மிக சரியாக சொன்னால் எனக்கு வயது இருபத்தி மூன்றுதான் ஆகுது. என் பெயருக்கும் இந்த கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லாததால் அதை தவிர்த்துவிடுகிறேன் அதையும் மீறி உங்களுக்கு நீங்கள் இந்த கதையை படிப்பதற்கு வசதியாக ஒரு பெயர் தேவைப்படும் எனில் மிக தைரியமாக உங்களுக்கு பிடித்த ஒரு பெயரை என் மீது நிரப்பிக்கொள்ளுங்கள். தைரியம் இல்லாதவர்கள் நீங்கள் பால்கனியில் அமர்ந்து தேநீர் அருந்துவதை வேடிக்கை பார்த்தபடி சாலையில் நடந்து செல்லும் ஒருவனாக என்னை நினைத்துக்கொள்ளுங்கள்.
நான் ஒரு ஏமாற்றுக்காரன், நான் ஒரு பொய்யன், நான் ஒரு இதயமில்லாதவன், நான் ஒரு பெண் பித்தன் இப்படியெல்லாம் குற்றம் சுமத்தப்பட்டு என் பெண் தோழிகளால் என் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த ஒரு தர்மசங்கடமான நாளில்தான் திருச்செந்தூர் கோவில் கடற்கரைக்கு வந்து ஒதுங்கினேன்.
அது யாருக்கும் பிடிக்காத ஒரு மதியவேளை ஆங்காங்கே அந்த உப்பு வெயிலோடும் கடலோடும் சந்தோசமாய் விளையாடி கொண்டிருப்பவர்களை பார்க்கவே கூச்சமாக இருந்ததால் நாளிகிணறு செல்லும் பாதையின் சுவரில் நிழலோடு கொஞ்சம் பாதுகாப்பாய் இருந்த போதுதான் அவளை பார்த்தேன். அய்யா கோவிலுக்கும் செந்திலாண்டவர் கோவிலுக்கும் இடையில் ஆட்கள் குறைவாக இருந்த இடத்தில் முழு கடலையும் பார்த்தவாறு யாருடனும் பேசாமல் தனியாய் நின்றிருந்தவள் தன் கால்களால் மணலை கிள்ளி அள்ளி கடலுக்குள் வீசியபடியும் காற்றில் பறக்க முயலும் தன் துப்பட்டாவை ஒரு கையால் பிடித்தபடியும் வெகுநேரம் நின்றிருந்தாள்.

கொஞ்சநேரம் பார்த்து பேசி நெடுநாள் பழக வேண்டிய அழகுதான் அவளுக்கு அன்று ராம்பாப்புலர் பேருந்தில் கோபத்தோடு பார்க்கும்போதே தெரிந்தது அவள் கண்கள் கனவில் வரக்கூடிய கண்கள் தான். ஆம் இதற்கு முன்னால் நான் அவளை ஒருமுறை ஒரே ஒருமுறை ராம்பாப்புலர் பேருந்தில் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர்க்கு ஜோதியுடன் வரும்போது பார்த்திருக்கிறேன். அன்று பேருந்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி தன் பெருத்த மார்புகளின் மீது கை வைத்தான் என்று பேருந்து நடத்துனரை செருப்பால் அடித்து அவன் ஆடைகளை ஆக்ரோசமாய் கிழித்தெறிந்தவள் தான் இவள்.
தனியாக இருக்கும் அவளிடம் தனியாக இருக்கும் நான் பேச வேண்டும் என்று நினைத்தது என்னை பொறுத்தவரை தப்பில்லைத்தான்.
”எப்படி இருக்கிங்க சுதா”.
”என் பெயர் சுதா இல்ல”.
”எனக்கு சுதா என்ற பெயரில் இதுவரை தோழிகள் இல்லை ஆதலால் உங்கள் பெயர் சுதாவாக இருந்தால் எனக்கு சந்தோசம்”.
”நீ யாரு”.
”உங்களிடம் அடிவாங்காமல் தப்பித்தவர்களில் ஒருவன்”.
”புரியல”.(எந்த அதிர்ச்சியும் இல்லாமல் இருந்தது அவள் கண்கள்)
”அந்த ராம்பாப்புலர் பஸ்ல நானும் உங்க அழக ரசிச்சேன்”.
“அப்பாவிகள் மீதும் கோழைகள் மீதும் நான் கோபபடுவதில்லை”
“நான் கோழையா அப்பாவியா” என்று நான் வேகமாய் கேட்டதும் கொஞ்சம் தூரமாய் நடந்து போய் என்னை தவிர்க்க நினைத்தவளிடம் மறுபடியும் பேசாமல் என்னால் இருக்க முடியவில்லை.
”நான் பேசுவது உங்களுக்கு தொந்தரவா இருக்கிறதா”
”நீ யாரு என்னை தொந்தரவு செய்ய”
“இந்த நேரத்துல அதுவும் தனியா கடற்கரைக்கு வந்திருக்கீங்க”
“ஏன் கடற்கரைக்கு தனியாய் வருவது ஆம்பிளைத்தனமா”
“இருக்கலாம். இங்கு உங்களை தவிர வேறு எந்த பெண்களும் தனியாக இல்லையே”

இதற்கு அவள் எந்த பதிலும் சொல்லவில்லை. கலைந்து காற்றின் எல்லா திசைகளிலும் பறந்த தன் முடிகளையும் துப்பட்டாவையும் பிடிப்பதில் கவனமாய் இருந்தவளின் மணலில் புதைந்து போன அவளின் பர்சை தேடி கண்டுபிடித்து கொடுத்தப்போது நன்றி சொல்லாமல் சின்னதாய் சிரித்து வேகமாய் கூட்டத்தை பார்த்து நடக்கத் தொடங்கியவளிடம் கொஞ்சம் சத்தமாய் கேட்டேன்.
“உங்கள் பெயரை இப்போதாவது சொல்லலாமே” என்று. அவளும் திரும்பிபார்த்து சத்தமாய் நடந்தபடியே சொன்னாள்.
“சுதா என்றே வைத்துக்கொள். நானும் சுதா என்ற பெயரில் ஒருநாளும் வாழ்ந்ததில்லை” வேகமாய் கூட்டத்தோடோ கடலோடோ கலந்து காணாமல் போனாள்.

சுதா, இனிமேல் அவள் உண்மையான பெயரை கேட்ககூடாது அவள் எனக்கு கிடைத்த முதல் சுதாவாகவே இருக்கட்டும் ஆனால் நாளைக்கு அவள் வருவாளா, இன்று எதற்கு வந்தாள். எங்கு போனாள் யார் இவள். இவளை பார்க்க நான் ஏன் அலைய வேண்டும். சரி அவள் கண்கள் அப்படி அழகானதாக இருந்தாலும் கொஞ்சமும் மதிக்காத ஒருமையில் பேசி என்னை இழிவுசெய்யும் இவளை ஏன் நான் மறுபடி சந்திக்க வேண்டும்.ஆம் சந்திக்ககூடாது.
மறுநாள் அதே இடத்தில் அவளுக்காய் வெகுநேரம் காத்திருந்தேன். அவள் வரவில்லை.கொஞ்சம் கோபமாய் கிளம்பும்போதுதான் பார்த்தேன் தெற்குதிசையில் கடலை நோக்கி தன் செருப்புகளை வீசி எறிந்து விளையாடியபடி இருந்தாள்.
”எப்ப வந்தீங்க……நீங்க தினமும் வருவீங்களா”
”இன்னைக்கு காலையிலே வந்துட்டேன்.நீ வேர்கடலை வாங்கி தின்னதை பார்த்தேன்”
”அப்ப எதுக்கு என்னை கூப்பிடவில்லை”
“உன்னை எதுக்கு நான் கூப்பிடனும்.
“உன்னை பார்க்கத்தான் நான் வந்தேன்”
“ஆனால் நான் உன்னை பார்க்க வரவில்லை”
கொஞ்சம் கூட அவள் என்னை மதிக்கவில்லை அவளின் முழு கவனமும் அந்த செருப்பை தூக்கி கடலில் எறியும் விளையாட்டின் மீதே இருந்தது அந்த செருப்புகள் புது செருப்புகளாய் இருந்தது.

“நேத்து உன் கனவில் நான் வந்தேனா” (திடீரென்று அவள் தான் கேட்டாள்)
“ஆம். உனக்கு எப்படி தெரியும்”
”தெரியும்”
நான் எதுவும் பேசவில்லை. அவள் நான் எதிர்பார்த்தது போலில்லை அவள் என் எல்லா பெண் தோழிகளையும் விட முற்றிலும் வேறுபட்டவாளாய் இருந்தாள். அவள் என்னிடம் அத்துமீறினாள் எனக்கு அடிமையாக மறுத்தாள். அவள் கீழ் உதடு பெருத்திருந்தது அவள் கண்கள் என்னை இழிவாக பார்த்தது. பேசாமல் இருக்கும்போது அசிங்கமாகவும் பேசும்போது மிக அழகாகவும் அவள் தெரிந்தாள்.
“மன்னிக்கவும் நான் உன்னை பார்க்க வரவில்லை, என் தோழி சுதாவை பார்க்க வந்தேன்”
(அவள் சிரித்தபடி) “இதுவரைக்கும் எத்தனை பொம்பளக்கூட படுத்திருக்க”
“ஏய் என்ன நினைச்சுகிட்டு இருக்க உன் மனசுல ரொம்ப ஓவரா பேசுற……பொம்பள புள்ள மாதிரி பேசு”
“எதுக்கு கோபபடுற நீ சுதாகிட்ட ரொம்ப நாள் பேசி ஒரு தோழனா பழகி அவள் நெற்றியில் திருநீறு பூசிவிட்டு உன் கையை எடுத்து அவளுடைய வலது தோள்ல போட்டு நீ கேக்கப்போற கேள்விதானே இதுவரைக்கும் எத்தனை ஆம்பிளைங்ககிட்ட படுத்திருக்க அதுதான் நானும் கேட்டேன்”
என்று கூறி அலட்சியமாய் கொஞ்சம் மணலை அள்ளி தன் முகத்தில் பூசிகொள்ள அவள் தொடங்கிய போதுதான் அவளிடம் சொல்லாமல் கொள்ளாமல் வேகமாய் கிளம்பிபோனேன். இனி நான் இவளை பார்க்க கூடாது இவளை நினைக்ககூடாது. ஐயோ இவள் மனநிலை பாதிக்கபட்டவளாக கூட இருக்காம் என்று.

அதன்பிறகு ஒரு வாரம் நான் கடற்கரைக்கு செல்லவில்லை அவளை பார்க்கவுமில்லை. அன்று அம்மாவோடு மார்க்கெட்டுக்கு போயிருந்தேன். அங்கு அவளை நான் மட்டுமல்ல ஊரே வேடிக்கை பார்த்தது. அவளைவிட இருபது வயது மூத்த ஒரு காய்கறி வியாபாரியின் சட்டையை பிடித்து அவனோடு சண்டை போட்டுகொண்டிருந்தாள் கேவலமான வார்த்தைகளால் அவனை திட்டி கொன்று தின்றுவிட முயன்றுகொண்டிருந்தவளை பார்க்காததுபோல நான் வந்தாலும் அன்று என் இரவில் புது செருப்புகளை தூக்கி எனக்கான என் பெரும் கடலுக்குள் மறுபடியும் வீசி எறிய அவள் தொடங்கியிருந்தாள்.
அவளை பார்க்க வேண்டும் என்றுதான் கடற்கரையை நோக்கி போய்கொண்டிருந்தேன் ஆனால் திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் ஒரு டீக்கடையில் கண்ணாடி டம்ளரில் டீ அருந்தி கொண்டிருந்த அவளை நானும் பார்த்துவிட்டேன் அவளும் என்னை பார்த்துவிட்டாள். சிரிக்காமல் கேட்டாள்
“நேத்து மார்கெட்டுக்கு வந்தே போல”
“ஆமா நேத்து எதுக்கு அந்த கூட்டத்துல அவ்வளவு பெரிய ஆளை அடிச்ச”
“அடிக்கிறது ஆம்பிளைதனமாடா”
“அதைவிடு நீ எதுக்கு அடிச்ச”
“தக்காளி என்ன விலைன்னு கேட்டேன் மாங்காய் சூப்பரா இருக்குன்னான் பல்ல இளிச்சிகிட்டு… அதுதான் அடிச்சேன் ஆனால் அடிக்கனும்முனு நினைக்கல கொல்லனும்தான் நினைச்சேன்”
இனிமேலும் இவளோடு சகவாசம் வைத்துக்கொள்ள கூடாது அதில் எந்த பயனும் இருக்க போவதில்லை இவள் யாருக்கும் தெரியாத முதலும் கடைசியுமான சுதாவாக இருக்கட்டும் கிளம்பாலாம் என்று நான் வேகமாய் நகர்ந்தபோதுதான் கேட்டாள்.
“உன் பெயரென்ன”
“உனக்கு எந்த பெயர் பிடிக்காது”
“ராமர்”
“ஓ!அப்படியா ஒருவேளை என் பெயர் அதுவாக கூட இருக்கலாம்”
“ராமர் இன்னைக்கு எங்க வீட்டுக்கு வர்றீயா” அப்பாவிதனமாக கண்ணீரை தேக்கி வைத்துக்கொண்டு அவள் கேட்பதை போல இருந்தது எனக்கு.

வீரபாண்டியபட்டிணத்திற்கு முன்னால் குடிசைகள் நிறைந்த தெருவில் இருந்த பத்து ஓட்டு வீடுகளில் ஒரு வீடு அது. நிறைய பாலீத்தீன் கவர்களும் பேப்பர் டம்ளர்களும் சிதறி கிடந்தது அந்த வீட்டின் நடு அறையில். ஆங்காங்கே சிகெரெட் துண்டுகளும் கிடந்தது.
“நீ சிகரெட்டும் குடிப்பியா சுதா”
“ஏன் சிகரெட் குடிக்கிறது ஆம்பிளைத்தனமாடா”
“இருக்கலாம்”
“அப்ப நீ குடிச்சி நான் பார்த்ததேயில்லையே”
“எனக்கு அது புடிக்காது”
“எனக்கு அது புடிக்கும்”
“அப்படடீன்னா நீ சரக்கு கூட அடிப்ப போலிருக்கு”
“ராமர் ஊத்திகொடுத்தா எந்த சீதையும் அடிப்பா”
“சரி உங்க வீட்ல யாருமில்லையா என்னை எதுக்கு கூப்பிட்ட”
”தெரியல வீட்டிற்கு ஒத்தையில வர பயமா இருந்துச்சு அதுதான்”
“உனக்கு பயமா நீதான் வீரமான பெண்ணியவாதி ஆச்சே”
ஆச்சர்யமாய் பார்த்தாள் அந்த துப்பட்டாவை எடுத்து அந்த உடைந்த கதவின் மீது போட்டுவிட்டு அந்த வில்லங்கமான மார்புகளை குலுங்கவிட்டு வேகமாய் அருகில் வந்து கேட்டாள்.
”நானா பெண்ணியவாதி இங்க பாரு ஒரு நாள் கூட என் உதட்டுல லிப்ஸ்டிக் போட்டதில்லை”
“சரி நான் கிளம்புறேன்”
”இன்னைக்கு யாரும் வரமாட்டாங்க ராத்திரிக்கு இங்க தங்கிறீயா”
“எதுக்கு உன் துணைக்கா”
“இல்ல உன் சந்தோசத்துக்கு…உன் சுதாவோடு நீ நிறைய பேசலாம் அவளின் தொடைகளின் மீது உன் பற்களால் ஒரு மிருகத்தை போல கடித்துவிட்டு sorry கேட்காமல் இருக்கலாம், மின்சாரம் தடைப்பட்ட நேரத்தில் தீப்பெட்டி தேடுவதாக சொல்லி சுதாவின் மார்பகங்களை தொட்டு பார்க்கலாம், சுதா மறுப்பு தெரிவித்தாளோ கத்தி கூச்சல் போட்டாளோ சிகரெட் பற்றவைத்து சுதாவின் ஜனனக்குழியில் சுட்டு உன் பிறவிப் பயனை நீ அடைந்துவிடாலாம். விடிந்ததும் சுதா இறந்து கிடப்பாள் நீ ராமராய் உத்தமனாய் உன் மாளிகைக்கு போய்விடலாம்”

வேகமாக கிளம்பினேன். இனி ஒரு நிமிடம் தாமதிக்க முடியாது. அவளும் என்னை தடுத்து நிறுத்தவில்லை மாறாக சத்தமாய் சிரித்தாள்.அவளின் வாசற்கதவை தாண்டி நான் வந்ததும் அவள் கதவை வேகமாக சாத்திக்கொண்டாள். நான்கு குடிசைகளை தாண்டியிருப்பேன் திடீரென்று ஞாபகம் வந்து அவள் வீட்டில் நான் மறதியாய் விட்டு வந்த என் புத்தகம் ஒன்றை எடுப்பதற்காய் மறுபடி போய் அவள் கதவை தட்டினேன். கொஞ்ச நேரம் கழித்தே கதவு திறந்தது. அவள் உள்ளாடைகளுடன் மட்டுமே நின்றாள்.நான் அசையாமல் வேர்த்து விறுவிறுத்து நின்றேன்.
“என்ன வேனும்”
“புக்கை வைச்சுட்டு போய்ட்டேன் எடுக்கனும்”
”போய் எடுத்துக்கோ” என்று எந்த சலனமும் இல்லாமல் அவள் அடுத்த அறைக்குள் போக நான் ஓட்டமும் நடையுமாய் வீடு வந்து சேர்ந்தேன்.
அதன்பிறகு பத்து நாள் ஆகிவிட்டது அவளை பார்த்து அவளை நினைக்கவே பயமாய் இருந்தது. ஆட்டோ ஸ்டாண்டுக்கு பக்கத்துல இருக்கிற டீக்கடையில டீ குடிக்கும்போது நண்பன் ஒருத்தன் செய்திதாளின் ஒரு செய்தியை சத்தம்போட்டு படித்தான்.“திருச்செந்தூரில் பெற்ற தாயை அரிவாள்மனையாள் வெட்டிகொன்ற கல்லூரி மாணவி. மனநோயால் பாதிக்கபட்டவரா? போலிஸ் விசாரணை.”

செய்திதாளை பிடுங்கிகொண்டு அவளோடு நின்று பேசிய இடத்தில் நின்று மறுபடியும் வாசித்தேன் “திருச்செந்தூரில் பெற்ற தாயை அரிவாள்மனையாள் வெட்டிக் கொன்ற கல்லூரி மாணவி. மனநோயாளியா போலிஸ் விசாராணை”
அந்த புகைப்படம் இல்லாத செய்தியில் மேலும் நான் தெரிந்துகொண்டது தாயைக் கொன்றவளின் பெயர் மகாலெட்சுமி. வயது 25. ஒருவேளை அது சுதாவாக இருக்குமோ? இருக்கலாம்.இல்லாமலும் இருக்கலாம். ஒருவேளை நீங்கள் பாதுகாப்பாக அடக்க ஒடுக்கமாய் உங்கள் வீட்டுக்குள் வளர்த்துவரும் எத்தனையோ மகாலெட்சுமிகளில் ஒரு மகாலெட்சுமியாக கூட அது இருக்கலாம். கடலுக்குள் புதுசெருப்புகளை விட்டெறிகிற எந்தப் பெண்ணாகவும் கூட அது இருக்கலாம்.

- மாரிசெல்வராஜ்