பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

April 17, 2010

தலைவர் பிரபாகரரின் தாயார் சென்னை விமானநிலையத்தில்-இயக்குநர் ராம்

வணக்கம்

வந்த தகவல் உறுதி

தலைவர் பிரபாகரின் தாயார் சென்னை விமான நிலையத்தில் இருந்து
வந்த விமானத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டார்.

இந்திய அரசும் கலைஞர் அரசும்
தமிழனத்தை மேலும் தலைய குனிய வைத்த மற்றொரு இரவு.


என்ன செய்வது எனத் தெரியாமல்
இச்செய்தியை உங்களோடு பகிர்கிறேன்.

என்ன செய்ய எங்கு போக யாரை கேட்க
அய்யோ என இருக்கிறது.

உலகத்தமிழ் மாநாட்டிற்கு உலகெங்கும்
வந்து குவிய இருக்கும் அக்கரைத் தமிழ் உலகமே

70களில் ஈழத்தில் நடந்த தமிழ் உலக மாநாட்டை மறந்து விட்டீர்களா?
என்ன நடந்தது என்பது மறந்தே போனாலும்
இவ்விசயத்தை முன்னிட்டாவது நீங்கள்
தமிழக அரசாங்கத்திற்கு செம்மொழி மாநாட்டைப் புறக்கணிக்கப் போவதாகக்
கடிதமாவது அனுப்புங்களேன், புறக்கணிக்கா விட்டாலும்

நான் விமான நிலையம் இப்போது செல்கிறேன்
தோழர்கள் பலர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள்
ஏதோ குறைந்த பட்ச எதிர்ப்பையாவது
பதிவு செய்ய முடியுமா என்று


இயக்குநர் ராம்.

17 ஏப்ரல் நள்ளிரவு 1::30

இது தொடர்பான அடுத்த செய்திக்கு இங்கே சொடுக்கவும்
http://kaattchi.blogspot.com/2010/04/blog-post_4140.html



ஈழம் தொடர்பான மற்ற கட்டுரைகளுக்கு இங்கு செல்லவும்

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com