பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

April 17, 2010

திருப்பி அனுப்பப்பட்டார் தலைவரின் தாய். - இயக்குநர் ராம்

சில மணி நேரத்திற்கு முன் தலைவரின் தாயார் இருந்த
மீனம்பாக்கம் விமானநிலையத்தின் முன்புறத்தை
நான் அடைந்த போது நள்ளிரவு 2 ஐத் தாண்டி விட்டது.

அவர் வந்த விமானத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டார்.
வயதான மூதாட்டியை, உடல் நிலை சரியில்லாமல்
வந்தவரை திருப்பி அனுப்ப என்ன அவசியம்?
மனிதாபிமானமற்ற காட்டுமிரண்டித்தனமான
செயல், இதற்கு நம் எதிர்ப்பை கூட பதிவு
செய்ய இயலவில்லையே என்ற ஆதங்கம்
அனைவரிடமும் இருந்தது

பல அமைப்பைச் சேர்ந்த சுமார் 25 தோழர்கள் இருந்தார்கள்.
எதுவும் செய்ய முடியாமல் இயலாமை கவ்வ, போக மனமில்லாமல்
விமான நிலைய  பார்க்கிங்கில் நின்றிருந்தார்கள்.

தலைவர்கள் திரு.பழநெடுமாறனும் திரு வை.கோ வும் உணர்ச்சி
மேலிட பேட்டிக் கொடுத்ததையும் அப்போதிருந்த சுமார் 300 தோழர்களும் உணர்ச்சி மேலிட கோசம் இட்டதையும் சொன்னனர்.

அப்பேட்டிகள் வெளியிடப்படுமா? இருட்டடிக்கப்படுமா?
அல்லது திரிக்கப்படுமா? என்ற அச்சம் அனைவருக்கும் இருந்தது,
நமக்காய் நாம் நம்பும்படி நம் குரல் ஒலிக்க ஒரு ஊடகம்
கூட இல்லையா என்ற வருத்தத்துடன்.

நாளை ஏதேனும் ஒரு எதிர்ப்புப் போராட்டத்தை
தலைவர்கள் நடத்தினால் கலந்து கொள்ள வேண்டும்
என்ற மனதுடன் அவர்கள் கிளம்பிய போது மணி 3.

தமிழ் பெயர் பலகைகள் நிறைந்த
மஞ்சள் வெளிச்சம் கொட்டும் அதிகாலைச்
சென்னை சாலையில் என் அறை நோக்கிப்
பயணித்தேன், என் வாகனம் ஓடும் இச்சாலை
இலங்கையோ என்ற சந்தேகத்துடன்..


குறிப்பு: 

இவ்விடுகையை பதிவு செய்கையில் sun news ல் அய்ரோப்பாவில் பாதிக்கப்பட்டிருக்கும் விமானப்போக்குவரத்தைப் பற்றியும்,  சென்னை கடற்கரையில் போலிஸார் வரம்பு மீறிய காதலர்களை பெற்றோரிடம் ஒப்படைத்தது பற்றியும் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

cnn ibn ல் சென்னையில் மருத்துவம் பார்ப்பதற்காய்த் தங்கியிருந்த தலைவர் பிரபாகரின் தாய் மலேசியாவிற்கு அனுப்பப்பட்டார் என flashnews ஒடிக் கொண்டு இருக்கிறது.

times now ல் lalit modis erratic it records தலைப்பு செய்தியாக ஓடிக்கொண்டே இருக்கிறது.

சேனல்களை மாற்றி மாற்றிப் பார்க்கிறேன் எதாவது செய்தி வராத என்று.
நீங்களும் பாருங்களேன்.

இயக்குநர் ராம்

இது தொடர்பான முந்தைய செய்திக்கு இங்கே சொடுக்கவும்
http://kaattchi.blogspot.com/2010/04/blog-post_17.html 


ஈழம் தொடர்பான மற்ற கட்டுரைகளுக்கு இங்கு செல்லவும்
http://kaattchi.blogspot.com/search/label/ஈழம் 

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com