யமுனா ராகவன் அய்ரோப்பாவில் மருத்துவராய் பணிபுரிகிறார். அவர் எழுதும் ‘’அற்றவைகளால் நிரம்பியவள்" தொடர்கதை காட்சியில் தொடராய் வெளிவருகிறது.
அனைத்துப் பகுதிகளுக்கும் இங்கே சொடுக்கவும்.
http://kaattchi.blogspot.com/search/label/அற்றவைகளால்%20நிரம்பியவள்

பகுதி 7
அஞ்சனாவின் இரவுகள் பெரும்பாலும் லேசானவைதான். அத்தனை லேசான தூக்கத்தில் வரும் கனவுகளை ரசித்ததும் உண்டு. பயந்ததும் உண்டு. வெட்கப்பட்டதும் உண்டு. குழம்பியதும் உண்டு. ஒரு முறை கனவு கருப்பு வெள்ளை தான் என்று அடித்து சொன்ன தோழியிடம் தர்க்கம் செய்யமுடியாது போனது அவளுக்கு. அதன்பின் கனவுகளை வெகு சிரத்தையாக கவனிக்கலானாள். ஓடும் கனவை, தூக்கத்தின் நடுவே விழித்திருந்து படம் பார்ப்பது போல உணர்ந்து பார்ப்பது (Lucid dreaming) எல்லோருக்கும் வருமா... அவள் நெடுநாள் கேள்வி.
ஆனால் இவளுக்கு வரும் கனவுகளை அப்படி பார்க்க தொடங்கியது பின் வந்த கனவுகளை, இவளுடைய கிறுக்கல்களில் எழுத தொடங்கினாள்... Something like a dream journal. ஒரு முறை அவளும் அவள் அம்மாவும் தங்கை ஜானுவும், தோழி கோமதியும் நடக்கமுடியாது மலை ஒன்றில் ஏறிக்கொண்டிருப்பதாய் கனவு கண்டாள். வெகுவாய் கஷ்டப்பட்டு மலையின் உச்சிக்கு ஏறி நின்று அவள் கண்ட காட்சியை அவள் நிஜத்தில் எங்குமே கண்டதில்லை. இன்னமும் மறக்கவும் முடியவில்லை. அத்தனை நேரம் வண்ணம் இருந்ததா இல்லையா என்று தெரியாத அந்த இடத்தின் உச்சியை அடைந்தபின் பார்த்த பக்கம் முழுக்க பச்சை பசுமையாய் மலைகள், சிகப்பு வானம், தங்கமாய் சூரியன், மலைகள் தாண்டி நீலக்கடல். அதன் பின் எத்தனையோ புத்தகத்தில் படித்தாலும், அவளுக்கு தெரியும் அவளுக்கு வரும் கனவுகள் வண்ணக்கனவுகள் தான் என்று.
தந்தை இறந்தபின் ஏனோ subconscious அளவில் தந்தை திரும்ப வரவே போவதில்லை என்று ஆழப்பதிந்ததாலோ என்னமோ அவர் வந்த எல்லா கனவுகளிலும் அவர் ஏன் விட்டுவிட்டு போனார் என்று கேட்டு அழுதுக்கொண்டே இருந்தாள். நிஜத்தில் வராத அழுகை கனவில் வந்தது... A slice of Irony... அன்று இரவும் அப்படி தான் அப்பா எங்கேயோ போய்க்கொண்டே இருக்க இவள் அவர் பின்னோடே போக முயன்று எப்போதும் போலவே தோற்றுத்தான் போனாள். சில நேரங்களில் கனவில் ஒடும்போது நிஜத்தில் ஓடுவது போல மூச்சு வாங்கி வியர்த்து கால் தடதடக்க ஆகும் அவளுக்கு. Psychosomatic sensation... இப்போதும் அப்பாவின் பின்னோடே ஓடி இப்படி தான் உணர்ந்தாள். சட்டென கண்விழித்ததில் கதவு தட்டும் ஓசை கேட்க, பளீர் வெளிச்சம் கண்ணை தாக்க, தலை விண்ணென்றது. She felt groggy... இப்படி எழவே பிடிக்காது அவளுக்கு, ஆனாலும் விடாது கதவு தட்டும் கை நிறுத்தபோவதில்லை என்று தெரிந்து, மெல்ல எழுந்து கண் சுருங்க, லேசாய் வீங்கி சிவந்திருந்த கண்ணை தேய்த்தபடி, முடியை கோதிவிட்டபடி, சென்று கதவை திறந்தாள் அஞ்சனா.
வாசலில் டேமியன். There are moments in life, when u just freeze for a second or two, not knowing how you should be reacting. அப்படி தான் உறைந்து போனாள் அஞ்சனா, இவன் என்ன செய்கிறான் இங்கே என்று யோசித்து. ஏனோ டேமியனும் அப்படி தான் உறைந்து போய் இருந்தான். அவன் இப்படி லேசாக விதிர்விதிர்த்து நின்றதும், அஞ்சனாவிற்கு அவள் தோற்றம் உறைத்தது. வெகு குறைவாய் தூங்கி, அழுத தடம் தாங்கி இருந்த முகமும், அணிந்திருந்த முட்டி அளவு sleeveless night gown போட்டு அப்படியே வந்து கதவை திறந்திருக்கக்கூடாதோ என்று எண்ணி குமைந்தாள்.
ஓருவாறு compose ஆகி அவள் என்ன என்று கேட்கும் முன், டேமியன் பரிவாக கேட்டான், ``Are you ok, அஞ்சனா?``. இவளுக்கு இந்த நிலையிலும் கோபம் வந்தது. இத்தனை தூரம் இவள் குழம்ப இவனும் ஒரு காரணம் என்று. ‘’ Why shouldn’t I be ok? I’m fine.’’ என்று வேகமாக சொல்லி என்ன வேண்டும் என்று கதவை அடைத்தப்படியே கேட்டாள். ``நான் உள்ளே வரலாமா!`` என்று கேட்ட டேமியனை, ``என்ன வேண்டும் இவனுக்கு`` என்பது போல பார்த்துக்கொண்டு, கதவை திறந்து ஹாலில் இருந்த இருக்கையை நோக்கி கைக்காட்டினாள். மின்விசிறியை போட்டுவிட்டு, ஒரு நிமிடத்தில் வருவதாய் சொல்லி உள்ளே சென்றாள். கைக்குள் அகப்பட்ட சல்வாரை எடுத்துக் கொண்டு குளியலறை சென்று முகம் கழுவி, பல் துலக்கி, உடை மாற்றி கொஞ்சம் presentable ஆக மாறி தலை வாறி டேமியனை பார்க்க சென்றாள்.
ஹாலில் எதோ ஒரு புத்தகத்தை புரட்டியபடி இருந்த அவனை பார்த்தாள். நீல நிற டி ஷர்ட், ஜீன்ஸ் அணிந்து நன்றாகவே இருந்தான். நிச்சயம் இவனை எங்கேயோ பார்த்திருக்கிறோம் என்று இன்னமும் மூளையை புரட்டியபடியே அவனை நோக்கி சென்றாள். அஞ்சனா வருவதை பார்த்து கையில் இருந்த புத்தகத்தை கீழே வைத்து விட்டு, அவன் கொடுத்த friendly smile was contagious. சில வேலைகளில் முகம் தெரியாத நபராகினும் சிரித்து திரும்ப சிரிக்கும்படி செய்வார்கள். இவன் சிரிப்பு உதட்டோடு நிற்காமல் கண்ணும் சேர்ந்து சிரித்ததில் இருந்த genuinity அவளையும் லேசாக திரும்ப சிரிக்க வைத்தது.
அவனுக்கு எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்து அவன் என்ன சொல்லப்போகிறான் என்று கேட்க தயாரானாள். டேமியன் இருக்கையின் முன்னோக்கி சாய்ந்து, கனிவான ஆனால் கூர்மையான முகத்தோடு ``அஞ்சனா, I owe you an apology. There is no excuse for the way i behaved yesterday. எதனால் அப்படி நடந்துக்கொண்டேன் என்று எனக்கு தெரியவில்லை. காரணம் எதுவாகிலும் ஒரு பெண்ணிடம், அதுவும் முன்பின் தெரியாத பெண்ணிடம் அப்படி பேசினது இதுவே முதலும் கடைசியுமாக இருக்கும். என்னுடைய தவறை justify செய்ய வரவில்லை. ஆனால் என்னை மன்னித்துக்கொள்`` என்று கூறிமுடித்தான்.
டேமியனை இன்னும் என்னவெல்லாம் திட்டியிருக்கலாம், திட்டலாம் என்று இதுவரை யோசித்துக் கொண்டிருந்தவள் இவனுடைய எதிர்பாராத மன்னிப்பை கேட்டு எப்படி பதில் சொல்வது என்று தெரியாது அவனை பார்த்தாள். ரொம்பவும் கர்வமாகவும் அல்லாது, ரொம்பவும் பணிந்தும் அல்லாது, அசடு வழியாது, கம்பீரமாகவே மனதாற தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்பது எத்தனை அழகான விஷயம். அப்படி மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்த அவனை அஞ்சனாவிற்கு பிடித்தது. Striking the right balance மிகவும் கடினமான ஒன்று. இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் தான் நின்று மன்னிப்பு கேட்கவேண்டுமானால் என்ன செய்வாள் என்று யோசித்தாள். சட்டென ``ரமணா`` படம் மனதில் ஓடியது. மேலுதடு மறைக்கும் மீசையின் ஊடே ஏற்கனவே சிவந்த விழிகளில் இன்னும் சிவப்பேற விஜய்காந்த் `` எனக்கு எப்பவும் பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு`` என்று விரலை நீட்டி சொன்னது நினைவுக்கு வர, அவளும் அப்படி திரும்ப punch dialogue சொன்னால் எப்படி இருக்கும் என்று கற்பனையில் ஒரு வினாடி திளைத்து, வெகுவாய் வந்த சிரிப்பை அடக்கமுயன்று தோற்றாள்.
அம்மா எப்போதும் சொல்வார்கள், ``எப்படி தான் சமய சந்தர்ப்பம் தெரியாம சிரிப்பியோ, நீ!`` என்று. இப்போதும் அத்தனை பாந்தமாய் டேமியன் மன்னிப்பு கேட்கும் போது மூளையில் emotions crossfire ஆகி, appropriate response வராது, சிரித்து வைத்தாள். சிரித்ததில் குழம்பிய டேமியனிடம், எப்படி விஜயகாந்தின் வரலாற்றை சொல்லி விளக்குவது என்று தெரியாது சொன்னாள், ``பரவாயில்லை டேமியன். I was quite rude myself’’. So we are levelled up’’ என்று.
வந்தவனிடம் டீ வேண்டுமா என்று கேட்டாள். அவனும் சரி என்று சொல்லி, வீட்டை சுற்றிக்காட்ட சொன்னான். கடம்பத்தூரில் வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் முக்கால்வாசி பேர் ஹால் மட்டுமே தான் பார்த்திருப்பார்கள். வரும் அத்தனை பேரைக்கும் வீட்டை எல்லாம் சுற்றிக்காட்ட மாட்டார்கள். ஆனால் அஞ்சனா இருப்பது ஒரு க்ளினிக்கில். அவளுடைய ஒரு அறையையும், குளியலறையையும் தவிர அந்த வீடு எல்லோருக்கும் open ஆன விஷயம் தான். நோயாளிகள் வீட்டின் முன்பகுதியை எப்போதும் நிறைத்து இருப்பார்கள். மரியா, மிராண்டா சமையலறை மற்ற இடங்களை எல்லாம் வந்து போவார்கள். ஆதலால், இப்போது இந்த வீட்டை இவனுக்கு சுற்றி காட்டுவது அத்தனை கடினமாய் இருக்கவில்லை.
வீட்டை சுற்றி காட்ட, ‘’ You don’t have much privacy here’’ என்றான் டேமியன். இவன் ஏன் இப்படி பதில் சட்டென தரமுடியாத கேள்விகள் கேட்கிறான் என்று நினைத்துக்கொண்டு, ``I’m used to it now`` என்று சொன்னாள். சமையலறையை ஒட்டியே இருந்த டைனிங் டேபிளில் அவனை உட்காரவைத்து kettle on செய்தாள். சேய்ஷல்ஸில் அவளுக்கு மிகவும் பிடித்தது வெனிலா டீ. டீத்தூள் தான் ஆனாலும் அதனுள் vanilla icecream எங்கேயோ ஒளிந்திருக்குமோ என்று யோசிக்கவைக்கும் அந்த வாசம் அவளுக்கு மிகவும் பிடிக்கும். அவளுக்கும் அண்ணா தம்பி தங்கைகளுக்கும் weird taste சாப்பாட்டு விஷயத்தில். சாதாரண சாப்பாடு பிடிக்கும் தான் ஆனாலும் இவர்கள் சாப்பிடும் சில combination எல்லோரும் சொல்லி சிரிப்பார்கள் வீட்டில். தம்பி பிரபு chocolate biscuit மாங்காய் ஊறுகாயில் தொட்டு சாப்பிடுவான். ப்ரீதி horlicks, பொட்டுகடலை, சின்ன கல்கண்டு எல்லாம் போட்டு கின்னத்தில் spoon வைத்து சாப்பிடுவாள். ப்ரேமி வெல்லபிசாசு. எப்போது பார்த்தாலும் கையளவு வெல்லத்தை சின்ன துண்டாக்கி முறுக்கோடு சேர்த்து வாயில் வைத்துக் கடித்துக்கொண்டே இருப்பாள். கடைக்குட்டி ஜானுவின் nestum, milk powder எல்லோருக்கும் பிடிக்கும். போக வர ஒரு வாய் அள்ளிப் போட்டுக் கொண்டு செல்வார்கள். அண்ணா Bread toast ஊறுகாய் தடவி சாப்பிடுவான். இப்படி நிறைய. அப்படி பழைய nostalgiaவை கிளறிய இந்த வெனிலா டீ அஞ்சனாவிற்கு பிடித்துப்போனது.
டீ போட்டு அவனோடு அவளும் சேர்ந்து குடிக்க தொடங்கினாள். மெதுவாய் இவள் இந்தியாவின் எந்த பகுதி, என்ன மொழி பேசுவாள், எப்போது படித்து முடித்தாள், இந்தியா எப்படி இருக்கும், அவள் ஊர் எப்படி இருக்கும், என்ன தொழில் செய்வார்கள் என்றெல்லாம் கேட்க பேச்சு சுவாரசியமானது. பொதுவாக புதிதாக அவள் சந்திக்க நேர்ந்த மக்கள் எல்லோரும் தமிழ்நாடோ அல்லது இந்தியர்களோ தான். பேச common grounds இருந்தது. கலாச்சாரம், சினிமா, அரசியல், இசை எல்லாமே ஏதோ ஒரு விதத்தில் எல்லோருக்கும் தெரிந்தே இருக்கும். ஆனால் எல்லாமே முற்றிலும் வேறுப்பட்டு, வேறோரு தேசத்தில் இருந்து வந்த இவனை பார்க்கும்போது பேசும்போது எல்லாமே புதிதாய் இருந்தது.
சேய்ஷல்ஸில் இருப்பினும், இந்த 8 மாத காலம் அவளுக்கு அத்தனை தூரம் ஒன்றும் அவர்களை பற்றிய வரலாறோ அரசியலோ தெரியவில்லை. ஒருவேளை அப்படி பேச யாரும் கிடைக்காததால் இருக்கலாம், அல்லது பேச யாரும் அவளை நெருங்காதப்படிக்கு அவள் வெகுவாய் கூட்டிற்குள் இருந்திருக்கலாம். ஆனால் எந்த ஒரு hang up இல்லாத இலகுவாய் பேசுவது அவளுக்கு பிடித்தது. ஒரு காலத்தில் ``பேச்சை குறையேண்டி`` என்று சொல்லும் அளவு பேசிக்கொண்டே இருப்பாள் எப்போதும். ஆனால் அவளுடைய தற்போதைகள் வெறும் மௌனங்களால் தான் நிரம்பி வழிந்துக்கொண்டு இருந்தது. ஆக பேச ஒரு ஆள் கிடைத்ததும் சந்தோஷமாக இருந்தது. இவன் பார்வையில் ஏதும் எதிர்பார்ப்பு காத்து இல்லாததால் அவள் எப்போதும் தாங்கும் shield இல்லாது பொதுவாய் பேசுவது சுகமானதாய் இருந்தது.
சிறிது நேரத்தில் அஞ்சனாவின் இறுக்கம் தளர, அவனை பற்றி கேட்டாள். அவளால் இதற்கு மேல் கேட்காமல் இருக்க முடியவில்லை. ``டேமியன், இதற்கு முன்னே எங்கேயோ உன்னை பார்த்திருக்கிறேன். எங்கே என்று நினைவுக்கு வரவே இல்லை`` என்றாள். அதற்கு அவன், ``என் முகம் உனக்கு நினைவுக்கு வரவில்லையா, என்ன ஒரு ஆச்சரியம்`` என்று அவளை கிண்டல் செய்தான். இவளுக்கு சிரிப்பு வர, ``All You guys look alike.. It’s as impossible as finding 10 differences between two Chinese men!’’ என்றாள். அவனும் அவளோடு சேர்ந்து சிரிக்க, மனம் லேசானது அஞ்சனாவிற்கு.

``சரி! Atleast ஏன் நேத்து அத்தனை கடுமையாக பேசினாய் என்றாவது சொல்`` என்றாள். அத்தனை நேரம் சிரித்துக்கொண்டு இருந்த கண்களில் இருந்த சிரிப்பு மறைந்தது டேமியனிற்கு. ‘’May be some other time’’ என்றான். அதற்கு மேல் அவனை கேட்கவேண்டாம் என்ற தோரணையை தாண்டி பேசி, இந்த நிமிட சந்தோஷத்தை கெடுக்கவேண்டாம் என்று இந்த பேச்சை அத்தோடு விட்டாள். சிறிது நேரம் பேசியதும், இவனோடு பேசிக்கொண்டிருந்தது அவளுடைய பள்ளிக்காலத்தை நினைவுக்கு வந்தது. பள்ளிவிடுமுறை நாட்களில் வந்து இரண்டு மாதம் வந்து போன தங்கைகளை தவிர மித்த நாட்களில் அவள் பேசியது சிரித்தது ஓடியது ஆடியது எல்லாம் அண்ணா ஸ்ரீராம், தம்பி பிரபு மற்றும் அவர்களின் நண்பர்களோடு தான். அதனாலோ என்னமோ she felt more comfortable amongst boys. உடல் உருவம் பருவம் எல்லாம் தாண்டி அவளை பெண்ணாக அல்லாது நல்ல தோழியாக ஏற்று நடத்தியது காரணமாக இருக்கலாம்.
டேமியன், அஞ்சனா கேட்ட ``நீ என்ன செய்கிறாய், என்ன படித்தாய், என்ன பிடிக்கும்`` என்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல தொடங்கினான். அவன் சொல்வதை ஆ! என்று கேட்க தொடங்கினாள். 6 பிள்ளைகளில் கடைக்குட்டி அவன். முதல் மூன்று அக்காக்களும், இரண்டு அண்ணாக்களும் கடைசியில் இவன் என்றான். 30களின் தொடக்கத்தில் இருந்தான். அவனுடைய மூத்த அக்காவிற்கு வயது 51 என்றான். கிடாரும், ட்ரம்ஸும் வாசிக்க பிடிக்கும் என்றான். Travelling பிடிக்கும் என்றான். இப்படி நிறைய பிடிக்கும் என்றான். ``சரி! உலகில் எங்காவது இந்த நிமிடம் போக முடியும் என்றால் எங்கே போவாய்?`` என்று கேட்டான், அவன். அஞ்சனா சிறிது நேரம் யோசித்து பிறகு சொன்னாள் Mexico, Peru என்று. எதனால் என்று தெரியாது அவளுக்கு பிடித்த இடங்கள்.
Reincarnation... Life before Birth... காரணங்கள் இல்லாது பிடிக்கும் விஷயங்கள் எல்லாவற்றிற்கும் அவளால் சொல்லக்கூடிய காரணம் அதுதான். அவள் படித்து பார்த்து ஊர்களில் ஏனோ அந்த Mayan civilization அவளுக்கு மிக பிடிக்கும். அவர்களின் கலாச்சாரம், கோவில், சிலைகள், உடையின் design, எழுத்துகள், கடவுள்கள், வரலாறு இப்படி எல்லாமே ஏதோ ஒரு இனம்புரியா ஈர்ப்பை ஏற்படுத்திய விஷயம். இவள் கூறியதில் அவன் ஏன் எதற்கு என்று கேட்காது good choice என்றான். இவளுக்கு சட்டென ``Do you even know about mayans`` என்று கேட்டுவிட்டாள். அவனும் இது போன்ற civilizations குறித்ததை பற்றி படித்திருப்பதாகவும், இன்னும் படித்துக் கொண்டிருப்பதாகவும் சொன்னான்.
இப்படியே பேசிக்கொண்டு சிறிது நேரம் போக, டேமியன் தான் இப்போது போவதாகவும். பிறகு தொலைப்பேசியில் அழைப்பதாகவும் சொல்லிவிட்டு அவன் cellphone number கொடுத்தான். சேய்ஷல்ஸில் இருந்தது மொத்தம் இரண்டே இரண்டு network தான். ஒன்று Cable and wireless, இன்னொன்று Airtel. அவனுடையது Airtel number. அதில் நிறைய சலுகைகள் இருந்தது. எப்போது வேண்டுமானாலும் கூப்பிடு என்று சொல்லி அவளுடைய number வாங்கிக்கொண்டான்.
கிளம்பும் முன் லூயிஸ் அவனுடைய காதலி, மற்றும் நேற்று வந்திருந்ததில் ஒரு 10 பேரும், அவனோடு சேர்த்து பக்கத்தில் இருந்த லா டிக் (La digue) தீவிற்கு படகில் செல்லப்போவதாகவும், இஷ்டமிருந்தால் அவளையும் வரச்சொல்லிக்கேட்டான். யோசித்து சொல்கிறேன் என்று சிரித்து வழி அனுப்பிவைத்தாள். போகும் முன், `` it’s a pleasure to know you `` என்று சொல்லி சென்றான். கதவை சாத்திவிட்டு, laptop திறந்து அவளுடைய பாடல்களை போட்டுவிட்டு குளிக்க சென்றாள் அஞ்சனா, எப்போதும் போல பல்லி, பூரான் எல்லாவற்றையும் தேடிவிட்டு. குளித்து வந்து ஏற்கனவே இருந்த உணவை சூடு செய்து சாப்பிட்டு நேரம் பார்க்கும்போது மதியம் 2 ஆகி இருந்தது.
வழக்கம் போல கிறுக்க ஒன்றும் தோன்றாது, அங்கு சில மாதங்களாக இருந்த புத்தகங்களை புரட்டும் போது, அவள் பார்த்தாள், டேமியனின் முகத்தை. இப்போது அவளுக்கு நினைவுக்கு வந்தது எங்கு பார்த்தோம் என்று. வரவேற்பறையில் வைக்கப்பட்டிருந்த புத்தகத்தை முன்பு ஒரு சில சமயம் இது போல புரட்ட நேர்ந்தபோது எல்லாம் அவள் பார்த்து இருந்தாள் அவனை. அத்தனைக்கு முக்கியத்துவம் கொடுக்காது திருப்பினாலும், கூர்மையான அந்த கண்கள் அவளுக்கு பிடித்திருந்தது. அந்த கட்டுரையை படிக்கத்தொடங்கினாள் அஞ்சனா.
அத்தனைக்கு பிரசித்தமில்லாத இந்த பத்திரிக்கை இப்போதைய சேய்ஷல்ஸ் அரசிற்கு எதிரானது. அதில் 4 பக்கத்திற்கு எழுதி இருந்த அவனின் அரசியல் பார்வையை படிக்க தொடங்கினாள் அஞ்சனா. எப்படி சேய்ஷல்ஸ் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்ச் அரசிடம் இருந்து விடுதலை பெற்றது என்று நாட்டின் கதை பற்றி சொல்லி, எப்படி சுதந்திரம் பெற்ற 34 வருடமாக ஒரே அரசு ஆட்சி செய்துக் கொண்டிருக்கிறது என்றும், இந்த 34 வருடத்தில் என்னவெல்லாம் சுருட்டி இருக்கிறதென்றும், தொடக்கத்தில் 170 தீவுகள் கொண்டிருந்தாலும் எப்படி இந்த அரசாங்கம் வெறும் 10 dollar முதல் 100000 dollar விலைக்கு கிட்டத்தட்ட 140 தீவுகளை உலகின் பணக்காரர்களுக்கு விற்றதாக சொல்லி அவரவர் வசதிகளை அதிகரித்து இருக்கிறார்கள் என்றும், எப்படி எல்லாம் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்றும், எப்படி இத்தனை போதை பொருள் இங்கே வந்ததென்றும் சூடு பறக்க எழுதியிருந்தான் டேமியன். இது வரை அரசாங்கத்திற்கு எதிராக நடந்த போராட்டங்களில் எத்தனை பேர் காணாமல் போயிருக்கிறார்கள் என்றும் இதுவரை எத்தனை முறை கைது செய்யப்பட்டு இருக்கிறான் என்றும் எத்தனை முறை lock upல் அடிவாங்கியிருக்கிறான் என்றும் எழுதியிருந்தான். கடைசியில் இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் இப்படி தான் அவனும் அவனைப் போன்ற யோசிப்பவர்கள் யுத்தம் செய்து கொண்டே இருக்கப்போவதாக சொல்லி, ‘’ I’m a Rebel. I will kill for my country and will die if needed ‘’ என்று முடித்திருந்தான். இவனும் ஒரு புரட்சிக்காரன், போராளி, யுத்தத்திற்கு அஞ்சாதவன் என்று நினைத்ததும் அவளுடைய மனதில் எழுந்து நின்றான் டேமியன். புத்தகத்தில் மூழ்கி இருந்த அஞ்சனாவை தூக்கி வாரிப்போட்டது கதவை படபட என்று தட்டும் சப்தம்.

-யமுனாராகவன்.
-தொடரும்