வணக்கம்.
உங்களுக்கு எழுதுவதில் எனக்குப் பெரிய வருத்தமும் இல்லை,
மகிழ்ச்சியும் இல்லை. ஒரு அடிமை அடிமைகளுக்கு
எழுதுவதில் என்ன பெரிய வருத்தமும் மகிழ்ச்சியும் வந்து விடப்போகிறது.
நாம் எதற்காய் வலைப்பூவில் எழுதுகிறோம்?
நாம் எதற்காய் பின்னூட்டம் போடுகிறோம்?
இக்கேள்வி கடந்த 3 நாட்களாய் எனக்குள்
எழுந்து கொண்டே இருக்கிறது.
பின்னூட்டங்கள் கட்டுரையை அல்லது
படைப்பைக் குறித்த விமர்சனத்திற்கா?
அப்படைப்பாளியின் படைப்பு ஆளுமையை
மெருகூட்ட உதவுவதற்கா?
அக்கட்டுரைக் குறித்த மேலதிகத் தகவலைப்
பெறுவதற்கா அல்லது சொல்வதற்கா?
இல்லை படைப்பாளியுடன் உரையாடுவதற்கா?
பின்னூட்டம் என்பது விமர்சனம்மா?
அல்லது போகிற போக்கில் போடுகிற பதிவா?
இல்லை பொழுது போகவில்லை
என்பதற்கா எழுதுவது பின்னூட்டம்மா?
எது பின்னூட்டம்?
ஒன் வே கிடையாது வலைப்பூ என்று சொல்லிவிட்டு
எல்லா வே யிலும் எப்படியும் போவதா
பின்னூட்டம்?, போக்குவரத்து காவல் அதிகாரி
இல்லாதா போது ஒன் வே யில் ஒட்டுகிற
வன்முறை பின்னூட்டத்திலும் தொடர்கிறதா என்ன?
காவல் துறை, சட்டம், நீதிமன்றம் இல்லாவிட்டால்
நமக்கு வாழத் தெரியாது என நிருபீப்பதா பின்னூட்டம்?
ஒரு கேள்விக்கு ஒரு பதில் தான் என்று நிச்சயம்மாய்
வாதிடுவதற்கு எதற்கு பின்னூட்டம். எந்த ஒரு கேள்விக்கும்
ஒரு பதில் கிடையாது என்பது தானே உண்மை.
எப்படி நீங்கள் இப்படி எழுதலாம் எனக் கேட்பதா பின்னூட்டம்?
நீங்கள் யார் என நான் சொல்கிறேன் பாருங்கள் என்ற ”தானை” வெளிப்படுத்தவா பின்னூட்டம்?
அரசியல் அரசாங்கம் தடங்கல்கள் இல்லாமல்
நிறுவன மயப்படாமல் எழுதக் கூடிய
சுதந்திரம் உள்ள வலைப்பூவின் அற்புதத்தை
பலவீனப்படுத்துவதா பின்னூட்டம்?
நீ யார் இதை சொல்ல எனக் கேட்பதற்கா பின்னூட்டம்?
copy and paste செய்து அதை நானும் சொல்கிறேன் எனக் கட்சிப் பிரிப்பதா பின்னூட்டம்?
படித்தே தீர்க்க வேண்டும் என வாசகன் மீது சர்வாதிகரம்
செலுத்தாத வலைப்பூவின் ஆன்மா விற்கு எதிரானதா பின்னூட்டம்?
முகம் மறைத்து பேச வசதியான இடம்மா பின்னூட்டம்?
வாசகனாய் இருப்பதற்கே தயார் ஆகாதவர்களையா?,
பொறுமையற்றவர்களையா? இத்தனை வலைப்பூக்கள்
உருவாக்கியிருக்கின்றன?
என்னிடம் என் நண்பர் சொன்னார், வலைப்பூவெல்லாம் நேர விரையம் என்று.
தொடங்குவதற்கு முன். தொடங்கிய பின் தினமும் சொல்கிறார்
நான் சொன்னது விளங்குச்சா என்று?
வெட்டிப் பேச்சுக்கும் உரையாடலுக்கும் உள்ள வித்தியாசம்
பேச்சு நேரத்தை விரையாமாக்கும், உரையாடல் நேரத்தை மிச்சப் படுத்தும்.
நாம் மிச்சப்படுத்துகிறோமா? இல்லை விரையாமாக்குகிறோமா?
கட்டுப்பாடு அற்ற சுதந்திரம் குற்றவாளிகளையே உருவாக்கும், மனிதனை அல்ல
என்ற அகில் உலக அரசு இயந்திரங்களின் தத்துவத்தை நாம் நீருபிக்கப் போகிறோமா
என்ன? அல்லது நிருபீத்துக் கொண்டிருக்கிறோமா என்ன?
வலைப்பூ உலகில் குழந்தைகளாய் நானும் என் சக படைப்பாளிகளும்
கேட்கிறோம், சொல்லுங்களேன்.
நன்றி
ராம்.
காட்சி
குறிப்பு:
மணிகண்டண் ஒருவேளை சனிக்கிழமை நீங்கள் அழைத்த bloggers meet க்கு என் பணியின் காரணம்மாய் வர இயலாமல் போகலாம். வந்தால் நான் உரையாட நினைத்ததைத் தான் இங்கு இடுகையாய் இட்டு இருக்கிறேன்.
மணிகண்டண் சனிக்கிழமை bloggers meet நடக்க இருக்கும் இடத்தை எனக்கு குறுந்தகவல் அனுப்பினார்: மாலை 6 மணி, வரும் சனிக்கிழமை. டிஸ்கவரி புக் பேலஸ், மஹாவீர் காம்ப்ளெக்ஸ்,(பாண்டிச் சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில்),மேற்கு கே.கே.நகர்,சென்னை. மேலதிக தகவல்களுக்கு www.thandora.in கைப்பேசி : 93400 89989 மின்னஞ்சல் : nilachitthiram@gmail.com
March 25, 2010
தொடர்பு
படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com
