பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

April 16, 2010

கனவு துரத்தியின் கால் சென்டர் நாட்கள் - க.ராஜ்குமார்


அறிமுகம்:க.ராஜ்குமார், 

தேனி மாவட்டம்,போடிநாயக்கனூர்.  
87ஆம் வருடம் பிறந்தவர். 
தற்போது சென்னையில் வாசம்.  
பொறியியலாளர்.


கனவு  துரத்தியின் கால் சென்டர் நாட்கள் - சிறுகதை

வணக்கம். நான் கனவு துரத்தி. உதவி இயக்குனராக சேர்ந்து ஒரு நாள் நல்ல சினிமா எடுக்க வேண்டுமென்பது என் கனவு. சென்னையில் தனியார் பொறியியல் கல்லூரியில் 4 வருடம் படித்து 28 அரியர்களுடன் முடித்தேன். எனக்கு பிடித்தமான இயக்குனரின் கதவை என் கல்லூரி நாட்களிலிருந்தே தட்டிக் கொண்டிருந்தேன், மற்ற இயக்குனர்களிடமும் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தேன். நாட்கள் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தன. வீட்டிலிருந்து நான் காசு கேட்பதில்லை, இருந்தாலும் அவர்களாகவே மாதாமாதம் 1000 அல்லது 1500 எனது வங்கிக் கணக்கில் போடுவார்கள்.


 நாட்கள் வேகமாக ஓடிக்கொண்டிருந்தன. பகுதி நேர வேலை செய்யலாமென்று எனது resume-ஐ வேலை வாய்ப்புத் தளங்களில் போட்டு வைத்தேன். அடிக்கடி கால் சென்டரில் வேலை இருப்பதாக போன் வரும். அப்படி ஒரு அழைப்பு வந்தது.

"Hello am i speaking to Mr.Rajkumar?",அழகிய பெண் குரல்.

"yep this is he" என்றேன்.

“வேளச்சேரி ஆல்ஸெக் நிறுவனத்திலுருந்து நிஷா பேசுகிறேன். தற்சமயம் எங்கேயாவது வேலை செய்து கொண்டிருக்கிறீர்களா?” என்றாள் .“இல்லை இன்னும் தேடிக் கொண்டு தான் இருக்கிறேன் “என்றேன்.  “நன்று. இது அமெரிக்க செயல் முறை. இரவுப் பணி  செய்ய தயாரா?” என்றாள்
நான் வழக்கமாக தூங்கப் போவதே 2 மணிக்குமேல் தான், இவள் சொல்லும் அந்த நைட் ஷிப்ட் என்னுடய வழக்கத்தை விட 2 மணி நேரம் அதிகமாக விழித்திருக்க வைக்கும். 
“நிச்சயமாக” என்றேன்.
“உங்களுடய கல்வித் தகுதி?” என்றாள்”
"B.E, C.S.E" என்றேன்
“மொத்த சதவீதம்?”
70% மேலிருந்தால் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் என்னுடய percentage-ஐ நான் கணக்கிட்டதில்லை. 28 அரியர். அவற்றில் 20க்கும் மேற்பட்ட தேர்வுக்கு நான் ஒரு முறை கூட சென்றதில்லை. நான் அதை கணக்கிட்டதே  இல்லை. மொத்தம் 20க்கும் மேற்பட்ட அரியர்கள். என்றேன். அதிர்ச்சியான  குரலில் “என்ன?”“மன்னிச்சிடுங்க 3 அரியர்க்கு மேல இருந்தா வேலை கொடுக்க மாட்டோம்.” என்றாள். நான் 28 அரியர்  வச்சத்துக்கு நான் கூட அவ்ளோ வருத்ப்பட்டதில்லை.கால் பன்னதுக்கு நன்றி என்றேன்.
3 அரியர்க்கு மேல இருக்கக் கூடாது, 70%க்கு கீழேயும் இருக்கணும். இங்கிலீஷ் பேச தெரிஞ்சா போதாதா இவங்களுக்கு. என்ன லாஜிக் னே புரியல.

அப்றோம் ஒரு  நாள் அதே மாதிரியான கால்.அதே மாதிரியான கேள்விகள்.  ஆனால் “அரியர்லாம் ஒரு மேட்டரே இல்லை. நீங்கள் நாளையிலிருந்து வேளையில் சேர்ந்து கொள்ள தயாரா?”


கிண்டி D7 டெக்னாலஜிஸ்.
அப்போது சைதாப்பேட்டையில் தங்கியிருந்ததால் ரொம்பப்  பக்கம்.
சம்பளம்: 8000.


ஒரு மாசம் சம்பளம்  வாங்கிட்டு திரும்பவும்  உதவி இயக்குனர் வாய்ப்பு தேடி போகனுங்றது தான் என்னோட முடிவு.காலேஜ்-க்கு கூட  நான் ஸூ போட்டு போனதில்லை.  ஆனால்   முதல்  நாள் அங்க போகும் போது ஸூ போட்டு தான் போனேன்.100 பேர் உட்கார  கூடிய  ஒரு  பெரிய  தளம். கிட்டத்தட்ட 40 பேர் புதுசா  எடுத்தாங்க. அதுல நானும்  ஒருத்தன்.முதல் பத்து நாட்கள்  பயிற்சி, அப்ப தான் தெரிஞ்சது அது என்ன மாதிரியான வேலை-னு.Medication Refillment.

அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட மாத்திரைகளை, மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வாங்க முடியாத மாத்திரைகளை இங்கிருந்து விற்பனை செய்வது. வலி, எடைக்குறைப்பு ,மன அழுத்தத்தை குறைப்பதற்கான மருந்துகள் என்று பல இருந்தாலும் முக்கியமான மூன்று மாத்திரைகள் மேல் தான் நீங்கள் அதிக கவனம் செலுத்தி விற்க வேண்டும் என்றார் பயிற்சியாளர் மார்க், நிஜப் பெயர் பிரபு. அவை வயாகரா,லெவிற்றா, சியாலிஸ்.

அந்தப் பயிற்சியில்  மொத்தம் 22 பசங்க 18 பொண்ணுங்க. அதில் 10 பேர் சங்கி மங்கி  க்ரூப்ஸ்-னு சொல்லுவோம். எல்லாம்  நேபால் எல்லையிலிருந்து  சென்னை ஆதம்பாக்கத்தில் வசிப்பவர்கள். 
எல்லோரும் தொழில் பெயர் ஒன்று வைத்த்துக் கொள்ளும்படியாகச் சொன்னார்கள்.நான் எனக்கு பிடித்தமான வெளிநாட்டு இயக்குனர்களின் பெயரையும் (Christopher Nolan, Client Eastwood, Tarantino, Guy Ritchie, John Coen), பின் நடிகர்களின் பெயரையும்(Sean Penn, Morgan Freeman, Anthony Hopkins, Jack Nicholson) னு பல பெயரச் சொன்னேன்."பிரபலங்களின்  பெயர் கூடாது" என்றார்  மார்க்.கடைசியில கனவு துரத்தி க.ராஜ்குமார் மார்ட்டின்ஸ்காட்டாக ஆனேன்.


அங்கே கெவின்,அவினாஷ்,வெங்கட்,ஃபிலிப் என்று நாலு பேர் எனக்கு சரியான செட்டு அமைந்தது. கெவின் கவுண்டமணியின் ரசிகன். யார் எதைச் சொன்னாலும் கவுண்டமணியின் ஏதாவது நக்கலான வசனத்தைப் பதிலாகப் பேசுவான். சங்கி மங்கி  கோஸ்டில நாண்சி-னு ஒரு  பொண்ணு இருந்தா. நல்ல உயரம், எப்படியும் 75 கிலோ இருப்பா. டி-ஷீர்ட் ஜீன்ஸ் போட்டுக்கிட்டு கடுகளவு கண்ணை சுருக்கி சுருக்கி சிரிப்பாள். வேலை நேரம் இரவு 8 லிருந்து காலை 5 மணி வரை.பத்து நிமிட  இடைவேளையாக மூன்று இடைவேளைகள் ஒரு 30 நிமிட சாப்பாட்டு இடைவேளை. பயிற்சியின் 5வது நாள் அன்று. வழக்கம்போல் மாடியில் காப்பி, பிஸ்கட், சிகரெட்-னு கைல வெச்சுக்கிட்டு எதையாவது பேசிக்கிட்டு இருப்போம்.என்னைப் போல  அந்த நாலு பேருக்கும் வேற  வேற கனவு இருந்தது. எல்லோரும்  அங்கே ஒரு மாசம் மட்டுந்தான்-னு உறுதியா இருந்தாங்க. நான்சி  எங்களருகே  வந்தாள். அவளுக்கு தமிழில் தெரிந்த  ஒரே  வார்த்தை "மச்சி".


"மச்சி, can i have a cigarette please." என்றாள்.அவினாஷ் ஆச்சரியப்பட்டு "Do you smoke?" என்றான். அங்கிருந்த பெண்களில் மூன்று பேருக்கு சிகரெட் பழக்கம் உண்டு, இவள் நாளாவது பெண். கெவின் ஒரு king size  சிகரெட்டை கொடுத்து பற்ற வைத்தான்.’அடியே சப்ப மூக்கி உங்க அப்பன் கூர்க்கா வேல தான பாக்குறான்" என்று நாண்சி-ஐ கெவின் கேட்டதும் எல்லோரும் சிரித்தோம். எதுவும் புரியாமல் அவளும் சிரித்தாள்."Hey, you guys are teasing me, i could guess that" என்றாள் அழகாக சிணுங்கிக் கொண்டே. அதற்கு கெவின்,"ஆமா இவ பெரிய ஜி.டி. நாயுடு பேத்தி கண்டுபுடுச்சிட்டா...போடி...." அவளும் எங்களுடன் சேர்ந்து சிரித்தாள்.ஆலென், எங்க டீம் லீடர் வயது 30 இருக்கும். டெய்லீ எங்ககிட்ட வந்து ஒவ்வொறு இடைவேளையின் போதும் ஒரு தம் வாங்கி அடிப்பார்.வெங்கடேஷ், ’மச்சான்  ஆலென் வர்றான்டா, ..த்தா எவனும் தம்மு தராதீங்க’.ஆலென் வந்து  அவினாஷிடம் "Hey man, do u have one" என்றார். இப்பதான் ஸார் காலியாச்சு-னு சொல்லி அனுப்பிட்டான்."என்னப்பா நீங்க, நிறைய தம்மடிங்கடா. Bring more cigarettes with you man. So, that you can offer me some என்றார். அதைச் சொல்லி அவர் கொஞ்ச தூரம் சென்றவுடனே " ஆமா இவரு பெரிய கப்பல் ஏவாரி...ப்போடா" என்று கெவின் சொல்ல சத்தமாக சிரித்தோம்.
ஆலென் சற்று  தொலைவிலிருந்து யாரிடமோ வாங்கிய சிகரெட்டைப் புகைத்துக் கொண்டே
"Its time man, get down to the floor, come on right away." என்றார்.


பயிற்சியின் 5 வது நாள் காலை 3.30. மார்க் வந்து 6 பேர் பெயரை வாசித்தார். மார்ட்டின்  ஸ்காட்(நான்),கெவின் (கெவின்),வில்லியம்ஸ்(அவினாஸ்),கால்வின் வாக்கர்(வெங்கட்),ஃபிலிப்(ஃபிலிப்) மற்றும் சங்கி மங்கி கோஷ்டியிலிருந்த பீடர்சன்(நெப்போலியன்)."All these 6 people can go and start dialling" என்றார். மற்ற 34 பேரும் கைத்தட்டினார்கள்.டையலிங் தளத்தில் 60 பேர் பணிபுரியலாம். அமெரிக்க நேரத்தைக் காட்டும் 4 கடிகாரங்கள், ஒரு பெரிய அமெரிக்கக் கொடி சுவற்றில். மொத்தம் 50 மாநிலங்கள். நம்ம நாட்ல மாதிரி தனியா மாநிலம் வேணும்னு இனிமேல் அங்க தழைகீழாக நின்னா கூட நடக்காது. 51வது நட்சத்திரத்துக்கு அமெரிக்கக் கொடியில் இடமில்லை.இன்னும் ஒன்றரை மணி நேரம் இருந்தது. ஒவ்வொருவருக்கும்  200 அமெரிக்க வாசிகளின் பெயரும், போன் நம்பரும் கூடிய லிஸ்ட் கணினியில் பதிவு செய்யப்பட்டிருந்தது. டையல் பண்றதுக்கு முன்னால மார்க் மற்றும் ரூத் என்ற பெண் QMC(Quality Control Manager). அதாவது ஒழுங்காக ஏமாற்றுக்கிரோமா, நாங்கள் விற்பனை செய்த காலினுடைய தரம் என்ணங்கறதை முடியு செய்பவர் / மதிப்பிடுப்பவர் FQMC(Fraud QMC). "அதுக்கு கல்யாணம் ஆயிடுச்சு போலடா"என்றான் ஃபிலிப், "So what? Its all in the game" டா என்றான் அவினாஸ்."How many sales can you give me in this limited time peroid?" என்றார் ஆலென்.எல்லோரும் 10 என்றோம், அவினாஸ் 15 என்றான்."Spot incentive Rs. 300 for first 3 sales" என்றாள் ரூத். Now go ahead, proceed என்றார் மார்க்.


முதல் மூணு பேர்ல  நாமளும் வந்தோம்னா 300 ரூபா கிடைக்கும். 3 நாள் வண்டிக்கு பெட்ரோல் பிரட்சணை இருக்குதானு நினைச்சேன். டயல் பண்ண  ஆரம்பிச்சோம். நான் டயல் செய்த  முதல் அமெரிக்கர், டல்லாஸ் நகர வாசி. மணி அடித்ததும் என் அழைப்பை ஏற்றார்.

"Hello"  என்றேன். மற்ற 5 பேரும் என்னை கவனித்தார்கள். அவர்களுக்கு ரிங் மட்டுமே அடுத்துக் கொண்டிருந்ததால் சட்டென்று என்னை திரும்பிப் பார்த்தார்கள். அடுத்த நொடியில் தான் நான் உணர்ந்தேன் அது Answering Machine-னு. மணி 4.45. நிறைய  Answering  Machine . கெவினுடைய அழைப்பை முதன்முதலாக அமெரிக்கப் பெண் எடுத்துப் பேசினாள். 10 நொடி தான் இருக்கும் " I'm not interested . ."னு சொல்லி கட் பண்னிட்டா என்னுடைய  லிஸ்ட்-ல் இருந்த 169 வது பெயர் மார்கரெட் "Hello" என்றாள். “நான் மார்ட்டின் ஸ்காட், அமெரிக்கன் ஆன்லயன் ஃபார்மசியிலிருந்து  கால் செய்கிறேன். எப்படி இருக்கீங்க மார்கரெட்?” என்றேன்..

“இரண்டு மாதங்களுக்கு முன் உங்களின் மோசமான மருந்துகளை உட்கொண்டு தான் என் மகள் மரணமடைந்தால். இனியும் இந்த நம்பருக்கு கால் செய்யயாதிருங்கள்” என்றாள்.

“ஓ! மன்னிக்கவும். உங்களின் பேரிழப்பிற்கு என்னுடய ஆழ்ந்த அனுதாபங்கள் “என்றேன்.

நான் டவுன்பஸ்ல போனா என்னுடைய கேட்ட ராசி என்ன முந்திக்கிட்டு பென்ஸ் கார்ல போகும். அதுக்கு  நான் பேசிய முதல் கால் சாட்சி. இதை கால் பார்ஜ் செய்து கொண்டிருந்த ரூத் இன்னொரு அறையில் இருந்தபடி  எழுந்துநின்று, ஹெட் செட்டை கழுத்தில் தொங்கவிட்டபடி நெத்தியில் கை வைத்து "இப்படி ஆயிடுச்செ"-னு சொல்வதைப்போல் கையை அசைத்து சிரித்தாள்.  யாரும் அன்று ஸேல் போடவில்லை.


காலை 6 மணி. என் அறையில் நான். என் வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அவற்றை இருவருடன்  பகிர்ந்துக் கொள்வேன். நோபல் சார் என் பள்ளி ஆசிரியர் மிக நெருங்கிய நண்பர், மற்றொருவர் கல்யாணி. இருவருக்கும் குறுந்தகவல் அனுப்பினேன்."Making a sale in this process is pure luck. The way i communicate has nothing to do with selling restricted pills that too in a illegal way." என்று அனுப்பினேன். நோபல் சாரின் பதில் "It may happen tomo."கல்யாணி சொன்னாள் "Ha Ha.. you don't have a drop of luck. I guess you're never gonna make a sale".தூங்கி எழுந்தேன்  மணி மாலை 5.30.


இரவு 6. டயல் பண்ண ஆரம்பிச்சோம். 100 பேருக்கு கால் செய்தால் அதில் 95 Answering Machine தான், 3 பேர் விருப்பமில்லை என்பார்கள், ஒருத்தர் மிக கோவமாக கத்துவார் மற்றொருவர் தயவு செய்து என் நம்பர்-ஐ உங்க லிஸ்ட்-ல இருந்து எடுத்திடுங்க-னு கெஞ்சுவார்.அன்று  1 மணி சாப்பாட்டு இடைவேளை வரை எந்த ஸேல்லும் இல்லை. மாடியில் வழக்கம்போல்  சிகரெட்  அடித்துக் கொண்டிருந்தோம். " மச்சான் சம்ம காண்டு டா, த்தா போன் எடுத்து அசிங்கசிங்கமா கேட்குறான்" என்றான் ஃபிலிப்."போட ங்கொக்கால சந்தையில வித்தவனே-னு கட் பண்ண வேண்டியதானே" என்றான் கெவின்.


மணி 2.வெங்கட் 60 ஆம்பியன்(தூக்க  மாத்திரை) 400ல் ஆரம்பித்து 360 டாலாருக்கு விற்றான். ஒரே  கைத்தட்டல், On spot incentive  வேற. அடுத்த பத்து நிமிடத்தில் ஃபிலிப்  30 லெவிட்ரா( ஆண்மை சக்திக்கான) மாத்திரைகளை 390 டாலாருக்கு விற்றான்.


மணி 4.அடுத்ததாக நான், டென்வர் நகரத்துப் பெண் அவள் பெயர் நினைவில்லை. "ஹெலோ" என்று ஆரம்பித்துத் தொடர்ந்தேன்.  
"No, everybody is fine here we don't need any medications" என்றாள்.
அவள் கட் செய்யவில்லை  அதனால் அவளை எப்படியாவது  எதயாவது வாங்க வைத்து விடவேண்டுமென்று  தொடர்ந்து பேசினேன். நல்ல உடல் ஆரோகியத்துடன் இருப்பதாகச் சொன்னாள். என்னிடம் இருக்கும் மூன்று மந்திரச் சொற்கள் வயாகரா,லெவிற்றா, சியாலிஸ்.

நான்: உங்களின் காதலர் எப்படி இருக்கிறார்?
அவள்: What?, 
நான் : உங்களுடன் காதல் செய்வதில் உடல் ரீதியாக எப்படி இருக்கிறார்? எங்களிடம் உலகின் மிகச் சிறந்த மாத்திரைகள் இருக்கிறது. உங்கள் காதலனின் உடம்பில் அவர் தொலைத்த ஹார்மோன்களை மீண்டும் அவருக்குள் உருவாக்கும். அதன் பின் நீங்கள் இன்னும் அதிகமாக அனுபவிக்கலாம் பரவசத்தை.. என்றேன்.
அவள் பலமாக  சிரித்துக் கொண்டே சொன்னாள் ”உங்களுக்குத் தெரியுமா? நான் என் தோழிகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன், நாங்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள்” .  மீண்டும் சிரித்துக்கொண்டே “எந்த வயாகராவும் தேவையில்லை. உங்கள் நிறுவனம் ஏதாவது நல்ல வலையும் டில்டொக்களைத் தயாரித்தாள் சொல்லுங்கள்.”நான் எதுவுமே  பேசவில்லை. கைகளால் வாயை மூடி மாநிடர்-ஐ பார்த்து சிரித்துக் கொண்டேன். சைதாப்பேட்டையில்  இருக்கும் எனது அறை டென்வர்-ல் இப்பொழுது பேசினாளே அவளின் வீட்டுக்குப் பக்கத்துவீடாக  இருந்தால்......?அன்றும் ஸேல் போடவில்லை.



சைதாப்பேட்டையிலிருந்து  நான் வேலை செய்து கொண்டிருந்த  கால் சென்டர் 3 கி.மீ தொலைவில் தான் இருந்தது. அதனால் 7.30 மணிக்குத்தான் நான் என் அறையிலிருந்து கிளம்புவேன். வழக்கமாக அங்கே உள்ள ரோட்டுக்கடையில் சப்பாத்தி அல்லது தோசை சாப்பிட்டு வண்டியில் கிழும்புவேன்.    அன்று அப்படி  சாப்பிட்டுக் கொண்டிருந்த போது எனக்கு போன் வந்தது. போடியிலிருந்து மாரிஸ், எனது நண்பன்
பஸ் கன்டெக்டர்.
"எலேய் என்னா செயிற, எப்ப போனவென் ஒரு போன் மாட்டிகலொ" என்றான். "டேய் நான் கால் சென்டர்ல வேலை செய்றேன் டா...ஒரு.. ஒரு வாரமா" என்றேன். "யாரு கால் சென்டர்ல வேல செய்யுற " என்று சிரித்துக் கொண்டே கேட்டான். பதிலிக்கு நானும் சிரித்தேன். "எலேய், சரிச்சரி போன்ல காசு இல்ல, கால் பண்ணு" என்றான்." நீ எப்பதேன் காசு இருக்குனு சொல்லிருக்கே" என்றேன்."அம்புட்டு அக்கறை உள்ள நோனி ரி-சார்ஜீ பண்ணிவிட வேண்டியத்தானே, சரி நான் வைக்குறேன் அப்றோம் பேசுவோம், எலேய் கால் பண்ணு" என்று சொல்லிவைத்தான். நான் வண்டியை  எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.


இரவு 7.   டயல்  செய்ய ஆரம்பித்தோம். மிஸிஸிப்பி-ஐ சேர்ந்த ஒரு வயதான நபர். போன்-ஐ எடுத்த உடனே கட்  செய்தார். நான் மீண்டும் அதே நம்பர்க்கு போன் செய்தேன். 
அமெரிக்கர்: இப்ப தான் நீ நிஜமாவே என்னை சோதிக்கிர. எந்த நரகத்திலிருந்து கால் செய்கிறாய். உன்னுடய நம்பர் என்னுடய ஐ.டி-யில் 000000 என்று தோன்றுகிறது.என்றார்.  அவர் சொல்லித்தான் இந்த விஷயமே எனக்குத் தெரியும்.

நான்: Take it easy, be cool man. How was the day? என்றேன்.இன்னும் கோவமாக 
"You filthy animal, where the hell are you calling from?. Tell me now. I'm gonna call the cops" என்று கத்தினார். அவரின் அதிகப்படியான கோவம் எனக்கு அதிகப்படியான சிரிப்பை உண்டாக்கியது.  

நான்: நான் நரகத்திலிருந்து தான் போன் செய்கிறேன். என்று சிரித்தேன்.

அமெரிக்கர்: What?, 

நான்: H-E-L-L  என்று ஒவ்வொருவார்த்தயாக பிரித்துச் சொன்னேன்

அமெரிக்கர்: இங்கே கொஞ்சம் வரமுடியுமா? உன் மூளையை சிதரடிக்க வேண்டும் என்றார்.

நான்: நான் உங்கள் பக்கத்து வீட்டில் தான் வாழ்கிறேன். முட்டாள் கிழவனே என்னுடய பெரிய துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வருகிறேன். உன்னை முகத்தில் சுடப் போகிறேன் என்று சொல்லிவிட்டு சத்தம் வராமல் சிரித்தேன்.

அமெரிக்கர்: நல்லது. எனது கதவுகள் திறந்து தான் இருக்கின்றன என்று சொல்லி கட் செய்தார்


அவர்களின் கோவம்  நியாயமானது தான். நமக்கு "இந்தப் பாட்டை காலர் ட்யூனா செட் பண்ணுங்க", "we are calling from icici bank sir, we are offering personal loans.." அப்டி-னு ஒரு நாளைக்கு பெயர் தெரியாத யாரோ ரெண்டு பேர் நமக்கு கால் பன்னினா நாம எவ்ளோ கடுப்பாவோம். அமெரிக்க லாண்ட்-லைனுக்கு ஒரு நாளைக்கு சராசரியாக பெயர் தெரியாத 40 பேரிடமிருந்து கால் வருமாம். அதில் பெரும்பாலானவை ஸேல்ஸ் கால். அதில் 25க்கும் மேல என்ன மாதிரி இந்திய மார்ட்டின் ஸ்காட்டுகளின் கால். அவங்க கோவம் நியாயமானது தானே.     இருந்தாலும் அந்த அமெரிக்கரின் கோவம் என்னை சந்தோசப் படுத்தியது. அதனால் திரும்பி அதே அமெரிக்கப் பெரிசுக்கு கால் செய்தேன் எடுத்தவுடனே சாதுவாக " உனது நிறுவனத்தின் மேலாளரிடம் பேச வேண்டும்” என்றார்.இந்த மாதிரி தேவ இல்லாத கால்களை ஃபார்வர்ட் செய்யயக் கூடாது. அதனால் நானே குரல் மாதிரி பேச முடிவு செய்தேன்.

நான்: நிச்சயமாக. கொஞ்சம் இருங்கள் என்று சொல்லி 5 நொடி கழித்து.நான்(supervisior-ராக) வணக்கம், நான் எவ்வகையில் உங்களுக்கு உதவி செய்ய வேண்டும். 

அமெரிக்கர் : உங்கள் நிறுவனத்தின் பெயரென்ன? என்றார்."Global pharmacy, American online pharmacy, Global online pharmacy"
இப்படி நீங்களாக எதை வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம் என்றார்கள். அதிகம் சினிமா பார்ப்பததால் எனக்கு இந்த பெயர் தான் டக்-னு சொல்ல  வந்தது.

நான்:Its 20th century pharmacy என்றேன்.

அமெரிக்கர்: உங்களின் இணையதள முகவரி? என்றார்.

நான் :Our website is  under construction, we're updating things என்றேன்.

அமெரிக்கர் :You sound ridiculous. கொஞ்சம் காத்திரு. நான் உன் நிறுவணத்தை கூகல் செய்து பார்க்கிறேன்.என்றார்.அப்படி ஒரு  நிறுவனம் இல்லை என்பதை தேடி கண்டுபிடிச்சிடுவார். நம்மல  விட பெரிய வில்லனா இருப்பான்  போல இந்த பெருசு னு நினைத்துக் கொண்டு அமைதியாக இருந்தேன்.

அமெரிக்கர் : நான் பள்ளிச் சிறுவனல்ல. இனியும் நீ எனக்கு கால் செய்யாதே...  அதிகமான கோவாத்துடனும் தெளிவாகவும் சத்தமாகவும் இதைச் சொன்னார் “என்னுடய பெயரை உங்கள் பட்டியலிலிருந்து உடனடியாக நீக்கு” கட் செய்தார்..நான் ஓசை வராமல் கை தட்டி சிரிப்பதைப் பார்த்து கெவினும் சிரித்தான்.
கால் பார்ஜ் செய்து கொண்டிருந்த ரூத் "கஸ்டமரிடம் ரொம்ப விளையாட்டுத் தனமா இருக்காதே" என்று  செல்லமாகச் சொன்னாள்.


மணி 1. நம்பர்கள் எல்லோரும்  சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். நான் மாடியில் சுவற்றில்  சாய்ந்த படி புகைத்துக் கொண்டிருந்தேன். நாண்சி வந்து  சிகரெட் கேட்டா, கொடுத்தேன். பற்றவைத்துக் கொண்டே "Anything positive?" என்றவளிடம்  "Not yet"  என்றேன். என்னெதிரே நின்று கொண்டிருந்த நாண்சி ஒரு  அழகிய பொம்மை போல இருப்பாள். நான் அவளின் பெரிய மார்பகங்களை 5 நொடி தொடர்ந்து பார்த்தபடி புகைத்துக் கொண்டிருந்தேன். பின் அவளும் என் பக்கவாட்டில் சுவற்றில் சாய்ந்து கொண்டாள். இடது காலை நீட்டி வலது காலை அதன் மேல் போட்டு ஆட்டிக் கொண்டே மேகத்திரைக்கு பின்னாலொளிந்திருக்கும் நிலவைப் பார்த்து புகையை மேல் நோக்கி விட்டபடி சிரித்துக் கொண்டே இப்படிக் கேட்டாள் "You were starring at my tits. Didn't you?"  என்றாள்.

இழுத்தப் புகை மொத்தமாக வெளியில் வரும்படியாக  இருமினேன். அவளைப் பார்த்து "What?"  என்றேன். அவ அப்பவும் அந்த நிலாவப் பார்த்து சிரிச்சுக்கிட்டே "mm...i noticed you culprit." என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்,இடது புருவதைத்  தூக்கி உதடுகளை நெளித்துக் கொண்டு ஒரு கேவலமான சிரிப்பு சிரித்தேன்.


உணவு இடைவேளைக்குப்  பின் பயிற்சியிலிருந்த மேலும் 25 பேர் டையலிங் தளத்திற்கு அனுப்பப் பட்டார்கள்.அதுல கீர்த்தி-னு ஒரு பொண்ணு சுமாரா தான் இங்கிலீஷ்  பேசுவ, ஆனா அவ டயல் செய்த முதல் கால் ஸேல். ஃப்லோர் அதிரும்படியாக எல்லோரும் கைத்தட்டினார்கள். நாங்கள் 6 பேரும் விழிகளை அகல திறந்து ஒருத்தர் முகத்த ஒருத்தர் பார்த்தோம். ஆறு பேர் முகமும் ஃப்யூஸ் போன பல்ப் மாதிரி இருந்தது.கெவின் தலையில்  அடிச்சு "என்ன கொடுமை டா இது"ன்ணான். அவினாஸ் தன் உள்ளங் கையில் ஒரு  பெரிய  ஓட்டை தெரியும்படியாக அதை முன்னும் பின்னுமாக  ஆட்டி நாக்கைத் துருத்திக் கொண்டு '...ந்ந்ந்த் த்தா அடிக்கப் போறாங்க நம்மல" என்றான்.    அன்று  மொத்தம் 8 ஸேல்கள். அன்னைக்கும் நான் ஸேல் போடல.


இரவு 8.டயல் செய்ய  ஆரம்பிக்கும் முன் மற்ற 5 பேரிடமும் யாராவது கோவமாகப் பேசினாள் அந்த கஸ்ட்டமர் நம்பர் நோட் பன்னி என்கிட்ட குடுங்கடா,  சம்ம டைம்பாஸ் என்றேன். டயல் செய்ய  ஆரம்பிச்சோம். வழக்கம் போல் நிறைய Answering Machine. அமெரிக்கர்களின் அந்தக் கோவமான குரல்கள் ஏதும் கேட்காத என்று ஆவலாக இருந்தேன். டயல் செய்து கொண்டிருந்த கெவின் ஹோல்ட் செய்து விட்டு என்னப் பார்த்து " மச்சான் 4000 வயாகரா 4 டாலர்-க்கு வேணுமாம். நம்மலவே கலாயக்கிறான் ஒருத்தன்" என பேச்சைத் தொடர்ந்தான். நம்ம வீட்டில  தனிய இருக்கும் போது ரொம்ப  போர் அடிச்ச கஸ்ட்டமர் கேர்-க்கு போன் போட்டு மொக்க போடுவோமே அந்த மாதிரி அமெரிக்காவிலும்  நிறைய மொக்கை மன்னர்கள்  இருக்காங்க. அப்படி ஒருத்தன் கிட்ட தான் கெவின் பேசிக்கிட்டு இருந்தான். திரும்பவும்  ஹோல்ட் செய்து விட்டு " முண்டா பணியனுக்கு சோப்புப் போட  வக்கில்லாம அமெரிக்காவுலா  திரியுற நாய்க்கு 4000 வயாகரா 4 டாலர்க்கு வேணுமாம், பண்ணாடப் பயலே",என்று கவுண்டமணி  மாதிரி சொல்லிட்டு கட் பண்ணிடான்.அன்று சுவாரசியமாக  ஏதும் நடக்கல. முக்கியமா  நாண்சி வேற அன்னைக்கு வரல, வழக்கம் போல நானும் எந்த ஸேலும் போடல.


மறுநாள் வேலைக்கு போகலாமா வேணாமா-னு ரொம்ப  யோசிட்சுகிட்டே இருந்தேன். இன்னைக்கு ஸேல் போட்டாலும் சரி போடலானாலும் சரி, கடைசியா அங்கிருந்த நண்பர்களைப் பார்த்து சொல்லிட்டு வந்திடலாம். நமக்கு சினிமா தான் எல்லாமே, சினிமா மட்டுந்தான் தெரியும். கைல காசு இல்லாம கஸ்டப் பட்டாலும் பரவால்ல, நம்ம பாதையில நம்ம கனவை அடைய முயற்சி செய்வோம். கால் சென்டர்ல கிளைமாக்ஸ் ரீல் ஓட்டிட்டு வந்திரலாமென்று தீர்க்கமாக முடிவு செய்து சென்றேன்.


இரவு 9.சென்ற உடனே " மச்சான் நான் நாளைக்கு இருந்து  வர மாட்டேன் டா" என்றான்  அவினாஸ் , " டேய் எப்புடிடா நான் சொல்லலாம்னு நினச்சேன் அதுக்குள்ள நீ சொல்லிட்ட" என்றான் வெங்கட். திகைத்துப்போய் நின்ற நான் "Same blood" என்றேன். கெவின் கையைக் கட்டிக்கொண்டு "ஏனுங்க ஆஃபீஸர் கோயம்புத்தூர் லட்சுமி மில் ஓநர் உங்களுக்குப் பொண்ணு தரேன்னு சொன்னாரா? இல்ல மதுரைல கலெக்டர் வேல காலிய இருக்குனு அங்க போறீங்களா?" என்று கேட்டுவிட்டு சிரித்தான். டயல் செய்ய  ஆரம்பித்தோம். கொஞ்ச நேரங்கழித்துக் மானேஜர் கோபி அனைவரையும் பயிற்சி தளத்திற்கு வரச் சொன்னார். அங்கே சென்று அமர்ந்தோம்." என்ன நடக்குது? ஏன் ஸேல் போட முடியல? ஒரு நாளைக்கு நீங்கள் 5 ஸேலாவது போட்டு ஆகணும்.” என்றார் கோபி. எல்லோரும் அமைதியாக இருந்தோம்.

"We are not forcing you, you are not under any pressure. But still i wonder why you people are not able to make few number of sales." அமைதியாக இருந்தோம்."Ok. Relax yourself, take a break and give your best" என்றார். மாடியில் சிகரெட்டுடன் நாங்கள். கெவின் வேகமாக வந்து  விளையாட்டாக வெங்கடின்  சட்டயைப் பிடித்து "உன்  ஸைஸ் என்ன, வெய்ட் என்ன, கலர் என்ன....நாண்சி உண்ண டைட்டா கட்டிப் புடிச்சாலே நீ 4 மாசம் பெட் ரெஸ்ட் எடுக்கணும். அந்த ரூம்‌ல நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன், அவள அப்புடிப் பார்த்துக்கிட்டே இருக்க" எல்லோரும் சிரித்தோம்.. நல்ல வேலை அன்னைக்கு நம்ம நாண்சியப் பார்த்தத இவன் பாத்திருந்தானா அசிங்கப்படுத்திருப்பான்-னு நினச்சு பெருமூச்சு விட்டேன். நாண்சி வழக்கம் போல வந்து ஓசி சிகரெட் கேட்டா. அவ வெள்ளத் தோளுக்கும் கையில புதுசா கட்டியிருந்த சிவப்பு கலர் வாட்ச் பளிச்சுன்னு தெரிஞ்சது. "Hey whats that"-னு நான் கேட்ட உடனே அவ கையை நீட்டினா. நான் அவ வாட்ச்ச தொட்டுப் பார்த்தேன், உண்மையை சொல்லணும்னா அவ கையைத் தான் தொட்டுப் பார்த்தேன். அய்யோ... வெயிலு சும்மா சுர்ரு-னு அடிக்கும் போது ஜில்லு-னு ஒரு பீரை ஒரே ஸிப்-ல அடிச்ச எப்ப்டி இருக்குமோ அப்படி இருந்தது..."Thats nice, it really suits you" என்றேன் "Ok. I'll talk to you later"-னு போன் எடுத்து யாரிடமோ பேசுவதற்கு சற்று நகர்ந்து சென்றாள்."இது ஒலக நடிப்புடா சாமி"-ன்னான் கெவின்.


ஒரு பெண் எடுத்தாள்.
நான் : Hi, this is Martin Scott from American online pharmacy.



அவள் : Soryy I'm a baby sitter. I'm not interested. Thanks for calling என்று பட்டாசு வெடித்தது போல் படபடபடவென இதைச் சொன்னாள்.

நான் : Hold on. We are celebrating our 25th anniversary and we are offering you 40% discount and free shipping and handling.  Are you still gonna say 'NO':

அவள் : Exactly. Not interested. என்றாள்

நான் : Oh! come on dear. It sounds like saying no for a bottle of a Champagne என்றேன்.

அவள் : I dont drink என்றாள். இதுக்கு மேல  பேசி இவகிட்ட ஸேல் போட  முடியாதுணு தெரிஞ்சுகிட்டேன். திடீர்னு ஸ்டிவன் ஸ்பீல்பர்க்-ன் 'ம்யூநிச்' படம் ஞாபகம் வந்தது. போனை கட் செய்தவுடன் குண்டு வெடிக்கும். நான் ஒரு வில்லனைப் போல் சிரிக்க முயன்று சிரித்தேன்.

அவள்:Do i sound funny? என்றாள்.

நான்: "This is not a sales call you receive every other day. I'm gonna blow your house in seconds from now. You drop the phone and you will hear it BANGGG!" என்று பயமுறுத்தும் குரலில் பேசினேன். அவள் பயந்தவளாக 

அவள்: What? Oh.. no. Tell me this is a joke. என்றாள். அவள் நான் சொன்னதை நம்பி விட்டால்.

நான்(சிரித்துக்கொண்டே): You are funny. (வில்லத்தனமான சிரிப்பு) You are fuckin funny.அவளின் குரலில்  தடுமாற்றத்தை உணர முடிந்தது.

அவள்:Oh..oh..i..i'm...i'm gonna call the cops
பதிலுக்கு சிரித்தேன்.

அவள்:. I'm gonna call the  FBI right now and ther INTERPOL as well என்று நடுங்கிய குரலில் சொன்னாள்.பேட்மேன்-ல் ஜோக்கர் (ஹீத் லெட்‌ஜர்) சொல்வதைப்  போல
நான்: Do it right away, HERE WE....GO! என்று கட் செய்தேன்.அவள் போனை கீழே வைத்தாளோ இல்லயோ...பாவம்.இத முழுசா கவனீச்சிக்கிட்டிருந்த  அவினாஸ், கெவின் இருவரும் சிரித்தார்கள்.




அடுத்ததாக ஒரு  கால். அந்த கால் சென்டரில்  நான் பேசிய கடைசி கால். ஒரு பெண்ணின் பெயர். இந்த கால் எப்படியாவது ஸேல் ஆக்கிடனும்-னு நினச்சேன். 
அவள்: Hola que es esto? என்றாள். போச்சு டா இங்கிலீஷ் பேசுறவென் கிட்டயே மருந்து விற்க முடியலெ, இதுல ஸ்பானிஸ் வேற-னு நினச்சு சிரிச்சேன்.


மணி 4.45.
மானேஜர் திடீரென்று லாக் ஔட் செய்யச் சொன்னார்."OK. Now i'm gonna play a audio conversation of a sales call. Listen to it'-னு சொன்னார்.எல்லோரும் கவனமாக காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனா அவினாஸ்,கெவின் மற்றும் நான். எங்கள் மூணு பேருக்கும் அது என்னவா இருக்கும்-னு தெரியும். இப்ப நான் ஒருத்திக் கிட்ட பேசினேனே அந்த Baby sitter, அந்த உரையாடலாகத்தான் இருக்கும் என்பதை எங்களால் யூகிக்க முடிந்தது. "This is Martin Scott  from American online pharmacy"னு ஆரம்பித்தது....நான் பேசியது தான். எல்லோரும் அதை கவனித்தார்கள். அப்ப கூட நான் "பரவால்லா நல்லாத் தானே பேசிருக்கோம், இதெல்லாம் ஒரு படமா எடுத்த நல்லாத்தான் இருக்கும்"-னு எனக்கு நானே சொல்லிக்கிட்டேன். கோபி என்னை அவர் அறைக்கு வரச் சொன்னார்.


"Whats this man? What the fuck you think you have done. I know you are a smart worker, but why did u do that?"
எனக் கேட்டார்.மிஸிஸிப்பி  பெருசு கோவமா கத்திணாரே  அவர் ஞாபகம் வர நா சிரிச்சுட்டேன்.
"You laughing!" என்றார்." FBI -ல புகார் பன்னா, they will easily trace us. Then there will be no more such process in India. Many will be jobless" என்றார்."I wish that should happen someday" என்றேன்."What? Ok. Relax yourself, try to be nice with the customers. Go, start dialling" என்றார்."I quit"-னு சொல்லிட்டு அவரின் அறையை விட்டு வெளியே வந்து, டயலிங் ஃப்லோர்-ஐ கடக்கும் போது எல்லோரிடமும் இருந்து விடை பெறுவது போல கையை உயர்த்திக் காட்டினேன். நாண்சி என்னைப் பாவமாகப் பார்த்தாள். "என்னமோ  கைல ஒரு குழந்தைய குடுத்திட்டு போற மாதிரி அப்புடிப் பாக்குற" என்று நானே சொல்லிக்கிட்டு டயலிங் ஃப்லோர்-ஐ கடந்தேன். அப்பொவும் கூட அவ அழகாத்தான் இருந்தா.கீழே படியில்  இறங்கும் போது தான் எனக்கு தோணுச்சு, இத்தனை நாள் அவகிட்ட பேசியும் அவ போன் நம்பர் வங்களேனு..ஒரு சின்ன வருத்தம்.என் பைக்கை எடுத்துக்கொண்டு  நேராக மெரினா கடற்கரைக்குச்  சென்றேன்.


மணி 5.30. சூரியன் மெல்ல எழுந்தது."I didn't make any sale. I also hate that job. I'm not gonna work anymore at any call centre. I don't wanna hear anymore F's and B's(Fuck you son of a Bitch) from the Americans"  என்ற குறுந்தகவலை அந்த இரண்டு பெருக்கும் அனுப்பினேன்.நோபல் சாரின் பதில் "Most of us get plain wives and boring jobs. You have a dream better chase it. You'll be a dream catcher soon". கல்யானியின் பதில் "Are you retard or what? What the heck are u gonna do for survival in this metro? If you want to be a movie maker better be on that track with clean focussed mind. I believe and i hope you will do it and you will be a movie maker someday. Don't you ever dare to step aside of your track. You're such a stupid. I'll text you later. Need little more sleep. LOVE YOU."  பத்து நாட்கள்  இடைவெளிக்கு பின் மீண்டும் என் சினிமாக் கனவை பின் தொடர்ந்து  செல்ல முடிவு செய்தேன். அந்தக் கனவை என்னைக்காவது எட்டிப்  பிடிக்கணும்,ஜெயிக்கணும்னு ஒரு வெறி.


பலத்த கரகோஷத்துடன் மெரினா என்னை கைத்தட்டி  வரவேற்றது. அந்த நேரத்தில அந்த அலைகளின் சத்தம் அப்படித்தானிருந்தது. மஞ்சளும் சிவப்புமாக அந்த கீழ் வானம் காட்சியளித்தது. தீயில் நன்கு வாட்டி எடுத்த கங்கைப் போல், உலகின் மிக பெரிய சூரியகாந்திப் பூவைப் போல் அந்த சூரியோதயம் என் வாழ்வின் புதிய அத்தியாயத்திற்கான வழியை காட்டுவதற்காகவே உதயமானது போல் தோன்றியது. என் கண்ணை கூசிய அந்தச் செந்நிற ஒளிக் கீற்றுகள் என் கனவைத் தேடிச் செல்லும்படியாக சூரியன் அனுப்பிய தூதுகள்.

சமீபத்தில்  மாட்டிய போலி முகமூடியை  கழற்றி கடற்கரை காற்றோடு பறக்க விட்டேன். அந்த அழகிய  காலைப் பொழுது, சுத்தமான தென்றல் இந்தக் கடலின் பேரழகும் பேரலையும் கனவைத் துரத்தி ஓடும்படியாக என்னை உந்தித் தள்ளின. முன் எப்போதும் இல்லாத அதிகமான உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் வேகத்துடனும் ஓடுகிறேன்.


 - க.ராஜ்குமார்

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com