பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் ஒரு அறிவிப்பு. காட்சியில் 'வீடு' பற்றிய தொடர், இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. வெறும் கல்லும் மண்ணும் கலந்து கட்டிய உறைவிடம் என்பதையும் தாண்டி ஒரு வீட்டில் படிந்திருக்கும் வலி, வரலாறு, இனிய நிகழ்வுகள், துன்பியல் நினைவுகள் போன்றவற்றை காட்சிப்படுத்தும் கதை, கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி - kaattchi@gmail.com

July 31, 2011

தற்போக்கு சிந்தனைகள் - அவனி அரவிந்தன்



இப்போதெல்லாம்
கவிதைகள் வாசிப்பதற்கு
நேரமே இருப்பதில்லை
ஒரு கவிதையில்
முதல் வரியையும்
மற்றொரு கவிதையில்
மூன்றாம் வரியையும் வாசிக்கிறேன்
மீந்து போன கவிதைவரிகள்
வாலாட்டியபடியே என்னை
துரத்திக் கொண்டிருக்கின்றன
ஒருவேளை அவற்றை
அடிமாற்றிப் போட்டு
பின்னொருநாள்
புதிய கவிதையொன்றை
நான் சமைக்கக்கூடும்...

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

எண்ணிலடங்கா நட்சத்திரங்களே
இட்டு நிரப்ப முடியாத இருளை
மாடத்திலிருக்கும்
மண்விளக்கொன்று நிறைக்க முயன்று
தோற்றுக்கொண்டிருக்கிறது...



~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

வெட்க உணர்வற்று
ஆடை கிழித்து
அம்மண உடம்பில்
கழிவுகளைப் பூசிய பெண் போல
கோர மௌனத்துடன்
தகித்து அலைகிறது
வற்றிப்போன வைகை...


~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

 திரித்த நூலை எரித்தபடி
இரக்கமில்லாமல் சிரிக்கிறது
கண்ணாடிச் சிறைக்குள்ளிருந்து
ஒரு சிமிழ் விளக்கு


- அவனி அரவிந்தன்



4 கருத்துகள்:

ஸ்டாலின் குரு said...

அருமை...

ஸ்டாலின் குரு said...

அருமை ....

mahehs said...

nantru

முனைவர்.இரா.குணசீலன் said...

திரித்த நூலை எரித்தபடி
இரக்கமில்லாமல் சிரிக்கிறது
கண்ணாடிச் சிறைக்குள்ளிருந்து
ஒரு சிமிழ் விளக்கு

மிகவும் இரசித்தேன்..

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com