ஓவியம் வரையும் சிறுமி அறிமுகம்.
தன்னுடன் பள்ளியில் படிப்பவர்கள் தெரிந்தவர்கள் என அனைவருக்கும் விசேச தினங்களில் வாழ்த்து அட்டைகள் தருவதற்காய் வரையத் தொடங்கி இன்று தன் கனவுகளை வரைவதாய் சொல்கிறாள். வாழ்த்து அட்டைகள் கடைகளில் கிடைக்குமே என்றதற்கு “ எனக்கு பிடிச்ச மாதிரி இல்ல” என தன் ரசனை குறித்துச் சொல்லும் அவளின் கனவைப் பற்றிய படம்.
இவ்வோவியம் அவள் வகுப்புத் தோழி சாலினியாம். சாலினி மாதிரியே இல்லையே எனக் கேட்டால், நான் சாலினியை பார்த்து வரையல அவள நினைச்சு வரைஞ்சேன் என்கிறாள். இவ்வோவியத்திற்கு அவள் வைத்த தலைப்பு : sha sha sha lini.
இது இவளின் ஆசிரியையாம். பெயர் சொல்ல மறுக்கிறாள். கவலைப்படாத, அவங்ககிட்ட சொல்லமாட்டோம் என்றால், “ சொல்லமாட்டீங்கல அப்புறம் எதுக்கு கேக்கறீங்க என கடைசி வரைக்கு அந்த ஆசிரியரின் பெயரைச் சொல்லாமல் தான் வரைந்த விதத்தை சொல்கிறாள்.
இந்த மிஸ் ரொம்ப ஸ்டைல். வித விதம்மா பேக் கொண்டு வருவாங்க. டார்க் பிங்க் லிப் ஸ்டிக் இல்லாம வரமாட்டாங்க. அதான் அவங்க டிரஸ்ஸையே லிப் ஸ்டிக் கலர்ல போட்டுட்டேன். எதுக்கு சிக்னல் போட்ட எனக் கேட்டால் தீரி கலர்ஸ்க்கு கம்மியா இருக்குற ட்ரெஸ் போட்டுப் பாத்ததே இல்லை என்கிறாள். இவ்வோவியத்திற்கு அவ்ள் வைத்த தலைப்பு “Miss I don’t miss”
அவள் வரைந்த மற்றும் சில ஓவியங்களை www.subikshapriyal.blogspot.com என்ற தளத்திள் கண்டு உங்களின் கருத்துகளை நீங்கள் பதிவு செய்யலாம்.
ராம் -