பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

April 30, 2010

சுமதி கவிதைகள் 16



சுமதியின் கவிதைகள் காட்சியில் தொடராய் பிரசுரமாகிறது.இவரின் ஏனைய கவிதைகளுக்கு இங்கே சொடுக்கவும்.


பெண்களின் புத்தகங்கள்

எங்கள் புத்தக அலமாரியை,
புத்தகங்களை
பயன்படுத்துகின்றவர்களின்
கவனத்திற்கு


மூடிய கண்ணாடி அலமாரிக்குள்
அவர்கள் சலனமின்றி நடக்கிறார்கள்.
அவர்களை முன்னோ பின்னோ
கீழோ மேலோ மாற்றியமைக்கும்
உரிமை உங்களுக்கு இல்லை.
ஏனெனில் எங்களுடையது ஆயினும்
அவர்கள் எங்களைப் போன்றவர்
இல்லை என்பதை அறியுங்கள்.

அரித்து திண்ணும் பூச்சிகளையும்
தூசிகளையும் அணுக விடாமல்
பாதுகாப்பதற்காய் கவனமாக
மூடிவிடுங்கள் என்பதை
உங்களுக்கு நினைவூட்ட தேவையில்லை.
பாதுகாப்பதும் பாதுகாப்பின்
முகம் அணிந்து உலாவும் பலவும்
உங்கள் தொழில் என்பது எங்களுக்குத் தெரியும்.

சில நண்பர்கள் கிடைக்கப்பெற்றேன்.
அவர்கள் மேல் வரிசையில்
வலப்பக்கம் நிற்கிறார்கள்.
என் மீதான சிரத்தையுடனும்
நேசத்துடனும் அவர்களிடம்
நீங்கள் நடப்பீராயின்
குழந்தைகளின் மெதுமெதுகன்னமாய்
உங்கள விரல்களில் இருந்து
கொடும் கிள்ளல்களை
அப்புறப்படுத்துவார்கள்.

ஒத்துப்போக நேர்கையில்
புதிதாய் தோன்றையில்
வண்ண மைகளையும்
கார்பன் குச்சிகளையும்
பயன்படுத்தி கைகுலுக்காதீர்
தயைவு செய்து.

எங்களைப் போல்
அவைகள் வன்புணர்ச்சிக்கு இன்னும்
பழக்கப்படவில்லை.

- சுமதி

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com