பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

April 14, 2010

சுமதி கவிதைகள் 12

1.

அம்மாக்களின் கனவு 

சிறுமி சொல்கிறாள்
தான் பெரியவள் ஆனதும்
“தயிர்” சூப்பர் மாக்கெட்
ஆரம்பிப்பேன் என்று,

அது என்ன ”தயிர்” என்றால்
”மோர்” சூப்பர் மார்க்கெட் தான்
இப்பவே இருக்கே என்றாள்.


அவளின் நாளைய கனவு
வேறொன்றாய் இருக்கலாம்.

அப்பா சொல்கிறார்
அவள் ஒரு நாவலாசிரியர்
ஆக வேண்டுமென்று

கண் மருத்துவராய் ஆவாள்
என் மறுமகள் என்கிறாள் அத்தை

நீச்சல் வீராங்கனை ஆகி
கடல் கடப்பாள் என்கிறார் தாத்தா

என் மகன் மாதிரி இல்லாமால்
வீட்டில் தங்கும் வேலையாய்ப்
பார்ப்பாள் என் பேத்தி
என்கிறாள் ஆச்சி

அவள் கனவுகளை
அவளே காணும்படி
ஆசிர்வதிக்கப்பட்டவள்
என்கிறாள் அம்மா.

அம்மாவல் மட்டுமே
முடிந்தது அப்படி சொல்ல

அல்லது

அப்படியாவது சொல்லிவிடலாம்
என அம்மாக்கள் நினைக்கிறார்கள்

2.

பிரார்த்தனை

ஒருநாளும் பள்ளிப்பேருந்த்தில்
ஏற்றி விடாத
அப்பா வாய்க்கப்பட்ட மகள்

பார்த்து விடக்கூடாது

பேருந்திற்காய் காத்திருக்கும்
தன் மகளின் பள்ளிச்சீருடையை
சரி செய்து கொண்டிருக்கும்
ஏதோ ஒரு அப்பாவை.

சுமதி

காட்சியில் பிரசுரமான சுமதியின் ஏனைய கவிதைகளுக்கு சொடுக்கவும்
http://kaattchi.blogspot.com/search/label/சுமதி%20கவிதைகள்

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com