பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

April 23, 2010

ரயில் கவிதை - தனசேகர்

"காட்சி"க்கு ரயில் அனுபவங்களை  எழுத்தாளர்களிடமும் உறுப்பினர்களிடமும் கேட்டிருந்தோம். பலரது ரயில் காட்சியில் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த ரயில்களில் பயணிக்க  இங்கே சொடுக்கவும்.
http://kaattchi.blogspot.com/search/label/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D

இவ்வரிசையில் தனசேகரின் ஒரு கவிதை பிரசுரமாகிறது. இவர் ஜாக்கிசேகர் என்ற பெயரில் வலைப்பூ உலகத்தில் நெடுங்காலமாய் இயங்கிவருகிறார்.தமிழ்த்திரை  உலகத்தில் ஒளிப்பதிவுத்துறையில் பணியாற்றுகிறார்.








எங்கே போனார்கள்...

ரயில்
இன்னும் அதே தாள லயத்துடன்தான்
ஓடிக்கொண்டு இருக்கின்றது...

ரயில் பெட்டியின்
ஜன்னல் ஓர முனைகளில்
பாண்பராக்,சளி,எச்சில் துப்பல்களின்
மிச்சம்....

நடந்த போகும் பாதையை மட்டும்
ஒப்புக்கு பெருக்கி விட்டு,
கை கால் நன்றாக இருக்கும்
பிச்சைக்காரார்கள்...

கொலைபசியில்
இருக்கும் போது
சப்பாத்தியும், குருமாவை
வைத்து தின்று கொண்டு
சினேகபார்வை பார்க்காமல்
நக்கல் பார்வை பார்க்கும்
சேட் குடும்பம்....

சீட்டு விளையாட்டு
விளையாடாத பெட்டிகளை...
விரல்விட்டு எண்ணிவிடலாம்...

பெப்சியில் சரக்கும்
ஓட்காவும் கலந்த அடிக்கும்
ரகசியம் பிரசித்தி பெற்றுவிட்டது...

டாய்லெட்டில் ஆண் பெண்
குறி வரைந்து,
இந்தியாவின் எல்லா மொழிகளிலும்,
காம அரிப்பின் வெளிப்பாடு....

ஜன்னல் ஓர சீட்டுக்கு
இன்னமும் அடித்துக்கொள்ளும்
பெரியவர்கள் சிறியவர்கள்....


நெடுக்காலமாக
ரசித்து குடித்த காபி டீயை
வெறுத்து போக செய்யும் அளவுக்கு ,
ரயில் கேன்டீன்
வென்னீர் காபி, டீக்கள்...


இது போன்ற பலவிஷயங்கள்
ரயில் பயணங்களில்
இன்னமும் மாறவில்லை...
மாற போவதும் இல்லை...

மன பாராத்தோடு
ரயில் பெட்டியின் ஜன்னல் ஓரம்,
வெறித்த பார்வையுடன்
பயணிக்கையில்....

மனதில் உற்சாகம்
ஏற்படுத்தும் விதமாக,
வெள்ளை சிரிப்புடன்,
அரைநிர்வாண கோலத்தில்
கை காட்டிய அந்த குழந்தைகள்
எங்ககே போனார்கள்?????


(ஷுட்டிங் முடித்து சென்னைக்கு ஆலப்புழாவில் இருந்து, ரயிலில் சென்னை திரும்பிய போது ரயிலிலேயே எழுதியது....)

- தனசேகர்

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com