பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

July 4, 2011

தேவ சம்பாஷணை - விக்னேஷ்வரன்

கவிஞர் அறிமுகம் அவரின் எழுத்து வழியே

 சமீப காலமாக வலையில் ஆத்மா என்றும் ரெட்டைவால்ஸ் என்ற பெயரிலும் அறிமுகம்படித்தது மதுரையில் டி.வி.எஸ்ஸிலும் மதுரைக்கல்லூரியிலும்கல்லூரியின் மூன்றாம் வருடத்தில். ஆனந்தவிகடனுக்காக  மாணவப் பத்திரிக்கையாளனாய் கொஞ்சம் சுற்றினேன்பிறகு பிழைப்புக்காக ஆலப்புழையில் ஒரு வருடம். சென்னையில் ஆறாவது வருடம். எல்லா விஷயத்துக்கும் So What? என்ற கேள்வி எழுந்ததாலும் எழுதுவது மிகுந்த சந்தோஷத்தை தருகிறதுஇது வரை யாருமே சொல்லாத ஒரு விஷயத்தை என்றாவது ஒரு நாள் சொல்லிவிடுவேன் எனும் நம்பிக்கையில் எழுத ஆரம்பித்திருக்கிறேன்.
 தேவ சம்பாஷணை:

 

முன்பொரு முறை இதே
முகூர்த்த நாளில் சந்தித்தோம்!
பரஸ்பர விசாரிப்புகள்... லேசான புன்னகை...
சில வழக்கமான உரையாடல்கள்
பின்பு வழக்கமான மௌனம்
உன் நிலை குத்திய பார்வை 
என்றைக்குமே நீ முதலில் பேசியதில்லை
பிரகாரம் முழுக்கவே இரைச்சல்
இரைச்சல்களின் ஊடாக இரையும் சங்கீதம்
யாரோ  கவனிக்கிறார்கள் என்கிற பதற்றம்
பட்டரின் வழக்கமான மந்திரம்
சிதறிக் கிடக்கும் பிரசாதங்கள்
எப்பொழுதும் போல என் பர்ஸில் விபூதி பொட்டலம்

உன் அகண்ட நெற்றிக் குங்குமம்
யானையிடம் ஆசீர்வாதம் வாங்கிய பின்
உன்னை யாரென கேட்கும்  மகள்
சொல்லத் தயாராகும் பொய்கள்
வரிசை நெருக்குகிறது!

சில நொடிகளே ஆனாலும்
உள்ளத்தை ஊடுருவும் பார்வை
போய் வருகிறேன் மீனாக்ஷி!
பின்பாவது ஒரு முறை 
உன்னை சாமியாகக் கும்பிட!

- விக்னேஷ்வரன்

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com