பத்து தினங்களுக்கு முன் என் மகள் சென்னை வந்திருந்தாள்.7 வயது.சென்னைக்கு அவளின் முதல் வருகை. அவள் வந்ததில் இருந்து கலைஞர் தாத்தாவை பார்க்கக் கூட்டிட்டுப் போ என்று கேட்டுக் கொ்ண்டே இருந்தாள்.நம்மை எல்லாம் விட மாட்டார்கள் என்று எத்தனையோ முறை நான் சொல்லியும் அவள் கேட்பதாய் இல்லை.
”அப்பா, நீ அவங்க வீட்டுக்கு கூட்டிட்டுப் போ, தாத்தா ரொம்ப நல்லவர், கண்டிப்பா பார்ப்பார்” என்று அவளின் வாதத்தை வைத்துக் கொண்டே இருந்தாள்....
அவரை ஏன் பிடிக்கும் என்ற ஒற்றைக் கேள்விக்கு நிறைய பதில்கள்அவளிடம் இருந்தன. அவள் சொன்ன பதில்கள்- அவர் நல்ல க்ண்ணாடி போட்டிருக்கிறார், அவர்தான் தமிழ நாட்டை பாத்துக் கொள்கிறார். தீவிரவாதிட்ட இருந்து ந்ம்மை பாதுகாக்கிறார். பாவம் அவரால நடக்கக் கூட முடியலை. பாவம் ரொம்ப வயசாயிடு்ச்சு, அவருக்கு எல்லாரையும் பிடிக்கும். - இப்படி பல விசயங்கள் சொன்னாள்....
என்ன சொல்லி நான் அவளிடம் புரிய வைக்க.பதில் சொல்லி சமாளிக்க முடியாமல் கோபலாபுரம் அழைத்து வந்தேன். அவர் வீட்டுத் தெருவின் ஓரத்தில் இருந்து காட்டினேன்.போலிஸ் பாதுகாப்பிற்காய் நின்றது அவளுக்கு பயத்தை தந்தது. அப்பா, பாவம் தாத்தாவை போலிஸ் பிடிச்சிருச்சுப் போல, நல்லா அடிப்பாங்களாப்பா, பாவம் பா தாத்தா, நாம போயிடலாம்ப்பா அப்புறம் நம்மையும் பிடித்துவிடுவாங்கப்பா என்றாள். ஆமாம் என்று சொல்லி கிளப்பினேன் அவளை அங்கிருந்து.
அவளின் பயம் நிஜமானல் அது என் இனத்திற்கு எத்தனை நலம் என்பதையும்,
அவளைப் போலவே தமிழகத்தில் ஏனையோரும் அவரை நேசிப்பதின் பயங்கரத்தை அவளிடம் சொல்லி விளங்கவைக்கமுடியாத என்பதையும் நினைத்தவாறு பைக்கை செலுத்தினேன்.
அவளின் வயதுச் சிந்தனை அளவுதான் தமிழக மக்களின் சிந்தனையும் இருக்கிறது என்பதை எனக்குக் காண்பித்துக் கொடுத்தாள் அன்றைக்கு என் மகள்.
இயக்குநர் ராம்
April 5, 2010
தொடர்பு
படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com

