பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

March 26, 2010

என்ன பெயரிட்டு அழைத்தாலும் - இயக்குநர் ராம்

என்ன பெயரிடு அழைத்தாலும் சந்துகள் சந்துகளே

நான் வெகு காலம்மாய் இந்த சந்தில் நடந்தவாறு இருக்கிறேன்.
harish in the maze போல் i am in this சந்து.

நகரப் பேருந்த்தில் உரசிக் கூடி உறவாடும்
மனிதர்களைப் போல் இருமருங்கிலும் வீடுகள் நிற்கிறது.
கிரிக்கெட் பந்துகள் உடைப்பதற்கு சன்னல்கள்
இல்லாத வீடுகளே நிறைந்து கிடக்கின்றன.

மாடியில் இருந்து முன்சரிந்து
கீழ் வீட்டு அக்காவிடம் பேசுகிற
நைட்டிப் பெண்ணிண் மார்பகம்
சந்தில் போகிற அனைவருக்கும் விரிகிறது.

எவர் வீட்டில் எவர் பேசினாலும் சந்தில் கேட்கிறது.
”நியாயமா,நேர்மையா பதில் சொல்லு”
மனைவியின் குரலை சந்தைக் கடக்கும்
எல்லா கணவண்களும் கேட்ட வாறு போகிறார்கள்.

”ங்கோத்தா” கைப்பேசியில் யாரோ ஒருவர் யாரையோ
சைக்கிளில் ஏசியவாறு போகிறார்.
சாலையில் பேசப்படும் கெட்ட வார்த்தைகள்
சந்து வீட்டுச் சுவரைத் தாண்டி எல்லா அறைகளிலும்
தவிர்க்க முடியா fmஆய் பண்பொலிக்கிறது.

கார்கள் மெதுவாய் நகர
சைக்கிள்கள் காரை வெல்கின்றன
சந்து நடத்தும் ரேசில்.

எத்தனை எழுதினாலும், நேர் கோட்டு எழுத்தில்
கொண்டு வரமுடியாது சந்தின் சித்திரத்தை

சந்தின் முடிவில் தெரிகிறது நெடுஞ்சாலை
அதன் மறுபுறம் தொடங்கும்
மற்றொரு சந்தின் முகப்போடு.




தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com