ததில் கன்றிபோயிருந்த இடங்களிற்கு ointment தடவினாள். மறுபடி உடை போட்டு விட்டு, கிரிஸ்டியானாவை உள்ளே அழைத்தாள்.

வீட்டிற்கு போனதும் நன்கு குளிக்கவைக்க சொல்லிவிட்டு, இருவருக்கும் தேவையான மருந்துகளும் தந்து, நாளை வந்து பார்க்கச்சொல்லி அனுப்பிவைத்தாள். அவர்கள் போகும் முன், அஞ்சனா சொன்னாள், ``Christiana! You both are in dangerous grounds here. உங்களால் மட்டுமே தான் உங்களுக்கு உதவ முடியும். என்னதான் நான் செய்தாலும், நீங்கள் திருந்தாது போனால், யாரும் ஒன்றும் செய்வதற்கு இல்லை. Think about Marcela ‘’ என்றாள். கதவு திறந்து வழியனுப்ப பார்க்கையில், இன்னொரு காரில் வந்தான் கிரிஸ்டியானாவின் காதலன் Geoffrey. அவனை பார்த்ததும் பயந்து நின்ற கிரிஸ்டியானாவையும், ஃபெமினாவையும் அவனோடு வரச்சொல்லி அழைத்தான். அத்தனை நேரம் பயந்து நின்ற கிரிஸ்டியானா அவன்மேல் சீறிபாய்ந்தாள். இனி அவர்கள் இருக்கும் திசைக்கே வரவேண்டாம் என்று எச்சரித்துவிட்டு ஜீப் எடுத்துக்கொண்டு கிளம்பினாள். இவர்கள் செல்வதை பார்த்துக்கொண்டு நின்ற அஞ்சனாவை நோக்கி வந்தான் ஜெஃப்.

பார்க்க சராசரியான ஆப்ரிக்கர்களை போல இருந்த அவனை ஒருவேளை வேறு எங்காவது முன்பின் தெரியாது பார்த்திருந்தால், அஞ்சனா handsome guy என்று யோசித்திருப்பாளாய் இருக்கும். இந்த இரு பெண்களை போல இன்னும் எத்தனை பேரின் வாழ்க்கையை சீரழித்திருக்கிறானோ என்று உடல் கொதித்தது அஞ்சனாவிற்கு. ஒன்றுமே நடக்காதது போல சிரித்துக்கொண்டே வந்த அவன், ``டாக்டர்! உங்களை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி`` என்றான். சிலருக்கு சிரிக்கும் போது முகம் அழகாய் இருப்பினும், அந்த சிரிப்பு எதிராளியை அச்சுறுத்தும் வண்ணம் இருக்கும் அல்லவா, Dark knight படத்தில் Heath ledger joker ஆக வரும் போது சிரிப்பாரே, அதே சிரிப்பு தான் இவனுக்கும். A sly, cold, twisted smile that will put a shiver down your spine....

அஞ்சனா ஒன்றும் பதில் சொல்லாது திரும்பி போக முயற்சிக்க, அவளை மேலிருந்து கீழ்வரை கண்ணால் தடவியபடி `` You are a pretty girl, Doc. And what a Gorgeous body you’ve got ‘’ என்றான். அவன் வீட்டில் இன்றிரவு ஒரு பெரிய பார்ட்டி இருப்பதாகவும், எல்லா பெரும்புள்ளிகளும் அங்கு வருவார்கள், கட்டாயம் அதற்கு வரசொன்னான். அஞ்சனா அவனை திரும்ப ஒரு வெற்று பார்வை பார்த்துவிட்டு, பதிலேதும் சொல்லாது வீட்டின் உள்ளே சென்று கதவை சாத்தினாள். ஜெஃப் சிரித்துக்கொண்டே சென்றது அவளுக்கு லேசான பயத்தை தந்தது. வீட்டின் உள்ளே முழுக்க அடித்த ரத்தவாடை அஞ்சனாவிற்கு, அவள் மேலும் ஒட்டிக்கொண்டு போகாதது போல இருந்தது. Consultation roomல் இருந்த bed spread எடுத்துவிட்டு patient’s laundry binல் போட்டுவிட்டு room freshner தெளித்து, மறுபடி குளிக்க சென்றாள்.

குளித்து வந்து இருட்ட தொடங்கியிருந்த வானத்தை பார்த்தப்படி அமர்ந்தாள் அஞ்சனா. இன்று போல ஒரு சில வேலைகளில் எப்போதும் சூழ்ந்து இருக்கும் நிசப்தம் ஓங்கி இரைச்சலாய் ஒலிக்கும். Cacophony of silence, Iron curtain of Silence
இப்படி எல்லாம் சொல்லலாம் இந்த கணத்தை. அந்த பேரிரைச்சலான நிசப்த ஒலியை எப்படி அப்புறப்படுத்துவது என்று தெரியாது திணறி போனாள். என்ன சொல்வாள்! யாரிடம் பேசுவாள்! தனிமைகள் பழகினாலும், இது போன்ற கணங்களில் தேற்ற யாரும் அற்றுப்போகும் சமயம், வாழ்க்கையின் பொருள் மறந்து போகத்தான் செய்கிறது. Most of the days, she didn’t mind life’s reticence. She was used to it. But today she needed someone.

ஏனோ மனம் வெகுவாய் கனக்க, கண்மூடினால் கண்மணி முகம் நினைவில். எத்தனை தடிமனான உடையானாலும் நிமிடத்தில் கிழித்து முழு நிர்வாணமாகி, சருமம் முழுக்க நகத்தால் கீறி கொண்டு, மார்பு காம்புகளில் இருந்து வழியும் ரத்தத்தை தொட்டு தொட்டு நக்கிக்கொண்டு, செம்பட்டையாகி சிக்கான முடியின் ஊடே பார்க்கும் அந்த தொலைந்த கண்களோடு, அடர்த்தியான அழுக்கால் கருப்பாய் மாறி இருந்த சருமமும் கொண்ட அவள் மேல் அடிக்கும் வாடை ஒரு கலவை.. உணவு, மலம், மூத்திரம், அழுக்கு, ரத்தம், எச்சம் எல்லாம் கலந்து வந்தது நினைவிற்கு வந்தது. அவள் அருகில் சென்றதுமே மூக்கு தானாக சுருங்கும், கண்கள் லேசாக கலங்கும் அஞ்சனாவிற்கு.

கண்மணி... வயது 22. அஞ்சனாவிற்கு முன்பின் தெரியாதவளாய் இருந்து ஒரு இரவின் மூலம் பரிச்சயமானவள். அஞ்சனா House surgeon ஆக casualty பிரிவில் வேலை பார்க்கும் போது இரவு 3 அல்லது 4 மணிக்கு ஒரு மீன்பாடி வண்டியில் தூக்கி வந்தார்கள் சுயநினைவில்லாத கண்மணியை. எப்போதோ வெள்ளையாக இருந்திருக்கலாம் என்றது போன்ற நிறத்தில் இருந்த அழுக்கு வேட்டியை போர்த்தி கூட்டிவந்திருந்தார்கள் அவளை. கிராமத்தில் பார்க்கக்கூடிய ஒரு சராசரி பெண் தான். கடினமான வேலைகள் செய்து பழகியிருந்ததால் ஒல்லியாக ஆனால் திடமான உடல்வாகு. கருத்த நிறம். எண்ணைப்போட்டு படிய காலையில் வாரி பின்னலிட்டிருப்பாள் என்பது போன்ற கலைந்த ஜடை. தெளிவான முகம் அங்கங்கே நகக்கீறல், ரத்தம் வழிந்தபடி.

Stretcher தள்ளிக்கொண்டு போகும் முருகனோடு, இன்னொரு ward boy போய் மீன்பாடி வண்டியில் இருந்து மாற்றி, கண்மணியின் மேல் ஒரு பச்சை பெட்ஷீட் போர்த்தி அவளை cubicle உள்ளே அழைத்து வந்தார்கள். அஞ்சனாவோடு CMO ஜெயலட்சுமி மேடமும், நர்ஸ் வள்ளியும் இருந்தார்கள். அவளை பெட்டிற்கு மாற்றிவிட்டு இருவரும் வெளியே சென்றார்கள், கூப்பிட்டு வந்தவர்களிடம் பணம் ஏதாவது பிடுங்கமுடியுமா என்று பார்க்க.

ஜெயலட்சுமி சலித்துக்கொண்டாள், ``இந்த நேரத்தில MLC (Medico legal case). இதுக்கே நேரம் ஆகப்போகுது. சே!`` என்று. மேலே போர்த்தியிருந்த பெட்ஷீட்டும், வேட்டியும் எடுக்க உடல், உடுப்பு முழுக்க சகதியும், அங்கங்கே தென்படும் முள்புதரின் இலைகளும், முள்ளும் ஒட்டிக்கொண்டிருந்தது. அங்கங்கே சருமத்தை துளைத்துக்கொண்டிருந்த முட்களை Forceps கொண்டு எடுத்தார்கள். உடையை லேசாக நீக்க, வெறிநாய்கள் கடித்து குதறியது போல அங்கங்கே பல்லால் கடித்து, கன்றி போய், நகக்கீறலோடு லேசாக ரத்தம் வடிய இருந்தது. மெதுவாக உடைகளை கழற்றி பார்க்கையில் அங்கு இருந்த மூன்று பெண்களும் திடுக்கிட்டு போனார்கள். மார்பு, வயிறு முழுக்க நகக்கீறல்கள். சுயநினைவின்றி கண் சொருகி கிடந்தவளின் BP அத்தனை குறைவாய் இருந்தது. Looked like she was going into circulatory shock.

மருத்துவக்கல்லூரியின் இறுதி ஆண்டு படிக்கும்போது, எல்லா மாணவர்களுக்கும் ward posting போடுவார்கள். தினமும் காலையில் வார்டிற்கு சென்று நோயாளிகளை பார்க்கவும், case presentation செய்யவும் வேண்டும் consultants இடம். அப்படி போடப்பட்ட அவளுடைய முதல் posting Obstetrics & Gynaecology (மகப்பேறு மற்றும் மகளிர்நலம் சம்பந்தமான துறை). Labour wardல் இத்தனை மணிக்கு இருக்கவேண்டும் என்று போட்டிருந்த அந்த காகிதத்தை தூக்கிக்கொண்டு அவளும் இன்னும் 8 பேரும் உள்ளே நுழைய, அங்கே அடித்த அந்த நீச்சவாடை இப்போதும் அவளால் மறக்கமுடியவில்லை. அங்கு இருந்த House surgeon தெய்வா அக்காதான் கூட்டிச்சென்றார்கள் அந்த பிரசவ அறையுள்.

வரிசையாக போடப்பட்டிருந்த ஒரு 25 ஸ்டீலால் ஆன உயரக்கட்டிலில், 20 பெண்கள் படுத்திருந்தார்கள். இடுப்புக்கு கீழே உடைகளின்றி, மேலே போர்த்தியிருந்த பச்சை கலர் hospital gownல் வெவ்வேறு stages of labourல் Lithotomy positionல் படுத்திருந்ததையும், சில பெண்கள் பிரசவித்து முடித்தும், சில பெண்கள் பிரசவிக்க தயாராகவும், சிலர் பிரசவித்து நஞ்சுக்கொடி வெளியே வர, சில பெண்கள் வலியில் முனகியப்படியும் இருக்க, சில குழந்தைகள் அங்கங்கே அழுதுக்கொண்டு இருக்க, நர்ஸ்கள் குறுக்கும் நெறுக்குமாக நடக்க, அஞ்சனாவிற்கு அந்த காட்சி குமட்டியது. அந்த இடத்தில் நிற்கவே பிடிக்கவில்லை. அத்தனை பெண்கள் அரை நிர்வாணமாக, பிறப்பறுப்பை காட்டியபடி வலியோடு துடித்துக்கொண்டு இருப்பதை பார்த்த கொஞ்சம் நேரத்திலேயே அவளுக்கு தலை சுற்றிக்கொண்டுவர, காலுக்கு கீழே பூமியே இல்லாதது போல தோன்றியது. அங்கு இருந்து வெளியே வந்தவளுக்கு அதற்கு பிறகு இந்த posting பழகி போனது என்றாலும், அவளால் இதை தொடர்ந்து செய்யமுடியவில்லை. பொதுவாக பெண்கள் O&G எடுத்தால் நன்றாக இருக்கும் என்பார்கள். ஆனால் அவள் சந்தித்த மகப்பேறு மருத்துவர்கள் பெரும்பாலும் சிடுசிடு என்று பிரசவ வலியில் துடிக்கும் பெண்களிடம் இன்னமும் ``வள்`` என்று எரிச்சலாய் பேசியதும் அவளுக்கு அந்த துறை பிடிக்காது போக ஒரு காரணமாக இருந்து இருக்கலாம்.

அஞ்சனாவிற்கு Labour ward posting போவதற்கு பிடிக்காது போனது இது போன்ற காட்சிகளால் தான். அந்த இரவு casualtyல் கண்மணியின் துணியை கழற்றிப் பார்த்தப்போது, மென்மையான அந்த பிறப்புறுப்பு ரத்தசகதியில் குழம்பி, கிழிந்து தொங்குவதை பார்த்து அஞ்சனாவோடு அந்த இருவரும் கூட விக்கித்துப்போனார்கள். Medico legal case ஆதலால் police வந்து F.I.R போட்டு, எல்லா formalities முடிந்தப்பிறகே சிகிச்சை கொடுக்கமுடியும். அறுவை சிகிச்சை நிபுணர் வரவழைக்க பட்டு, அந்த இடத்தை தைத்து முடிக்க 5 மணிநேரம் ஆனது. 4 பாட்டில் ரத்தம் ஏற்றி, IV fluids கொடுத்து அவளை ஒரு போல stabilise செய்துமுடிக்கும்போது காலை மணி 10 ஆகியிருந்தது. இதற்குள் நடந்த கதை என்ன என்று தெரிய முயற்சிகள் நடந்தது.

கண்மணி சிதம்பரத்தை ஒட்டிய ஒரு கிராமத்தில் இருந்து தினமும் வேலைக்கு சென்று திரும்புவாளாம். தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவள். அவளுடைய கிராமத்தில் இருந்த ஒரு மேல்ஜாதி பையனை காதலித்ததால், ஊரில் எத்தனையோ தகராறு நடந்தபோதும், அந்த பையனோ இவளோ இவர்கள் காதலில் இருந்து பின்வாங்காத காரணத்தால், இவள் வேலை முடித்து வரும் சமயம் காத்திருந்து, அந்த பையனுடைய ஜாதியை சேர்ந்த ஒரு 15 பேர் இந்த பெண்ணை முள்புதரில் வைத்து இப்படி சீரழித்துவிட்டு, அங்கேயே சாகட்டும் என்று விட்டு விட்டு போய்விட்டார்களாம். அந்த பக்கம் அவளை தேடிக்கொண்டு வந்த அவள் குடும்பத்தினர் கையில் இவளுடைய சாப்பாட்டு கூடை அகப்பட அந்த இடத்தில் தேட, அந்த சகதியில், முள்புதரில் இவளை கண்டெடுத்தார்களாம். மேல்சாதி ஆளுமை கீழ்சாதியை வேறு எந்த விதத்திலும் அங்கீகரிக்காத போது, பெண்ணுடல் என்று வரும்போது சாதி ஒட்டிக்கொள்வதில்லை போலும். அதுவும் பெண்ணிற்கு பாடம் புகட்ட தாராளமாக வன்புணர்ச்சியில் ஈடுபடலாம். தவறில்லை.

அடுத்த நாள் காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் ஒரு 30 பேரை கைது செய்ததாக சொல்லி, படங்கள் எடுத்துவந்தது, கண்மணியிடம் காட்டி அடையாளம் காட்ட கொண்டு வந்த படங்களை பார்த்த அஞ்சனாவிற்கு மனம் கொதித்தது. ஏதோ விடலைகள் செய்திருப்பார்கள் என்று யோசித்து பார்த்தால், அப்படி இல்லாது படத்தில் இருந்தவர்கள் அனைவரும் 28 முதல் 50 வயது வரை இருந்த ஆண்கள். பொதுவாக பார்த்தால் மஞ்சள் பையோடு அப்பாவியாக தென்படும் முகங்கள் தான் இந்த கொடுமையை நிகழ்த்தியிருக்கிறது. கண்மணிக்கு நினைவு திரும்ப 5 நாட்கள் ஆனது. கண்விழித்தப்போதும் அவளால் அவர்களை அடையாளம் காட்ட முடியாத நிலைக்கு போயிருந்தாள். She became a catatonic schizophrenic. உடை போட மறுத்தாள். உடலெங்கும் கீறிக்கொண்டாள். இருக்கும் இடத்திலேயே மலம் கழித்தாள். அதையே எடுத்து மேலே பூசிக்கொண்டாள். மாத்திரை மருந்துகள் சாப்பிட மறுத்தாள். She became extremely violent. எப்போதும் தூங்க மருந்து கொடுத்து அரைமயக்கத்தில் வைத்தாலே ஒழிய அவளை சமாளிக்க முடியாது போனது. அவளை இந்த கதிக்கு ஆளாக்கினவர்கள் யாரென்று அடையாளம் தெரியாமல் போனதால் அந்த ஆட்களை எல்லாம் காவல்துறை விடுதலை செய்ததாய் சொன்னார்கள். கண்மணியை அவர்கள் வீட்டில் இருந்து வந்து ஏதோ கோயிலுக்கு அழைத்து சென்று பச்சிலை கொடுத்தால் சரியாகும் என்று சொல்லி கூட்டிக்கொண்டு போய்விட்டார்கள். அவளை பற்றி அஞ்சனா சிதம்பரத்தில் இருந்து கிளம்பும் வரை ஒரு தகவலும் இல்லை. கண்மணி என்ன ஆனாள், உயிரோடு இருக்கிறாளா, குணமாகினாளா, அவள் காதலனோடு சேர்ந்தாளா அஞ்சனாவிற்கு தெரியாது.

மனம் குழம்பி வருந்தி நிற்கும் நேரம் யாராவது தேடுவோம். அஞ்சனாவும் தேடினாள். மணி இரவு 10 ஆகியிருந்தது. இருட்டிலேயே அமர்ந்திருந்த அவள் பக்கத்தில் இருந்த தொலைப்பேசி அழைக்க, அதில் டேமியன் அவளை கூப்பிட்டுக் கொண்டிருந்தான். தொலைப்பேசி எடுத்தவளுக்கு ஒன்றுமே சொல்லத்தோன்றாது ஏனோ அழுகை வர, முதன்முதல் டேமியன் குரல் கேட்டு உடைந்து அழத்தொடங்கினாள்.

- தொடரும்.

- யமுனா ராகவன்.

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com